அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானின் தலிபானும் நிரந்தர யுத்தநிறுத்த ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பம் இட்டுள்ளனர். கட்டாரில் இடம்பெற்ற இந்த ஒப்பந்தம் இவர்களுக்கு இடையே 18 வருட காலமாக இடம்பெற்றுவந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும். . அமெரிக்கா தரப்பில் Zalmay Khalilzad என்பவரும், தலிபான் தரப்பில் Mullah Abdul Ghani Baradar என்பவரும் இன்று 29 ஆம் திகதி ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளனர். . இந்த இணக்கம் அமெரிக்காவுக்கும், தலிபானுக்கும் இடையிலானது மட்டுமே. ஆப்கானிஸ்தான் அரசு இந்த இணக்கத்தில் அங்கம் […]
கொரோனா வைரஸ் உட்பட பல்வேறு காரணங்களால் உலகின் பல்வேறு பங்கு சந்தைகள் பாரிய வீழ்ச்சியை இந்த கிழமை அடைந்துள்ளன. முக்கியமாக அமெரிக்க பங்கு சந்தைகளான DOW (Dow Jones Industrial Average), NASDAQ, S&P 500 என்பன என்றுமில்லாத அளவுக்கு வீழ்ச்சியை அடைந்துள்ளன. வியாழக்கிழமை DOW அடைந்த வீழ்ச்சி அதன் வரலாற்றில் இடம்பெற்ற அதி கூடிய ஒருநாள் வீழ்ச்சி ஆகும். . DOW பங்கு சந்தையின் இந்த கிழமை வீழ்ச்சி வருமாறு: கிழமை DOW வீழ்ச்சி வீழ்ச்சி […]
Internet இல் உண்மை செய்திகளுடன் ஒப்பிடுகையில் பொய் செய்திகளே அதிகம். பல சந்தர்ப்பங்களில் களவாடப்பட்ட படங்கள், வீடியோக்கள் இவ்வகை பொய் செய்திகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதற்கான தொழிநுட்பமும் இலகுவாக கிடைக்கிறது. . இந்தியாவில் பா.ஜ. கட்சி அண்மையில் அறிமுகப்படுத்திய Citizenship Amendment Act என்ற சட்டத்தை எதிர்த்து போராடும் இந்திய இஸ்லாமிய பெண் ஒருவரின் படம் ஒன்று இலங்கையில் சில சிங்களவாதிகளினால் முன்வைக்கப்பட்ட burqa தடைக்கு சாதகமாக மாற்றி அமைக்கப்பட்டு பயப்படுத்தப்பட்டுள்ளது. . கீழே உள்ள படங்களில் முதலாவது […]
கடந்த 4 நாட்களாக தொடரும் கலவரங்களுக்கு இதுவரை குறைந்தது 32 பேர் பலியாகியும், 200 பேர்வரை காயமடைந்தும் உள்ளனர். இஸ்லாமியருக்கு எதிராக வரையப்பட்ட புதிய Citizenship Amendment Act என்ற சட்டத்தை எதிர்த்தே இந்த ஆர்பாட்டங்கள் நிகழ்கின்றன. . அத்துடன் சிறிய Farukhiya Mosque உட்பட குறைந்தது 3 பள்ளிவாசல்களும் தீ மூட்டப்பட்டு உள்ளன. பொதுவாக கலவரங்கள் நகரின் வடகிழக்கு பகுதிகளிலேயே இடம்பெறுகின்றன. போலீசார் கலவரங்களை கண்டும் காணாமல் இருக்கின்றனர் அல்லது கலவரத்தில் ஈடுபடும் பா.ஜ. சார்பாக […]
உலகம் எங்கும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக Tokyo நகரில் இடம்பெறவுள்ள இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளும் நிறுத்தப்படலாம் என்று ஒலிம்பிக் அதிகாரி Dick Pound கூறியுள்ளார். . Tokyo 2020 ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 24 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ளன. இதில் சுமார் 11,000 போட்டியாளர் பங்கு கொள்வர். . ஆனால் இந்த போட்டிகள் பெரும் திரளான பார்வையாளர் பங்கு கொள்ளும் இடம் ஆகையால், கொரோனா வைரஸின் பாதிப்பு தொடருமானால், போட்டிகளை […]
அமெரிக்க சனாதிபதி ரம்ப் டெல்கி செல்லமுன், அங்கு இடம்பெற்ற ஆர்பாட்டங்களுக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர். பலியானோருள் ஒருவர் போலீசார், மற்றைய மூவரும் ஆர்பாட்டக்காரர்கள். . மரணித்த பொலிஸாரின் பெயர் Ratan Lal என்று கூறப்படுகிறது. கல்லெறிக்கு ஆளாகியே இந்த போலீசார் மரணித்து உள்ளார். . மேற்படி ஆர்ப்பாட்டம் சர்சைக்குரிய CAA (Citizenship Amendment Act) சட்டத்தை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்டதே. . ஆர்பாட்ட இடங்களில் கடைகள், வாகனங்கள் ஆகிய பல உடமைகளும் தீக்கு இரையாகி உள்ளன. […]
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல பாகங்களிலும் வேகமாக பரவி உள்ளது. சீனாவுள் பரவல் சற்று குறைத்தாலும், சீனாவுக்கு வெளியே வழமைக்கு மாறாக பரவல் அதிகரித்து உள்ளது. . இத்தாலியில் தற்போது 3 பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகியும், சுமார் 150 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். அதனால் இத்தாலியில் Milan Fashion Week, Venice Carnival உட்பட பல பொது நிகழ்வுகள் நிறுத்தப்பட்டு உள்ளன. . தென் கொரியாவில் கொரோன வைரஸின் பாதிப்புக்கு உள்ளானோர் […]
மலிவு விலை விமான சேவையான JetStar Asia (low-cost carrier) வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் சிங்கப்பூருக்கு, கொழும்புக்கும் இடையில் விமான சேவையை ஆரம்பிக்க உள்ளது. இதன் சேவை கிழமைக்கு 4 நாட்கள் இடம்பெறும். . ஆரம்ப மலிவு விலை பயண சீட்டுக்கள் இந்த மாதம் 24 ஆம் திகதி முதல் இலங்கை விமான சேவை முகவர்களிடம் இருந்தும், மார்ச் மாதம் 5 ஆம் திகதி முதல் jetstart.com மூலம் விற்பனை செய்யப்படும் என்று […]
தற்போது பிரித்தானியாவின் Oxford பல்கலைக்கழக ஆஸ்மோலென் தொல்பொருள் காட்சியகத்தில் (Ashmolean Museum) உள்ள 15 ஆம் நூற்றாண்டு திருமங்கை ஆழ்வார் சிலையை இந்தியா மீட்க முயற்சிக்கிறது. அதற்கேற்ப சட்டப்படியான வேண்டுகோளை இந்தியா விடுத்துள்ளது. . அண்மையில் வெளிவந்த 1957 ஆம் ஆண்டு புகைப்படம் ஒன்று மேற்படி சிலை தமிழ்நாட்டு ஸ்ரீ சௌந்தராஜப்பெருமாள் கோவிலில் இருந்ததை உறுதிப்படுத்தியதே சிலை மீடுப்பு முயற்சிகள் ஆரம்பிக்க காரணம். அங்கிருந்த சிலை களவாடப்பட்டு, பதிலுக்கு ஒரு பொய் பிரதியை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. . […]
அமெரிக்க சனாதிபதி ரம்பின் அடுத்த கிழமை வருகைக்கு பல முனைகளில் தயாராகிறது இந்தியா. ரம்ப் வரும் திங்கள் கிழமை இந்தியா செல்வார். குஜராத் நகரான அகமடாபாத் (Ahmeddabad) சென்று அங்கு உலகிலேயே பெரிய கிரிக்கெட் மைதானத்தை திறப்பார் ரம்ப். . ரம்ப் தாஜ்மகாலுக்கும் செல்லவுள்ளார். ரம்பை அங்குள்ள குரங்குகளிடம் இருந்து பாதுகாக்க போலீசார் catapult உடன் தயாராக உள்ளனர். . அசுத்த மணமுடைய கழிவுகளால் நிரம்பிய ஆறுகளுக்கு மில்லியன் கலன் கணக்கிலான தூய்மையான நீர் பாச்சி மெருகூட்டப்படுகிறது. […]