பிரித்தானியாவின் University of Oxford தற்போது கொரோனா தடுப்பு மருந்து (vaccine) ஒன்றை மருத்துவ பரிசோதனை (clinical trial) செய்து வருகிறது. அந்த தடுப்பு மருந்து தற்போதும் ஆய்வு நிலையில் இருந்தாலும், இந்தியாவின் மிக பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான Serum Institute of India சுமார் 60 மில்லியன் குளிசைகளை தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளது. . Oxford ஆய்வாளர்கள் முதலில் பரிசோதனையில் உள்ள இந்த மருந்தை 6 macaque குரங்குகளுக்கு வழங்கினார். பின்னர் அந்த […]
கடந்த திங்கள் (April 20th) அமெரிக்காவின் West Texas Intremediate (WTI) எண்ணெய் விலை பரல் ஒன்றுக்கு -$37.63 ஆக குறைந்து இருந்தது. வரலாற்றில் இதுவே முதல் தடவையாக எண்ணெய் சந்தையில் negative விலைக்கு சென்றுள்ளது. அந்நிலை மீண்டும் WTI க்கு ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது. . உலகில் பிரதானமாக இரண்டு எண்ணெய் சந்தைகள் (index) உண்டு. ஒன்று அமெரிக்காவை மையமாக கொண்ட WTI benchmark, மற்றையது உலகை உள்ளடக்கிய Brent benchmark. WTI benchmark எண்ணெய் […]
ஒபாமாவின் அரசு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடனும், ஐரோப்பிய நாடுகளுடனும் இணைந்து ஈரானுடன் அணு ஒப்பந்தம் (JCPOA) ஒன்றை 2015 ஆண்டு செய்திருந்தது. ஆனால் ஒபாமா மீதோ காழ்ப்பு கொண்ட ரம்ப், தான் பதவிக்கு வந்த பின், அந்த ஒப்பந்தம் தரம் குறைவானது என்று கூறி 2018 ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி இருந்தார். வெளியேறிய பின் ஈரான் மீது கடுமையான தடைகளையும் ரம்ப் அரசு விதித்தது. . அலசி ஆராயாது முடிவெடுக்கும் ரம்பும், […]
வரும் சில மாதங்களில் செவ்வாய் கிரகத்துக்கு சீனா தனது ஆய்வு கலம் ஒன்றை அனுப்பவுள்ளது. செவ்வாய்க்கான சீனாவின் இந்த முதல் கலத்தின் பெயரை வெள்ளிக்கிழமை சீனாவின் CNSA (China National Space Administration) வெளியிட்டு உள்ளது. செவ்வாயின் தரையில் இறங்கி ஆய்வு செய்யவுள்ள 200 kg எடைகொண்ட சீன கலம் TianWen 1 என பெயரிடப்பட்டு உள்ளது. . TianWen என்பது “தேவலோகத்து கேள்விகள்” என்று கருத்தை கொண்டது. TianWen என்ற தலைப்பு 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட […]
வடகொரியாவின் சர்வாதிகார அதிபர் கிம் (Kim Jong Un) எங்கே என்பதை அறியாத நிலையில் தற்போது உள்ளது உலகம். ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதிக்கு பின் கிம் பொது நிகழ்வுகளில் பங்கு கொண்டிருக்கவில்லை. . அதிவேளை சீனாவின் வைத்தியர் குழு ஒன்று வியாழக்கிழமை வடகொரியாவுக்கு பயணித்து உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. . வியாழக்கிழமை அமெரிக்க சனாதிபதி ரம்பிடம் வடகொரிய கிம் தொடர்பாக கேள்விகள் கேட்ட பொழுது ரம்பும் அவ்வாறான செய்திகள் பொய் என்று கூறி இருந்தார். […]
Detol, Lysol போன்ற கிருமி கொல்லிகளை உடலுள் செலுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்று புதியதோர் ஆலோசனையை அமெரிக்க சனாதிபதி வழங்கி உள்ளார் (“I see the disinfectant — where it knocks it out in a minute, one minute. And is there a way we can do something like that, by injection inside or almost a cleaning? “) . அவரின் மூடத்தனமான ஆலோசனையை அமெரிக்க […]
பல தடவைகள் முனைந்து தோல்வி அடைந்த ஈரான் புதன்கிழமை வெற்றிகரமாக தனது முதலாவது Noor (light) என்ற செய்மதியை ஏவி உள்ளது. இந்த செய்மதியை ஏவ Qased (messenger) என்ற ஏவுகலம் பயன்படுத்தப்பட்டு இருந்தது. இராணுவத்தின் பயன்பாட்டுக்கான இந்த செய்மதி 425 km உயரத்தில் பூமியை வலம்வரும். . ஈரானின் இந்த ஏவல் மறைமுகமாக நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகளை தயாரிக்க அறிவை திரட்டும் முயற்சி என்று குமுறுகிறது அமெரிக்கா. மூர்க்கம் கொண்ட சனாதிபதி ரம்ப் வளைகுடா […]
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த கிழமை மட்டும் அமெரிக்கா மேலும் 4.4 மில்லியன் தொழில்களை இழந்து உள்ளது. அத்தொகை கடைந்த 5 கிழமைகளில் அமெரிக்கா இழந்த தொழில்களின் எண்ணிக்கையை 26.6 மில்லியன் ஆக உயர்த்தி உள்ளது. . கடந்த 5 கிழமைகளில் அமெரிக்கா இழந்த வேலைவாய்ப்புகள் அந்நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளின் 15% ஆகும். அடுத்துவரும் கிழமைகளில் வேலைவாய்ப்பு இன்மை 20% ஐ அடையலாம் என்றும் கருதப்படுகிறது. . சில பொருளியல் ஆய்வாளர் அமெரிக்காவின் தற்போதை பொருளாதார நிலையை […]
சுமார் 3 மாதங்களாக கொரோனா வைரசால் முடங்கி இருந்த சீனாவில் தற்போது $1.7 பில்லியன் பெறுமதிக்கு 100,000 ஆசனங்களை கொண்ட உதைபந்தாட்ட மைதானம் ஒன்றை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன. கடந்த வியாழன் ஆரம்பிக்கப்பட்ட கட்டுமான வேலைகள் 2022 ஆம் ஆண்டில் பூரணம் அடைந்து அவ்வாண்டு மைதானம் பாவனைக்கு வரும். . Guangzhou Evergrande என்ற உதைபந்தாட்ட குழுவுக்கு சொந்தமான இந்த மைதானம் ஹாங் காங் நகருக்கு அண்மையில் உள்ள Guangzhou நகர் பகுதியில் அமையும். இந்த […]
இந்தியாவின் பக்கமாக இமயமலையின் அடிப்பகுதியில் உள்ள Rishikesh என்ற பகுதி குகை ஒன்றில் 6 உல்லாச பயணிகள் வாழ்ந்ததை அப்பகுதி மக்கள் போலீசாருக்கு கூற, போலீசார் அங்கு சென்று 6 பயணிகளையும் மீட்டு உள்ளனர். . அமெரிக்கா, துருக்கி, பிரான்ஸ், யுக்கிரைன், நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து பயணித்த 6 உல்லாச பயணிகள் Rishikesh பகுதி விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர். கொரோனா காரணமாக போக்குவரத்துக்கள் தடைப்பட, அங்கு முடங்கிய இவர்களுக்கு பண தட்டுப்பாடு ஏற்பட, அவர்கள் மேற்படி […]