2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் முதல் தடவையாக பெண் ஒருவர் சனாதிபதி ஆகும் வாய்ப்பு சந்தர்ப்ப வசமாக அதிகரித்து உள்ளது. 2024 ஆம் ஆண்டில் வேறுபட்ட காரணங்கள் ஒன்றாக சந்திக்க உள்ளதால், அங்கு முதல் தடவையாக ஒரு பெண் சனாதிபதி ஆகலாம். . கரோனா வைரஸ் விசயத்தை திறமையாக கையாளாத காரணத்தால் தற்போதைய சனாதிபதி ரம்புக்கு ஆதரவு குறைந்துள்ளது. அமெரிக்காவில் சில மாநிலங்கள் எம்போதுமே Democratic கட்சிக்கு ஆதரவை வழங்குவன. சில ரம்பின் Republican கட்சிக்கு ஆதரவை […]
வடகொரியாவின் தலைவர் 20 தினங்களின் பின் பகிரங்கத்துக்கு வந்துள்ளார். . வடகொரியாவின் அரச செய்தி சேவையான Korean Central News Agency (KCNA) நேற்றைய தினம் கிம் புதிதாக கட்டப்பட்டபசளை தயாரிக்கும் நிலையம் ஒன்றை ஆரம்பித்து வைக்கும் படங்கள் சிலவற்றை வெளியிட்டு இருந்தன. ஆனாலும் வடகொரியாவுக்கு வெளியே அந்த படங்கள் உறுதி செய்யப்படவில்லை. . இன்று KCNA நேற்றைய படங்களை உறுதி செய்யக்கூடிய, அவற்றுடன் தொடர்புடைய வீடியோக்களையம் வெளியிட்டு உள்ளது. அதனால் வடகொரியாவின் தலைவர் நலமாக உள்ளது […]
அமெரிக்கா பகைத்துக்கொண்ட ஈரான், வேனேசுவேல (Venezuela) ஆகிய இரண்டு நாடுகளும் தீடீரென தமது தொடர்புகளை அதிகரித்து உள்ளன. அதனால் முறுகுகிறது அமெரிக்கா. குறிப்பாக கடந்த சில நாட்களாக ஈரானின் பெரிய விமானங்கள் வேனேசுவேல சென்றுள்ளன. அந்த விமானங்கள் எப்பொருட்களை எடுத்து சென்றன என்பதை திடமாக அறிய முடியாது உள்ளது அமெரிக்கா. . கடந்த சில தினங்களில் ஈரானின் Mahan Air சேவையின் Airbus A340-300 வகை விமானங்கள் பல தடவைகள் வேனேசுவேல சென்றுள்ளன. அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் […]
கடந்த 6 கிழமைகளில் அமெரிக்கா மொத்தம் 30.3 மில்லியன் தொழில்களை இழந்து உள்ளது. அமெரிக்காவின் Department of Labor விடுத்துள்ள அறிக்கையின்படி கடந்த கிழமை மட்டும் 3.8 மில்லியன் ஊழியர்கள் தமது தொழில்களை இழந்து உள்ளனர். . தொழில் இழப்புக்களை தடுக்கும் நோக்கில் அமெரிக்க மத்திய, மாநில, நகர அரசுகள் சுமார் 3 டிரில்லியன் பணத்தை வழங்கி இருந்தும் தொழில் இழப்புக்களை தடுக்க முடியவில்லை. . ஏப்ரல் மாத முடிவில் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு இன்மை சுமார் 12% […]
இன்று புதன்கிழமை அமெரிக்காவின் Commerce Department விடுத்த அறிக்கையின்படி இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் (முதல் காலாண்டில்) அமெரிக்காவின் பொருளாதாரம் 4.85% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. உண்மையில் முதல் 2.5 மாதங்கள் நலமாக இருந்த பெருளாதாரமே இறுதியிலேயே பெரும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. . 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொருளாதார வீழ்ச்சியின் பின் ஏற்படும் பாரிய வீழிச்சி இதுவே. . தற்போது நடைபெறும் (ஏப்ரல் – ஜூன்) இரண்டாம் காலாண்டின் பொருளாதார வீழ்ச்சி மேலும் பாரதூரமாக […]
Life of pie, Slumdog Millionaire ஆகிய திரைப்படங்களில் நடத்திருந்த Irrfan Khan தனது 53 ஆவது வயதில் புற்றுநோய்க்கு (neurodocrine tumour) பலியாகினார். இவரின் மரண செய்தியை இன்று புதன்கிழமை அவரது பேச்சாளர் அறிவித்து உள்ளார். கடந்த சில தினங்களாக இவர் மும்பாய் வைத்தியசாலை ஒன்றில் வைத்தியம் பெற்றுவந்திருந்தார். . 1988 ஆம் ஆண்டு Salaam Bombay என்ற படத்தில் ஒரு சிறிய பங்கில் நடித்து இவர் தனது நடிப்பு வாழ்வை ஆரம்பித்து இருந்தார். இந்திய […]
பிரித்தானியாவின் University of Oxford தற்போது கொரோனா தடுப்பு மருந்து (vaccine) ஒன்றை மருத்துவ பரிசோதனை (clinical trial) செய்து வருகிறது. அந்த தடுப்பு மருந்து தற்போதும் ஆய்வு நிலையில் இருந்தாலும், இந்தியாவின் மிக பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான Serum Institute of India சுமார் 60 மில்லியன் குளிசைகளை தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளது. . Oxford ஆய்வாளர்கள் முதலில் பரிசோதனையில் உள்ள இந்த மருந்தை 6 macaque குரங்குகளுக்கு வழங்கினார். பின்னர் அந்த […]
கடந்த திங்கள் (April 20th) அமெரிக்காவின் West Texas Intremediate (WTI) எண்ணெய் விலை பரல் ஒன்றுக்கு -$37.63 ஆக குறைந்து இருந்தது. வரலாற்றில் இதுவே முதல் தடவையாக எண்ணெய் சந்தையில் negative விலைக்கு சென்றுள்ளது. அந்நிலை மீண்டும் WTI க்கு ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது. . உலகில் பிரதானமாக இரண்டு எண்ணெய் சந்தைகள் (index) உண்டு. ஒன்று அமெரிக்காவை மையமாக கொண்ட WTI benchmark, மற்றையது உலகை உள்ளடக்கிய Brent benchmark. WTI benchmark எண்ணெய் […]
ஒபாமாவின் அரசு ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடனும், ஐரோப்பிய நாடுகளுடனும் இணைந்து ஈரானுடன் அணு ஒப்பந்தம் (JCPOA) ஒன்றை 2015 ஆண்டு செய்திருந்தது. ஆனால் ஒபாமா மீதோ காழ்ப்பு கொண்ட ரம்ப், தான் பதவிக்கு வந்த பின், அந்த ஒப்பந்தம் தரம் குறைவானது என்று கூறி 2018 ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி இருந்தார். வெளியேறிய பின் ஈரான் மீது கடுமையான தடைகளையும் ரம்ப் அரசு விதித்தது. . அலசி ஆராயாது முடிவெடுக்கும் ரம்பும், […]
வரும் சில மாதங்களில் செவ்வாய் கிரகத்துக்கு சீனா தனது ஆய்வு கலம் ஒன்றை அனுப்பவுள்ளது. செவ்வாய்க்கான சீனாவின் இந்த முதல் கலத்தின் பெயரை வெள்ளிக்கிழமை சீனாவின் CNSA (China National Space Administration) வெளியிட்டு உள்ளது. செவ்வாயின் தரையில் இறங்கி ஆய்வு செய்யவுள்ள 200 kg எடைகொண்ட சீன கலம் TianWen 1 என பெயரிடப்பட்டு உள்ளது. . TianWen என்பது “தேவலோகத்து கேள்விகள்” என்று கருத்தை கொண்டது. TianWen என்ற தலைப்பு 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட […]