இன்று வெள்ளி ஆப்கானிஸ்தான் மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு குறைந்தது 62 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் குறைந்தது 36 பேர் காயமடைந்தும் உள்ளார். தாக்குதல் இடம்பெற்ற மசூதி உள்ள மாநிலம் பாகிஸ்தான் எல்லையோரம் உள்ளது. . இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கொண்டாடவில்லை. இப்பகுதியில் தலபானும், ISIS குழுவும் வெளிப்படையாக செயல்படுகின்றன. . ஐ. நா. கணிப்புப்படி ஆப்கானிஸ்தானில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாத காலத்தில் 1,174 பொதுமக்கள் தாக்குதல்களுக்கு […]
பிரித்தானியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியா ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முயற்சி தொடர்பாக இணக்கம் ஒன்றை அடைந்துள்ளனர். இந்த செய்தியை இருதரப்பும் இன்று வியாழன் அறிவித்து உள்ளன. . ஆனாலும் இந்த இணக்கம் பிரித்தானிய பாராளுமன்றத்தாலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாலும் சட்டப்படி அங்கீகரிக்கப்படல் வேண்டும். அதன் பின்னரே இந்த இணக்கம் நடைமுறை ஆக்கப்படலாம். . பிரித்தானியாவின் எதிர் கட்சி இந்த இணக்கத்தை நிராகரிப்பதாக கூறியுள்ளது. தெரேசா மே வரைந்த இணக்கத்திலும் கீழானது இது என்கிறது எதிர் கட்சி. மேயின் […]
Welthungerhilfe என்ற அமைப்பும் Concern Worlwide என்ற அமைப்பும் இணைந்து வெளியிட்ட 2019 ஆம் ஆண்டுக்கான Global Hunger Index (GHI) என்ற பட்டினி பட்டியலில் இந்தியா 102 ஆம் இடத்தில் உள்ளது. . மொத்தம் 117 நாடுகளின் தரவுகளை உள்ளடக்கிய இந்த கணிப்பு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, அஸ்ரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் போன்ற பல செல்வந்த நாடுகளை உள்ளடக்கவில்லை. . இந்த பட்டியலில் இலங்கை 66 ஆம் இடத்திலும், பங்களாதேசம் 88 ஆம் இடத்திலும், பாகிஸ்தான் […]
1492 ஆம் ஆண்டில், இந்தியாவை நோக்கி பயணித்த இத்தாலியர் கிறிஸ்தோபர் கொலம்பஸ் (Christoper Columbus) அமெரிக்காவை அடைந்து இருந்தார். அமெரிக்காவுக்கான அவரின் வருகை ஐரோப்பியர் அமெரிக்கா கண்டம் முழுவதும் பரவ காரணியாக இருந்தது. . தமக்காக புதிய கண்டம் ஒன்றை கைப்பற்றிய கொலம்பஸ் ஐரோப்பியரால் அண்மைவரை புகழ்பாடப்பட்டு வந்தார். ஆனால் அந்த புகழ்பாடல் தற்போது அழிய ஆரம்பித்து உள்ளது. . மிக நீண்ட காலமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட கொலம்பஸ் தினம் (Columbus Day) தற்போது பல நகரங்களில் […]
இந்தியாவின் இந்த வர்த்தக வருடத்துக்கான பொருளாதார வளர்ச்சியை உலக வங்கி (World Bank) 6% ஆக குறைத்து உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் வளர்ச்சி 7.5% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. . ஆனாலும் இந்தியாவின் பொருளாதாரம் நலமாக உள்ளதாக ஆளும் கட்சி கூறுகிறது. அமைச்சர் ரவி சங்கர் அங்கு அதிகமாக விற்பனையாகும் திரைப்பட அனுமதிகளை ஆதாரமாக கூறியுள்ளார். . இந்தியாவின் பொருளாதாரம் சிலகாலத்துக்கு முன்னரே வீழ்ச்சி அடைய ஆரம்பித்து இருந்தாலும், அண்மையில் இடம்பெற்ற […]
இதுவரை காலமும் அமெரிக்காவின் ஆதரவை கையில் கொண்டு சிரியாவின் ஆட்சியில் உள்ள அசாத்துக்கும் (Assad) அவரின் அரச படைகளுக்கும் எதிராக யுத்தம் புரிந்துவந்த SDF (Syrian Democratic Forces) என்ற Kurdish ஆயுத குழு தற்போது தனது எதிரியையே உதவிக்கு அழைத்துள்ளது. . அமெரிக்க சனாதிபதி ரம்ப் தீடீரென SDF க்கு ஆதரவு வழங்கி வந்த அமெரிக்க படைகளை துருக்கி-சிரியா எல்லையில் இருந்து பின்வாங்கியதே SDF குழுவின் இந்த நகர்வுக்கு காரணம். . அமெரிக்க படைகள் விலகிய […]
யாழ்ப்பாண விமான நிலையமான பலாலிக்கும் இந்தியாவின் சென்னை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு நகர்களுக்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பமாகவுள்ளன. Alliance Air என்ற விமான சேவையே இந்த நேரடி சேவையை வழங்கவுள்ளது. . 1996 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட Alliance Air சேவை இந்தியாவின் Air India என்ற அரச விமான சேவையின் அங்கம். டெல்லியை தளமாக கொண்ட இந்த சேவையிடம் தற்போது சுமார் 50 பயணிகளை காவக்கூடிய இரண்டு ATR-42 turboprop விமானங்களும், சுமார் […]
புதன்கிழமைக்கும் வியாழக்கிழமைக்கும் இடைப்பட்ட 34 மணி நேரத்துள் அமெரிக்காவின் Denvor நகரில் வெப்பநிலை சுமார் 39 C ஆல் வீழ்ந்துள்ளது. அமெரிக்காவின் Colorado மாநிலத்து டென்வேர் (Denver) என்ற நகரில் புதன் பிற்பகல் 83 F (28.33 C) ஆக இருந்த வெப்பநிலை வியாழன் இரவு 13 F (- 10.55 C) ஆக வீழ்ந்துள்ளது. . இங்கு இடம்பெற்ற பாரிய இருநாள் வெப்பநிலை வீழ்ச்சியில் இது இரண்டாம் இடத்தில் உள்ளது. . 2018 ஆம் ஆண்டு […]
மலேசியா தாம் 7 விடுதலை புலிகளின் ஆதரவாளர்களை கைது செய்துள்ளதாக இன்று வியாழன் கூறியுள்ளது. . இவர்களை புலிகளுக்கு ஆதரவு வழங்கியமை, பிரச்சாரம் செய்தமை, ஆள் திரட்டியமை, நிதி சேகரித்தமை போன்ற காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசியாவின் பயங்கரவாத தடுப்பு உயர் அதிகாரி Ayob Khan Mydin Pitchay கூறியுள்ளார். . கைது செய்யப்பட்டோருள் இரண்டு மலேசிய அரசியல்வாதிகளும் அடங்குவர். Democratic Action Party என்ற கட்சியை சார்ந்த இவர்கள் கடந்த வருட மாவீரர் விழாவில் கலந்துள்ளனர். […]
துருக்கி முன்னர் கூறியபடி சிரியாவில் உள்ள Kurdish ஆயுத குழுவான SDF (Syrian Democratic Forces) மீது இன்று புதன் தாக்குதலை ஆரம்பித்து உள்ளது. அமெரிக்க சனாதிபதி ரம்பின் எச்சரிக்கையை கணக்கில் எடுக்காது துருக்கி தாக்குதலை ஆரம்பித்து உள்ளது. . கடந்த கிழமை வரை இப்பகுதியில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகள் SDF குழுவுக்கு பாதுகாப்பை வழங்கி வந்துள்ளன. ஆனால் ரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க படைகளை அப்பகுதியில் இருந்து திடீரென பின்வாங்கி இருந்தார். . துருக்கி SDF […]