பலஸ்தீனர் வீடுகளை இஸ்ரேல் அழிப்பு, 73 பேர் வீதியில்

பலஸ்தீனர் வீடுகளை இஸ்ரேல் அழிப்பு, 73 பேர் வீதியில்

Wets Bank பகுதியில் உள்ள ஜோர்டான் பள்ளத்தாக்கில் இருந்த பல பலஸ்தீனர் வீடுகளை இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை அழித்து உள்ளது. அதனால் 41 சிறுவர்கள் உட்பட 74 பேர் வீதிக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஐ. நா. இது தொடர்பாக கவலையை மட்டும் தெரிவித்து உள்ளது. தம்மை நீதி, நேர்மையானவர்கள் என்று பறைசாற்றும் மேற்கு அரசியல்வாதிகள் எவரும் இது தொடர்பாக கருத்துக்கள் எதையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் மனிதநேயம் கொண்ட இஸ்ரேல் அமைப்பான B’Tselem இதை கண்டித்து உள்ளது. இந்த […]

பைடென் மெல்ல முன்னேற ரம்ப் நீதிமன்றம் செல்கிறார்

பைடென் மெல்ல முன்னேற ரம்ப் நீதிமன்றம் செல்கிறார்

நேற்று இடம்பெற்ற அமெரிக்க சனாதிபதி தேர்தல் கணிப்பீடுகள் தொடரும் வேளையில் அஞ்சல் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணுவதை தடுக்கும் நோக்கில் ரம்ப் நீதிமன்றம் செல்கிறார். தற்போது பைடென் 264 electoral வாக்குகளையும், ரம்ப் 214 வாக்குகளையும் வென்றுள்ளனர். சனாதிபதியாக வெல்ல மொத்தம் 538 electoral வாக்குகளில் குறைந்தது 270 வாக்குகளை தேவை. Nevada (6 வாக்குகள்) மாநிலத்தில் பைடேன் சிறிதளவு முன்னணியில் உள்ளார். இந்த மாநிலத்தையும் பைடேன் பெற்றால் அவருக்கு சனாதிபதி பதவியை கைப்பற்ற தேவையான 270 […]

அமெரிக்காவில் தீர்மானம் இன்றிய தேர்தல் இரவு

அமெரிக்காவில் தீர்மானம் இன்றிய தேர்தல் இரவு

இன்று நவம்பர் 3 ஆம் திகதி இடம்பெற்ற அமெரிக்க சனாதிபதி தேர்தல் திடமான தீர்மானம் இன்றியதாக உள்ளது. வழமைபோல்  ஐந்து swing states வாக்கு எண்ணல் வேலைகள் முடிவின்றி உள்ளன. இறுதி முடிவுகள் வெளியாக ஒருசில தினங்கள் தேவைப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சிலவேளைகளில் இந்த விசயங்கள் நீதிமன்றங்கள் சென்று இழுப்படவும்கூடும். 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற Al Gore, Bush (மகன்) போட்டியிட்ட சனாதிபதி தேர்தலும் நீண்ட காலம் நீதிமன்றில் இழுபட்டு இருந்தது. தற்போது பைடென் 244 electoral […]

பாணந்துறையில் நூற்றுக்கணக்கான திமிலங்கைகள் தவிப்பு

பாணந்துறையில் நூற்றுக்கணக்கான திமிலங்கைகள் தவிப்பு

சுமார் 100 திமிங்கிலங்கள் (pilot whales) பாணந்துறை கடற்கரையில் ஒதுங்கி, தாமாக மீண்டும் ஆழ்கடலுள் செல்ல முடியாது தவிக்கின்றன. கரோனா காரணமாக அங்கு நடைமுறையில் உள்ள 24 மணி நேர ஊரடங்கு சட்டத்தையும் மீறி உள்ளூர் மக்கள் அந்த திமிங்கலங்கள் மீண்டும் ஆழ்கடல் செல்ல உதவுகின்றனர். தவிக்கும் திமிங்கிலங்கள் மீண்டும் ஆழ்கடலுக்குள் செல்லவில்லை என்றால், அவை மரணிக்க நேரிடும். இலங்கையின் Marine Environment Protection Authority (MEPA) இவற்றை ஆழ்கடல் நகர்த்த முனைகின்றது. Pilot திமிங்கிலம் சுமார் […]

பர்மாவின் இஸ்லாமிய காழ்ப்பு பிக்கு Wirathu சரண்

பர்மாவின் இஸ்லாமிய காழ்ப்பு பிக்கு Wirathu சரண்

பர்மாவில் ரோஹிங்கியா இஸ்லாமியருக்கு எதிராக வன்முறைகளை ஊக்குவித்த பிக்குவான Ashin Wirathu இன்று திங்கள்கிழமை பர்மா போலீசிடம் சரண் அடைந்துள்ளார். கடந்த 18 மாதங்களாக ஒளிந்து வாழ்ந்த இவர் திடீரென திங்கள் போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார். இந்த பிக்கு தொடர்பாக Time சஞ்சிகை 2013 ஆம் ஆண்டு வெளியிட்ட பதிப்பு ஒன்றில் இவரை “Buddhist Bin Laden” என்று சித்தரித்திருந்தது. இந்த பிக்கு ரோஹிங்கியா இஸ்லாமியருக்கு எதிரான வன்முறைகளை ஆதரித்து நடவடிக்கைகள் எடுத்திருந்தவர். ஆனாலும் […]

இலங்கை அரச bond மீண்டும் 20% ஆல் வீழ்ச்சி

இலங்கை அரச bond மீண்டும் 20% ஆல் வீழ்ச்சி

இலங்கை அரசின் அமெரிக்க டாலர் மூலமான bond அக்டோபர் மாதம் மேலும் 20% ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏற்கனவே செப்டம்பர் மாதம் இது 15.5% ஆல் வீழ்ந்து இருந்தது. ஒரு காலத்தில் ஆசியாவின் தரமான bond ஆக இருந்த இலங்கை அரச bond தற்போது மிகவும் பலமற்ற ஒன்றாக மாறி உள்ளது என்கிறது Bloomberg Barclays சுட்டி. ஆசிய அபிவிருத்தி வங்கியின் (Asian Development Bank) கணிப்புப்படி இலங்கையின் இந்த வருட GDP வீழ்ச்சி 5.5% ஆக […]

பிலிப்பீன் சூறாவளிக்கு 1 மில்லியன் பேர் நகர்வு

பிலிப்பீன் சூறாவளிக்கு 1 மில்லியன் பேர் நகர்வு

ஞாயிற்றுக்கிழமை பிலிப்பீனின் (Philippines) தெற்கு பகுதியை Goni என்ற சூறாவளி தாக்க ஆரம்பித்து உள்ளது. இதன் காற்றுவீச்சு 225 km/h இல் இருந்து 310 km/h வரையில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அதனால் சுமார் 1 மில்லியன் மக்கள் வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டு உள்ளனர். சூறாவளி Goni அதிகூடிய வல்லமை கொண்ட வகை 5 (Category 5) ஆக இருக்கும். 2013 ஆம் ஆண்டுக்கு பின் அப்பகுதியை தாக்கும் பலமான சூறாவளி Goni ஆகும். 2013 ஆம் […]

தேர்தல் வெற்றிக்கு வன்முறையை தூண்டும் ரம்ப்

தேர்தல் வெற்றிக்கு வன்முறையை தூண்டும் ரம்ப்

நவம்பர் மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ள அமெரிக்கா சனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவக்கூடிய நிலையில் உள்ள சனாதிபதி வன்முறைகளில் ஈடுபடும் தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்க முனைகிறார். வெள்ளிக்கிழமை பைடெனின் பரப்புரை பஸ் ஒன்று Texas மாநிலத்தில் உள்ள Austin நகரம் நோக்கி Hwy 35 இல் பயணித்துக்கொண்டிருந்த வேளை அதை சுமார் 100 வாகனங்களை கொண்ட ரம்ப்  ஆதரவு வாகன தொடர் சுற்றிவளைத்து பஸ்ஸை வீதியில் இருந்து தள்ள முயன்றுள்ளன. அந்த வீதியில் வேகம் மணித்தியாலத்துக்கு […]

பிரித்தானிய 4 கிழமைகளுக்கு மீண்டும் முடக்கம்

பிரித்தானிய 4 கிழமைகளுக்கு மீண்டும் முடக்கம்

கரோனா காரணமாக டிசம்பர் 2 ஆம் திகதி வரையான 4 கிழமைகளுக்கு பிரித்தானியாவை மீண்டும் முடக்க உள்ளதாக பிரதமர் ஜோன்சன் இன்று தீர்மானித்து உள்ளார். இம்முறை நத்தார் பண்டிகையும் வித்தியாசமானதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். உணவகங்கள், pubs, Gym, களியாட்ட நிலையங்கள் போன்ற அத்தியாவசியம் அற்ற நிலையங்கள் மீண்டும் 4 கிழமைகளுக்கு மூடப்படும். ஆனால் பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தொடர்ந்தும் செயல்படும். முடக்கப்பட்ட ஊழியர்களுக்கான 80% உதவி தொகை நவம்பர் மாதம் வரை நீடிக்கப்படும் என்றும் […]

இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை, தாய்வான் காரணம்

இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை, தாய்வான் காரணம்

அண்மையில் 20 இந்திய படையினர் இந்திய-சீன எல்லையில் கொலை செய்யப்பட்ட காலத்தில் இருந்து இந்தியாவில் சீன எதிர்ப்பு வளர்ந்துள்ளது. மக்கள் கொண்ட அந்த விசனத்தை தனது அரசியல் இலாபத்துக்கு பயன்படுத்தும் நோக்கில் சில பா. ஜ. அரசியவாதிகள் இந்தியா தாய்வானுடன் நேரடி வர்த்தக உடன்படிக்கைகளை (trade accords) மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வருகின்றனர். தாய்வானுடன் மற்றைய நாடுகள் வர்த்தகம் செய்வதை சீனா தடை செய்யாவிடினும், மற்றைய நாட்டு அரசுகள் அரசுமட்ட வர்த்தக உடன்படிக்கைகளை தாய்வானுடன் செய்வதை சீனா […]