பைடென் சனாதிபதி போட்டியை கைவிட்டார்

பைடென் சனாதிபதி போட்டியை கைவிட்டார்

அமெரிக்க சனாதிபதி பைடென் நவம்பரில் இடம்பெறவுள்ள சனாதிபதி தேர்தலில் இருந்து வெளியேறியுள்ளார். அத்துடன் தனக்கு பதிலாக உதவி சனாதிபதி கமலா ஹாரிசை சனாதிபதி பதவிக்கு போட்டியிட ஆதரவும் வழங்கியுள்ளார். பைடென் இந்த அறிவிப்பை உள்ளூர் நேரப்படி ஞாயிரு பிற்பகல் 1:45 க்கு தெரிவித்துள்ளார். பைடெனுக்கு போட்டியிலிருந்து வெளியேற விருப்பம் இருந்திருக்கவில்லை என்றாலும், மூடிய கதவுக்குள் Democratic கட்சி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த இறுதிநேர ஆள்மாற்றம் ரம்பை வெல்ல போதுமானதாக இருக்காது. ஹரிசுடன் இணைந்து போட்டியிட உதவி […]

பங்களாதேசில் மாணவர் ஆர்ப்பாட்டம், 114 பேர் பலி

பங்களாதேசில் மாணவர் ஆர்ப்பாட்டம், 114 பேர் பலி

கடந்த சில கிழமைகளாக பங்களாதேசில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். போலீசாருக்கும் மாணவருக்கும் இடையிலான மோதல்களுக்கு இதுவரை 114 பேர் பலியாகி உள்ளனர். தற்போது பல இடங்களில் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளது. கடந்த வியாழன் முதல் அரசு இணைய சேவையை நிறுத்தியுள்ளது. கடந்த புதன் முதல் கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன. அரச தொழில்களின் 30% பங்கு 1971ம் ஆண்டு அக்கால கிழக்கு பாகிஸ்தான் விடுதலைக்கு போராடியோரின் குடும்பங்களுக்கு ஒதுக்கப்படுவதையே மாணவர் எதிர்க்கின்றனர். விடுதலை அடைந்த கிழக்கு […]

நேற்றைய தொழில்நுட்ப இடர் சீனாவை பாதிக்கவில்லை

நேற்றைய தொழில்நுட்ப இடர் சீனாவை பாதிக்கவில்லை

நேற்று உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய Microsoft கணணிகளுக்கான Crowdstrike நிறுவன antivirus update சீனாவை பாதிக்கவில்லை. இது சீனா தன்னை அமெரிக்க தொழில்நுட்பங்களில் இருந்து விடுதலை அடைய செய்து, சொந்த தொழில்நுட்பத்தில் உரப்பானதை காட்டுகிறது.  நேற்று அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா எங்கும் விமான சேவைகள், விமான நிலையங்கள், வைத்தியசாலைகள், வங்கிகள், வர்த்தகங்கள் மேற்படி update இல் இருந்த வழு காரணமாக இயங்க முடியாது முடங்கி இருந்தன. இந்தியாவிலும் டெல்லி, பெங்களூர் விமான நிலையங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு […]

உலகளவில் தொழில்நுட்ப இடர், விமான சேவைகள் நிறுத்தம்

உலகளவில் தொழில்நுட்ப இடர், விமான சேவைகள் நிறுத்தம்

இன்று உலக அளவில் இடம்பெற்ற தொழில்நுட்ப (IT) இடர் காரணமாக பெருமளவில் விமான சேவைகள், வங்கிகள், செய்தி சேவைகள் ஆகியன முடங்கி உள்ளன. அமெரிக்காவில் Delta, United, American ஆகிய விமான சேவைகள் தொலைத்தொடர்பு இடர்பாடுகள் காரணமாக விமானங்களை வெள்ளி காலை தரையில் முடக்கி உள்ளதாக கூறியுள்ளன. Frontier, Allegiant, SunCountry ஆகிய விமான சேவைகளும் முடங்கி உள்ளன. Microsoft நிறுவனத்தின் Azure cloud சேவை மீது நேற்று வியாழன் மாலை செய்யப்பட்ட தாக்குதலேயே மேற்படி சேவைகள் […]

மரணித்த பெண்ணை அவமதித்த போலீஸ் பதவி நீக்கம்

மரணித்த பெண்ணை அவமதித்த போலீஸ் பதவி நீக்கம்

அமெரிக்காவின் Seattle நகரில் போலீஸ் கார் ஒன்று மோதியதால் மரணித்த இந்திய பெண் ஒருவரை அவமதித்த Daniel Auderer என்ற போலீசார் புதன்கிழமை பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் Jaahnavi Kandula என்ற இந்திய பெண் பாதசாரிகள் கடவையில் வீதி ஒன்றை கடக்கும்போது வேறு ஒரு அழைப்புக்கு சென்ற Seattle போலீஸ் கார் ஒன்று மோதியதால் மரணமாகி இருந்தார். மோதிய போலீஸ் கார் 40 km/h வேக கட்டுப்பாடு கொண்ட வீதியில் 119 […]

உலகின் முதல் 10 GDP நாடுகள்

உலகின் முதல் 10 GDP நாடுகள்

அமெரிக்காவின் Forbes செய்தி நிறுவனம் ஆண்டுதோறும் தயாரிக்கும் GDP பட்டியலில் முதல் 10 பெரிய GDP (Gross Domestic Product) நாடுகள், அந்த நாடுகளின் மொத்த GDP, தனிநபர் GDP, முன்னைய ஆண்டிலிருந்தான GDP வளர்ச்சி ஆகியன வருமாறு: 1960ம் ஆண்டு முதல் இன்று வரை அமெரிக்கா உலகின் முதலாவது பெரிய GDP நாடாக உள்ளது. இந்த ஆண்டு அமெரிக்காவின் மொத்த GDP $28.783 ட்ரில்லியன் ($28,783 பில்லியன்) இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவின் மொத்த GDP $18.536 […]

தாய்லாந்து 6 பேர் மரணம் கொலை, தற்கொலை?

தாய்லாந்து 6 பேர் மரணம் கொலை, தற்கொலை?

தாய்லாந்து உல்லாச பயணிகள் விடுதி ஒன்றில் தங்கியிருந்த 6 பேர் பலியான நிலையில் கண்டெடுக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் கொலை, தற்கொலை காரணமாக பலியாகி இருக்கலாம் என்று தாய்லாந்து போலீசார் கருதுகின்றனர். இவர்கள் வியட்நாமியர் என்றும், இவர்கள் தேநீர் அருந்திய பாத்திரங்களில் சயனைட் (cyanide) நஞ்சு இருந்தமையும் அறியப்பட்டுள்ளது. Hong Pham Thanh (வயது 49), அவரின் மனைவி Thi Nguyen Phuong (வயது 46), Thi Nguyen Phuong Lan (வயது 47), Dinh Tran Phu […]

ரம்பின் உதவி சனாதிபதியாக போட்டியிடுகிறார் JD Vance

ரம்பின் உதவி சனாதிபதியாக போட்டியிடுகிறார் JD Vance

வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள சனாதிபதி தேர்தலில் ரம்பின் உதவி சனாதிபதியாக போட்டியிட JD வான்ஸ் (James David Vance) தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதனால் ரம்ப் தேர்தலில் வென்றால் வான்ஸ் உதவி சனாதிபதி ஆவார். 2016ம் ஆண்டு ரம்ப் முதலில் சனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட காலத்தில் ரம்பின் கொள்கைகளை “immoral to absurd”, “cultural heroin”, “opioid of the masses” என்றெல்லாம் இவர் சாடியிருந்தார். தன்னை ஒரு “never-Trump guy” என்று விபரித்த இவர் […]

இஸ்ரேலின் கொடூர இராணுவ அணியை வளர்க்கும் அமெரிக்கா

இஸ்ரேலின் கொடூர இராணுவ அணியை வளர்க்கும் அமெரிக்கா

Netzah Yehuda என்ற இஸ்ரேலின் இராணுவ அணி (battalion) அமெரிக்க மற்றும் உலக சட்டங்களுக்கு முரணாக பலஸ்தீனரை படுகொலை செய்வதையும், கொடுமைப்படுத்துவதையும் அமெரிக்க பைடென் அரசு ஆதாரங்களுடன் அறிந்தும் அவற்றை மூடி மறைத்து ஆதரவு வழங்கி வருகிறது என்று அமெரிக்க CNN செய்தி சேவையின் விசாரணை அறிந்துள்ளது. மேற்படி கொடூரங்கள் October மாதம் 7ம் திகதிக்கு முன் West Bank பலஸ்தீனர் மீது செய்யப்பட்டவை. அதாவது காசாவின் ஹமாஸ் செய்த தாக்குதலுக்கு முன்னானவை. Netzah Yehuda அணி கடும்போக்கு, […]

ரம்ப் மீது சூடு, இருவர் பலி 

ரம்ப் மீது சூடு, இருவர் பலி 

முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்பை படுகொலை செய்யும் நோக்கில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று Pennsylvania மாநிலத்து Butler நகரில் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சனாதிபதி தேர்தல் பரப்புரை ஒன்றில் பேசிய ரம்ப் மீது பட்ட குண்டு வலது காதோரம் மட்டும் சிறிய காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூட்டை அமெரிக்கா புலனாய்வு போலீசான FBI படுகொலை முயற்சி என்று கூறியுள்ளது. மேடையில் பேசிக்கொண்டிருந்த ரம்ப் குண்டு தாக்கியவுடன் தனது வலது கையால் காயத்தை தடவி பார்த்தபடி குனிந்து கொண்டார். […]

1 19 20 21 22 23 330