TikTok தடைக்கு ரம்ப், கொள்வனவுக்கு Microsoft
“We may be banning TikTok” என்று கூறியுள்ளார் ரம்ப்
“We may be banning TikTok” என்று கூறியுள்ளார் ரம்ப்
Coutts & Co. என்ற சுவிஸ் வங்கியின் முன்னாள் வங்கியாளர் ஒருவருக்கு இன்று வெள்ளி Swiss Federal Criminal Court $55,000 (50,000 Swiss francs) தண்டம் விதித்துள்ளது. இவரை அடையாளம் காட்டாது, பதிலுக்கு ‘A’ என்று அடையாளம் இடப்பட்டு உள்ளது. மலேசியாவின் 1MDB வங்கி கணக்கில் இருந்து Jho Low என்பவர் கட்டுபாட்டில் உள்ள தனியார் வங்கி கணக்கு ஒன்றுக்கு களவாக $700 மில்லியன் நகர்த்தப்பட்டதை அறிந்திருந்தும் அதை உரியவர்களுக்கு அறிவிக்காமல் இருந்தமையை ‘A” செய்த […]
கரோனாவை காரணம் காட்டி அமெரிக்க சனாதிபதி தேர்தலை பின்போட முனைகிறார் அமெரிக்க தற்போதைய சனாதிபதியும், சனாதிபதி வேட்பாளருமான ரம்ப். இன்றைய தனது Tweet செய்தியில் மக்கள் “properly, securely, safely” வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைக்கும்வரை தேர்தலை பின்போட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். வழமையாக அமெரிக்க சனாதிபதி தேர்தல் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நவம்பர் மாத முதல் செய்வாய் கிழமை இடம்பெறும். இந்த விதியை சனாதிபதி இலகுவில் மாற்ற முடியாது. அமெரிக்க காங்கிரஸ் (House + Senate) […]
பெருமளவு கரோனா காரணமாகவும், ஓரளவு சீனாவுடனான பொருளாதார மோதல் காரணமாகவும் அமெரிக்காவின் இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டு (ஏப்ரல், மே, ஜூன்) பொருளாதாரம் (GDP) 32.9% ஆல் வீழ்ந்து உள்ளது. இவ்வகை வீழ்ச்சி அமெரிக்காவில் என்றைக்குமே இடம்பெற்றது இல்லை. இதற்குமுன் குறிப்பிடக்கூடிய அளவில் 1958 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டு பொருளாதாரம் 10.0% ஆல் வீழ்ந்து இருந்தது. 1980 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு பொருளாதாரம் 8.0% ஆல் வீழ்ந்து இருந்தது. 2008 ஆம் ஆண்டின் நாலாம் […]
முன்னாள் மலேசிய பிரதமர் Najib க்கு 12 ஆண்டு சிறை தண்டனையும், $49.3 மில்லியன் தண்டமும் விதிக்கப்பட்டு உள்ளன. 1MDB என்ற அரச முதலீட்டு பணத்தின் $4.5 பில்லியன் வரை காணாமல் போனதே மேற்படி வழக்குக்கு காரணம். இது 67 வயதுடைய Najib க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 5 வழக்குகளில் ஒன்றாகும். Najib தீர்ப்பை அப்பீல் செய்யவுள்ளார். 2009 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை, Najib பிரதமராக பதவி வகித்த காலத்தில், […]
உலகில் பல அமைப்புகள் உலக அளவில் பல்கலைக்கழகங்களை மதிப்பீடு செய்கின்றன. அவற்றின் மதிப்பீட்டு முறைமைகள் ஒன்றில் இருந்து மற்றையது வேறுபடும். Times Higher Education தயாரித்த 2020 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டில் University of Oxford உலக அளவில் முதலாம் இடத்தில் உள்ளது. இதில் 41% மாணவர்கள் வெளிநாட்டவர். California Institute of Technology இரண்டாம் இடத்திலும் (30% மாணவர் வெளிநாட்டவர்), University of Cambridge மூன்றாம் இடத்திலும் (37% மாணவர் வெளிநாட்டவர்) உள்ளன. . Stanford, […]
கரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு நடவடிக்கைகளில் 5 நிறுவனங்கள் முன்னிற்கின்றன. இந்த ஐந்து நிறுவனங்களில் 3 சீன நிறுவனங்கள், 1 பிரித்தானிய நிறுவனம், மற்றையது அமெரிக்க நிறுவனம். மேற்படி 5 நிறுவனங்களும் விரைவில் மூன்றாம் கட்ட (phase 3) பரிசோதனையை ஆரம்பிக்க உள்ளன. . சீனாவின் Sinopharm Group என்ற அமைப்பின் கீழ் Wuhan Institute of Biologigal Products என்ற ஆய்வு நிலையமும், Beijing Institute of Biological Products என்ற ஆய்வு நிலையமும் இருவேறு […]
ரஷ்ய அண்மையில் செய்துகொண்ட விண்வெளி நடவடிககைகள் பிரித்தானியாவையும், அமெரிக்காவையும் விசனம் கொள்ள வைத்துள்ளன. . கடந்த நவம்பர் மாதம் ரஷ்யா Cosmos 2542 என்ற செய்மதியை ஏவி இருந்தது. இந்த செய்மதிக்குள் இன்னோர் சேய் செய்மதி மறைந்து இருந்துள்ளது. Cosmos 2443 என்ற இந்த சேய் செய்மதி விண்ணில் நகரும் வல்லமை கொண்டது. அந்த வல்லமை மாற்றான் செய்மதிகளுக்கு அருகில் சென்று வேவு பார்க்கவும், தேவைப்பட்டால் தாக்கி அழிக்கும் வல்லமையும் கொண்டது. . ஜூலை 15 ஆம் […]
செங்டு (ChengDu) என்ற சீன நகரில் உள்ள அமெரிக்க முகவரகத்தை மூடுமாறு வெள்ளிக்கிழமை அமெரிக்காவுக்கு சீனா உத்தரவிட்டு உள்ளது. இது அண்மையில் அமெரிக்கா சீனாவின் Houston முகவரகத்தை மூடுமாறு உத்தரவிட்டதற்கு பதிலடியாக. Chengdu சீனாவின் Sichuan மாநிலத்தில் தலைநகர் ஆகும். இந்த முகவரகமே திபெத் பகுதிக்கும் பொறுப்பு. . பொதுவாக இரு நாடுகளுக்கு இடையில் யுத்தம் அல்லது யுத்தத்துக்கு நிகரான நிலையிலேயே மற்றைய நாட்டி தூதுவரகத்தை அல்லது முகவரத்தை மூட கட்டளையிடும். ஆனால் ரம்ப் அரசு அரசியல் […]
அமெரிக்காவின் Texas மாநிலத்தின் ஹியூஸ்ரன் (Houston) நகரில் அமைத்துள்ள சீன முகவரகத்தை (Consulate General) மூடுமாறு சீனாவுக்கு அமெரிக்க வெளியறவு திணைக்களம் இன்று புதன்கிழமை உத்தரவு இட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகளின் உச்சத்தை இந்த உத்தரவு காட்டுகிறது. . ஜூலை 24 ஆம் திகதிக்கு முன் அனைத்து பணியாளர்களும் மேற்படி நிலையத்தில் இருந்து அகற்றப்படவேண்டும் என்றும் மேற்படி உத்தரவு கூறியுள்ளது. . இதனால் விசனம் கொண்டுள்ள சீனா, மேற்படி உத்தரவு நீக்கப்படாவிடின் சீனா பதில் […]