ஜெர்மனியில் துப்பாக்கி சூடுகளுக்கு 8 பேர் பலி

ஜெர்மனியில், Frankfurt நகருக்கு 25 km கிழக்கே உள்ள Hanau என்ற நகரில் இன்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவங்களுக்கு குறைந்தது 8 பேர் பலியாகி உள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான நிலையங்கள் மத்திய கிழக்கு அல்லது தென் ஆசிய வகையிலான shisha bar என்று கூறப்படுகிறது. . ஆயுததாரர் முதலாவது shisha நிலையத்தை தாக்கியதில் 3 பேரும், இரண்டாம் நிலையத்தை தாக்கியதில் 5 பேரும் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இரண்டாவது தாக்குதல் […]

ஐந்து சீன செய்தி நிறுவனங்களுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு

சீனாவை தளமாக கொண்ட 5 செய்தி நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் ரம்ப் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த செய்தி நிறுவனங்களை ‘foreign missions’ என்ற வகைக்குள் அடக்கி . இந்த புதிய சட்டத்துக்கு அமைய ஐந்து சீன செய்தி நிறுவனங்களின் பணியாளர்கள் அனைவரும் தமது விபரங்கள், செயல்பாடுகள், சொத்துக்கள் என்பவற்றை அமெரிக்க அரசுக்கு அறிவிக்க வேண்டும். . சீனாவின் XinHua News Agency, China Global Television Network, China Radio International, China Daily, Hai […]

சீனாவுக்கு விமான இயந்திரம் விற்க அமெரிக்கா தடை?

ரம்ப் அரசு அமெரிக்காவின் General Electric (GE) தனது விமான இயந்திரங்களை சீனாவுக்கு விற்பனை செய்வதை விரைவில் தடை செய்ய ஆலோசனை செய்கிறது என்று செய்திகள் கூறுகின்றன. ஆனால் அமெரிக்க அரசோ, GE நிறுவனமோ அல்லது இயந்திர தயாரிப்புடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களோ இந்த விசயம் தொடர்பாக கருது கூற மறுத்துள்ளன. . சீனாவின் புதிய அகலம் குறைந்த (narrow body) பயணிகள் விமானமான Comac C919 விரைவில் சேவைக்கு வர உள்ளது. Comac (Commercial Aircraft […]

இலங்கையர் ஜப்பானில் கள்ள கடனட்டை கொள்வனவு

இலங்கையரான 20 வயதுடைய பெர்னாண்டோ குருகுலசூரிய (Fernando Kurukulasuriya) என்பவர் ஜப்பானின் அசாதரண அளவில் எரிபொருளை ஒரு காலை கொள்வனவு செய்துள்ளார். ஆனால் இவர் இந்த கொள்வனவுக்கு பயன்படுத்திய கடனட்டை வேறு ஒருவருக்கு சொந்தமானது. அதனால் இவர் அந்நாட்டு பொலிஸாரால் ( Tokyo Metropolitan Police) கைது செய்யப்பட்டு உள்ளார். . Ibaraki என்ற பகுதியில் அந்நிய நாட்டவர் ஒருவர் அதிகாலை ஒன்றில் 40,000 லீட்டர் எரிபொருளை கொள்வனவு செய்வதில் சந்தேகம் கொண்ட எரிபொருள் நிலைய ஊழியர் வழங்கிய […]

தென் மொழிகளை வஞ்சிக்கும் பா. ஜ. அரசு

இந்தியாவில் பல பாரம்பரிய மொழிகள் உள்ளன. தமிழ் உட்பட பல தென் மொழிகள் உலகிலேயே பாரம்பரிய மொழிகளாக கருதப்படுகின்றன. ஆனால் தென் மொழிககளை வஞ்சித்து, சமஸ்கிருதத்தை பாரம்பரிய மொழியாக வளர்க்க அதிகம் செலவுகளை செய்கிறது ஆட்சியில் உள்ள பா. ஜ. கட்சி அரசு. . கடந்த 3 ஆண்டுகளில் சமஸ்கிரதத்ததை வளர்க்க இந்திய அரசு செலவழித்த மொத்த பெறுமதி, அதே காலத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஓடியா ஆகிய 5 தென் மொழிகளுக்கும் செலவிட்ட தொகையிலும் […]

இராணுவ தளபதி Shavendra Silva மீது அமெரிக்கா தடை

இலங்கையின் இராணுவ தளபதியான Lt. General Shavendra Silva மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் அமெரிக்கா இன்று வெள்ளி தடை விதித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்ற குற்ற செயல்களுக்கு இவரும் காரணம் என்று ஐ.நா. போன்ற அமைப்புக்கள் கூறியமையே இந்த தடைக்கு காரணம் என்று கூறுகிறது அமெரிக்கா. . சில்வா மீதான தடையை அமெரிக்காவின் வெளியுவு செயலாளர் Mike Pompeo தெரிவித்து உள்ளார். . இலங்கை வெளியுறவு அமைச்சு மேற்படி […]

அமெரிக்கா, தலிபான் 7-நாள் யுத்த குறைப்புக்கு இணக்கம்

அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானின் தலிபானும் 7-நாள் யுத்த குறைப்புக்கு (reduction in violence) இணங்கி உள்ளனர். அந்த செய்தியை அமெரிக்காவின் பென்ரகன் அதிபர் Mark Esper இன்று வியாழன் தெரிவித்து உள்ளார். இது ஒரு யுத்த குறைப்பு மட்டுமே, யுத்த நிறுத்தம் அல்ல. அத்துடன் இந்த யுத்த குறைப்பு எப்போது ஆரம்பிக்கும் என்றும் கூறப்படவில்லை. . சுமார் 18 வருடங்களாக அமெரிக்கா தலிபானுக்கு எதிராக யுத்தம் செய்து வந்துள்ளது. ஆனாலும் அமெரிக்காவால் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. . அதேவேளை […]

ஐ.நா.: பலஸ்தீனத்தில் 112 சட்டவிரோத நிறுவனங்கள்

சர்வதேச சட்டங்களுக்கு முரணாக கைப்பற்றிய பலஸ்தீனர்களின் பகுதிகளில் இயங்கும் 112 இஸ்ரேல் சார்பு நிறுவனங்களின் பட்டியலை ஐ.நா. இன்று வெளியிட்டு உள்ளது. ஐக்கிய நாடுகள் சபை இவ்வாறு செய்வது இதுவே முதல் தடவை. . இந்த பட்டியலில் இடம்பெறும் 94 நிறுவனங்கள் இஸ்ரேல் நிறுவனங்கள். ஏனைய 18 நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்கள். இவற்றில் சில மிக பெரிய அமெரிக்க நிறுவனங்கள். தமது நிறுவனங்களை சட்டவிரோத நிறுவனங்கள் என குறிப்பிடுவதையிட்டு அமெரிக்காவும், இஸ்ரேலும் குமுறுகின்றன. . Airbnb (அமெரிக்கா), […]

அமெரிக்க இராணுவ உறவை துண்டிக்கிறது பிலிப்பீன்

அமெரிக்காவுடனான இராணுவ உறவை துண்டிக்க உள்ளதாக பிலிப்பீன் (Philippines) இன்று அறிவித்து உள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான Visiting Forces Agreement (VFA) என்ற உடன்படிக்கையையே பிலிப்பீன் துண்டிக்க உள்ளது. அந்த அறிவிப்பை பெற்றுக்கொண்டதை அமெரிக்காவும் கூறியுள்ளது. . பிலிப்பீனின் அமெரிக்க எதிர்ப்பு ஜனாதிபதியான Rodrigo Duterte சீனாவுடன் நெருங்கிய உறவை கொண்டிருக்க விரும்புபவர். . 1999 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட மேற்படி VFA உடன்படிக்கை அமெரிக்க படையினர் கடவுச்சீட்டு, விசா இன்றி பிலிப்பீன் உள் நுழைய […]

ஆயிரத்தை தாண்டியது கொரோனா வைரஸ் மரணம்

சீனாவின் வூகான் நகரத்தில் ஆரம்பித்து தற்போது உலகின் பல நாடுகள் வரை பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை மொத்தம் 1,018 பேர் பலியாகி உள்ளனர். இந்த தொகையே SARS வைரஸுக்கு பலியானோர் தொகையிலும் அதிகம். இன்று திங்கள் மட்டும் 108 பேர் சீனாவில் பலியாகி உள்ளனர். அதேவேளை 2,478 பேர் புதிதாக நோய்வாய்ப்பட்டு உள்ளமையும் தெரிய வந்துள்ளது. . இதுவரை 42,638 பேர் சீனாவிலும், உலக அளவில் மொத்தம் 43,100 பேரும் இந்த வைரஸின் பாதிப்புக்கு உள்ளாகி […]