இலங்கை 35 நாடுகளுக்கு இலவச விசா 

இலங்கை 35 நாடுகளுக்கு இலவச விசா 

இலங்கை அக்டோபர் 1ம் திகதி முதல் 35 நாட்டவர்க்கு இலவச 30-தின உல்லாச பயணிகள் விசா வழங்கவுள்ளது. இந்த சலுகை 6 மாத காலத்துக்கு நீடிக்கும். இலங்கைக்கு வரும் உல்லாச பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இந்த இலவச விசா திட்டத்தின் நோக்கம் என்று கூறுகிறார் போக்குவரத்துக்கு அமைச்சர் பந்துல குணவர்தன. இலவச உல்லாச பயண விசா பெறும் 35 நாடுகள் வருமாறு:Australia, Austria, Bahrain, Belarus, Belgium, Canada, China, Czech Republic, Denmark, France, Germany, […]

கொழும்பு Port City சேவைக்கு 10 வங்கிகள் விருப்பம்

கொழும்பு Port City சேவைக்கு 10 வங்கிகள் விருப்பம்

கொழும்பு Port City எல்லைக்குள் தமது வங்கி சேவைகளை வழங்க இலங்கையின் 9 வங்கிகளும், Bank of China என்ற சீன வங்கியும் விருப்பம் தெரிவித்துள்ளன. இலங்கையின் 9 வங்கிகளும் வருமாறு:1) Commercial Bank of Ceylon 2) Hatton National Bank (HNB)3) Sampath Bank 4) National Development Bank (NDB)5) National Trust Bank (NTB)6) Union Bank 7) DFCC 8) Bank of Ceylon 9) People’s Bank  Port City வலயம் ஒரு டாலர் நாணய […]

ஒரு தங்க கட்டியின் பெறுமதி ஒரு மில்லியன் டாலர்

ஒரு தங்க கட்டியின் பெறுமதி ஒரு மில்லியன் டாலர்

உலக சந்தையில் தங்க கட்டி (gold bar) ஒன்றின் விலை முதல் முறையாக ஒரு மில்லியன் டாலர் ஆக அதிகரித்துள்ளது. ஒரு troy அவுன்ஸ் தங்கத்தின் விலை $2,500 ஆகியுள்ளது. தங்கம் troy அவுன்ஸ் மூலமே அளவிடப்படும். ஒரு தங்க கட்டியில் 400 troy அவுன்ஸ் உள்ளது. ஒரு troy அவுன்ஸ் 1.09714 சாதாரண அவுன்சுக்கு அல்லது 31.1034768 grams க்கு சமன். இந்த ஆண்டு மட்டும் தங்கத்தின் விலை 20% ஆல் அதிகரித்துள்ளது. சீனா தனது சேமிப்பை […]

வெள்ளி யூக்கிறேன் செல்கிறார் பிரதமர் மோதி

வெள்ளி யூக்கிறேன் செல்கிறார் பிரதமர் மோதி

இந்திய பிரதமர் மோதி வெள்ளிக்கிழமை யூக்கிறேன் செல்லவுள்ளதாக இன்று திங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவரின் பயணத்தின் நோக்கம் அறிவிக்கப்படவில்லை. மோதி அரசு இதுவரை ரஷ்யாவின் யூக்கிறேன் மீதான ஆக்கிரமிப்பை கண்டிக்கவில்லை. அத்துடன் மேற்கின் தடைகளையும் மீறி இந்தியா ரஷ்யாவிடம் இருந்து பெருமளவு எரிபொருளை மலிவு விலையில்  கொள்வனவு செய்கிறது. ஜூலை மாதம் மோதி ரஷ்யா சென்று பூட்டினை சந்தித்ததை யூக்கிறேன் சனாதிபதி செலன்ஸ்கி கடுமையாக சாடியிருந்தார்.

அதிகாரியை கடத்தியதால் லிபிய மத்திய வங்கி நிறுத்தம்

அதிகாரியை கடத்தியதால் லிபிய மத்திய வங்கி நிறுத்தம்

Musab Msallem என்ற லிபிய (Libya) மத்திய வங்கி அதிகாரி அவரது வீட்டில் இருந்து அடையாளம் காணப்படாதோரால் ஞாயிறு காலை கடத்தப்பட்டுள்ளார். அதனால் மத்திய வங்கி உடனடியாக அனைத்து சேவைகளையும் இடைநிறுத்தி உள்ளது. மத்திய வங்கியின் Information Technology பிரிவின் தலைமை அதிகாரியான Msallem மட்டுமன்றி வேறு அதிகாரிகளும் மிரட்டப்பட்டு உள்ளனர். இந்த கடத்தலின் நோக்கம் Seddik al-Kabir என்ற மத்திய வங்கியின் ஆளுநரை பதவியில் இருந்து விரட்டுவதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 2011ம் ஆண்டு சர்வாதிகார குணம் கொண்ட NATO […]

இலங்கை உதவி தூதருக்கு A$ 543,000 தண்டம் 

இலங்கை உதவி தூதருக்கு A$ 543,000 தண்டம் 

2015ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை அஸ்ரேலியாவில் இலங்கையின் உதவி தூதுவராக கடமையாற்றிய Himalee Arunatilaka அவரின் வீட்டில் பணியாற்றிய Priyanka Danaratna என்ற பணிப்பெண்ணுக்கு A$ 543,000 செலுத்த அஸ்ரேலிய நீதிமன்றம் வியாழன் கட்டளை இட்டுள்ளது. 2015 முதல் 2018 வரையான 3 ஆண்டு காலம், கிழமையில் 7 நாட்களும் வேலை செய்த பணிப்பெண்ணுக்கு மொத்தம் A$ 11,212 மட்டுமே Himalee வழங்கியுள்ளார். 2015ம் ஆண்டில் அஸ்ரேலியாவில் கிழமை ஒன்றுக்கான மிக குறைந்த ஊதியம் A$ 656.90 ஆக இருந்துள்ளது. பணிப்பெண்ணுக்கு […]

இலங்கை சனாதிபதி தேர்தலில் 39 பேர் போட்டி

இலங்கை சனாதிபதி தேர்தலில் 39 பேர் போட்டி

வரும் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறவுள்ள இலங்கை சனாதிபதி தேர்தலில் மொத்தம் 39 பேர் போட்டியிடுகின்றனர். இலங்கை வரலாற்றில் இத்தொகையே சனாதிபதி தேர்தலில் போட்டியிடும் போட்டியாளரின் அதிக தொகையாகும். இதில் 22 பேர் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சார்பிலும், 17 பேர் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர். கட்டுப்பணம் செலுத்திய 40 பேரில் ஒருவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் தோல்வியுற்று 4ஆவதாக இருந்து, தேசிய பட்டியல் மூலம் UNP யின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரான ரணில், வயது 75,  இம்முறை சுயேச்சையாக போட்டியிடுகிறார். சஜித் […]

இஸ்ரேலுக்கு அமெரிக்கா $20 பில்லியன் ஆயுத விற்பனை

இஸ்ரேலுக்கு அமெரிக்கா $20 பில்லியன் ஆயுத விற்பனை

இஸ்ரேலுக்கு $20 பில்லியன் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்யவுள்ளதாக அமெரிக்கா செவ்வாய் அறிவித்துள்ளது.  காசாவில் இஸ்ரேல் கொடூரங்கள் செய்யும் நேரத்திலேயே அமெரிக்கா இத்தொகை ஆயுதங்களை இஸ்ரேலுக்கு விற்பனை செய்கிறது. விற்பனை செய்யப்படும் ஆயுதங்களில் சில வருமாறு:1) குறைந்தது 50 F-15 வகை யுத்த விமானங்கள் 2) Advanced air-to-air ஏவுகணைகள் 3) 33,000 Tank களை தாக்க பயன்படும் 120 mm குண்டுகள் 4) 50,000 High explosive mortars 5) தாக்குதல் வாகனங்கள்  இந்த ஆயுதங்கள் இஸ்ரேலின் கைகளை 2026ம் ஆண்டு […]

சீனாவின் 52.9% வர்த்தகம் சீன யுவான் நாணயம் மூலம்

சீனாவின் 52.9% வர்த்தகம் சீன யுவான் நாணயம் மூலம்

இந்த ஆண்டு முதல் தடவையாக சீனா வெளிநாடுகளுடனான தனது வர்த்தகத்தின் (cross-border payments and receipts) 52.9% த்தை சீனாவின் நாணயமான யுவான் (Yuan) மூலம் செய்துள்ளது.  2010ம் ஆண்டு சீனா 0.3% வர்த்தகத்தை மட்டுமே யுவான் மூலம் செய்திருந்தது. அந்த ஆண்டு 84.3% வர்த்தகத்தை அமெரிக்க டாலர் மூலமும், 15.4% வர்த்தகத்தை பௌண்ட்ஸ், யூரோ போன்ற ஏனைய நாணயங்கள் மூலமும் செய்திருந்தது. அமெரிக்கா தனது டாலர் மூலம் சீனாவை கட்டுப்படுத்த முனையலாம் என்ற பயத்தால் சீனா […]

அதானி மீது Hindenburg மீண்டும் குற்றச்சாட்டு, $19 பில்லியன் இழப்பு

அதானி மீது Hindenburg மீண்டும் குற்றச்சாட்டு, $19 பில்லியன் இழப்பு

இந்திய செல்வந்தர் அதானிக்கு சொந்தமான Adani Group மீது அமெரிக்காவின் Hindenburg Research மீண்டும் முன்வைத்த குற்றச்சாட்டு காரணமாக Adani Group திங்கள் காலை $19 பில்லியன் பங்குச்சந்தை பெறுமதியை இழந்துள்ளது. இந்திய Nifty 50 பங்குச்சந்தை சுட்டியில் உள்ளடக்கப்பட்ட Adani Enterprises, Adani Ports ஆகியன பெருமளவு இழப்பை சந்தித்துள்ளன. Hindenburg சனிக்கிழமை வெளியிட்ட தனது தகவலில் Securities and Exchange Board of India (SEBI) தலைமை அதிகாரி Madhabi Puri Buch உம் அவரின் கணவரும் […]

1 16 17 18 19 20 330