வடகொரியாவின் அதிபர் கிம் எங்கே?

வடகொரியாவின் சர்வாதிகார அதிபர் கிம் (Kim Jong Un) எங்கே என்பதை அறியாத நிலையில் தற்போது உள்ளது உலகம். ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதிக்கு பின் கிம் பொது நிகழ்வுகளில் பங்கு கொண்டிருக்கவில்லை. . அதிவேளை சீனாவின் வைத்தியர் குழு ஒன்று வியாழக்கிழமை வடகொரியாவுக்கு பயணித்து உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. . வியாழக்கிழமை அமெரிக்க சனாதிபதி ரம்பிடம் வடகொரிய கிம் தொடர்பாக கேள்விகள் கேட்ட பொழுது ரம்பும் அவ்வாறான செய்திகள் பொய் என்று கூறி இருந்தார். […]

கிருமி கொல்லிகளை உடலுள் செலுத்த ரம்ப் ஆலோசனை

Detol, Lysol போன்ற கிருமி கொல்லிகளை உடலுள் செலுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்று புதியதோர் ஆலோசனையை அமெரிக்க சனாதிபதி வழங்கி உள்ளார் (“I see the disinfectant — where it knocks it out in a minute, one minute. And is there a way we can do something like that, by injection inside or almost a cleaning? “) . அவரின் மூடத்தனமான ஆலோசனையை அமெரிக்க […]

முதல் இராணுவ செய்மதியை ஏவியது ஈரான்

பல தடவைகள் முனைந்து தோல்வி அடைந்த ஈரான் புதன்கிழமை வெற்றிகரமாக தனது முதலாவது Noor (light) என்ற செய்மதியை ஏவி உள்ளது. இந்த செய்மதியை ஏவ Qased (messenger) என்ற ஏவுகலம் பயன்படுத்தப்பட்டு இருந்தது. இராணுவத்தின் பயன்பாட்டுக்கான இந்த செய்மதி 425 km உயரத்தில் பூமியை வலம்வரும். . ஈரானின் இந்த ஏவல் மறைமுகமாக நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகளை தயாரிக்க அறிவை திரட்டும் முயற்சி என்று குமுறுகிறது அமெரிக்கா. மூர்க்கம் கொண்ட சனாதிபதி ரம்ப் வளைகுடா […]

ஐந்து கிழமைகளில் அமெரிக்கா 26.4 மில்லியன் தொழில்களை இழப்பு

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த கிழமை மட்டும் அமெரிக்கா மேலும் 4.4 மில்லியன் தொழில்களை இழந்து உள்ளது. அத்தொகை கடைந்த 5 கிழமைகளில் அமெரிக்கா இழந்த தொழில்களின் எண்ணிக்கையை 26.6 மில்லியன் ஆக உயர்த்தி உள்ளது. . கடந்த 5 கிழமைகளில் அமெரிக்கா இழந்த வேலைவாய்ப்புகள் அந்நாட்டின் மொத்த வேலைவாய்ப்புகளின் 15% ஆகும். அடுத்துவரும் கிழமைகளில் வேலைவாய்ப்பு இன்மை 20% ஐ அடையலாம் என்றும் கருதப்படுகிறது. . சில பொருளியல் ஆய்வாளர் அமெரிக்காவின் தற்போதை பொருளாதார நிலையை […]

சீனாவில் 100,000 ஆசன உதைபந்தாட்ட மைதானம்

சுமார் 3 மாதங்களாக கொரோனா வைரசால் முடங்கி இருந்த சீனாவில் தற்போது $1.7 பில்லியன் பெறுமதிக்கு 100,000 ஆசனங்களை கொண்ட உதைபந்தாட்ட மைதானம் ஒன்றை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன. கடந்த வியாழன் ஆரம்பிக்கப்பட்ட கட்டுமான வேலைகள் 2022 ஆம் ஆண்டில் பூரணம் அடைந்து அவ்வாண்டு மைதானம் பாவனைக்கு வரும். . Guangzhou Evergrande என்ற உதைபந்தாட்ட குழுவுக்கு சொந்தமான இந்த மைதானம் ஹாங் காங் நகருக்கு அண்மையில் உள்ள Guangzhou நகர் பகுதியில் அமையும். இந்த […]

இந்திய குகையில் வாழ்ந்த உல்லாச பயணிகள்

இந்தியாவின் பக்கமாக இமயமலையின் அடிப்பகுதியில் உள்ள Rishikesh என்ற பகுதி குகை ஒன்றில் 6 உல்லாச பயணிகள் வாழ்ந்ததை அப்பகுதி மக்கள் போலீசாருக்கு கூற, போலீசார் அங்கு சென்று 6 பயணிகளையும் மீட்டு உள்ளனர். . அமெரிக்கா, துருக்கி, பிரான்ஸ், யுக்கிரைன், நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து பயணித்த 6 உல்லாச பயணிகள் Rishikesh பகுதி விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர். கொரோனா காரணமாக போக்குவரத்துக்கள் தடைப்பட, அங்கு முடங்கிய இவர்களுக்கு பண தட்டுப்பாடு ஏற்பட, அவர்கள் மேற்படி […]

கொரோனாவுக்கு பலியாகிறது Virgin Australia விமான சேவை

அஸ்ரேலியாவின் இரண்டாவது பெரிய விமான சேவை நிறுவனமான Vergin Australia செவாய்க்கிழமை bankruptcy ஆகிறது. அதனால் இந்த விமான சேவை மூன்றாம் தரப்பு முகவர் நிறுவனம் ஒன்றின் கட்டுப்பாடில் முழுமையாக அல்லது பகுதிகளாக விற்பனை செய்யப்படும். இந்த விமான சேவை அழிந்தால், Quantas விமான சேவை மட்டுமே அந்நாட்டின் ஒரே விமான சேவையாக இருக்கும். . கடந்த 7 வருடங்களாக இந்த விமான சேவை நட்டத்தில் இயங்கி வந்திருந்தாலும், கொரோனா வைரஸின் தாக்கத்தால் இது தொடர்ந்தும் இயங்க […]

அமெரிக்காவின் WTC எண்ணெய் பரல் ஒன்றுக்கு $0.11 மட்டுமே

இன்று திங்கள் அமெரிக்காவின் WTI (Western Texas Intermediate) பரல் ஒன்று $0.11 ஆக (11 அமெரிக்க சதங்கள்) வீழ்ந்துள்ளது. அதாவது வெள்ளிக்கிழமை கொண்டிருந்த பெறுமதியின் 99% பெறுமதியை இழந்துள்ளது WTI. சுமார் 10 வருடங்களுக்கு முன் $160.00 வரை அதிகரித்த எண்ணெய் இன்று பாவனை குறைவால் தேடுவார் அற்று உள்ளது. பரல் ஒன்றுக்கான இன்றைய எண்ணெய் விலை 1946 ஆம் ஆண்டில் இருந்த விலையிலும் குறைந்தது. . எண்ணெய் விலை உயர்வாக இருந்த காலத்தில் பணத்தில் […]

கனடாவில் துப்பாக்கிதாரி 16 பேரை சுட்டு கொலை

கனடாவின் Nova Scotia மாகாணத்தில் உள்ள Portapique என்ற சிறு நகரத்தில் 51 வயதுடைய Gabriel Wortman என்ற துப்பாக்கிதாரியின் சூடுகளுக்கு குறைந்தது 16 பேர் பலியாகி உள்ளனர். பலியானோரில் 23 ஆண்டுகள் சேவையாற்றிய Heidi Stevenson என்ற பெண் போலீசாரும் அடங்குவர். துப்பாக்கிதாரியும் பின்னர் போலீசாரின் சூட்டுக்கு பலியாகி உள்ளார். . இந்த சம்பவம் சனிக்கிழமை இரவு ஆரம்பித்து உள்ளது. பொலிஸாருக்கு அழைப்பு கிடைத்த பின் அவர்கள் ஒரு வீட்டுக்கு சென்று அங்கு சில உடல்களை […]

315 நாட்களாக மின்கம்பத்தில் Samsung எதிர்ப்பு போராட்டம்

தென்கொரியாவில் உள்ள Samsung தலைமையகத்தின் முன் உள்ள மின்கம்பம் ஒன்றில் ஏறி அந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் போராட்டம் செய்து வருகிறார். தற்போது 61 வயதுடைய Kim Yong-hee என்பவரே இவ்வாறு 25 மீட்டர் உயரமான மின்கம்பம் ஒன்றில் நிலைகொண்டு கடந்த 315 நாட்களாக போராடி வருகிறார். . முன்னாள் Samsung ஊழியரான Kim Yong-hee அந்த நிறுவனத்துள் தொழிலாளர் சங்கம் (labor union) அமைக்க முயன்றுள்ளார். அதை விரும்பாத Samsung பொய் காரங்கள் கூறி […]