கரோனா அமெரிக்காவை உலுக்கியபோது பெரும்தொகை சிறு வர்த்தகங்கள் வருமான குறைவால் தவித்தன. அவை தொடர்ந்தும் தமது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாது இருந்தது. அந்நிலையில் அமெரிக்க அரசு சிறு வர்த்தகங்களுக்கான Payment Protection Program (PPP) என்ற பண உதவி திட்டத்தை ஆரம்பித்தது. PPP மூலம் அமெரிக்கா சுமார் $500 பில்லியன் பணத்தை இடரில் உள்ள சிறு வர்த்தகங்களுக்கு வழங்கியது. அரசு வேகமாக பெரும்தொகை பணத்தை வழங்க, திருட்டுகளும் வளர்ந்திருந்தன. குறைந்தது 11,000 சந்தேகத்துக்குரிய PPP விண்ணப்பங்கள் தற்போது […]
அமெரிக்காவின் அடுத்த சனாதிபதியாகவுள்ள பைடென் குழு ஒன்றின் மீது மேலுமொரு இந்திய சாதி பாகுபாட்டு குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் கரோனா தடுப்பு பணிகளை சனாதிபதி சார்பில் செய்யும் பணிகளுக்கு நியமிக்கப்பட்ட குழுவில் அங்கத்துவம் கொண்ட Celine Gounder மீதானதே இந்த புதிய குற்றச்சாட்டு. Celine னின் தந்தையார் தமிழ்நாட்டு பெரும்பாளையம் கிராமத்து தமிழர். 1960 களில் அமெரிக்கா சென்ற Raj Natarajan என்பவரே பின்னர் தனது பெயரை Raj Gounder என்று மாற்றி இருந்தார். Gounder […]
Pfizer (f-பைசர்) என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் 90% காரோன தடுப்பு வல்லமை கொண்ட மருந்து தற்போதைக்கு வறிய நாடுகளின் கைகளுக்கு எட்டாது என்று கூறப்படுகிறது. அதனால் வறிய நாடுகள் ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் தயாரிக்கும் கரோனா மருந்தைகளையே எதிர்பார்க்கவேண்டும். 2021 ஆம் ஆண்டு முடிவுக்குள் Pfizer சுமார் 1.3 பில்லியன் கரோனா தடுப்பு மருந்தை தயாரிக்கவுள்ளது. ஆனால் அதில் 1.1 பில்லியன் ஏற்கனவே அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய […]
நவம்பர் 4 ஆம் திகதி இடம்பெற்ற சனாதிபதி தேர்தலில் தோல்வியை அடைந்த அமெரிக்க சனாதிபதி ரம்ப் அப்பதவியை பைடெனிடம் (Biden) கையளிக்கும் பணிகளை தடுத்து வருகிறார். மிக சிறுதொகை வாக்குகள் மட்டுமே எண்ணப்பட உள்ள நிலையில் அதையே ரம்ப் காரணமாக்கியுள்ளார். ரம்ப் போதிய electoral வாக்குகளை பெற சந்தர்ப்பம் இல்லை என்றாலும், அனைத்து வாக்குகளையும் எண்ணிய பின்னரே மாநிலங்கள் சட்டப்படியான தொகைகளை கூறும். அதற்கு மேலும் சில காலம் தேவை. அமெரிக்காவில் தேர்தல் பணிகள் மாநிலங்களின் பணி. […]
Pfizer (f-பைசர்), BioNTech ஆகிய இரண்டு மருத்துவ தயாரிப்பு நிறுவனங்களும் இணைந்து தயாரித்த கரோனா தடுப்பு மருந்து 90% தடுப்பை அளிக்கிறது என்று அந்த நிறுவனங்கள் இன்று கூறி உள்ளன. அதனால் இந்த தடுப்பு மருந்து ஒரு திடமான கரோனா தடுப்பு மருந்தாக கருதப்படுகிறது. மேற்படி தடுப்பு மருந்து, 3 ஆம் கட்ட பரிசோதனையாக, அமெரிக்கா, ஜேர்மனி, பிரேசில், ஆர்ஜென்டீனா, தென்னாபிரிக்கா, துருக்கி ஆகிய 6 நாடுகளில் வாழும் 43,500 மக்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இவர்களில் எவருக்கும் […]
இமயமலை பகுதில் ஆரம்பிக்கும் Yarlung Tsangpo என்ற ஆறு 2,840 km கிழக்கே சென்று, அருணாச்சல் பிரதேசத்தில் இந்தியாவுள் நுழைகின்றது. இந்தியாவில் பிரம்மபுத்ரா (Brahmaputra) என்று பாயும் இந்த ஆறு பின் Jamuna (Yamuna அல்ல) ஆறாக மாறி கங்கை ஆற்றுடன் இணைகிறது. பங்களாதேசத்துள் நுழையும் கங்கை ஆறு பத்மா (Padma) ஆறாக கடலுள் வீழ்கிறது. சீனா தனது பகுதியில் பாயும் இந்த ஆற்றை மறித்து குறைந்தது 11 நீர்மின் அணைகளை நிர்மாணிக்கிறது. அவற்றுள் சில ஏற்கனவே […]
தமிநாட்டின் வேதாரண்யம் பகுதியில் உள்ள கோடியக்கரை நகரில் இலங்கை குடும்பம் ஒன்று தமிழ்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளது. இவர்களை யாழ்ப்பாண பகுதியில் இருந்து காவி சென்ற வள்ளம் மீண்டும் இலங்கைக்கு திரும்பி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. Ahamed Shareem Mohamed Shihab (வயது 45), அவரின் மனைவி Fathima Farzana Markar (வயது 39), அவர்களின் 10 வயது மகன் ஆகியோரே கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 2014 ஆம் ஆண்டு இலங்கையில் Privelth […]
ஒபாமா ஆட்சியில் உதவி சனாதிபதியாக இருந்த ஜோ பைடென் (Joe Biden) அமெரிக்காவின் 46 ஆவது சனாதிபதி ஆகிறார். தற்போதைய சனாதிபதி ரம்ப் தேர்தல் முடிவுகளை எதிர்த்து வழக்குகள் தொடர்ந்தாலும், 20 electoral வாக்குகளை கொண்ட Pennsylvania மாநிலத்தில் பைடென் வெற்றி பெற்றதால் அவர் அமெரிக்காவின் அடுத்த சனாதிபதியாக ஆகிறார். Arizona, Nevada, Georgia, North Carolina, Alaska ஆகிய மாநிலங்களில் இறுதி முடிவுகள் இதுவரை வெளிவரவில்லை என்றாலும் 20 வாக்குகளை கொண்ட Pennsylvania மாநிலத்தை வென்றதால் […]
ஒபாமா காலத்து உதவி சனாதிபதி ஜோ பைடென் (Joe Biden) அடுத்த அமெரிக்க சனாதிபதியாவது மெல்ல உறுதியாகி வருகிறது. தபால் மூல வாக்குகள், பிந்தி வரும் படையினரின் வாக்குகள், நிபந்தனைகள் கொண்ட வாக்குகள் போன்றன பல மாநிலங்களில் தற்போதும் எண்ணப்பட்டு வந்தாலும், பல இடங்களில் பொதுவாக 99% வாக்குகள் எண்ணப்பட்டு உள்ளன. மொத்தம் 5 மாநிலங்களில் சற்று அதிகம் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. ஆனாலும் தற்போதைய தரவுகளின்படி பைடென் சனாதிபதி ஆகுவது மெல்ல உறுதியாகி வருகின்றது. தீர்மானிக்கப்படவேண்டிய […]
Wets Bank பகுதியில் உள்ள ஜோர்டான் பள்ளத்தாக்கில் இருந்த பல பலஸ்தீனர் வீடுகளை இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை அழித்து உள்ளது. அதனால் 41 சிறுவர்கள் உட்பட 74 பேர் வீதிக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஐ. நா. இது தொடர்பாக கவலையை மட்டும் தெரிவித்து உள்ளது. தம்மை நீதி, நேர்மையானவர்கள் என்று பறைசாற்றும் மேற்கு அரசியல்வாதிகள் எவரும் இது தொடர்பாக கருத்துக்கள் எதையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் மனிதநேயம் கொண்ட இஸ்ரேல் அமைப்பான B’Tselem இதை கண்டித்து உள்ளது. இந்த […]