ஈரானின் Revolutionary Guards என்ற பகிரங்கமான விசேட இராணுவ அணியின் கீழ், ஆனால் இரகசிய தாக்குதல்களில் பயன்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட Quds Force என்ற அணியின் தலைவரான General Qasem Soleimani என்ற இராணுவ அதிகாரியை இன்று வியாழன் அமெரிக்க விமானப்படை தாக்கி கொலை செய்துள்ளது. . ஈராக்கின் பக்தாத் விமான நிலையத்தில் இருந்து காரில் வெளியேறுகையிலேயே Soleimani ஏவுகணைகள் மூலம் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளார். . இவர் ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதுவரகத்தின் மீதான தாக்குதலுக்கு […]
Unicef வெளியிட்ட தவுகளின்படி 2020 ஆம் ஆண்டு புதுவருட தினத்தன்று 67,385 குழந்தைகளை பெற்ற இந்தியா முதலாம் இடத்தில் உள்ளது. மொத்தம் 46,299 குழந்தைகளை பெற்ற சீனா இரண்டாம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டு உள்ளது. . புதுவருட தினமான ஜனவரி 1 ஆம் திகதி உலகம் எங்கும் சுமார் 392,078 குழந்தைகள் பிறந்துள்ளன. அதன்படி சுமார் 17% குழந்தைகள் இந்தியாவில் பிறந்துள்ளன. . மூன்றாம் இடத்தில் உள்ள நைஜீரியாவில் 26,039 குழந்தைகளும், 4 ஆம் இடத்தில் உள்ள பாகிஸ்தானில் […]
Carlos Ghosn என்பவர் பிரான்சின் Renault வாகன தயாரிப்பு நிறுவனமும் Nissan என்ற ஜப்பானின் வாகன நிறுவனமும் 1999 ஆம் ஆண்டு இணைந்த பின் உருவான Renault-Nissan Motor நிறுவனத்தின் முன்னாள் தலைவர். இவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் ஜப்பான் நீதிமன்றில் பதியப்பட்டு இவர் 2018 ஆம் ஆண்டு முதல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருந்தார். அந்நிலையிலேயே இவர் தப்பி ஓடியுள்ளார். . தற்போது 65 வயதான Ghosn ஒரு பில்லியன் யென் ($9.8 மில்லியன்) பிணையில் […]
அஸ்ரேலியாவின் தென்கிழக்கே பரவி வரும் காட்டு தீ காரணமாக சுமார் 4,000 மக்கள் அப்பகுதி கடற்கரையில் முடக்கப்பட்டு உள்ளனர் என்று Victoria நகரின் அவசரகால சேவை அதிகாரியான Andrew Crisp இன்று செவ்வாய் கூறியுள்ளார். . சிலர் வளங்கள் மூலம் கடலுக்குள்ளும் சென்று தம்மை பாதுகாத்துள்ளனர். இங்குள்ள சில கடற்கரைகள் உல்லாச பயணிகளால் நிரம்பியுள்ள கோடை காலம் இது. . Melbourne பகுதியில் சுமார் 100,000 மக்கள் நேற்று திங்கள் வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டு உள்ளனர். . […]
ஈரானின் ஆதரவுடன் ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயற்படும் Kataib Hezbollah என்ற ஆயுத குழு மீது அமெரிக்க விமானப்படை நேற்று குண்டுகளை வீசி உள்ளது. இந்த குழு சில தினங்களுக்கு முன் செய்த ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்கர் ஒருவர் இறந்ததாக அமெரிக்கா கூறியுள்ளது. . அமெரிக்காவின் இந்த தாக்குதலை ஈராக் வன்மையாக கண்டித்து உள்ளது. ஈராக்கில் சில ஆயிரம் அமெரிக்க படைகள் தற்போதும் தங்கி உள்ளன. ஏற்கனவே உள்நாட்டு குழப்பங்களில் சிக்கி உள்ள ஈராக் அங்கு […]
இன்று ஞாயிறு பங்களாதேஷில் உள்ள Tetulia என்ற இடத்தில் 4.5 C வெப்பநிலை பதியப்பட்டு உள்ளது. அந்நாட்டில் நிலவும் இந்த கடும் குளிருக்கு இதுவரை சுமார் 50 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் சுமார் 4,500 பேர் வைத்தியமும் பெற்றுள்ளனர். . இந்த குளிர் வெப்பநிலை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என்றும் கூறப்படுகிறது. கடும் புகார் காரணமாக சில விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திசை திருப்பப்பட்டும் உள்ளன. . தலைநகர் டாக்காவில் (Dhaka) இன்று […]
தற்போது உலகின் பிரபல GPS (Global Positioning System) ஆக அமெரிக்காவின் GPS வழிகாட்டி சேவை விளங்குகிறது. ஆனால் தமது BeiDu சேவை அமெரிக்காவின் GPS சேவையுடன் உலக அளவில் போட்டியிடும் என்று BeiDu வெள்ளிக்கிழமை கூறியுள்ளது. . அமெரிக்க இராணுவம் செய்மதிகளின் உதவியுடன் தமது இருப்பிடங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் 1973 ஆம் ஆண்டு GPS திட்டத்தை ஆரம்பித்தது. அமெரிக்க வான்படை 1993 ஆம் ஆண்டில் மொத்தம் 24 செய்மதிகளை பூமியை வலம்வர வைத்து GPS […]
இன்று வெள்ளிக்கிழமை முதல் ரஷ்யாவின் Avangard என்ற hypersonic ஏவுகணை காவி சேவைக்கு வந்துள்ளது என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. இது இதனுடன் இணைக்கப்பட்ட ஏவுகணையை ஒலியின் வேகத்திலும் 27 மடங்கு அதிக வேகத்தில் காவி சென்று எதிரியை தாக்க வல்லது. . ஒலியின் வேகம் Mach 1 ஆக குறிப்பிடப்படும். இந்த ஏவுகணை காவியின் வேகம் Mach 27 ஆக இருக்கும். அதன்படி இது மணித்தியாலத்துக்கு சுமார் 33,000 km வேகத்தில் (33,000 km/h […]
மெக்ஸிகோ (Mexico) நாட்டின் National Institute of Anthropology and History (INAH) மேலுமொரு மாயன் (Mayan) அரண்மனை (Palace) ஒன்று Yucatan மாநில காட்டு பகுதியில் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. Kuluba என்ற காட்டு பகுதியில் உள்ள இந்த அரண்மனை சுமார் 1,500 வருடங்கள் பழமையானது என்று கூறப்படுகிறது. . இந்த அரண்மனை 55 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த அரண்மனையின் சுவர் 6 மீட்டர் (20 அடி) உயரம் கொண்டது. இதில் […]
ஜமால் கசோகி (Jamal Khashoggi) என்ற Washington Post பத்திரிகையின் எழுத்தாளரை துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துள் வைத்து படுகொலை செய்த வழக்கை விசாரணை செய்த சவுதி அரசு 5 பேருக்கு மரண தண்டனை வழங்குவதாக இன்று கூறியுள்ளது. ஆனால் மரண தண்டனைக்கு உள்ளாவோர் பெயர்களை சவுதி பகிரங்கப்படுத்தவில்லை. . அத்துடன் மேற்படி கொலைக்கு பிரதான காரணிகள் என்று கூறப்படும் உயர் அதிகாரி Saud al-Qahtani (அமெரிக்கா இவரை தடை செய்துள்ளது), உளவு படையின் உபதலைவர் Ahmad […]