ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பிரித்தானிய படைகள் யுத்தக்குற்ற செயல்களில் ஈடுபட்டனவா என்பதை விசாரணை செய்ய ICC (International Criminal Court) தீர்மானித்துள்ளது. அத்துடன் அதை பிரித்தானிய தவறுகளை மூடிமறைக்க முயன்றதா என்பதையும் ICC ஆராயும். . இன்று திங்கள் BBC செய்தி நிறுவனம் War Crime Scandal Exposed என்ற தலைப்பில் ஒளிபரப்பிய ஆக்கம் ஒன்றின் பின்னரே ICC விசாரணைக்கு முன்வந்துள்ளது. . குறிப்பிட்ட சம்பவம் ஈராக்கில் பிரித்தானிய இராணுவம் கொண்டிருந்த Camp Stephen […]
கடந்த 5 மாதங்களாக ஹாங் காங் நகரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில காலமாக ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளாக மாறி உள்ளன. வீதிகளில் கழிவுகளை குவித்தல், கல், இரும்பு போன்றவற்றை குவித்தல் போன்ற செயல்கள் மாணவர்கள் செய்து வருகின்றனர். . ஹாங் காங் நகரில் சுமார் 10,000 சீன படைகள் நிலைகொண்டு இருந்தாலும் அவர்கள் இதுவரை ஹாங் காங் வீதிகளுக்கு வரவில்லை. ஹாங் காங் போலீசாரே நிலைமைகளை முயன்றவரை கட்டுப்படுத்தி வந்துள்ளனர். . முதல் முறையாக […]
இன்று வெள்ளிக்கிழமை இந்தியாவின் டெல்கி மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ள Amnestry International அலுவலகங்கள் மீது திடீரென தேடுதல் நடவடிக்கைகளை செய்துள்ளது இந்தியாவின் மத்திய புலனாய்வு திணைக்களம் (CBI). அதனால் விசனம் கொண்டுள்ளது Amnestry International. . காஸ்மீரில் இந்திய படைகள் செய்யும் வன்முறைகளை தாம் பகிரங்கம் செய்வதாலேயே தம் மீது இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறுகிறது Amnestry. கடந்த ஒரு வருட காலமாக தம் மீது இந்திய அரசு இவ்வாறான நடவடிக்கைகளை செய்து […]
சீனாவின் செய்வாய் கிரகத்துக்கான ஆளில்லா பயண பணிகள் இன்று வியாழன் மேலும் ஒரு படி முன்னேறி உள்ளது. சீனாவின் Hebei மாநிலத்தில் இன்று செய்துகொண்ட பரிசோதனை மூலம் செய்வாயில் பத்திரமாக தரையிறங்கும் முறைகளை உறுதி செய்துள்ளது சீனா. இன்னோர் கிரகத்தில் தரையிறங்கும் கலம் அங்குள்ள இடர்களை தவிர்த்து, தரையில் மோதாது, தரையிறங்கவேண்டும். அவ்வாறான பரிசோதனை ஒன்றையே சீனா இன்று வெற்றிகரமாக செய்துள்ளது. . சீனா 2016 ஆம் ஆண்டு செவ்வாய்க்கு ஆளில்லா கலம் ஒன்றை அனுப்பும் பணிகளில் […]
ஹாங் காங் நகரில் சுமார் 5 மாதங்களுக்கு முன் ஆரம்பித்த ஆர்ப்பாட்டங்கள் தற்போது வன்முறைகளாக மாறி உள்ளன. கடைகள் எரிப்பு, வீதிமறிப்பு, ரயில் எரிப்பு, கலகம் போன்ற பல வகை வன்முறைகளும் ஆர்பாட்டக்காரர்களால் கையாளப்படுகின்றன. . சீனா இதுவரை தலையிடாத நிலையில் ஹாங் காங் போலீசார் மட்டுமே இதுவரை கலகங்களை அடக்க முனைந்து வருகின்றனர். . கடந்த 5 மாத காலங்களில் சுமார் 4,000 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். செவ்வாய்க்கிழமை மட்டும் 1,756 கண்ணீர்ப்புகை குண்டு, […]
உலகின் மிக பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் (Google) ஆரம்பத்தில் “Dont be Evil” என்ற கொள்கையை கொண்டிருந்தது. ஆனால் இன்று அந்த நிறுவனம் முன்னருக்கு முரணாக செயல்படுகிறது. The Wall Street Journal செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆக்கம் ஒன்றின்படி Google நிறுவனம் Ascension என்ற அமெரிக்க வைத்தியசாலை நிறுவனத்துடன் வர்த்தக உறவு கொள்வதன் மூலம் அந்த வைத்தியசாலையின் அங்கத்துவ நோயாளிகளின் தவுகளை கைக்கொள்கிறது. . ஒரு தொழிநுட்ப நிறுவனத்துக்கும் நோயாளிகளுக்கும் இடையில் நேரடி தொடர்புகள் […]
கடும் வெப்பம் காரணமாக அஸ்ரேலியாவில் இடம்பெற்றுவரும் காட்டு தீயின் புகை நியூசிலாந்து வரை தெரிகிறது என்று கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை இந்த தீ உக்கிரம் அடையும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. . New South Wales பகுதியில் மட்டும் 70 இடங்களில் காட்டு தீ பரவி வருவதாக கூறப்படுகிறது. Queensland பகுதியில் 50 இடங்களில் தீ பரவுகிறது. . இதுவரை குறைந்தது 159 வீடுகள் தீக்கு இரையாகி உள்ளன. சிட்னியை (Sydney) அண்டிய பகுதியே மிக ஆபத்தான நிலையில் […]
இலங்கையின் SriLankan விமான சேவை இந்தியாவின் Air India விமான சேவைமூலம் கனடாவின் Toronto நகருக்கு சேவை செய்யவுள்ளது. இந்த சேவை இந்தியாவில் தலைநகர் டெல்கி ஊடாகவே இடம்பெறும். அத்துடன் Toronto வுக்கும் டெல்கிக்கும் இடையிலான சேவையை Air India விமான சேவை code-share மூலம் வழங்கும். . Air India சேவையின் டெல்கி-Toronto flight AI187 SriLankan சேவையின் UL3640 ஆகவும், Toronto-டெல்கி flight AI188 SriLankan சேவையின் UL3641 ஆகவும் இருக்கும். . கொழும்பு-டெல்கி-Toronto […]
இராமர் பிறந்த இடம் என்று இந்துக்களால் கருதப்படும் பாபர் பள்ளிவாசல் உள்ள அயோத்தியை இந்துக்களிடம் முழுமையாக கையளிக்கும்படி இந்திய நீதிமன்றம் இன்று சனிக்கிழமை தீர்ப்பு கூறியுள்ளது. அத்துடன் பதிலுக்கு வேறு எங்காவது இடத்தில் பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணிக்க அரசு 5 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும் என்றும் இந்த நீதிமன்றம் இன்று கூறியுள்ளது. . உத்தர பிரதேசத்தில் உள்ள சர்சைக்குரிய பாபர் பள்ளிவாசல் (Babur Mosque) இவ்விடத்தில் 1528 ஆம் ஆண்டு மோகல் காலத்தில் (Mughal) அவரது இரணுவ […]
Michael Bloomberg என்ற முன்னாள் நியூ யார்க் மாநகர முதல்வர் அமெரிக்காவின் Democratic கட்சி சார்பில் அடுத்த வருட சனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்று செய்திகள் கூறுகின்றன. அவ்வாறு புளும்பேர்க் போட்டியில் குதிப்பின் இவர் Repiblican கட்சியை சார்ந்த ரம்புக்கு எதிராக போட்டியிடுவார். . புளும்பேர்க் இந்த அறிவிப்பை இதுவரை நேரடியாக செய்யவில்லை. ஆனால் அவர் இந்த செய்தியை வெள்ளி அறிவிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. முதலில் இடம்பெறவுள்ள அலபாமா (Alabama) மாநில உட்கட்சி தேர்தலில் இவர் போட்டியிடுவாரா […]