இலங்கையின் இராணுவ தளபதியான Lt. General Shavendra Silva மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் அமெரிக்கா இன்று வெள்ளி தடை விதித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்ற செயல்களுக்கு இவரும் காரணம் என்று ஐ.நா. போன்ற அமைப்புக்கள் கூறியமையே இந்த தடைக்கு காரணம் என்று கூறுகிறது அமெரிக்கா. . சில்வா மீதான தடையை அமெரிக்காவின் வெளியுவு செயலாளர் Mike Pompeo தெரிவித்து உள்ளார். . இலங்கை வெளியுறவு அமைச்சு மேற்படி […]
அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானின் தலிபானும் 7-நாள் யுத்த குறைப்புக்கு (reduction in violence) இணங்கி உள்ளனர். அந்த செய்தியை அமெரிக்காவின் பென்ரகன் அதிபர் Mark Esper இன்று வியாழன் தெரிவித்து உள்ளார். இது ஒரு யுத்த குறைப்பு மட்டுமே, யுத்த நிறுத்தம் அல்ல. அத்துடன் இந்த யுத்த குறைப்பு எப்போது ஆரம்பிக்கும் என்றும் கூறப்படவில்லை. . சுமார் 18 வருடங்களாக அமெரிக்கா தலிபானுக்கு எதிராக யுத்தம் செய்து வந்துள்ளது. ஆனாலும் அமெரிக்காவால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. . அதேவேளை […]
சர்வதேச சட்டங்களுக்கு முரணாக கைப்பற்றிய பலஸ்தீனர்களின் பகுதிகளில் இயங்கும் 112 இஸ்ரேல் சார்பு நிறுவனங்களின் பட்டியலை ஐ.நா. இன்று வெளியிட்டு உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இவ்வாறு செய்வது இதுவே முதல் தடவை. . இந்த பட்டியலில் இடம்பெறும் 94 நிறுவனங்கள் இஸ்ரேல் நிறுவனங்கள். ஏனைய 18 நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்கள். இவற்றில் சில மிக பெரிய அமெரிக்க நிறுவனங்கள். தமது நிறுவனங்களை சட்டவிரோத நிறுவனங்கள் என குறிப்பிடுவதையிட்டு அமெரிக்காவும், இஸ்ரேலும் குமுறுகின்றன. . Airbnb (அமெரிக்கா), […]
அமெரிக்காவுடனான இராணுவ உறவை துண்டிக்க உள்ளதாக பிலிப்பீன் (Philippines) இன்று அறிவித்து உள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான Visiting Forces Agreement (VFA) என்ற உடன்படிக்கையையே பிலிப்பீன் துண்டிக்க உள்ளது. அந்த அறிவிப்பை பெற்றுக்கொண்டதை அமெரிக்காவும் கூறியுள்ளது. . பிலிப்பீனின் அமெரிக்க எதிர்ப்பு ஜனாதிபதியான Rodrigo Duterte சீனாவுடன் நெருங்கிய உறவை கொண்டிருக்க விரும்புபவர். . 1999 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட மேற்படி VFA உடன்படிக்கை அமெரிக்க படையினர் கடவுச்சீட்டு, விசா இன்றி பிலிப்பீன் உள் நுழைய […]
சீனாவின் வூகான் நகரத்தில் ஆரம்பித்து தற்போது உலகின் பல நாடுகள் வரை பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை மொத்தம் 1,018 பேர் பலியாகி உள்ளனர். இந்த தொகையே SARS வைரஸுக்கு பலியானோர் தொகையிலும் அதிகம். இன்று திங்கள் மட்டும் 108 பேர் சீனாவில் பலியாகி உள்ளனர். அதேவேளை 2,478 பேர் புதிதாக நோய்வாய்ப்பட்டு உள்ளமையும் தெரிய வந்துள்ளது. . இதுவரை 42,638 பேர் சீனாவிலும், உலக அளவில் மொத்தம் 43,100 பேரும் இந்த வைரஸின் பாதிப்புக்கு உள்ளாகி […]
அண்மை காலம்வரை West Bank பலஸ்தீனர் தமக்கு தேவையான இறைச்சி மாடுகளை இஸ்ரேலிடம் இருந்தே கொள்வனவு செய்து வந்திருந்தனர். உண்மையில் அந்த மாடுகளை இஸ்ரேல் வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பின் பலஸ்தீனர்க்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது. . அவ்வாறு இடைத்தரகர் மூலம் அதிக விலைக்கு கொள்வனவு செய்வதற்கு பதிலாக பலஸ்தீனர் நேரடியா இறைச்சி மாடுகளை இறக்குமதி செய்ய முற்பட்டனர். அதனால் வருமானத்தை இழந்த இஸ்ரேல் பலஸ்தீனர்களிடம் இருந்து மரக்கறிகளை கொள்வனவு செய்வதை […]
இன்றி சனிக்கிழமை Jakraphanth Thomma என்ற தாய்லாந்து இராணுவத்தினர் ஒருவரின் சூட்டுக்கு குறைந்தது 26 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் சுமார் 57 பேர் காயமடைந்தும் உள்ளனர். Nakhon Ratchasima என்ற நகரிலேயே இந்த சம்பவம் நிகழ்துள்ளது. அதிகமானோர் Terminal 21 என்ற சந்தை பகுதியிலேயே பலியாகி உள்ளனர். . துப்பாக்கிதாரியின் சூட்டுக்கு முதலில் பலியானது கேணல் Anantharot Krasae என்ற அவரது கட்டளை அதிகாரியே. தனது சூட்டு சம்பவத்தை துப்பாக்கிதாரி Internet லும் வெளியிட்டு உள்ளார். […]
இந்தியாவின் தலைநகர் பகுதிக்கான சட்டசபையை கைப்பற்ற பா.ஜ. கட்சி பெரும் முயற்சிகள் செய்திருந்தாலும் அங்கு ஆட்சியில் உள்ள AAP (Aam Aadmi Party) கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற உள்ளது என்று முந்திய கணிப்புக்கள் கூறுகின்றன. இன்று சனிக்கிழமை இடம்பெறும் தேர்தலின் உத்தியோகபூர்வ கணக்கெடுப்புகள் வரும் செவ்வாய்க்கிழமையே வெளிவரும். . தற்போதைய கணிப்புகளின்படி மொத்தம் 70 ஆசனங்களை கொண்ட சபையில் சுமார் 52 ஆசனங்களை AAP பெரும். இரண்டாம் இடத்தில் பா. ஜ. கட்சி உள்ளது. மூன்றாம் […]
தமக்கு பிள்ளை இல்லாத பிரித்தானியாவின் Hanwell நகர வாசிகளான Arti Dhir, Kaval Raijada ஆகிய இருவரும் இந்தியா சென்று குயாராத் பகுதியில் வாழ்ந்த Gobal Sejani என்ற பையனை 2015 ஆம் ஆண்டில் தத்து எடுத்து இருந்தனர். . பையன் விசாவுக்கு காத்திருக்கும் காலத்தில் தத்தெடுத்த பெற்றார் மீண்டும் பிரித்தானியா சென்றிருந்தனர். அத்துடன் பையன் பெயரில் 150,000 பௌண்ட்ஸ் பெறுமதியான காப்புறுதியும் பெற்றிருந்தனர். . அந்நிலையில், 2017 ஆம் ஆண்டில், Gobal இனம் தெரியாதோர் இருவரால் […]
1987 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் ராஜீவும், இலங்கை சனாதிபதி ஜே. ஆரும் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை செய்தபின் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு இலங்கையின் யுத்த விமானங்களை செலுத்திய பிரித்தானிய (mercenary) யுத்த விமானிகள் IPKF படைகளுக்கு உதவியதாக புதிய வெளியீடு ஒன்று கூறுகிறது. இந்தியா பகிரங்கத்தில் இவ்வாறு பிரித்தானியர்களை பயன்படுவதை மறுத்து இருந்தாலும், களத்தில் இரகசியமாக பிரித்தானிய யுத்த விமானிகளை IPKF பயன்படுத்தி உள்ளது. . பிரித்தானியாவை தளமாக கொண்ட Phil Miller என்ற விசாரணை பத்திரிகையாளரே […]