சீனாவின் 84% பதிலடி வரியால் விசனம் கொண்ட ரம்ப் 104% ஆக அறிவித்திருந்த சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை புதன்கிழமை 125% ஆக உயர்த்தி உள்ளார். அதேவேளை பங்கு சந்தைகளின் பாரிய இழப்புகளை குறைக்கும் நோக்கில் ஏனைய நாடுகளுக்கான இறக்குமதி வரியை 90 தினங்களுக்கு 10% ஆக மட்டும் கொண்டிருக்கவும் அறிவித்துள்ளார். சீனா மீதான இந்த புதிய 125% வரி உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மிகையான இருதரப்பு வரிகளால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான […]
அமெரிக்க சனாதிபதி சீன பொருட்களுக்குகான இறக்குமதி வரியை செவ்வாய்க்கிழமை 54% இல் இருந்து 104% ஆக அதிகரித்த பின் இன்று புதன் சீனா அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை 34% இல் இருந்து 84% ஆக அதிகரித்து உள்ளது. இதனால் பங்குச்சந்தைகள் மேலும் கவிழும் வாய்ப்பு அதிகமாகிறது. ரம்ப் இரண்டாம் தடவை பதவிக்கு வந்த பின் சீன பொருட்களுக்கு முதலில் 10% இறக்குமதி வரியை அறிவித்து இருந்தார். பின் உலக நாடுகள் எல்லாவற்றுக்கும் 10% வரியை அறிவித்தார். […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஆரம்பித்த இறக்குமதி வரிகள் காரணமாக கடந்த 3 தினங்களாக அமெரிக்க மற்றும் உலக பங்கு சந்தைகள் பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ளன. இதற்கிடையில் நேற்று திங்கள் X அல்லது Twitter எனப்படும் social media வில் வெளிவந்த பொய் செய்தி ஒன்று அமெரிக்க பங்கு சந்தை சுட்டிகளை பல ட்ரில்லியன் பெறுமதியால் அதிகரிக்க செய்து, பின் சில நிமிடங்களில் மீண்டும் வீழ்த்தி உள்ளது. இந்த social media பொய் செய்தியால் பலர் பெருமளவு பணம் […]
அமெரிக்க பொருட்களுக்கு சீனா அண்மையில் நடைமுறை செய்த 34% மேலதிக பதிலடி வரியை செவ்வாய்க்கு முன்னர் நீக்காவிட்டால் சீனா மீதான இறக்குமதி வரியை தான் மேலும் 50% ஆல் அதிகரிக்க உள்ளதாக சனாதிபதி ரம்ப் திங்கள் மிரட்டி உள்ளார். ரம்பின் 50% மிரட்டலுக்கு பின் சீனாவை அழுத்துவது அல்லது மிரட்டுவது (pressuring or threatening) சரியான வழியல்ல என்று சீன தூதரகம் கூறியுள்ளது. சுமார் 45,000 ஆக உயர்ந்து இருந்த அமெரிக்க DOW பங்கு சந்தை சுட்டி […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஆரம்பித்த வரி யுத்தத்தால் இன்று திங்கள் மீண்டும் ஆசிய, ஐரோப்பிய பங்கு சந்தைகள் தொடர்ந்தும் வீழ்ச்சி அடைந்துள்ளன. ஜப்பானின் Nikkei பங்கு சந்தை சுட்டி திங்கள் 6.5% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. அஸ்ரேலிய, தென் கொரிய, இந்திய சுட்டிகளும் கூடவே சரிந்து உள்ளன. சீனாவின் Shanghai Composite பங்கு சந்தை சுட்டி திங்கள் 8% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஹாங்காங் Hang Seng சுட்டி திங்கள் 13% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஜெர்மனியின் […]
வரும் ஜூன் மாதம் சேவைக்கு வரவுள்ள Huajiang (குவாஜியாங்) Canyon Bridge என்ற Baipan ஆற்றை கடக்கும் சீன பாலம் உலகின் மிக உயர்ந்த பாலமாகிறது. இந்த பாலத்தில் இருந்து அதிகூடிய பள்ளமான பகுதியின் ஆழம் 625 மீட்டர் (2,051 அடி) ஆக இருக்கும். தற்போது ஆற்றுடன் கூடிய இந்த பள்ளத்தாக்கை கடக்க 70 நிமிடங்கள் தேவைப்படுகிறது. மேற்படி பாலம் சேவைக்கு வந்தபின் அதே தூரத்தை 1 நிமிடத்தில் கடக்கலாம். சீனாவின் Guizhou மாநிலத்தில் கட்டப்படும் இந்த […]
மார்ச் மாதம் 23ம் திகதி பலஸ்தீன செஞ்சிலுவை சங்க மருத்துவர்களுடன் சென்ற 15 தொண்டர்கள் இஸ்ரேலின் படைகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்களின் உடல்களை இஸ்ரேல் படைகள் ஆழமற்ற குழிகளில் புதைத்து இருந்தன. இஸ்ரேல் முதலில் மரணித்தோர் ஹமாஸ் மற்றும் ஜிஹாத் பயங்கரவாத உறுப்பினர் என்று கூறியிருந்தது. ஆனால் ஐ.நா. மரணித்தோர் மருத்துவர் என்றது. சர்வதேச குழுக்களின் கடுமையான முயற்சியின் பின்னரே இஸ்ரேல் ஐ.நா. ஆதரவு அதிகாரிகள் படுகொலை இடம்பெற்ற இடத்துக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். படுகொலை நிகழ்ந்த இடத்தில் […]
வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் DOW JONES பங்குச்சந்தை சுட்டி மேலும் 2,230 புள்ளிகளை (5.5%) இழந்துள்ளது. இந்த சுட்டி ஏற்கனவே வியாழக்கிழமை 4% பெறுமதியை இழந்திருந்தது. வெள்ளிக்கிழமை NASDAQ மற்றும் S&P 500 ஆகிய சுட்டிகளும் சுமார் 6% பெறுமதியை இழந்துள்ளன. ரம்பின் இந்த வரி யுத்தத்தால் அமெரிக்காவின் பங்குச்சந்தைகள் கடந்த 2 தினங்களில் மட்டும் $6 ட்ரில்லியன் (அல்லது $6,000 பில்லியன்) பங்குச்சந்தை பெறுமதியை இழந்துள்ளன. வரலாற்றில் இது மிக பெரிய இழப்பாகும். ரம்பின் வரிக்கு சீனா […]
ரம்ப் சீனாவிலிருந்தான இறக்குமதிகளுக்கு அண்மையில் 34% மேலதிக இறக்குமதி வரிகளை விதித்த பின் சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% பதிலடி வரியை இன்று அறிவித்துள்ளது. சீனாவின் இந்த வரிகள் இந்த மாதம் 10ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். அமெரிக்கா உற்பத்தி செய்யும் சோயாவின் (soybean) 60 முதல் 70% வரை சீனாவுக்கே செல்கிறது. அத்துடன் இதை பயிரிடும் மக்கள் பொதுவாக கிராமப்புற ரம்ப் ஆதரவாளர்களே. அமெரிக்காவின் Boeing விமானங்கள் அதிக அளவில் சீனாவால் கொள்வனவு செய்யப்படுகின்றன. […]
இன்று வெள்ளிக்கிழமை இந்திய பிரதமர் மோதி இலங்கை வருகிறார். இவர் இலங்கையில் இரண்டு தினங்கள் தங்கியிருப்பார். இவரின் இலங்கை பயணத்தின் உள்நோக்கம் இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களையும், எரிபொருள் ஒப்பந்தங்களையும் செய்வதே. திருகோணமலையில் கைத்தொழில் நிலையங்கள், இலங்கையின் பயன்பாட்டுக்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகிய அமைப்பது தொடர்பாகவும் மோதியும், அனுரவும் உரையாடுவார். இந்தியா இலங்கையில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் அது சீனா அம்பாந்தோட்டையில் $3.2 பில்லியன் செலவில் அமைக்கும் Sinopec சுத்திகரிப்பு நிலையத்துடன் போட்டியிட தள்ளப்படும். மோதி […]