லண்டன் நகரின் 2-8a Rutland Gate முகவரியில் உள்ள அரண்மனை போன்ற வீட்டை சீன செல்வந்தரான Cheung Chung Kiu கொள்வனவு செய்யவுள்ளார். மொத்தம் 45 அறைகளை கொண்ட இந்த வீட்டின் கொள்வனவு விலை £ 210 மில்லியன் (U$ 262 மில்லியன்). . அதன்படி பிரித்தானியாவில் மட்டுமன்றி, உலகத்திலேயே அதி கூடிய விலைக்கு கொள்வனவு செய்யப்படும் வீடு இதுவாகும். இதற்கு முன்னர் நியூ யார்க் நகரில் உள்ள அமெரிக்க வீடு ஒன்று $238 மில்லியன் விலைக்கு […]
புதன்கிழமை யுக்கிரேன் விமான சேவைக்கு (Ukraine International Airlines) சொந்தமான விமானத்தை (flight PS752) ஈரானிய இராணுவமே எதிரி விமானம் என்று கருதி தவறுதலாக சுட்டு வீழ்த்தியது என்று ஈரான் தொலைக்காட்சி கூறியுள்ளது. . கடந்த 3 ஆம் திகதி ஈரானின் ஜெனரல் Soleimani ஈராக்கில் பயணிக்கையில் அமெரிக்கா தனது ஏவுகணை மூலம் படுகொலை செய்தமையை பழிவாங்க ஈரான் சுமார் 20 ஏவுகணைகளை ஈராக்கில் உள்ள இரண்டு தளங்கள் மீது ஏவியது. ஏவியபின் அமெரிக்கா திருப்பி தாக்கலாம் […]
சார்ள்ஸ், டயானா தம்பதிகளின் இரண்டாவது மகன் ஹரியும் (Prince Harry, வயது 35) அவரின் மனைவி Meghan னும் வடஅமெரிக்கா சென்று தனிக்குடித்தனம் செய்ய முனைகின்றனர். ஆனால் அந்த அறிவிப்பால் சினம் கொண்டுள்ளார் இராணி Elizabeth II. . ஹரி தம்பதி தாம் சுதந்திரமாக, சுயாதீன பொருளாதாரத்துன் (financially independent) வடஅமெரிக்காவில் வாழ முனைகின்றனர். அதற்கு ஏற்ப இராச குடும்ப கடமைகளில் இருந்து விலகவும் திட்டமிட்டு உள்ளனர். இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளார் இராணி. . இன்று […]
புதன்கிழமை ஈரானின் தலைநகரில் இருந்து யுக்கிரேனின் தலைநகர் சென்ற யுக்கிரேனுக்கு சொந்தமான விமானத்தை (flight PS752) ஈரானின் ஏவுகணை ஒன்றே தவறுதலாக சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்று அமெரிக்காவும், கனடாவும் கருதுகின்றன. இந்த விமான விபத்தில் 63 கனடியர்கள் உட்பட 179 பேர் பலியாகி இருந்தனர். . அமெரிக்காவின் தரவுகளே முதலில் இந்த விமானம் ஈரானின் ஏவுகணைக்கு பலியாகி இருக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டு இருந்தது. அந்த கருத்தை அடிப்படியாக கொண்டே கனடிய பிரதமரும் மேற்படி விமானம் […]
Henley Passport Index 2020 கணிப்பின்படி உலகத்தில் அதிவல்லமை கொண்ட கடவுச்சீட்டாக ஜப்பானின் கடவுச்சீட்டு உள்ளது. சிங்கப்பூரின் கடவுச்சீட்டு இரண்டாம் இடத்திலும், தென் கொரியாவினதும், ஜெர்மனியினதும் கடவுச்சீட்டுக்கள் மூன்றாம் இடத்திலும் உள்ளன. இலங்கையின் கடவுச்சீட்டு 97 ஆம் இடத்தில் உள்ளது. . ஜப்பானின் கடவுச்சீட்டு வைத்திருப்போர் 191 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும். சிங்கப்பூர் கடவுச்சீட்டு வைத்திருப்போர் 190 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும். தென் கொரியாவினதும் ஜெர்மனியினதும் கடவுச்சீட்டுக்கள் வைத்திருப்போர் 189 நாடுகளுக்கு […]
யுக்கிறேன் (Ukraine) நாட்டுக்கு சொந்தமான Ukraine Internation Airlines விமானம் ஒன்று ஈரானின் தலைநகர் தெகிரான் (Tehran) விமான நிலையம் இன்று அருகே வீழ்ந்துள்ளது. அதில் பயணித்த 176 பேரும் பலியாகி உள்ளதாகவும் நம்பப்படுகிறது. . மேற்படி விமானம், Flight PS752, தெகிரானில் இருந்து யுக்கிறேனின் தலைநகர் கியேவ் (Kyiv) நோக்கி சென்றது. இதன் பயணம் அதிகாலை 6:12 மணிக்கு ஆரம்பித்து இருந்தது. இந்த விமானம் மேலேறி சில நிமிடங்களுள் வீழ்ந்துள்ளது. விபத்தின் பொழுது இது சுமார் […]
ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகளின் தளங்கள் மீது ஈரான் சுமார் 12 ஏவுகணைகளை உள்ளூர் நேரப்படி புதன்கிழமை அதிகாலை ஏவி உள்ளது. பக்தாத் நகருக்கு அண்மையில் உள்ள Al Asad Air Base, Irbil ஆகிய தளங்களே ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகின. . ஈரானின் ஜெனரல் Qasem Soleimani மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியை ஈரானின் தாக்குதல் என்றுள்ளது ஈரான். அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலுக்கு Soleimani பலியாகி இருந்தார். . இந்த ஏவுகணைகள் ஈரானில் இருந்தே ஏவப்பட்டு […]
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதல் மூலம் ஈராக்கில் வைத்து படுகொலை செய்யப்பட்ட ஈரானின் ஜெனரல் Qasem Soleimani இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட சனநெரிசலுக்கு குறைந்தது 56 பேர் பலியாகி உள்ளனர். . அத்துடன் இந்த ஊர்வலத்தில் சுமார் 200 பேர் காயமடைந்தும் உள்ளார். இந்த ஊர்வலம் சொலெமேனியின் சொந்த ஊரான Kerman பகுதியில் இன்று இடம்பெற்றது. . கடந்த சில தினங்களாக ஈரான் தனது ஆயுதங்களை நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு செய்வது அவர்களின் ஆயுதங்களை […]
தாம் ஈராக்கில் இருந்து வெளியேறுவதாக கூறி இன்று வெளிவந்த கடிதம் தமது தரப்பு தவறு என்கிறது அமெரிக்கா. அமெரிக்கா ஈராக்கில் இருந்து வெளியேறும் செய்தி உண்மை இல்லை என்றும், அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அமெரிக்காவின் முப்படை தலைமையகமான பென்ரகன் கூறியுள்ளது. . இவ்வாறு கடிதத்தை மறுத்த அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் Mark Esper இந்த கடிதம் எவ்வாறு பகிரங்கத்துக்கு வந்தது என்பதை அறிய தாம் விசாரணை செய்வதாக கூறியுள்ளார். . ஆனால் அமெரிக்க முப்படைகளின் செயலாளர் […]
நேற்று ஞாயிறு ஈராக்கின் பாராளுமன்றம் அங்கிருந்து அமெரிக்க படைகளை வெளியேற்ற தீர்மானம் கொண்டதின் காரணமாக அமெரிக்க படைகள் இன்று திங்கள் வெளியேற ஆரம்பித்துள்ளதாக Reuters செய்தி நிறுவனம் கூறியுள்ளது. . ஈராக்கில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படை அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் William H. Seely III கையொப்பம் இட்டு ஈராக் அரசுக்கு அனுப்பிய இந்த கடிதத்தில் “Sir, in deference to the sovereignty of the Republic of Iraq, and as requested by […]