அமெரிக்க படைகளை ஈராக்கில் இருந்து வெளியேற்றினால் ஈராக் மீது அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை விதிக்கும் என்று அமெரிக்க சனாதிபதி ரம்ப் இன்று கூறியுள்ளார். . அத்துடன் ரம்பின் ஈராக் மீதான தடை ஈரான் மீதான தடையிலும் பல மடங்கு பெரியதாக இருக்கும் என்றும் ரம்ப் கூறியுள்ளார். . நேற்று ஞாயிரு ஈராக்கின் பாராளுமன்றம் அமெரிக்க படைகளை ஈராக்கில் இருந்து வெளிற்றும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதே ரம்பின் பொருளாதார தடை பயமுறுத்தலுக்கு காரணம். . அமெரிக்கா உலகத்திலேயே […]
வெள்ளிக்கிழமை ஈரான் ஜெனரல் காசெம் சுலேய்மானியை (Qasem Soleimani) ஈராக்கின் பக்தாத் (Baghdad) விமான நிலையம் அருகே ஏவுகணைகள் மூலம் படுகொலை செய்த காரணத்தால் அமெரிக்க படைகளை ஈராக்கில் இருந்து வெளியேற்ற ஈராக் பாராளுமன்றம் தீர்மானித்து உள்ளது. மேற்படி தாக்குதல் தொடர்பாக ஐ. நாவில் அமெரிக்காவுக்கு எதிராக குற்றசாட்டு ஒன்றையும் ஈராக் பதிவு செய்யவுள்ளது. . இன்று ஞாயிறு ஈராக் பாராளுமன்றில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 173 உறுப்பினர் அமெரிக்க இராணுவ வெளியேற்றத்துக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். இவர்கள் […]
ஈரானின் ஜெனரல் Qasem Soleimani யை ஈராக்கில் வைத்து அமெரிக்கா படுகொலை செய்தமைக்கு பதிலடியாக ஈரான் அமெரிக்காவின் உடமைகளை தாக்கினால் தான் உடனே ஈரானின் 52 நிலையங்களை தாங்குவேன் என்று கூறியுள்ளார் அமெரிக்காவின் சனாதிபதி ரம்ப். . அவ்வாறு தாக்கப்படவுள்ள 52 ஈரானிய நிலையங்களை தாம் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளதாகவும் ரம்ப் கூறியுள்ளார். . 1979 ஆம் ஆண்டு ஈரானில் இருந்த அமெரிக்க தூதரக ஊழியர்கள் 52 பேரை கைதிகளாக வைக்கப்பட்டு இருந்தமையாலேயே ரம்ப் 52 நிலையங்களை […]
நேற்று ஈரானின் ஜெனரல் Qasem Soleimani அமெரிக்காவினால் ஈராக்கின் பக்தாத் விமான நிலையத்துக்கு அருகே ஏவுகணைகள் மூலம் படுகொலை செய்ததை தொடர்ந்து அங்கு நிலவும் நெருக்கடிகளை கையாள மேலும் 3,500 அமெரிக்க படையினர் (82nd Airborne Division) செல்கின்றனர். மேற்படி தாக்குதலுக்கு தாம் பலத்த பதிலடி (a very big price) வழங்கவுள்ளதாக ஈரான் கூறியுள்ளது. . கடந்த புதன்கிழமையும் 650 அமெரிக்க படையினர் மத்திய கிழக்குக்கு அனுப்பப்பட்டு இருந்தனர். அதற்கு முன் சுமார் 5,000 அமெரிக்க […]
ஈரானின் Revolutionary Guards என்ற பகிரங்கமான விசேட இராணுவ அணியின் கீழ், ஆனால் இரகசிய தாக்குதல்களில் பயன்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட Quds Force என்ற அணியின் தலைவரான General Qasem Soleimani என்ற இராணுவ அதிகாரியை இன்று வியாழன் அமெரிக்க விமானப்படை தாக்கி கொலை செய்துள்ளது. . ஈராக்கின் பக்தாத் விமான நிலையத்தில் இருந்து காரில் வெளியேறுகையிலேயே Soleimani ஏவுகணைகள் மூலம் தாக்கி அழிக்கப்பட்டு உள்ளார். . இவர் ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதுவரகத்தின் மீதான தாக்குதலுக்கு […]
Unicef வெளியிட்ட தவுகளின்படி 2020 ஆம் ஆண்டு புதுவருட தினத்தன்று 67,385 குழந்தைகளை பெற்ற இந்தியா முதலாம் இடத்தில் உள்ளது. மொத்தம் 46,299 குழந்தைகளை பெற்ற சீனா இரண்டாம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டு உள்ளது. . புதுவருட தினமான ஜனவரி 1 ஆம் திகதி உலகம் எங்கும் சுமார் 392,078 குழந்தைகள் பிறந்துள்ளன. அதன்படி சுமார் 17% குழந்தைகள் இந்தியாவில் பிறந்துள்ளன. . மூன்றாம் இடத்தில் உள்ள நைஜீரியாவில் 26,039 குழந்தைகளும், 4 ஆம் இடத்தில் உள்ள பாகிஸ்தானில் […]
Carlos Ghosn என்பவர் பிரான்சின் Renault வாகன தயாரிப்பு நிறுவனமும் Nissan என்ற ஜப்பானின் வாகன நிறுவனமும் 1999 ஆம் ஆண்டு இணைந்த பின் உருவான Renault-Nissan Motor நிறுவனத்தின் முன்னாள் தலைவர். இவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் ஜப்பான் நீதிமன்றில் பதியப்பட்டு இவர் 2018 ஆம் ஆண்டு முதல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருந்தார். அந்நிலையிலேயே இவர் தப்பி ஓடியுள்ளார். . தற்போது 65 வயதான Ghosn ஒரு பில்லியன் யென் ($9.8 மில்லியன்) பிணையில் […]
அஸ்ரேலியாவின் தென்கிழக்கே பரவி வரும் காட்டு தீ காரணமாக சுமார் 4,000 மக்கள் அப்பகுதி கடற்கரையில் முடக்கப்பட்டு உள்ளனர் என்று Victoria நகரின் அவசரகால சேவை அதிகாரியான Andrew Crisp இன்று செவ்வாய் கூறியுள்ளார். . சிலர் வளங்கள் மூலம் கடலுக்குள்ளும் சென்று தம்மை பாதுகாத்துள்ளனர். இங்குள்ள சில கடற்கரைகள் உல்லாச பயணிகளால் நிரம்பியுள்ள கோடை காலம் இது. . Melbourne பகுதியில் சுமார் 100,000 மக்கள் நேற்று திங்கள் வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டு உள்ளனர். . […]
ஈரானின் ஆதரவுடன் ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் செயற்படும் Kataib Hezbollah என்ற ஆயுத குழு மீது அமெரிக்க விமானப்படை நேற்று குண்டுகளை வீசி உள்ளது. இந்த குழு சில தினங்களுக்கு முன் செய்த ஏவுகணை தாக்குதலுக்கு அமெரிக்கர் ஒருவர் இறந்ததாக அமெரிக்கா கூறியுள்ளது. . அமெரிக்காவின் இந்த தாக்குதலை ஈராக் வன்மையாக கண்டித்து உள்ளது. ஈராக்கில் சில ஆயிரம் அமெரிக்க படைகள் தற்போதும் தங்கி உள்ளன. ஏற்கனவே உள்நாட்டு குழப்பங்களில் சிக்கி உள்ள ஈராக் அங்கு […]
இன்று ஞாயிறு பங்களாதேஷில் உள்ள Tetulia என்ற இடத்தில் 4.5 C வெப்பநிலை பதியப்பட்டு உள்ளது. அந்நாட்டில் நிலவும் இந்த கடும் குளிருக்கு இதுவரை சுமார் 50 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் சுமார் 4,500 பேர் வைத்தியமும் பெற்றுள்ளனர். . இந்த குளிர் வெப்பநிலை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என்றும் கூறப்படுகிறது. கடும் புகார் காரணமாக சில விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திசை திருப்பப்பட்டும் உள்ளன. . தலைநகர் டாக்காவில் (Dhaka) இன்று […]