அமெரிக்க சனாதிபதி ரம்ப் டெல்கி செல்லமுன், அங்கு இடம்பெற்ற ஆர்பாட்டங்களுக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர். பலியானோருள் ஒருவர் போலீசார், மற்றைய மூவரும் ஆர்பாட்டக்காரர்கள். . மரணித்த பொலிஸாரின் பெயர் Ratan Lal என்று கூறப்படுகிறது. கல்லெறிக்கு ஆளாகியே இந்த போலீசார் மரணித்து உள்ளார். . மேற்படி ஆர்ப்பாட்டம் சர்சைக்குரிய CAA (Citizenship Amendment Act) சட்டத்தை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்டதே. . ஆர்பாட்ட இடங்களில் கடைகள், வாகனங்கள் ஆகிய பல உடமைகளும் தீக்கு இரையாகி உள்ளன. […]
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல பாகங்களிலும் வேகமாக பரவி உள்ளது. சீனாவுள் பரவல் சற்று குறைத்தாலும், சீனாவுக்கு வெளியே வழமைக்கு மாறாக பரவல் அதிகரித்து உள்ளது. . இத்தாலியில் தற்போது 3 பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகியும், சுமார் 150 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். அதனால் இத்தாலியில் Milan Fashion Week, Venice Carnival உட்பட பல பொது நிகழ்வுகள் நிறுத்தப்பட்டு உள்ளன. . தென் கொரியாவில் கொரோன வைரஸின் பாதிப்புக்கு உள்ளானோர் […]
மலிவு விலை விமான சேவையான JetStar Asia (low-cost carrier) வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் சிங்கப்பூருக்கு, கொழும்புக்கும் இடையில் விமான சேவையை ஆரம்பிக்க உள்ளது. இதன் சேவை கிழமைக்கு 4 நாட்கள் இடம்பெறும். . ஆரம்ப மலிவு விலை பயண சீட்டுக்கள் இந்த மாதம் 24 ஆம் திகதி முதல் இலங்கை விமான சேவை முகவர்களிடம் இருந்தும், மார்ச் மாதம் 5 ஆம் திகதி முதல் jetstart.com மூலம் விற்பனை செய்யப்படும் என்று […]
தற்போது பிரித்தானியாவின் Oxford பல்கலைக்கழக ஆஸ்மோலென் தொல்பொருள் காட்சியகத்தில் (Ashmolean Museum) உள்ள 15 ஆம் நூற்றாண்டு திருமங்கை ஆழ்வார் சிலையை இந்தியா மீட்க முயற்சிக்கிறது. அதற்கேற்ப சட்டப்படியான வேண்டுகோளை இந்தியா விடுத்துள்ளது. . அண்மையில் வெளிவந்த 1957 ஆம் ஆண்டு புகைப்படம் ஒன்று மேற்படி சிலை தமிழ்நாட்டு ஸ்ரீ சௌந்தராஜப்பெருமாள் கோவிலில் இருந்ததை உறுதிப்படுத்தியதே சிலை மீடுப்பு முயற்சிகள் ஆரம்பிக்க காரணம். அங்கிருந்த சிலை களவாடப்பட்டு, பதிலுக்கு ஒரு பொய் பிரதியை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. . […]
அமெரிக்க சனாதிபதி ரம்பின் அடுத்த கிழமை வருகைக்கு பல முனைகளில் தயாராகிறது இந்தியா. ரம்ப் வரும் திங்கள் கிழமை இந்தியா செல்வார். குஜராத் நகரான அகமடாபாத் (Ahmeddabad) சென்று அங்கு உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறப்பார் ரம்ப். . ரம்ப் தாஜ்மகாலுக்கும் செல்லவுள்ளார். ரம்பை அங்குள்ள குரங்குகளிடம் இருந்து பாதுகாக்க போலீசார் catapult உடன் தயாராக உள்ளனர். . அசுத்த மணமுடைய கழிவுகளால் நிரம்பிய ஆறுகளுக்கு மில்லியன் கலன் கணக்கிலான தூய்மையான நீர் பாச்சி மெருகூட்டப்படுகிறது. […]
ஜெர்மனியில், Frankfurt நகருக்கு 25 km கிழக்கே உள்ள Hanau என்ற நகரில் இன்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவங்களுக்கு குறைந்தது 8 பேர் பலியாகி உள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான நிலையங்கள் மத்திய கிழக்கு அல்லது தென் ஆசிய வகையிலான shisha bar என்று கூறப்படுகிறது. . ஆயுததாரர் முதலாவது shisha நிலையத்தை தாக்கியதில் 3 பேரும், இரண்டாம் நிலையத்தை தாக்கியதில் 5 பேரும் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இரண்டாவது தாக்குதல் […]
சீனாவை தளமாக கொண்ட 5 செய்தி நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் ரம்ப் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த செய்தி நிறுவனங்களை ‘foreign missions’ என்ற வகைக்குள் அடக்கி . இந்த புதிய சட்டத்துக்கு அமைய ஐந்து சீன செய்தி நிறுவனங்களின் பணியாளர்கள் அனைவரும் தமது விபரங்கள், செயல்பாடுகள், சொத்துக்கள் என்பவற்றை அமெரிக்க அரசுக்கு அறிவிக்க வேண்டும். . சீனாவின் XinHua News Agency, China Global Television Network, China Radio International, China Daily, Hai […]
ரம்ப் அரசு அமெரிக்காவின் General Electric (GE) தனது விமான இயந்திரங்களை சீனாவுக்கு விற்பனை செய்வதை விரைவில் தடை செய்ய ஆலோசனை செய்கிறது என்று செய்திகள் கூறுகின்றன. ஆனால் அமெரிக்க அரசோ, GE நிறுவனமோ அல்லது இயந்திர தயாரிப்புடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களோ இந்த விசயம் தொடர்பாக கருது கூற மறுத்துள்ளன. . சீனாவின் புதிய அகலம் குறைந்த (narrow body) பயணிகள் விமானமான Comac C919 விரைவில் சேவைக்கு வர உள்ளது. Comac (Commercial Aircraft […]
இலங்கையரான 20 வயதுடைய பெர்னாண்டோ குருகுலசூரிய (Fernando Kurukulasuriya) என்பவர் ஜப்பானின் அசாதரண அளவில் எரிபொருளை ஒரு காலை கொள்வனவு செய்துள்ளார். ஆனால் இவர் இந்த கொள்வனவுக்கு பயன்படுத்திய கடனட்டை வேறு ஒருவருக்கு சொந்தமானது. அதனால் இவர் அந்நாட்டு பொலிஸாரால் ( Tokyo Metropolitan Police) கைது செய்யப்பட்டு உள்ளார். . Ibaraki என்ற பகுதியில் அந்நிய நாட்டவர் ஒருவர் அதிகாலை ஒன்றில் 40,000 லீட்டர் எரிபொருளை கொள்வனவு செய்வதில் சந்தேகம் கொண்ட எரிபொருள் நிலைய ஊழியர் வழங்கிய […]
இந்தியாவில் பல பாரம்பரிய மொழிகள் உள்ளன. தமிழ் உட்பட பல தென் மொழிகள் உலகிலேயே பாரம்பரிய மொழிகளாக கருதப்படுகின்றன. ஆனால் தென் மொழிககளை வஞ்சித்து, சமஸ்கிருதத்தை பாரம்பரிய மொழியாக வளர்க்க அதிகம் செலவுகளை செய்கிறது ஆட்சியில் உள்ள பா. ஜ. கட்சி அரசு. . கடந்த 3 ஆண்டுகளில் சமஸ்கிரதத்ததை வளர்க்க இந்திய அரசு செலவழித்த மொத்த பெறுமதி, அதே காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஓடியா ஆகிய 5 தென் மொழிகளுக்கும் செலவிட்ட தொகையிலும் […]