NATO அணியின் முக்கியதொரு அங்க நாடான துருக்கி NATO அணியின் முதல் எதிரியான ரஷ்யா தயாரிக்கும் SU-35 மற்றும் SU-57 யுத்த விமானங்களை கொள்வனவு செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு துருக்கி ரஷ்ய யுத்த விமானங்களை கொள்வனவு செய்யின், துருக்கிக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முரண்பாடுகள் மேலும் உக்கிரம் அடையும். . 2017 ஆம் ஆண்டு துருக்கி ரஷ்யாவிடம் இருந்து புதிய வகை S-400 என்ற விமான எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்ய உடன்பட்டு இருந்தது. அந்த கொள்வனவால் […]
சவுதி தலைமையில் யேமனில் உள்ள Dhamar என்ற இடத்தில் யுத்த விமானங்கள் இன்று ஞாயிறு செய்துகொண்ட தாக்குதல்களுக்கு குறைந்தது 100 பேர் பலியாகி உள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது. அத்துடன் குறைந்தது 40 பேர் காயமடைந்தும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. . யேமெனில் இயங்கும் ஈரானின் ஆதரவு கொண்ட குழுக்ககளின் கட்டுப்பாடில் உள்ள பகுதியிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெறுள்ளன. சிதைந்து போயுள்ள யேமெனின் முன்னாள் அரசுக்கு சவுதி ஆதரவு செலுத்துகிறது. . தாம் எதிரணி ஏவுகணைகளை வைத்திருக்கும் […]
அமெரிக்காவின் ரெக்ஸஸ் (Texas) மாநிலத்தில் உள்ள Odessa என்ற சிறு நகரில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற கண்மூடித்தனமான தூப்பாக்கி சூடுகளுக்கு குறைந்தது 5 பேர் பலியாகியும், 21 பேர் காயமடைந்தும் உள்ளனர். . ரெக்ஸசின் Dallas நகருக்கும், மேற்கே உள்ள El Paso நகருக்கும் இடையில் உள்ள Odessa என்ற சிறு நகரிலேயே இன்று இந்த கண்மூடித்தனமான சூட்டு சம்பவம் நிகழ்துள்ளது. வியாபார நிலையங்களை நோக்கியே சூடுகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. . பலியானோருள் துப்பாக்கி சூட்டை நிகழ்த்தியவரும் […]
அஸ்ரேலியாவில் இருந்து Australian Border Protection திணைக்களத்தால் இரவோடு இரவாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட இருந்த இலங்கை தமிழ் குடும்பம் தற்காலிகமாக கடத்தலில் இருந்து தப்பியுள்ளது. . இந்த நாடு கடத்தல் தடுப்புக்கு அப்பகுதி Green கட்சி பாராளுமன்ற உறுப்பினர் Jenny Leong கடுமையாக உதவியுள்ளார். . அகதி நிலை நிராகரிக்கப்பட்ட இந்த குடும்பத்தை நேற்று இரவு Australian Border Protection வாடகைக்கு அமர்த்திய Skytraders என்ற விமான சேவை மூலம் இலங்கைக்கு கடத்த இருந்தது. இரவு […]
பாகிஸ்தான் தாம் இன்று வியாழன் 290 km தூரம் சென்று தாக்கக்கூடிய நிலத்தில் இருந்து நிலத்துக்கான (surface-to-surface) ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்ததாக கூறியுள்ளது. இந்த ஏவுகணை பல வகை குண்டுகளை காவி செல்லும் தரம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. . பாகிஸ்தானின் இந்த பரிசோதனை தொடர்பாக தமக்கு முன்கூட்டியே அறிவிப்பு விடுக்கப்பட்டதாக இந்தியா கூறியுள்ளது. . Ghaznavi என்ற இந்த ஏவுகணை பரிசோதனை இரவு நேரத்திலேயே செய்யப்பட்டுள்ளது. . கடந்த மே மாதம், இந்தியாவில் தேர்தல்கள் […]
அண்மையில் பிரித்தானியாவின் பிரதமர் பதவியை கைப்பற்றிக்கொண்ட Boris Johnson திடீரென பிரித்தானியாவின் பாராளுமன்றை இடைநிறுத்தம் செய்து கொண்டதை எதிரணிகள் வன்மையாக கண்டிக்கின்றன. இணக்கம் எதுவும் இன்றி (no-deal Brexit) ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை நடைமுறை செய்யவே பிரதமர் இவ்வாறு செயல்பட்டதாக எதிரணிகள் கூறுகின்றன. . நேற்று புதன்கிழமை அறிவிக்கப்பட்ட இந்த திட்டப்படி செப்டெம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மொத்தம் 5 கிழமைகள் பிரித்தானிய பாராளுமன்றம் இடைநிறுத்தம் செய்யப்படும். . ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற விரும்பாத […]
இலங்கையின் வடமேற்கு பகுதியான மன்னாரை அண்டிய கடலில் எண்ணெய் அகழ்வு பணிகளில் இலங்கை ஈடுபடவுள்ளது. இந்த பணிகளை செய்யும் உரிமையை இலங்கை அரசு பிரான்சின் Total என்ற எண்ணெய் அகழ்வு நிறுவனத்துக்கும், நோர்வேயின் Equinor நிறுவனத்துக்கும் வழங்கி உள்ளது. . 2023 ஆம் ஆண்டளவில் எண்ணெய் அகழ்வு செயல்பாட்டுக்கு வரலாம் என்று கணிக்கப்பட்டு உள்ளது. . தற்போது எண்ணெய் உற்பத்தி அற்ற நாடான இலங்கை 2018 ஆம் ஆண்டில் $4.15 பில்லியன் பெறுமதியான எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. […]
ஹாங்காங் நகரில் சுமார் 80 நாட்களாக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் தற்போது அந்த நகரின் பொருளாதாரத்தை பாதிக்க ஆரம்பித்துள்ளது. . Golding Financial Holdings என்ற முதலீட்டு நிறுவனம் ஹாங்காங் நகரில் U$1.4 பில்லியனுக்கு வர்த்தக நிலம் ஒன்றை கொள்வனவு செய்யவிருந்தது. அனால் அண்மையில் அங்கு இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அந்த நிறுவனம் தனது திட்டத்தை கைவிட்டு உள்ளது. . அங்கு குடியிருப்பு வீடுகள், கடைகள், வர்த்தக நிலையங்களுக்கான கொள்வனவு பதிவுகள் சுமார் 24% ஆல் வீழ்ந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. […]
Biarritz என்ற பிரென்சு நகரில், அந்நாட்டின் ஜனாதிபதி Macron தலைமையில், தற்போது G7 அமர்வு இடம்பெறுகிறது. அங்கு அமெரிக்காவின் ரம்ப் உட்பட கனடா, பிரித்தானியா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்களும் உள்ளனர். . வியப்படையும் வகையில், முன்னறிவிப்பு எதுவும் இன்றி, ஈரானின் வெளியுறவு அமைச்சரும் தற்போது Biarritz நகரம் சென்றுள்ளார். ஈரானின் விமானம் ஒன்றும் Biarritz விமான நிலையத்தில் காணப்படுள்ளது. . ஈரானின் வெளியுறவு அமைச்சர் Mohammed Javad Zarif அங்கு ஏன் சென்றார் […]
அமெரிக்காவின் ரம்ப் ஆட்சிக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தக போர் தொடர்ந்தும் உக்கிரம் அடைந்து வருகின்றது. . முன்னர் ரம்ப் தான் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் $300 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு அறவிடப்படும் மேலதிக இறக்குமதி வரியை (tariffs) மேலும் அதிகரிக்கவுள்ளதா கூறியிருந்தார். அதற்கு பதிலாக சீனாவும் அமெரிக்காவில் இருந்து இறைக்குமதி செய்யப்படும் $75 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு மேலதிக இறக்குமதி வரியை செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் அறவிட உள்ளதாக இன்று வெள்ளி கூறியுள்ளது. […]