அமெரிக்காவில் இராணுவ பயிற்சி பெற்றுவரும் சவுதி அரேபிய வான்படை உறுப்பினன் ஒருவர் வகுப்பறையில் இருந்த 3 அமெரிக்க உறுப்பினர்களை சுட்டு கொலை செய்துள்ளார். அங்கு விரைந்த அமெரிக்க படை அதிகாரிகள் சவுதி மாணவனையும் சுட்டு கொலை செய்துள்ளனர். . அமெரிக்காவின் புளோறிடா (Florida) மாநிலத்தில் உள்ள பென்ஸகோல (Pensacola) என்ற இடத்தில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்திலேயே இந்த சம்பவம் இன்று வெள்ளி காலை 6:51 மணியளவில் இடம்பெறுள்ளது. . இந்த சம்பவத்தில் குறைந்தது மேலும் 8 […]
பங்கு சந்தை IPO (Initial Public Offering) மூலம் முதலீடு திரட்ட சென்ற சவுதி அரேபியாவின் Aramco என்ற எண்ணெய்வள நிறுவனம் இன்று $25.5 பில்லியனை திரட்டி உள்ளது. இதுவரை IPO மூலம் அதிகம் முதலீட்டை திரட்டிய நிறுவனமாக $25 பில்லியன் திரட்டிய சீனாவின் Alibaba நிறுவனம் விளங்கி இருந்தது. தற்போது Aramco முன்னணியில் உள்ளது. . Aramco முதலில் $100 பில்லியன் திரட்ட விரும்பி இருந்தாலும், மேற்குநாட்டு முதலீட்டாளர் பின்வாங்க, அது தனது எதிர்பார்ப்பை குறைத்துக்கொண்டது. […]
தற்போது நேபாளத்தில் இடம்பெற்றுவரும் 2019 ஆம் ஆண்டுக்கான தென்னாசிய விளையாட்டு போட்டியில் புதன்கிழமை வரையிலான காலத்தில் இந்தியா 70 பதக்கங்களை பெற்று முன்னணியில் உள்ளது. இதில் 34 தங்க பதக்கங்களும், 23 வெள்ளி பதக்கங்களும், 13 பித்தளை பதக்கங்களும் அடங்கும். . இரண்டாம் இடத்தில் உள்ள நேபாளம் மொத்தம் 69 பதக்கங்களை வென்றுள்ளது. அதில் 29 பதக்கங்கள் தங்க பதக்கங்கள். . இலங்கை 8 தங்க பதக்கங்கள், 23 வெள்ளி பதக்கங்கள், 38 பித்தளை பதக்கங்கள் அடங்க […]
தற்போது இடம்பெறும் 70 ஆவது நேட்டோ (NATO) அமர்வுக்கு ஐரோப்பா சென்றுள்ள அமெரிக்க சனாதிபதி ரம்ப் பிரான்சின் சனாதிபதி மக்ரானை (Macron) இழிவு செய்துள்ளார். NATO அணி மூளை செய்த நிலையில் (brain dead) உள்ளது என்று அண்மையில் மக்ரான் கூறியதே ரம்பின் விசனத்துக்கு காரணம். . NATO தொடர்பான மக்ரானின் கூற்று “nasty”, “insulting”, “very dangerous” என்றெல்லாம் கூறியுள்ளார் ரம்ப். அத்துடன் அமெரிக்காவுக்கு அல்ல, பிரான்சுக்கே NATO அவசியம் தேவை என்றும் ரம்ப் கூறியுள்ளார் […]
நவம்பர் 25 ஆம் திகதி அடையாளம் காணப்படாதோரால் கடத்தி இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரக தவுகளை பறித்ததாக கூறப்படும் சம்பவத்தின் காரணியான சுவிஸ் தூதரக ஊழியர் இலங்கையை விட்டு வெளியேற இலங்கை நீதிமன்றம் இன்று செவ்வாய் தடை விதித்துள்ளது. . இந்த தடை டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும். இக்காலத்தில் மேற்படி ஊழியர் கடத்தல் தொடர்பாக தனது முறைப்பாடுகளை இலங்கை பொலிஸாருக்கு வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. . கோத்தபாய ராஜபக்ஸ […]
தற்போது உலகிலேயே அதிக அளவில் முகப்பதிவு (facial scan) பயன்படுத்தப்படும் நாடு சீனா. சீன அரசின் ஆதரவுடன் பல அரச சார்பற்ற நிறுவனங்களும் அங்கு தொலைபேசி (smart phone) மூலமான முகப்பதிவை பயன்படுத்தி வருகின்றன. . ஞாயிறு முதல் எவராவது புதிய தொலைபேசி (smart phone) கொள்வனவு செய்ய விரும்பின், அவரின் முகப்பதிவை தொலைபேசி நிறுவனத்துக்கு வழங்கவேண்டும். . முகப்பதிவு சந்தேக நபர்களை கைது செய்ய உதவினாலும், தனிநபர் சுதந்திரத்தையும் பாதிக்கின்றது. அண்மையில் சுமார் 60,000 கூடியிருந்த […]
இலங்கை சனாதிபதியின் இந்திய பயணத்தின்போது இலங்கைக்கு இந்தியா $450 மில்லியன் கடனுதவி (line of credit) வழங்க முன்வந்துள்ளது. இலங்கையின் சனாதிபதியான கோத்தபாயா ராஜபக்ஸ தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா சென்றபோதே இந்த அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது. . மேற்படி கடனுதவியில் $400 மில்லியன் உள்நாட்டு கட்டுமான வேலைப்பாடுகளுக்கு வழங்கப்படும். மிகுதி $50 மில்லியன் இலங்கையின் பாதுகாப்பு வேலைப்பாடுகளுக்கு வழங்கப்படும். இந்த அறிவிப்பை இந்திய பிரதமர் மோதி வெள்ளிக்கிழமை அறிவித்து உள்ளார். . ஏற்கனவே அறிவித்த […]
கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக ஊழியர் ஒருவரை கடத்திய அடையாளம் காணப்படாதோர் தூதரக உண்மைகளை கைக்கொண்டு உள்ளனர் என்கிறது அமெரிக்காவின் The New York Times செய்தி நிறுவனம். இந்த சம்பவம் திங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. . சுவிஸ் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் Pierre-Alain Eltschinger மேற்படி கடத்தலை உறுதிப்படுத்தி உள்ளார். . மேற்படி கடத்தலை செய்தோர், சுவிஸ் தூதரக ஊழியரான பெண்ணின் தொலைபேசியை unlock செய்ய கூறி, அதில் இருந்த தரவுகளை ஆராய்ந்து உள்ளனர். . […]
ஆடம்பர உல்லாச பயண வெளியீடான Conde Nast (luxury travel publication) அங்கத்தவர்களின் 2019 ஆம் ஆண்டுக்கான உல்லாச பயண விருப்ப தெரிவில் இலங்கை 4 ஆம் இடத்தில் உள்ளது. . இந்த வெளியீட்டில் அங்கத்துவம் கொண்ட சுமார் 600,000 உறுப்பினர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பின் இவ்வருட வெளியீடு The 32nd Reader’s Choice Awards ஆகும். . அமெரிக்காவின் நியூ யார்க் நகரை தளமாக கொண்ட இந்த வெளியீடு […]
மொத்தம் 42 கொள்கலங்கள் நிரம்பிய பொலித்தீன் கழிவுகளை பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்புகிறது மலேசியா. இவை சட்டத்துக்கு விரோதமான முறையில் மலேசியாவுக்கு அனுப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றை திருப்பி ஏற்றுக்கொள்ள பிரித்தானிய இணங்கி உள்ளது. . கடந்த மாதம் சுமார் 300 கொள்கலங்கள் மலேசிய துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தன. பின்னர் வேறுசில நாடுகள் சுமார் 200 கொள்கலங்களை தாம் எடுத்துக்கொண்டன. . அண்மை காலம்வரை சீன சுமார் 7 மில்லியன் தொன் கழிவுகளை மேற்கு நாடுகளில் இருந்து பெற்றது. […]