2036 வரை ஆட்சியில் இருக்க பூட்டின் நடவடிக்கை

இன்று சனிக்கிழமை ரஷ்யாவின் சனாதிபதி பூட்டின் (Vladimir Putin) ஒப்பமிட்டுள்ள சட்டம் ஒன்று அவர் 2036 ஆம் ஆண்டுவரை சனாதிபதி பதவியில் இருக்க வழி செய்துள்ளது. அதாவது இந்த சட்டம் அவர் மேலதிகமாக இரண்டு தடவைகள் சனாதிபதி ஆக பதிவில் இருக்க வசதி செய்துள்ளது. . தற்போதைய சட்டப்படி பூட்டின் 2024 ஆம் ஆண்டுவரை மட்டுமே சனாதிபதியாக பதவியில் இருக்க முடியும். இன்றைய சட்டம் அவரின் இரண்டு மேலதிக 6-வருட ஆட்சிகளுக்கு வழி செய்துள்ளது. . 2000 […]

British Airways விரைவில் பெருமளவு பணியாளரை நீக்கும்

கொரோனா வைரஸ் காரணமாக விமான சேவை நிறுவனங்களும், உல்லாசப்பயண சேவை நிறுவனங்களும் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. பல விமான சேவை நிறுவனங்கள் ஏற்கனவே இலாபத்தில் இயங்க முடியாது தவிப்பன. அவர்களின் தற்போதைய நிலைமை பாரதூரமானது. . பிரித்தானியாவின் British Airways தமது பணியாளர்களுக்கு ஏற்கனவே தொழில் இழப்புகள் (lay off) வருகின்றன என தனது ஊழியர்களுக்கு கூறி உள்ளது. இந்த தொழில் இழப்புகள் தற்காலிகமானதாக இருக்கலாம் அல்லது நிரந்தரமானது இருக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. . விமான […]

உலக பங்குச்சந்தைகளின் வீழ்ச்சிகள் தொடர்கின்றன

உலக பங்குச்சந்தைகளின் வீழ்ச்சிகள் இன்றும் தொடர்கின்றன. . வியாழக்கிழமை (மார்ச் 12) அமெரிக்காவின் DOW பங்கு சந்தை 10% ஆல் (அதாவது 2,352 புள்ளிகளால்) மீண்டும் வீழ்ந்துள்ளது. DOW சந்தையின் 125 வருட காலத்தில் இடம்பெற்ற அதிக ஒருநாள் வீழ்ச்சி இதுவே. அமெரிக்க அரசு $1.5 டிரில்லியன் முதலீடுகளை செய்யவுள்ளதாக கூறி இருந்தும் பங்கு சந்தைகள் தொடர்ந்தும் வீழ்கின்றன. . ஓய்வூதிய முதல்கள் போன்ற பெரும் முதலீடுகள் பங்கு சந்தைகளிலேயே முதலீடு செய்கின்றன. . அமெரிக்காவின் விமான […]

ஐரோப்பிய பயணங்களுக்கு அமெரிக்கா 30-நாள் தடை

அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் 30-நாள் பயண தடை ஒன்றை அமெரிக்க சனாதிபதி ரம்ப் இன்று புதன் விடுத்துள்ளார். ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதே காரணம் என்றும் ரம்ப் கூறியுள்ளார். . ஐரோப்பிய நாடுகளுக்கான தடை பிரித்தானியாவை உள்ளடக்காது என்றும் ரம்ப்  கூறியுள்ளார். பிரித்தானியர் தொடர்ந்தும் அமெரிக்கா பயணிக்கலாம். . சீனாவுக்கு அடுத்து இத்தாலியே அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு 12,000 கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஐரோப்பாவில் மொத்தமாக 20,000 பேர் பாதிக்கப்படும், 930 […]

அனைத்து விசாக்களையும் நிறுத்தியது இந்தியா

கொரோனா காரணமாக ஏறக்குறைய அணைத்து நாட்டவர்களுக்கான விசாக்களையும் இந்தியா 13 ஆம் திகதி முதல் இரத்து செய்யவுள்ளது. அத்துடன் பர்மாவுடனான எல்லைகளையும் மூடியுள்ளது இந்தியா. இந்தியாவில் கொரோனா பாதிப்பை அடைந்தோர் தொகை அதிகரிப்பதே இந்தியாவின் இந்த கடும் நடவடிக்கைக்கு காரணம். . மார்ச் 13 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் விசா தடை ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்றும் சுகாதார அமைச்சால் கூறப்பட்டுள்ளது. . Diplomatic, ஐ.நா. போன்ற விசேட விசாக்களை […]

எண்ணெய்வள யுத்தத்தால் சரிந்த பங்குசந்தைகள்

சனிக்கிழமை சவுதி தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, அத்துடன் பரல் ஒன்றுக்கான விலையையும் குறைத்தால் இன்று திங்கள் உலக பங்குச்சந்தைகள் பாரிய வீழ்ச்சிக்கு உள்ளாகின. அமெரிக்காவின் DOW Jones Industrial Average இன்று 2,013 புள்ளிகளால் (7.8%) வீழ்ந்துள்ளது. DOW வின் வரலாற்றிலேயே இதுவே நாள் ஒன்றுக்கான அதிக வீழ்ச்சி ஆகும். . அத்துடன் S&P 500 பங்குசந்தை சுட்டி 7.6% ஆல் வீழ்ந்துள்ளது. NASDAQ 7.3% ஆல் வீழ்ந்துள்ளது. கொரோனா வைரஸால் வீழ்ந்துள்ள பங்கு சந்தைகள் […]

இத்தாலியில் கொரோனாவுக்கு 366 பேர் பலி

சீனாவில் கொரோனாவின் தாக்கம் குறைவடைந்து வந்தாலும், இத்தாலியில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகின்றது. இத்தாலியில் இதுவரை 366 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இன்று மட்டும் 133 பேர் பலியாகி உள்ளனர். . கொரோனா வைரஸ் நோய்க்கு உட்பட்டோர் தொகையும் இத்தாலியில் 5,883 இல் இருந்து 7.375 ஆக அதிகரித்து உள்ளது. . கொரோனா காரணமாக மிலான் (Milan), வெனிஸ் (Venice) போன்ற பெரும் நகரங்களில் உள்ள சுமார் 16 மில்லியன் இத்தாலியர் தம்மிடங்களில் முடக்கப்பட்டு […]

மீண்டும் எண்ணெய்வள யுத்தம்

கடந்த வெள்ளிக்கிழமை எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டு அமைப்பான OPEC விடுத்த வேண்டுகோளுக்கு ரஷ்யா இணங்க மறுக்க, சவுதி அரேபியா தனது உற்பத்தியை அதிகரித்து, அதேவேளை தனது எண்ணெய் விலையை குறைத்தும் உள்ளது. அதனால் தற்போது எண்ணெய் விலை பரல் ஒன்றுக்கு $6 முதல் $8 வரையால் குறைந்து உள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் எண்ணெய் விலை சுமார் 10% ஆல் குறைத்து உள்ளது. இந்த வருடத்தில் விலை சுமார் 30% ஆல் குறைந்து உள்ளது. […]

கடனில் மூழ்கியது லெபனான்

அந்நிய நாடுகளிடம் இருந்து பெற்ற கடன்களையோ, அல்லது வட்டிகளையோ மீள செலுத்த முடியாத நிலையில் உள்ளது லெபனான் (Lebanon). வரும் திங்கள் கிழமை $1.2 பில்லியன் பெறுமதியான bond ஒன்றை லெபனான் அடைக்க வேண்டும். ஆனால் தம்மிடம் அந்தளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார் லெபனான் பிரதமர் Hassan Diab. . லெபனான் இவ்வாறு தனது கடனை அடைக்க முடியாமல் இருப்பது இதுவே முதல் தடவை. அமெரிக்க நாணயத்துடன் ஒப்பிடுகையில் லெபனானின் நாணயத்தின் பெறுமதி பாரிய வீழ்ச்சி […]

கொழும்பு அடுக்கு மாடிகளின் விலை வீழ்ச்சி

கொழும்பில் விற்பனை செய்யப்படும் ஆடம்பர அடுக்குமாடிகளின் (luxury condo) விலை வீழ்ச்சி அடைவதாக தரவுகள் கூறுகின்றன. தேவைக்கு மிகையாக ஆடம்பர அடுக்குமாடிகளை கட்டுவதே விலை வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது. . புதிய வீடுகளின் விலைகள் குறைவதால் ஆடம்பர அடுக்குமாடிகளின் வாடகையும் குறைந்து வருகிறது. ஆடம்பர அடுக்குமாடிகளின் வாடகை சமீபத்தில் 30% ஆல் குறைந்து உள்ளது. . 2014 முதல் 2017 வரையான காலத்தில் 52% ஆல் அதிகரித்திருந்த மாடிகளில் விலை, 2017 முதல் 2019 வரையான […]