ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் இடம்பெற்ற இறுதி பொது தேர்தலில் Le Pen தலைமயிலான National Rally என்ற வலதுசாரி கட்சி பெரும்பான்மை ஆசனங்களை பெறுவதை தடுக்க ஜூன் 10ம் திகதி இணைந்த 5 இடதுசாரி கட்சிகளின் New Popular Front (NPF) என்ற கூட்டணி முன்னிலையில் உள்ளது. ஆனால் எவரும் பெரும்பான்மை பெறவில்லை. அண்மையில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சி தோல்வி அடைந்ததால் விசனம் கொண்ட சனாதிபதி Macron திடீரென உள்நாட்டு தேர்தலை அறிவித்தார். உள்நாட்டு […]
இந்த கிழமை Kazakhstan நாட்டில் இடம்பெற்ற Shanghai Corporation Organization (SCO) அமர்வுக்கு செல்லாது தவிர்த்த பிரதமர் மோதி ரஷ்ய சனாதிபதி பூட்டினுடன் உரையாட மாஸ்கோ பறக்கிறார். யூக்கிறேன் யுத்தம் தொடர்பாகவும் மோதி பூட்டினுடன் உரையாடலாம் என்றாலும், இந்த விசயம் மோதிக்கு பிரதானமானது அல்ல. மோதிக்கு நெருக்கடி தருவது SCO அமைப்பு தனது பிரதான நாணயமாக சீனாவின் யுவான் நாணயத்தை பயன்படுத்த முனைவதே. மேற்கு நாடுகளின் தடைகள் காரணமாக ரஷ்ய தனது இறக்குமதிகள் அனைத்தையும் சீனா மூலமே […]
பிரித்தானியாவில் நேற்று நடைபெற்ற பொது தேர்தலில் பிரதமர் சுனக்கின் Conservative கட்சி 121 ஆசனங்களை மட்டும் பெற்று தோல்வி அடைய Labor கட்சி 412 ஆசனங்களை பெற்று பெரும்பான்மை ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பெரும்பான்மை ஆட்சிக்கு 326 ஆசனங்கள் மட்டுமே தேவை. Conservative கட்சி கைவசம் இருந்த ஆசனங்களில் 250 ஆசனங்களை இழந்துள்ளது. அதேநேரம் Labor கட்சி மேலதிகமாக 211 ஆசனங்களை வென்றுள்ளது. ஆசன எண்ணிக்கையில் Labor பெருவெற்றி அடைத்தாலும், 1.6% மேலதிக வாக்குகளை மட்டுமே அது இம்முறை பெற்றுள்ளது. அதேவேளை […]
அஸ்ரேலியாவின் Labor கட்சி செனட்டரான (Senator) 29 வயது Fatima Payman இன்று தனது Labor கட்சியிலிருந்து வெளியேறி சுயேட்சை செனட்டராக அமர்ந்தார். அண்மையில் அஸ்ரேலிய Green கட்சி பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம் ஒன்றை சபை வாக்கெடுப்புக்கு எடுத்து இருந்தது. இஸ்ரேலுக்கு கண்மூடித்தனமான ஆதரவை வழங்கும் Labor கட்சி இந்த தீர்மானத்தை கடுமையாக எதிர்த்து. ஆனாலும் Fatima தனது கட்சியை மீறி Green கட்சியின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். Fatima மீது விசனம் […]
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பலஸ்தீனரின் West Bank நிலத்தில் 3,138 ஏக்கரை தனது நிலமாக்க இன்று புதன் நடவடிக்கை எடுத்துள்ளது. இஸ்ரேல் தனக்கு சாதகமான இருக்கும் வகையில் தானே நடைமுறை செய்த சட்டப்படி ஆக்கிரமித்துள்ள பலஸ்தீனரின் தனியார் நிலங்களை இஸ்ரேல் தனது இராணுவத்தின் Civil Administration என்ற பெயரின் கீழ் வகைப்படுத்தினால் அந்த நிலங்களின் பலஸ்தீன உரிமையாளர் தமது உரிமைகளை உடனடியாக இழப்பர். மேற்படி நிலங்களில் இஸ்ரேல் பின்னர் யூதர்களை குடியமர்த்தும். Jericho என்ற பலஸ்தீனர் செறிந்து வாழும் […]
Shanghai Cooperation Organization (SCO) அமர்வு இன்று புதன் Kazakhstan நாட்டின் Astana நகரில் ஆரம்பமாகிறது. இதில் ரஷ்யாவின் பூட்டின், சீனாவின் சீ ஆகியோர் நேரடியாக பங்கொண்டாலும் இந்திய பிரதமர் மோதி இந்த அமர்வை தவிர்த்துள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவே SCO அமர்வை தலைமைதாங்கி செய்திருந்தாலும், அமர்வு இணையம் மூலமே நடைபெற்றது. அதனால் பூட்டின், சீ இந்தியா செல்லவேண்டிய தேவை இருந்திருக்கவில்லை. 1996ம் ஆண்டு முதல் ரஷ்யா, சீனா உட்பட 5 நாடுகள் ஆரம்பித்து Shanghai 5 […]
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள Hathras மாவட்டத்தில் செவ்வாய் இடம்பெற்ற இந்து மத நிகழ்வொன்றில் ஏற்பட்ட நெரிசலுக்கு பலியானோர் தொகை 121 ஆக உயர்ந்துள்ளது. மரணித்தோரில் 112 பேர் பெண்கள் என்றும், 7 பேர் சிறுவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த பேரழிவின் பின்னர் Bhole Baba என்ற மேற்படி நிகழ்வின் போதகர் தலைமறைவாகி உள்ளார். நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தோர் 80,000 பேர் மட்டுமே வருவார்கள் என்று போலீசாருக்கு கூறியிருந்தாலும் நிகழ்வுக்கு சுமார் 250,000 பேர் வந்துள்ளனர். […]
2021ம் ஆண்டு ஜனவரி 6ம் திகதி அமெரிக்க காங்கிரசில் பைடெனின் வெற்றி உறுதி செய்யப்படும் நிகழ்வை பல்லாயிரம் ரம்ப் ஆதரவாளர் வன்முறை மூலம் தடுக்க முனைந்தனர். அங்கே 5 பேர் பலியாகினர். அந்த வன்முறையில் ரம்பின் பங்களிப்புக்கு எதிராகவும் வழக்குகள் ஆரம்பிக்கப்பட்டு இருந்தன. ஆனால் தான் சனாதிபதி ஆகையால் அந்த குற்றச்சாட்டு வழக்குகளில் இருந்து விலக்கு (immunity) உடையவர் என்று வாதாடியுள்ளார். கீழ் நீதிமன்றம் ரம்புக்கு அவ்வாறு விலக்கு (immunity) இல்லை என்று தீர்ப்பு கூறியிருந்தது. ஆனால் […]
அண்மையில் இடம்பெற்ற ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலில் தனது கட்சியினர் பெருமளவில் தோல்வி அடைந்ததால் விசனம் கொண்ட பிரெஞ்சு சனாதிபதி மக்கிறான் தனது நாட்டுக்கான தேர்தலை உடனே அறிவித்து இருந்தார். நேற்று ஞாயிரு இடம்பெற்ற பிரெஞ்சு தேர்தலில் சனாதிபதி மக்கிறானின் கட்சி தோல்வி அடையும் நிலையில் உள்ளது. Marine Le Pen தலைமயிலான வலதுசாரி National Rally கட்சி முன்னணியில் உள்ளது. நேற்று இடம்பெற்றது தேர்தலின் முதல் சுற்று. முதல் சுற்றில் 50% வாக்குகளுக்கும் அதிகமான வாக்குகள் பெறுவோர் […]
இலங்கையின் தெற்கு கடலில் மிதந்த போத்தல்களில் இருந்த திரவத்தை மதுபானம் என்று கருதி அருந்திய 3 மீனவர் மரணமாகினர். மேலும் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். மாத்தறைக்கு கிழக்கே உள்ள தங்கல்ல (Thangalle) என்ற இடத்தில் இருந்து சென்ற Devon என்ற வள்ளத்தில் சென்றவர்களே மரணித்து உள்ளனர். இவர்கள் கரையில் இருந்து சுமார் 590 km தூரத்தில் நிலைகொண்டுள்ளதால் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமே அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. இவர்கள் சில போத்தல்களை இன்னோர் வள்ளத்தினருக்கும் வழங்கியதால் அவர்களையும் […]