இந்திய அரசு பெரு நட்டத்தில் இயங்கும் Air India விமான சேவையை 100% விற்பனை செய்ய தற்போது தீர்மானித்து உள்ளது. அத்துடன் கொள்வனவு தொகையும், கட்டுப்பாடுகளும் பெருமளவில் குறைக்கப்பட்டு உள்ளன. இந்த விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளன. . முன்னர் Air India விமான சேவையின் 76% உரிமையை மட்டுமே விற்பனை செய்ய இந்திய அரசு அறிவித்து இருந்தது. ஆனால் எந்தவொரு நிறுவனமும் 76% உரிமையை கொள்வனவு செய்ய முன்வந்திருக்கவில்லை. அதனாலேயே தற்போது 100% விற்பனைக்கு இந்தியா […]
கொரோனா (corona) வைரஸுக்கு பலியானோர் தொகை தற்போது 80 ஆக உயர்ந்து உள்ளது. அனைத்து மரணங்களும் சீனாவிலேயே நிகழ்ந்து உள்ளன. சீனாவில் இந்த வைரஸின் பாதிப்புக்கு உள்ளானோர் தொகையும் 2,454 ஆக உயர்ந்து உள்ளது. . சீனாவுக்கு வெளியே இதுவரை எவரும் இந்த வைரஸ் காரணமாக பலியாகவில்லை. ஆனால் ஹாங் காங்கில் 6 பேர், Macau வில் 5 பேர், வடஅமெரிக்காவில் 5 பேர், அஸ்ரேலியாவில் 4 பேர், ஐரோப்பாவில் 6 பேர் உட்பட சுமார் 50 […]
அமெரிக்காவின் பயணிகள் விமான தயாரிப்பு நிறுவனமான Boeing இன்று சனிக்கிழமை தனது புதிய 777 X வகை பயணிகள் விமானத்தை வெற்றிகரமாக வெள்ளோட்டம் செய்துள்ளது. இந்த விமானம் பொதுவாக நீண்டதூர பயணங்களுக்கு பயன்படும். இன்றைய பறப்பு உட்பட பல சோதனைகளின் பின்னரே அமெரிக்காவின் FAA (Federal Aviation Administration) 777 X விற்பனைக்கு உரிமை வழங்கும். . சுமார் $440 மில்லியன் பெறுமதி கொண்ட இவ்வகை விமானம் ஒன்று சுமார் 426 பயணிகளை காவக்கூடியது. இது தற்போது […]
அடுத்த மாதம் இந்தியா செல்லவுள்ள அமெரிக்க சனாதிபதி ரம்ப் தற்போது இந்தியாவை பொருளாதார உடன்படிக்கைகளுக்கு அழுத்தி வருகிறார். இந்தியா குறைந்தது $5 முதல் $6 பில்லியன் பெறுமதியான அமெரிக்க apple, almond, walnut, தானியம் போன்ற உணவு பொருட்களை (farm goods) கொள்வனவு செய்ய வேண்டும் என்கிறார் ரம்ப். அத்துடன் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரிகளையும் குறைக்கும்படி கூறுகிறார் ரம்ப். . இந்தியா அனுபவித்து வந்த அமெரிக்காவின் Generalized System of Preferences (GSP) என்ற சலுகையை […]
அண்மையில் தோன்றிய corona வைரஸ் காரணமாக சீனாவின் வூகான் (WuHan) நகரமே தற்போது முடக்கப்பட்டு உள்ளது. சுமார் 11 மில்லியன் மக்களை கொண்ட இந்த சீன நகரத்துக்கும் வெளி இடங்களுக்குமான விமான, ரெயில், மற்றும் பஸ் போக்குவரத்துக்களை சீன அரசு முற்றாக துண்டித்து உள்ளது. Corona வைரஸ் வெளி இடங்களுக்கு பரவுவதை தடுப்பதே அதிகாரிகளின் நோக்கம். . இந்த வைரஸுக்கு இதுவரை 17 பேர் பலியாகி உள்ளனர். பலியாகியோர் வயதெல்லை 48 வயது முதல் 89 வயது […]
தாய்ப்பால் ஊட்டல் தொடர்பாக மொத்தம் 97 நாடுகளில் இருந்து பெற்ற தரவுகளின் அடிப்படியில் இலங்கை முதல் இடத்தில் உள்ளது என்கிறது WBTi (World Breastfeeding Trends Initiative) அமைப்பு. முதல் இடத்தில் உள்ள இலங்கை 91 புள்ளிகளை பெற்றுள்ளது. . கியூபா (87.5 புள்ளிகள்), பங்களாதேஷ் (86.0 புள்ளிகள்), Gambia (83.0 புள்ளிகள்), Bolivia (81.0 புள்ளிகள்) ஆகிய நாடுகள் 2 ஆம், 3 ஆம், 4 ஆம், 5 ஆம் இடங்களில் உள்ளன. . சீனா 69.5 […]
சீனாவின் வூகான் (WuHan) நகரில் ஆரம்பித்த coronavirus தற்போது உலகம் எங்கும் பரவ ஆரம்பித்து உள்ளது. பரவலை தடுக்க விமான பயணிகள் மீது விமான நிலையங்களின் கவனம் திரும்பி உள்ளது. . 2019-nCoV என்ற இந்த வைரஸ் மனிதரில் இருந்து மனிதருக்கு பரவக்கூடியது என்று சீனா கூறி உள்ளது. இந்த வைரஸ் மனிதரில் காணப்பட்டது இதுவே முதல் தடவை. . இந்த வைரஸுக்கு இதுவரை சீனாவில் 6 பேர் பலியாகியும், சுமார் 300 பேர் நோய்வாய்ப்பட்டும் உள்ளனர். […]
புலிகளுக்கு முன்னாளில் உளவுபார்த்த நவநீதன் (Navanithan G., வயது 39) என்பவருக்கு ஜெர்மனி நீதிமன்றம் 10 மாதகால சிறைத்தண்டனை தீர்ப்பை இன்று திங்கள்கிழமை வழங்கி உள்ளது. . 2005 ஆம் ஆண்டு முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொழும்பில் புலிகளால் படுகொலை செய்யப்படுவதற்கு நவநீதன் உடந்தையாக இருந்துள்ளார் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. வெளிநாட்டு பயங்கவாத குழுவில் உறுப்பினராக இருந்தமையை இவரின் குற்றமாகும். . 2012 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் அகதி நிலைக்கு விண்ணப்பித்த காலத்தில் தான் […]
தன் நாட்டை கொள்ளையடித்து ஆபிரிக்காவின் முதல் பணக்காரி ஆகியுள்ளனர் Isabel dos Santos என்று தற்போது பகிரங்கத்துக்கு வந்த ஆவணங்கள் கூறுகின்றன. அங்கோலா (Angola) நாட்டை சுமார் 38 வருடங்கள் ஆண்ட முன்னாள் சனாதிபதி Jose Eduardo dos Santos என்பவரின் மூத்த மகளே Isabel. பிரித்தானியாவில் கல்வி கற்ற Isabel தற்போது கொள்ளையடித்த சொத்துக்களுடன் பிரித்தானியாவிலேயே வாழ்கிறார். இவரின் தற்போதை சொத்துக்களின் பெறுமதி சுமார் $2 பில்லியன் என்று கூறப்படுகிறது. . மேற்படி தகவல்களை BBC […]
ஹரியும் (Price Harry), இராணியும் கொண்டுள்ள இணக்கப்படி ஹரியின் அனைத்து அரச சலுகைகளும் பறிக்கப்பட உள்ளன. அமெரிக்க பெண்ணான மேகன் (Meghan) என்பவரை திருமணம் செய்த டயானாவின் இளைய மகன் ஹரி அண்மையில் அரை தனிக்குடித்தனம் செல்ல முனைந்தார். ஆனால் இராணி ஹரியை முற்றாக அரச குடும்பத்தில் இருந்து வெளியேற்ற உள்ளார். இந்த அறிக்கை இன்று சனிக்கிழமை Buckingham Palace தரப்பால் வெளியிடப்பட்டு உள்ளது. . மேற்படி இணக்கப்படி ஹரி குடும்பம் வடஅமெரிக்காவில் சுதந்திரமான வாழக்கையை நடாத்தும். […]