கடும் வெப்பம் காரணமாக அஸ்ரேலியாவில் இடம்பெற்றுவரும் காட்டு தீயின் புகை நியூசிலாந்து வரை தெரிகிறது என்று கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை இந்த தீ உக்கிரம் அடையும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. . New South Wales பகுதியில் மட்டும் 70 இடங்களில் காட்டு தீ பரவி வருவதாக கூறப்படுகிறது. Queensland பகுதியில் 50 இடங்களில் தீ பரவுகிறது. . இதுவரை குறைந்தது 159 வீடுகள் தீக்கு இரையாகி உள்ளன. சிட்னியை (Sydney) அண்டிய பகுதியே மிக ஆபத்தான நிலையில் […]
இலங்கையின் SriLankan விமான சேவை இந்தியாவின் Air India விமான சேவைமூலம் கனடாவின் Toronto நகருக்கு சேவை செய்யவுள்ளது. இந்த சேவை இந்தியாவில் தலைநகர் டெல்கி ஊடாகவே இடம்பெறும். அத்துடன் Toronto வுக்கும் டெல்கிக்கும் இடையிலான சேவையை Air India விமான சேவை code-share மூலம் வழங்கும். . Air India சேவையின் டெல்கி-Toronto flight AI187 SriLankan சேவையின் UL3640 ஆகவும், Toronto-டெல்கி flight AI188 SriLankan சேவையின் UL3641 ஆகவும் இருக்கும். . கொழும்பு-டெல்கி-Toronto […]
இராமர் பிறந்த இடம் என்று இந்துக்களால் கருதப்படும் பாபர் பள்ளிவாசல் உள்ள அயோத்தியை இந்துக்களிடம் முழுமையாக கையளிக்கும்படி இந்திய நீதிமன்றம் இன்று சனிக்கிழமை தீர்ப்பு கூறியுள்ளது. அத்துடன் பதிலுக்கு வேறு எங்காவது இடத்தில் பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணிக்க அரசு 5 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும் என்றும் இந்த நீதிமன்றம் இன்று கூறியுள்ளது. . உத்தர பிரதேசத்தில் உள்ள சர்சைக்குரிய பாபர் பள்ளிவாசல் (Babur Mosque) இவ்விடத்தில் 1528 ஆம் ஆண்டு மோகல் காலத்தில் (Mughal) அவரது இரணுவ […]
Michael Bloomberg என்ற முன்னாள் நியூ யார்க் மாநகர முதல்வர் அமெரிக்காவின் Democratic கட்சி சார்பில் அடுத்த வருட சனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்று செய்திகள் கூறுகின்றன. அவ்வாறு புளும்பேர்க் போட்டியில் குதிப்பின் இவர் Repiblican கட்சியை சார்ந்த ரம்புக்கு எதிராக போட்டியிடுவார். . புளும்பேர்க் இந்த அறிவிப்பை இதுவரை நேரடியாக செய்யவில்லை. ஆனால் அவர் இந்த செய்தியை வெள்ளி அறிவிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. முதலில் இடம்பெறவுள்ள அலபாமா (Alabama) மாநில உட்கட்சி தேர்தலில் இவர் போட்டியிடுவாரா […]
NATO அமைப்பு மூளை மரணித்த நிலையில் உள்ளது (brain dead) என்று கூறியுள்ளார் பிரான்சின் சனாதிபதி மக்றான் (Emmanuel Macron). . அமெரிக்காவின் ரம்ப் தலைமையிலான ஆட்சி NATO மீது அவநம்பிக்கை கொண்டுள்ளதே மக்றானின் விசனத்துக்கு முக்கிய காரணம். . NATO நாடுகள் அவற்றின் அங்கத்துவ நாடுகளின் பாதுகாப்புக்கு வருமா என்பதுவும் சந்தேகமே என்றுள்ளார் மக்றான். NATO அங்கத்துவ நாடுகளுக்கு அறிவிக்காது சனாதிபதி ரம்ப் சிரியாவில் இருந்து வெளியேறியதும் பிளவுக்கு உதாரணமாக காட்டப்பட்டுள்ளது. . ஆனால் ஜேர்மனியின் […]
நேற்று அமெரிக்காவில் இடம்பெற்ற மூன்று மாநில தேர்தல் முடிவுகள் ரம்பின் Republican கட்சிக்கு பலத்த தோல்விகளை வழங்கி உள்ளன. சனாதிபதி ரம்ப் மீதான வெறுப்பாலேயே அவர் சார்ந்த Republican கட்சியும் தோல்விகளை அடைந்துக்கலாம் என்று கருதப்படுகிறது. . Virginia மாநிலத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தலில் Democritic கட்சி இரண்டு அவைகளிலும் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இங்கே ரம்பின் செயற்பாடுகளுக்கு 30% ஆதரவு மட்டுமே தற்போது உள்ளது. இந்த மாநிலம் Republican கோட்டையாக பல சந்ததிகளுக்கு விளங்கியது. . […]
2015 ஆம் ஆண்டு, ஒபாமா ஆட்சி காலத்தில், ஈரான் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடன் செய்துகொண்ட அணு வேலைப்பாடுகள் தொடர்பான JCPOA என்ற உடன்படிக்கையில் இருந்து மேலும் விலகும் முறையில் யூரேனியம் வல்லமையாக்கல் (uranium enrichment) வேலைகளை நாளை முதல் ஆரம்பிக்க உள்ளது. இந்த செய்தியை அந்நாட்டு சனாதிபதி இன்று கூறி உள்ளார். . ஒபாமா செய்துகொண்ட JCPOA என்ற உடன்படிக்கைகை மீது ரம்ப் வழமைபோல் வெறுப்பு கொண்டிருந்தார். தான் பதவிக்கு […]
இந்தோனேசியாவிலும், எதியோப்பியாவிலும் இரண்டு புதிய Boeing 737 MAX 8 வகை விமானங்கள் வீழ்ந்து நொறுங்கியதை தொடர்ந்து அனைத்து MAX 8 விமானங்களும் சேவைகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டன. Boeing என்ற அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்தின் இந்த விமானங்களுக்கான திருத்தங்கள் தொடர்ந்தும் இழுபடுவதால், ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான Airbus பெரும் பயனை அடைகிறது. . ஆகஸ்ட் மாதம் முதலிருந்தான 3 மாத காலத்தில் Airbus விமான தயாரிப்பு நிறுவனம் மொத்தம் 350 விமானங்களை ஆசியாவில் மட்டும் விற்பனை […]
உலகிலேயே அதிகம் மாசடைந்த வளியை கொண்ட நகரமாக இந்தியாவின் தலைநகர் டெல்கி (Delhi) உள்ளது. இன்று ஞாயிறு அந்த நகரின் வளி மாசின் அளவு வளி மாசை அளக்கும் கருவிகளின் உச்ச வாசிப்பையும் மீறி உள்ளது. வளி மாசை அளக்கும் கருவிகள் (Air Quality Index meter) வாசிக்கக்கூடிய அதி உயர் வாசிப்பு 999 ஆகும். ஆனால் இன்று ஞாயிறு அந்த நகரில் உள்ள அனைத்து மாசு அளக்கும் கருவிகளும் 999 வாசிப்புடன் முடங்கி விட்டன. . […]
2012 ஆம் ஆண்டு புரூணை, கம்போடியா, இந்தோனேசியா, லஓஸ், மலேசியா, பர்மா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய 10 ASEAN (Association of Southeast Asian Nations) நாடுகளும் சீனா, ஜப்பான், இந்தியா, தென்கொரியா, அஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய 6 நாடுகளும் இணைந்து RECP (Regional Comprehensive Economic Partnership) என்ற சுதந்திர வர்த்தக வலயத்தை உருவாக்க முயற்சி எடுத்தன. . அந்த முயற்சி இன்று நவம்பர் 2 முதல் 4 வரை தாய்லாந்தில் இடம்பெறும் […]