சீனாவுக்கு போட்டியாக இந்தியா மாலைதீவில் பாலம்

முன்னர் Abdulla Yameen னின் சீன ஆதரவு கட்சி மாலைதீவில் ஆட்சியில் இருந்தவேளை சீனா Male என்ற மாலத்தீவின் தலைநகருக்கும், மாலைதீவின் பிரதான விமான நிலையத்துக்கும் இடையில் பாலம் ஒன்றை சீனா அமைத்து வழங்கியது. தற்போது அங்கு ஆட்சியில் இருப்பது Ibrahim Solih தலைமையிலான இந்திய ஆதரவு கட்சி. அதனால் இந்தியா Male நகரை மேற்கே உள்ள மேலும் 3 தீவுகளுடன் இணைக்கும் பாலம் ஒன்றை அமைக்கவுள்ளது. Villingili, Gulhifahu, Thilafushi ஆகிய தீவுகளையே மேற்படி 6.7 […]

ரம்பின் ஈரான் ஆயுத தடை நீடிப்புக்கு ஐ.நா. மறுப்பு

ரம்பின் ஈரான் ஆயுத தடை நீடிப்புக்கு ஐ.நா. மறுப்பு

அமெரிக்காவின் விருப்பத்துக்கு ஏற்ப ஈரான் மீதான Resolution 2231 ஆயுத தடையை நீடிக்க ஐ.நா. பாதுகாப்பு சபை மறுத்துவிட்டது. இந்த செய்தியை அமெரிக்க வெளியுறவு செயலாளர் Mike Pompeo இன்று வெள்ளி மாலை தெரிவித்து உள்ளார். மொத்தம் 15 நாடுகளை கொண்ட சபையில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட மொத்தம் 11 அங்கத்துவ நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதனால் வெற்றிக்கு தேவையான 9 வாக்குகள் பெறப்படவில்லை. அமெரிக்காவும், Dominican Republican னும் மட்டுமே அமெரிக்காவுக்கு ஆதரவாக […]

ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா கைப்பற்றியது

ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா கைப்பற்றியது

Bella, Bering, Pandi, Luna ஆகிய நான்கு எண்ணெய் கப்பல்கள் ஈரானின் எண்ணெய்யை வேனேசுஏலாவுக்கு (Venezuela) எடுத்து செல்கையில் அமெரிக்கா அவற்றை கைப்பற்றி உள்ளது. இந்த கப்பல்கள் சுமார் 1.1 மில்லியன் பரல்கள் எண்ணெய்யை காவி சென்றுள்ளன. இந்த செய்தியை அமெரிக்கா இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்து உள்ளது. இந்த கப்பல்கள் ஈரானின் இராணுவ பாதுகாப்பு இன்றியே பயணித்தன. இந்த 4 கப்பல்களும் தற்போது Texas மாநிலத்து Houston நகரின் கரை நோக்கி நகர்கின்றன என்றும் கூறப்படுகிறது. இந்த […]

இஸ்ரேல், UAE உறவு ஆரம்பம்

இஸ்ரேல், UAE உறவு ஆரம்பம்

அபுதாபி, டுபாய் ஆகிய நகரங்களை தன்னகத்தே கொண்டுள்ள UAE (United Arab Emirates) இஸ்ரேலுடன் உறவை ஆரம்பிக்கறது. இந்த செய்தியை அமெரிக்க சனாதிபதி ரம்ப், இஸ்ரேல் பிரதமர் Netanyahu, UAE Crown Prince Mohammed Al Nahyan ஆகியோர் இன்று இணைந்த அறிக்கை மூலம் வெளியிட்டு உள்ளனர். இஸ்ரேலுடன் உறவை ஆரம்பிக்கும் 3 ஆவது அரபு நாடாக UAE அமைகிறது. 1979 ஆம் ஆண்டில் எகிப்த் இஸ்ரேலுடன் உறவை ஆரம்பித்து இருந்தது. அதன் பின் ஜோர்டான் 1994 […]

பெங்களூரில் கலவரம், முகமத்தை இழிவு செய்தது காரணம்

பெங்களூரில் கலவரம், முகமத்தை இழிவு செய்தது காரணம்

முகம்மதை (Prophet Mohammad) இழிவு செய்து Facebook செய்தி ஒன்றை வெளியிட்ட காரணத்தால் கர்நாடகா மாநிலத்து தலைநகர் பெங்களூரில் கலவரம் மூண்டுள்ளது. புதன்கிழமை இடம்பெற்ற இந்த கலவரத்துக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். அத்துடன் போலீஸ் நிலையம் ஒன்று தாக்கப்பட்டும், வாகனங்கள் பல தீயிடப்பட்டும் உள்ளன. மேற்படி Facebook செய்தியை உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் உறவு பையன் வெளியிட்டு உள்ளார். அவரின் வீடும் தாக்குதலுக்கு உள்ளானது. மேற்படி Facebook செய்தி தற்போது […]

உதவி சனாதிபதி போட்டியில் கமலா ஹாரிஸ்

உதவி சனாதிபதி போட்டியில் கமலா ஹாரிஸ்

வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள அமெரிக்க சனாதிபதி தேர்தலில் Democratic கட்சி சார்பில் போட்டியிடும் ஒபாமா ஆட்சியின் உதவி சனாதிபதி ஜோ பைட்டேன் (Joe Biden) கமலா ஹாரிஸ் என்பவரை தனது உதவி சனாதிபதியாக போட்டியிட தெரிவு செய்துள்ளார். நவம்பரில் ஜோ பைடென் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், கமலா ஹாரிஸ் உதவி சனாதிபதி ஆவார். ஜோ பைடென் மிகவும் வயது முதிர்ந்தவர் (தற்போது வயது 77) என்றபடியால் அவர் 2024 ஆம் ஆண்டு இரண்டாம் தடவை போட்டியிட […]

ரம்பை நீதிமன்றம் இழுக்கவுள்ளது TikTok

ரம்பை நீதிமன்றம் இழுக்கவுள்ளது TikTok

அமெரிக்க சனாதிபதி ரம்பை நீதிமன்றம் இழுக்கவுள்ளது சீனாவை தளமாக கொண்ட TikTok என்ற app. TikTok மீது ரம்ப், அமெரிக்காவின் பாதுகாப்பை காரணம் கூறி, தடை செய்ய முயல்வதே TikTok நீதிமன்றை நாட காரணம். TikTok நிறுவனத்தின் தாய் நிறுவனமான ByteDance சீனாவை தளமாக கொண்டது. மேற்படி வழக்கு செவ்வாக்கிழமை பதிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ரம்ப் ஆதாரம் எதுவும் இன்றி தனது executive order மூலம் தம்மை தடை செய்வது சட்டத்துக்கு முரண் என்கிறது TikTok. […]

ஹிந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியர்?

ஹிந்தி தெரிந்தால் மட்டுமே இந்தியர்?

இன்று ஞாயிரு திராவிட முன்னேற்ற கழக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரான கனிமொழி டில்லி பயணிக்கும் நோக்கில் சென்னை விமான நிலையம் சென்றுள்ளார். அங்கு கடமையில் இருந்த Central Industrial Security Force (CISF) அதிகாரி ஹிந்தியில் உரையாடி உள்ளார். ஹிந்தி தெரியாத கனிமொழி தமிழில் அல்லது ஆங்கிலத்தில் உரையாடும்படி கேட்டுள்ளார். தனக்கு ஹிந்தி தெரியாது என்று கூறிய கனிமொழியை ஹிந்தி தெரியாத நீர் ஒரு இந்தியரா என்று கேட்டுள்ளார் CSSF அதிகாரி. இந்த விசயத்தை கனிமொழி PTI […]

பெய்ரூட்டை அழித்த வெடிபொருளின் பயணம்

பெய்ரூட்டை அழித்த வெடிபொருளின் பயணம்

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டை (Beirut) செவ்வாய்க்கிழமை அழித்த பெரும் குண்டுக்கு நிகரான அளவு அமோனியம் நைரேட் (ammonium nitrate) ஒரு சாதாரண பயணம் மூலமே அங்கு சென்று முடங்கி இருந்தது. ரஷ்யாவில் இருந்து ஆபிரிக்க நாடான மொசாம்பிக் (Mozambique) சென்ற இந்த சுமை தற்செயலாகவே  பெய்ரூட் சென்றிருந்தது. 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் Georgia வின் Batumi துறைமுகத்தில் இருந்து தனது பயணத்தை இந்த 2,750 தொன் சுமை ஆரம்பித்து இருந்தது. இந்த […]