நியூ யார்க் புலிக்கும் கொரோனா தொற்றியது

. அமெரிக்காவின் நியூ யார்க் பகுதியில் உள்ள Bronx மிருகக்காட்சியகத்தில்  உள்ள Nadia என்ற மலாயன் புலிக்கும் கொரோனா வைரஸ் தொற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு மிருகக்காட்சியகத்தில் இருந்தாலும் இந்த புலி காட்டு மிருகம் என்ற வகையிலேயே உள்ளது, வளர்ப்பு மிருகம் அல்ல. . இந்த புலி இருமல் கொண்டிருந்ததாகவும், அதனால் ஏப்ரல் 2 ஆம் திகதி பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அப்போதே அதற்கு கொரோனா தொற்றியது தெரிந்தது என்றும் கூறப்படுகிறது. இந்த காடசியக்கத்தில் மேலும் ஒரு […]

1MDB ஊழலை பகிரங்கப்படுத்தியவர் சுவிஸ் தப்பினார்

மலேசியாவில் 1MDB (1 Malaysia Development Berhad) என்ற முதலீட்டில் இடம்பெற்ற ஊழல் உண்மைகளை பகிரங்கப்படுத்திய Xavier Justo மலேசியாவில் இருந்து சுவிஸ் நாட்டுக்கு தப்பி ஓடியுள்ளார். சுவிஸின் தலைநகர் ஜெனீவா சென்ற பின்னரே இவர் தனது மலேசிய நண்பர்களுக்கு இந்த செய்தியை தெரிவித்து உள்ளார். இவருடன் இவரது மனைவியும், மகனும் கூடவே தப்பி உள்ளனர். . இவர் முன்னர் சவுதியை தளமாக கொண்ட PetroSaudi என்ற எண்ணெய்வள நிறுவனத்தின் அதிகாரியாக பணியாற்றியவர். PetroSaudi நிறுவனத்துக்கும், 1MDB […]

பதவி விலக்கப்பட்ட கப்பல் அதிகாரிக்கும் கொரோனா

USS Theodore Roosevelt என்ற அமெரிக்காவின் விமானம் தாங்கி யுத்த கப்பலின் தலைமை அதிகாரியாக பணியாற்றிய commander Captain Brett Crozier என்பவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றி உள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து commander பதவி பறிக்கப்பட முன்னேரேயே அவரிடம் வரைஸ் தொற்றியதற்கான அறிகுறி இருந்துள்ளது. . Commander தனது விமானம் தாங்கி கப்பலில் சுமார் 100 அமெரிக்க கடல் படையினர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியதை பென்ரகானுக்கு அறிவித்து இருந்தும் முதலில் பென்ரகன் நடவடிக்கைகள் எதையும் எடுத்திருக்கவில்லை. […]

2.17 மில்லியன் அந்நியரை வெளியேற்றுகிறது அஸ்ரெலியா

அஸ்ரெலியாவில் (Australia) தற்போது தங்கி இருக்கும் சுமார் 2.71 மில்லியன் வெளிநாட்டவரை விரைவாக அங்கிருந்து வெளியேறுமாறு  அஸ்ரெலியா கூறியுள்ளது. ஆனால் வைத்திய சேவை மற்றும் உணவு உற்பத்தி சேவைகளில் பணியாற்றுவோர் தொடர்ந்தும் அஸ்ரெலியாவில் தங்கி இருக்கலாம். . இந்த 2.71 மில்லியன் வெளிநாட்டவருள் 565,000 மாணவ விசா கொண்டோர், 203,000 உல்லாச பயண விசா கொண்டோர், வேலைவாய்ப்பு விசா கொண்டோர் ஆகியோரும் அடங்குவர். . அவ்வாறு வெளியேற முடியாதோர் குறைந்தது அடுத்த 6 மாத காலத்துக்கு உதவிகள் […]

வைத்திய உபகரணங்களை பெற சீனா செல்லும் Air India

இந்தியாவின் Air India விமானம் ஒன்று ஞாயிறு காலை (ஏப்ரல் 5 ஆம் திகதி) சீனாவுக்கு செல்கிறது. இந்த விமானம் சீனாவில் இருந்து கொரோனா தொற்றை பரிசோதிக்கும் வைத்திய உபகாரங்களை (rapid test kits) இந்தியாவுக்கு எடுத்துவரும். . Indian Council for Medical Research (ICMR) என்ற இந்திய அமைப்பு 10 இலச்சம் இவ்வகை கொரோனா பரிசோதனை உபகரணங்களை கொள்வனவு செய்ய இணங்கி உள்ளது. ஒரு நாட்டில் எவ்வளவு பேர் கொரோனா தொற்றி உள்ளார்கள் என்பது […]

கனடாவுக்கான mask ஏற்றுமதியை ரம்ப் தடுத்தார்

. கனடாவின் வைத்தியசாலைகளுக்கு தேவையான N95 mask களை அமெரிக்காவின் 3M என்ற நிறுவனமே வழங்கி வந்துள்ளது. ஆனால் அவ்வாறு 3M கனடாவுக்கு mask களை ஏற்றுமதி செய்வதை அமெரிக்க சனாதிபதி ரம்ப்  தடுத்துள்ளார். அதனால் விசனம் கொண்டுள்ளனர் கனடிய பிரதமர். . ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கான அமெரிக்க-கனடிய எல்லை பகுதிகளில் வாழும் கனடிய வைத்திய ஊழியர்கள் கனடாவில் இருந்து அமெரிக்கா சென்று பணிபுரிவதையும் பிரதமர் ரூடோ சுட்டி காட்டியுள்ளார். . அத்துடன் பெர்லின் (ஜெர்மன்) போலீசாருக்கு […]

அமெரிக்க விமானம்தாங்கி அதிகாரி பதவி நீக்கம்

USS Theodore Roosevelt என்ற அமெரிக்க விமானம் தாங்கி யுத்த கப்பலின் அதிகாரி (commander) Captain Brett Crozier வியாழக்கிழமை அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். Guam தீவுக்கு அண்மையில் தற்போது தரித்து உள்ள அந்த யுத்த கப்பலில் உள்ள சுமார் 100 அமெரிக்க கடல் படையினர் கொரோனா வைரஸ் தொற்றியமையை மேற்படி அதிகாரி வெளியில் கசிய விட்டார் என்பதே இவரின் குற்றமாகும். . மார்ச் மாதம் 30 ஆம் திகதி எழுதப்பட்ட, 4 பக்கங்களை […]

வெனிசுவெலா ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா முயற்சி

தென் அமெரிக்க நாடான வெனிசுவெலாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் Nicolas Maduro தலைமையிலான இடதுசாரி ஆட்சியை கவிழ்த்து, பின் தனது பொம்மை அரச அரசை நிறுவ அமெரிக்காவின் ரம்ப் அரசு மீண்டும் முயற்சி செய்கிறது. . அதற்கு அமைய அமெரிக்கா தனது யுத்த கப்பல்களை தெற்கே நகர்த்தி உள்ளது. இந்த செய்தியை அமெரிக்க சனாதிபதி நேற்று புதன் அறிவித்து இருந்தார். . அதற்கு முன் வெனிசுவெலா அரசு அமெரிக்காவுக்கு போதை கடத்தும் குழுக்களுக்கு உதவுகிறது என்று அமெரிக்கா […]

அமெரிக்காவில் வேலை இழந்தோர் 6.648 மில்லியன்

அமெரிக்காவில் கடந்த கிழமை கொரோனா காரணமாக தமது தொழிலை இழந்து காப்புறுதிக்கு (unemployment) விண்ணப்பித்தோர் தொகை 6.648 மில்லியன் ஆக அதிகரித்து உள்ளது. அதற்கு முந்திய கிழமை 3.307 மில்லியன் தொழிலாளர் தமது தொழிலை இழந்து காப்புறுதிக்கு விண்ணப்பித்து இருந்தனர். வரலாற்றில் இதற்கு முன், 1982 ஆம் ஆண்டே ஒரு கிழமையில் 695,000 பேர் தமது தொழிலை இழந்து இருந்தனர். . மேலும் பலர் அரச அலுவலகங்களை இலகுவில் அடைய முடியாத நிலை தொடர்வதால், வேலைவாய்ப்பை இழந்தோர் […]

அமெரிக்க விமானம் தாங்கி படையினரை தரையெடுக்க தீர்மானம்

தற்போது அமெரிக்காவின் Guam தீவுக்கு அண்மையில் நிலை கொண்டுள்ள அமெரிக்காவின் USS Theodore Roosevelt என்ற விமானம் தாங்கி யுத்த கப்பலில் இருந்து கடல்படையினரை Guam தீவுக்கு எடுக்க அமெரிக்க படைகளின் தலைமை தீர்மானம் செய்துள்ளது. . இந்த விமானம் தாங்கியில் இருந்த 1,273 படையினரை கொரோனா தொற்றுக்கான சோதனை செய்தபோது 93 பேர் கொரோனா தொற்றி இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தங்கியின் அதிகாரி அணைத்து படையினரையும் தரைக்கு எடுக்க வேண்டுகோள் விடுத்தார். ஆனால் பென்ரகான் அதற்கு […]