CANADA DRY உலக அளவில் பிரபலமான குளிர்பானம். அதன் ஒரு வகை Ginger Ale ஆகும். அந்த Ginger Ale போத்தல்களில் Made from Real Ginger (அசல் இஞ்சி கொண்டு தயாரிக்கப்பட்டது) என்ற விளம்பர வசனமும் உண்டு. ஆனால் அதில் பதியப்பட்டு உள்ள உள்ளடக்கத்தில் இஞ்சி என்ற சொல் இல்லை. காரணம் உண்மையில் அதில் இஞ்சி துளியும் இல்லை. இஞ்சி தரும் நலன்களும் இல்லை. தவறை அறிந்த அமெரிக்க அரசு 2019 ஆண்டு அங்கு விற்பனை […]
அமெரிக்காவின் Gallup என்ற ஆய்வு அமைப்பு வெளியிட்ட 2020 ஆம் ஆண்டுக்கான சட்ட ஒழுங்கு சுட்டியில் இலங்கை 83 புள்ளிகளை பெற்றுள்ளது. பாகிஸ்தானும் பங்கதேசமும் 81 புள்ளிகளையும், இந்தியா 79 புள்ளிகளையும் பெற்றுள்ளன. ஆப்கானிஸ்தான் 43 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் சுமார் 1,000 பேரை இந்த ஆய்வு உள்ளடக்கியது. இவர்களின் கருத்துக்களும் வேறுசில கணியங்களும் சுட்டி பதிப்பிடலுக்கு பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 144 நாடுகள் இந்த ஆய்வில் பங்கு கொண்டிருந்தன. இந்த ஆண்டுக்கான உலக சராசரி […]
அமெரிக்காவின் சிக்காகோ நகரை தளமாக கொண்ட Beam Suntory என்ற மதுபான தயாரிப்பு நிறுவனம் இந்திய அரசியல்வாதிகளுக்கு வழங்கிய இலஞ்சத்துக்காக அமெரிக்க அரசுக்கு $20 மில்லியன் தண்டம் செலுத்துகிறது. இந்தியாவில் தனது மதுபானங்களை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்ய விரும்பிய Beam அதற்கான அனுமதியை பெற தனது இந்திய முகவர் மூலம் இந்திய அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் வழங்கி இருந்தது. அத்துடன் அந்த இலஞ்ச பணத்தை மறைக்க பொய்யான பதிவுகளையும் தமது கணக்கியலில் வைத்துக்கொண்டது. ஆனால் இதை கண்டுபிடித்த […]
ஆபிரிக்க நாடான எத்தியோப்பியா (Ethiopia) நீண்ட காலமாக அமெரிக்க நேச நாடாக இருந்து வந்துள்ளது. ஆனால் எதியோப்பியா Blue Nile ஆற்றின் குறுக்கே கட்டும் Grand Ethiopian Renaissance Dam (GERD) என்ற நீர்மின் அணை காரணமாக அமெரிக்காவுக்கும், எதியோப்பியாவுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றி உள்ளது. Lake Victoria வில் இருந்து வரும் White Nile ஆறும், எதியோபியாவில் இருந்து வரும் Blue Nile ஆறும் சூடானின் Khartoum (Sudan) நகருக்கு அண்மையில் இணைந்து நைல் […]
Google தேடுதல் (search engine), Android OS ஆகியன Google நிறுவனத்துக்கு சொந்தமானவை. கூகுளுக்கு போட்டியாக iPhone, iPad போன்றவற்றை தயாரிக்கும் நிறுவனம் Apple. ஆனால் அவை இரண்டும் இணைய தேடுதலில் நுகர்வோர் நலனனுக்கு எதிரான வகையில் இணைந்து செயற்படுவதாக அமெரிக்க அரசு கூகிள் மீது தாக்கல் செய்த antitrust வழக்கில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 2017 ஆம் ஆண்டு Google, Apple ஆகிய நிறுவனங்கள் இரண்டும் இரகசியமாக கூடி, iPhone போன்ற Apple தயாரிப்புகள் Google நிறுவனத்தின் […]
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற Valdai Discussion Club என்ற அமர்வின்போதே ரஷ்யாவின் சனாதிபதி பூட்டின் மேற்படி கருத்தை தெரிவித்து உள்ளார். சீனாவும் மறைமுகமாக பூட்டினின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது. மேற்படி அமர்வின்போது விடுக்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பூட்டின் இரண்டு நாடுகளுக்கும் இடையில் வளர்ந்துள்ள நம்பிக்கையும், கூட்டுறவும் மேலதிக உடன்படிக்கை ஒன்றுக்கு அவசியத்தை ஏற்றப்படுத்தாவிடினும், தாம் ரஷ்ய-சீன இராணுவ அணிக்கு ஆர்வம் கொண்டுள்ளதாக கூறி உள்ளார்.தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் இராணுவ கூட்டுக்கு பேச்சுக்கள் இடம்பெறவில்லை […]
கடந்த செவ்வாய்க்கிழமை (2020/10/20) Bennu என்ற விண்கல்லில் தரை இறங்கிய நாசாவின் OSIRIS-REx என்ற விண்கலம் அந்த விண்கல்லின் சிறிதளவை (sample) எடுத்திருந்தது. அவற்றை மேலதிக ஆய்வு செய்யும் நோக்கில் பூமிக்கு கொண்டவருவதே நோக்கம். அனால் கைப்பற்றிய மாதிரியை கொண்டுள்ள கொள்கலம் முற்றாக மூடப்படாமையால் கைப்பற்றப்பட்டவற்றில் சிறிதளவு வெளியேற ஆரம்பித்து உள்ளன என்று நாசா வெள்ளிக்கிழமை கூறி உள்ளது. Bennu வில் இருந்து 60 கிராம் மாதிரியை எடுக்கவே முதலில் திட்டம் இருந்தது. ஆனால் வசதி கிடைத்தால் […]
சீனாவுடனான பொருளாதார உறவுகளை கைவிடுமாறு அமெரிக்கா இலங்கையை அழுத்துகிறது. அமெரிக்காவின் வெளியுறவு திணைக்களத்தின் (state department) தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கு பொறுப்பான அதிகாரி Dean Thompson என்பவர் இலங்கை கடினமான ஆனால் அவசியமான தீர்மானங்களை (“difficult but necessary choices”) எடுத்தல் அவசியம் என்றுள்ளார். அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் (Secretary of State) மைக் பொம்பேயோ (Mike Pompeo) அடுத்த கிழமை இலங்கை, இந்தியா, மாலைதீவு, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்யவுள்ளார். இவரின் பயணத்தின் […]
மலேசிய மக்களின் பொதுப்பணத்தில் ஆரம்பிப்பட்ட 1MDB முதலீட்டு திட்டத்தில் இருந்து மலேசிய அரசியல்வாதிகள் பெருமளவு பணம் கொள்ளையடிக்க உடந்தையாக இருந்த அமெரிக்காவின் முதலீட்டு வங்கியான Goldman Sachs தனது தவறுகளில் இருந்து விடுவிக்க சுமார் $3 பில்லியன் தண்டம் செலுத்த இன்று வியாழன் இணங்கி உள்ளது. அதனால் Goldman செலுத்தும் மொத்த தண்டம் சுமார் $7 பில்லியன் ஆக அதிகரித்து உள்ளது. கடந்த ஜூலை மாதம் மலேசியாவுக்கும் சுமார் $3.9 பில்லியன் தண்டம் செலுத்த Goldman இணங்கி இருந்தது. […]
அமெரிக்காவின் மருந்து தயாரிப்பு நிறுவனமான Purdue Pharma தனது OxyContin மருந்து விற்பனையில் செய்த குற்றங்களை ஏற்று, $8.3 பில்லியன் தண்டம் செலுத்தி, நிறுவனத்தையும் மூட இணங்கி உள்ளது. OxyContin சில நோயாளிகளின் நோக்களை குறைக்கும் மருந்தாகவே அங்கீகரிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நோய் எதுவும் இல்லாதோர் பலர் அதை போதையாக பயன்படுத்தி உள்ளனர். அதை அறிந்தும் இலாப நோக்கத்தை மட்டும் கொண்ட Purdue Pharma வைத்தியர்களை ஊக்கிவித்து OxyContin மருந்து விற்பனையை அதிகரித்து உள்ளது. இலாபத்தில் பங்கை […]