இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை வரை டெங்கு தாக்கத்துக்கு ஆளானோர் தொகை 55,894 ஆக இருந்தது என்று கூறப்படுகிறது. அத்துடன் 2019 ஆம் ஆண்டின் முதல் 10 மாத காலத்தில் மட்டும் 74 பேர் டெங்கு நோய்க்கு பலியாகி உள்ளனர். . 2018 ஆம் ஆண்டில், மொத்தம் 12 மாதங்களில், 58 பேர் மட்டுமே டெங்கு நோய்க்கு பலியாகி இருந்தனர். . மேற்கு மாகாணத்தில் மட்டும் 26,286 பேர் டெங்கு தாக்கத்துக்கு ஆளாகி இருந்தனர். மற்றைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் […]
முதல் முறையாக உலகின் உயர் 10% செல்வந்ததை கொண்டோரின் பட்டியலில் அமெரிக்கரை பின்தள்ளி பெருமளவு சீனர் தற்போது இடம்பெறுள்ளனர். . தற்போது உலகின் உயர் 10% செல்வந்ததை கொண்ட அமெரிக்கரின் தொகை 99 மில்லியன் ஆகும். ஆனால் அவ்வகை வருமானம் கொண்ட சீனர்களின் தொகை 100 மில்லியன் ஆக உயர்ந்து உள்ளது. . தற்போது $109,430 செல்வந்தம் கொண்டோர் உயர் 10% வருமானம் கொண்டோர் பட்டியலில் அடங்குவர். அதேவேளை $936,430 செல்வந்தம் கொண்டோர் உயர் 1% பட்டியலில் […]
காஸ்மீர் பகுதில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருபகுதிக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூடுகளுக்கு குறைந்தது 10 பேர் பலியாகி உள்ளனர். இன்று ஞாயிரு இடம்பெற்ற வன்முறைகளுக்கு இருதரப்பும் மற்றைய தரப்பை காரணம் கூறியுள்ளனர். . இந்திய படைகளின் பேச்சாளர் Jajesh Kalia தனது கூற்றில் பாகிஸ்தான் இராணுவமே 2003 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்திருந்த சமாதான உடன்படிக்கையை மீறி, இந்திய காவல் அரண்களை நோக்கி சுட்டதாக கூறியுள்ளார். தமது பதில் சூட்டுக்கு குறைந்தது 6 பாகிஸ்தான் படையினரும் […]
பிரித்தானிய பிரதமர் விரைவுபடுத்தி தயாரித்த Brexit திட்டத்தை பிரித்தானிய பாராளுமன்றம் இன்று சனிக்கிழமை மறைமுகமாக நிராகரித்து உள்ளது. இந்த திட்டத்தை எவ்வாறு நடைமுறை செய்வது என்ற சட்டத்தை முதலில் பாராளுமன்றம் அங்கீகாரம் செய்யவேண்டும் என்றுள்ளது பிரித்தானிய பாராளுமன்றம். குழம்பியுள்ள பிரதமர் தற்போது முரண்பட்ட கடிதங்களை சமர்ப்பித்து வருகிறார். . சட்டப்படி பிரித்தானியாவின் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அக்டோபர் 31 ஆம் திகதி வெளியேறும் தீர்வு திட்டம் இன்று சனிக்கிழமை பிரித்தானிய பாராளுமதினால் அங்கீகரிக்கப்பட்டு இருத்தல் வேண்டும். அது […]
இன்று வெள்ளி ஆப்கானிஸ்தான் மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு குறைந்தது 62 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் குறைந்தது 36 பேர் காயமடைந்தும் உள்ளார். தாக்குதல் இடம்பெற்ற மசூதி உள்ள மாநிலம் பாகிஸ்தான் எல்லையோரம் உள்ளது. . இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கொண்டாடவில்லை. இப்பகுதியில் தலபானும், ISIS குழுவும் வெளிப்படையாக செயல்படுகின்றன. . ஐ. நா. கணிப்புப்படி ஆப்கானிஸ்தானில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாத காலத்தில் 1,174 பொதுமக்கள் தாக்குதல்களுக்கு […]
பிரித்தானியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியா ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முயற்சி தொடர்பாக இணக்கம் ஒன்றை அடைந்துள்ளனர். இந்த செய்தியை இருதரப்பும் இன்று வியாழன் அறிவித்து உள்ளன. . ஆனாலும் இந்த இணக்கம் பிரித்தானிய பாராளுமன்றத்தாலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாலும் சட்டப்படி அங்கீகரிக்கப்படல் வேண்டும். அதன் பின்னரே இந்த இணக்கம் நடைமுறை ஆக்கப்படலாம். . பிரித்தானியாவின் எதிர் கட்சி இந்த இணக்கத்தை நிராகரிப்பதாக கூறியுள்ளது. தெரேசா மே வரைந்த இணக்கத்திலும் கீழானது இது என்கிறது எதிர் கட்சி. மேயின் […]
Welthungerhilfe என்ற அமைப்பும் Concern Worlwide என்ற அமைப்பும் இணைந்து வெளியிட்ட 2019 ஆம் ஆண்டுக்கான Global Hunger Index (GHI) என்ற பட்டினி பட்டியலில் இந்தியா 102 ஆம் இடத்தில் உள்ளது. . மொத்தம் 117 நாடுகளின் தரவுகளை உள்ளடக்கிய இந்த கணிப்பு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா, அஸ்ரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் போன்ற பல செல்வந்த நாடுகளை உள்ளடக்கவில்லை. . இந்த பட்டியலில் இலங்கை 66 ஆம் இடத்திலும், பங்களாதேசம் 88 ஆம் இடத்திலும், பாகிஸ்தான் […]
1492 ஆம் ஆண்டில், இந்தியாவை நோக்கி பயணித்த இத்தாலியர் கிறிஸ்தோபர் கொலம்பஸ் (Christoper Columbus) அமெரிக்காவை அடைந்து இருந்தார். அமெரிக்காவுக்கான அவரின் வருகை ஐரோப்பியர் அமெரிக்கா கண்டம் முழுவதும் பரவ காரணியாக இருந்தது. . தமக்காக புதிய கண்டம் ஒன்றை கைப்பற்றிய கொலம்பஸ் ஐரோப்பியரால் அண்மைவரை புகழ்பாடப்பட்டு வந்தார். ஆனால் அந்த புகழ்பாடல் தற்போது அழிய ஆரம்பித்து உள்ளது. . மிக நீண்ட காலமாக அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட கொலம்பஸ் தினம் (Columbus Day) தற்போது பல நகரங்களில் […]
இந்தியாவின் இந்த வர்த்தக வருடத்துக்கான பொருளாதார வளர்ச்சியை உலக வங்கி (World Bank) 6% ஆக குறைத்து உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் வளர்ச்சி 7.5% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. . ஆனாலும் இந்தியாவின் பொருளாதாரம் நலமாக உள்ளதாக ஆளும் கட்சி கூறுகிறது. அமைச்சர் ரவி சங்கர் அங்கு அதிகமாக விற்பனையாகும் திரைப்பட அனுமதிகளை ஆதாரமாக கூறியுள்ளார். . இந்தியாவின் பொருளாதாரம் சிலகாலத்துக்கு முன்னரே வீழ்ச்சி அடைய ஆரம்பித்து இருந்தாலும், அண்மையில் இடம்பெற்ற […]
இதுவரை காலமும் அமெரிக்காவின் ஆதரவை கையில் கொண்டு சிரியாவின் ஆட்சியில் உள்ள அசாத்துக்கும் (Assad) அவரின் அரச படைகளுக்கும் எதிராக யுத்தம் புரிந்துவந்த SDF (Syrian Democratic Forces) என்ற Kurdish ஆயுத குழு தற்போது தனது எதிரியையே உதவிக்கு அழைத்துள்ளது. . அமெரிக்க சனாதிபதி ரம்ப் தீடீரென SDF க்கு ஆதரவு வழங்கி வந்த அமெரிக்க படைகளை துருக்கி-சிரியா எல்லையில் இருந்து பின்வாங்கியதே SDF குழுவின் இந்த நகர்வுக்கு காரணம். . அமெரிக்க படைகள் விலகிய […]