அமெரிக்க யுத்த குற்றவாளி தப்பிக்க, அதிகாரி பதவி நீக்கம்

2017 ஆம் ஆண்டு Edward Gallagher என்ற அமெரிக்க Navy SEAL விசேட படை உறுப்பினர் தடுப்புக்காவலில் இருந்த 17 வயது ஈராக் IS உறுப்பினர் ஒருவரை கத்தியால் வெட்டி கொலை செய்து, மரணித்த உடலுடன் படமும் எடுத்து பெருமைப்பட்டார் என்று கூறி அமெரிக்க இராணுவ நீதிமன்றால் யுத்த குற்ற விசாரணை செய்யப்பட்டது. இறுதியில் மரணித்த உடலுடன் படம் எடுத்து மட்டுமே குற்றமாக அமெரிக்க இராணுவ நீதிமன்றால் காணப்பட்டது. கொலை குற்றச்சாட்டு கைவிடப்பட்டது. . அதை தொடர்ந்து […]

பிர்லாவுக்கு இழப்பு $3 பில்லியன்

இந்தியாவில் தற்போது 3 ஆவது பெரிய நிறுவனமாக விளங்கும் Aditya Birla Group வர்த்தகத்தின் பிரதான உரிமையாளரான குமார் மங்களம் பிர்லா (Kumar Mangalam Birla) அண்மையில் சுமார் $3 பில்லியன் வெகுமதியை பங்குச்சந்தியில் இழந்துள்ளார். . பிரித்தானியாவின் Vodafone என்ற தொலைத்தொடர்பு நிறுவனம் இந்திய நிறுவனத்துடன் இணைந்து Vodafone Idia என்ற தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைபேசி நிறுவனமான இது கடந்த காலாண்டில் மட்டும் $7.14 பில்லியன் இழப்பை அடைந்துள்ளது. […]

சமஸ்கிரத விரிவுரையாளர் தலைமறைவு

இந்தியாவின் வரனாசி (Varanasi) நகரில் உள்ள Banaras Hindu University என்ற பல்கலைக்கழத்தில் சமஸ்கிரதம் படிப்பிக்க நியமிக்கப்பட்ட விரிவுரையாளர் பதவி கிடைத்து சில தினங்களுக்குள் மிரட்டல் காரணமாக தலைமறைவாகி உள்ளார். இவர் ஒரு இஸ்லாமியர் என்றும் அதனால் இவர் இந்து மொழியை படிப்பிக்க முடியாது என்றும் அங்குள்ள இந்துவாத மாணவர் அமைப்பு எதிர்க்கின்றது. . Feroz Khan என்ற இந்த இஸ்லாமிய விரிவுரையாளர் சமஸ்கிரத்தில் PhD வரையான கல்வி கற்றவர். அதனால் இவருக்கு மேற்படி பல்கலைக்கழகம் சமஸ்கிரத […]

பணத்துக்கு அமெரிக்க தூதர் பதவிகள்

செல்வந்தர்களிடம் பணம் பெற்று அமெரிக்க தூதுவர் பதவிகள் வழங்கப்பட்டு வருவதாத அமெரிக்காவின் CBS செய்தி நிறுவனம் இன்று கூறியுள்ளது. Doug Manchester என்ற பல பில்லியன்கள் சொத்துக்களை கொண்ட செல்வந்தரிடம் இருந்து ரம்பின் கட்சியான Repulican கட்சிக்கு பணம் பெற்று, அவரை பஹாமாஸுக்கு (Bhamas) தூதுவராக நியமிக்க முனைத்துள்ளது Republican கட்சி. . Doug Manchester ஒரு ரம்ப் ஆதரவாளர். அவர் $1 மில்லியன் பணத்தை ரம்பின் ஜனாதிபதி பதியேற்பு வைபவத்துக்கு வழங்கி இருந்தார். மறுதினம் Doug […]

பிரித்தானிய இராணுவம் மீது யுத்தக்குற்ற விசாரணை

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பிரித்தானிய படைகள் யுத்தக்குற்ற செயல்களில் ஈடுபட்டனவா என்பதை விசாரணை செய்ய ICC (International Criminal Court) தீர்மானித்துள்ளது. அத்துடன் அதை பிரித்தானிய தவறுகளை மூடிமறைக்க முயன்றதா என்பதையும் ICC ஆராயும். . இன்று திங்கள் BBC செய்தி நிறுவனம் War Crime Scandal Exposed என்ற தலைப்பில் ஒளிபரப்பிய ஆக்கம் ஒன்றின் பின்னரே ICC விசாரணைக்கு முன்வந்துள்ளது. . குறிப்பிட்ட சம்பவம் ஈராக்கில் பிரித்தானிய இராணுவம் கொண்டிருந்த Camp Stephen […]

ஹாங் காங் வீதி சுத்திகரிப்பில் சீன இராணுவம்

கடந்த 5 மாதங்களாக ஹாங் காங் நகரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில காலமாக ஆர்ப்பாட்டங்கள் வன்முறைகளாக மாறி உள்ளன. வீதிகளில் கழிவுகளை குவித்தல், கல், இரும்பு போன்றவற்றை குவித்தல் போன்ற செயல்கள் மாணவர்கள் செய்து வருகின்றனர். . ஹாங் காங் நகரில் சுமார் 10,000 சீன படைகள் நிலைகொண்டு இருந்தாலும் அவர்கள் இதுவரை ஹாங் காங் வீதிகளுக்கு வரவில்லை. ஹாங் காங் போலீசாரே நிலைமைகளை முயன்றவரை கட்டுப்படுத்தி வந்துள்ளனர். . முதல் முறையாக […]

Amnestry அலுவலகங்கள் மீது CBI தேடுதல்

இன்று வெள்ளிக்கிழமை இந்தியாவின் டெல்கி மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ள Amnestry International அலுவலகங்கள் மீது திடீரென தேடுதல் நடவடிக்கைகளை செய்துள்ளது இந்தியாவின் மத்திய புலனாய்வு திணைக்களம் (CBI). அதனால் விசனம் கொண்டுள்ளது Amnestry International. . காஸ்மீரில் இந்திய படைகள் செய்யும் வன்முறைகளை தாம் பகிரங்கம் செய்வதாலேயே தம் மீது இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறுகிறது Amnestry. கடந்த ஒரு வருட காலமாக தம் மீது இந்திய அரசு இவ்வாறான நடவடிக்கைகளை செய்து […]

சீனாவின் செவ்வாய் பயண பணிகள் முன்னேற்றம்

சீனாவின் செய்வாய் கிரகத்துக்கான ஆளில்லா பயண பணிகள் இன்று வியாழன் மேலும் ஒரு படி முன்னேறி உள்ளது. சீனாவின் Hebei மாநிலத்தில் இன்று செய்துகொண்ட பரிசோதனை மூலம் செய்வாயில் பத்திரமாக தரையிறங்கும் முறைகளை உறுதி செய்துள்ளது சீனா. இன்னோர் கிரகத்தில் தரையிறங்கும் கலம் அங்குள்ள இடர்களை தவிர்த்து, தரையில் மோதாது, தரையிறங்கவேண்டும். அவ்வாறான பரிசோதனை ஒன்றையே சீனா இன்று வெற்றிகரமாக செய்துள்ளது. . சீனா 2016 ஆம் ஆண்டு செவ்வாய்க்கு ஆளில்லா கலம் ஒன்றை அனுப்பும் பணிகளில் […]

ஹாங் காங்கில் 5 மாதங்களாக தொடரும் வன்முறை

ஹாங் காங் நகரில் சுமார் 5 மாதங்களுக்கு முன் ஆரம்பித்த ஆர்ப்பாட்டங்கள் தற்போது வன்முறைகளாக மாறி உள்ளன. கடைகள் எரிப்பு, வீதிமறிப்பு, ரயில் எரிப்பு, கலகம் போன்ற பல வகை வன்முறைகளும் ஆர்பாட்டக்காரர்களால் கையாளப்படுகின்றன. . சீனா இதுவரை தலையிடாத நிலையில் ஹாங் காங் போலீசார் மட்டுமே இதுவரை கலகங்களை அடக்க முனைந்து வருகின்றனர். . கடந்த 5 மாத காலங்களில் சுமார் 4,000 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். செவ்வாய்க்கிழமை மட்டும் 1,756 கண்ணீர்ப்புகை குண்டு, […]

நோயாளிகளின் தரவுகளை கைக்கொள்ளும் Google

உலகின் மிக பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகிள் (Google) ஆரம்பத்தில் “Dont be Evil” என்ற கொள்கையை கொண்டிருந்தது. ஆனால் இன்று அந்த நிறுவனம் முன்னருக்கு முரணாக செயல்படுகிறது. The Wall Street Journal செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆக்கம் ஒன்றின்படி Google நிறுவனம் Ascension என்ற அமெரிக்க வைத்தியசாலை நிறுவனத்துடன் வர்த்தக உறவு கொள்வதன் மூலம் அந்த வைத்தியசாலையின் அங்கத்துவ நோயாளிகளின் தவுகளை கைக்கொள்கிறது. . ஒரு தொழிநுட்ப நிறுவனத்துக்கும் நோயாளிகளுக்கும் இடையில் நேரடி தொடர்புகள் […]