அமெரிக்காவின் கைப்பொம்மையாகிறது இந்தியா, என்கிறது ரஷ்யா

அமெரிக்காவின் கைப்பொம்மையாகிறது இந்தியா, என்கிறது ரஷ்யா

இந்திய-சீன விசயங்களில் இந்தியா அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளின் கைப்பொம்மையாக செயல்படுகிறது என்ற கருத்துப்பட கூறியுள்ளார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் Sergey Lavrov. அத்துடன் மேற்கு நாடுகள் இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான உறவையும் துண்டாட முனைகின்றன என்றும் ரஷ்ய அமைச்சர் கூறியுள்ளார். மேற்படி கருத்துக்களை வெளியுறவு அமைச்சர் Russian International Affairs Council என்ற ஆய்வு அமைப்பில் கூறியுள்ளார். ரஷ்ய அமைச்சரின் கூற்றுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவு பேச்சாளர் Anurag Srivastava இந்தியா தனது சொந்த வெளியுறவு […]

இந்திய iPhone தொழிற்சாலையில் ஆர்ப்பாட்டம்

இந்திய iPhone தொழிற்சாலையில் ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் பெங்களூருக்கு அண்மையில் உள்ள Narsapura பகுதியில் அமைந்துள்ள Wistron என்ற தாய்வான் தொழிற்சாலையில் சுமார் 2,000 ஊழியர்கள் இன்று ஞாயிரு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர் தொழிற்சாலை உடமைகளையும், வாகனங்களையும் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். நாலு மாதங்கள் வரை தமக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று ஆர்பாட்டக்காரர் கூறியுள்ளனர். ஊதியம் வழங்கப்படாத நிலையிலும் தம்மை மிகையான நேரம் பணிபுரிய பணிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர்கள் கூறி உள்ளனர். வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாக உள்ளூர் ஊழியர்களை பணிக்கு அமர்த்தாது, […]

இந்திய செய்தியாளர் கைது, பார்வையாளர் கணிப்பில் ஊழல்?

இந்திய செய்தியாளர் கைது, பார்வையாளர் கணிப்பில் ஊழல்?

அமெரிக்காவின் Fox News போன்ற வலதுசாரி பக்கச்சார்பு தொலைக்காட்சி சேவையை இந்தியாவில் இயக்கிவரும் ARG Outlier Media Lyd. நிறுவனத்தின் அதிபர் (CEO) Vikas Khanchandani இன்று ஞாயிற்றுக்கிழமை மும்பாயில் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் 12 பேரும் கைது செய்யப்பட்டும் உள்ளனர். மக்களுக்கு தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கி, மின் கட்டணமும் செலுத்தி, தனது Republic TV தொலைக்காட்சி சேவையை மட்டும் காண பணமும் வழங்கியதே இவர் மீதான குற்றச்சாட்டு. மக்கள் தொலைக்காட்சியை பார்வையிடாத நேரங்களிலும் தொலைக்காட்சியை […]

நைஜீரியாவில் பல நூறு மாணவர்களை காணவில்லை

நைஜீரியாவில் பல நூறு மாணவர்களை காணவில்லை

Kankara என்ற நைஜீரியாவின் வடமேற்கு பகுதில் உள்ள ஆண் பாடசாலை ஒன்றை ஆயுததாரர் முற்றுகை இட்டப்பின் பல நூறு மாணவர்களை காணவில்லை. பாடசாலை மீதான தாக்குதல் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்று உள்ளது. Government Science Secondary School என்ற ஆண்களுக்கான அரச பாடசாலையே இந்த தாக்குதலுக்கு உள்ளாகியது. தாக்குதல் சுமார் 1 மணிநேரம் இடம்பெற்று என்று கூறப்படுகிறது. அப்பாடசாலையில் சுமார் 800 மாணவர்கள் தங்கி இருந்து படித்து வந்துள்ளனர். தாக்குதலின் பின் […]

3 ஆண்டுகளில் சீனாவில் 35% அணுவாயுத அதிகரிப்பு

3 ஆண்டுகளில் சீனாவில் 35% அணுவாயுத அதிகரிப்பு

கடந்த 3 ஆண்டுகளில் சீனா தனது அணு ஆயுதங்களின் தொகையை 35% ஆல் அதிகரித்து உள்ளது என்கிறது ஆய்வு அறிக்கை ஒன்று. The Bulletin of the Atomic Scientists என்ற ஆய்வு அறிக்கையே வியாழக்கிழமை தனது அறிக்கையில் மேற்படி தரவை வெளியிட்டு உள்ளது. சீனாவிடம் தற்போது 40 அணுவாயுத brigades உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. அதில் சுமார் அரைப்பங்கு நிலத்தில் இருந்து ஏவப்படும் அணு ஆயுதங்களை கொண்ட ballistic மற்றும் cruise ஏவுகணைகள் ஆகும். […]

திரிசங்கு சொர்க்கத்தில் பிரித்தானியா?

திரிசங்கு சொர்க்கத்தில் பிரித்தானியா?

Brexit என்ற அழைக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரித்தானியாவின் நிலை மேலும் குழப்ப நிலையில் உள்ளது. இந்த மாதம் 31 ஆம் திகதிக்குள் பிரித்தானியாவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் பிரிவு இணக்கம் ஒன்று ஏற்படவேண்டும். ஆனால் இறுதி பேச்சுகளும் தோல்வியில் முடிந்துள்ளன. பிரித்தானிய பிரதமர் Boris Johnson இன்று தனது கூற்றில் தீர்மானம் இன்றிய பிரிவுக்கு அதிகமான சாத்தியக்கூறுகள் (strong possibility) உண்டு என்றுள்ளார். சட்டப்படி பிரித்தானிய இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி […]

ரஷ்யாவின் பிரதான இரகசிய விமானத்தில் களவு 

ரஷ்யாவின் பிரதான இரகசிய விமானத்தில் களவு 

ரஷ்யாவில் 4 விசேட ‘doomsday’ விமானங்கள் உள்ளன. அதிகூடிய இரகசியங்களை கொண்ட இந்த 4 விமானங்களும் பலத்த பாதுகாப்பை கொண்டிருக்கவேண்டியவை. ஆனால் அதில் ஒரு விமானம் கொண்டிருந்த விசேட இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்டு உள்ளன. Rostov என்ற மாஸ்கோவுக்கு தெற்கே உள்ள நகரில் இந்த களவு நிகழ்ந்துள்ளது. மொத்தம் 39 இலத்திரனியல் உபகரணங்களும், 5 ரேடார் உபகாரங்களும் திருடப்பட்டு உள்ளன. இவை Ilyushin Il-80 என்ற வகை விமானத்தில் இருந்துள்ளன. வல்லரசுகளுக்கு இடையில் யுத்தம் மூண்டு, அது அணுவாயுத யுத்தமாக மாறின், […]

அம்பாந்தோட்டையில் $300 மில்லியன் சீன ரயர் நிறுவனம்

அம்பாந்தோட்டையில் $300 மில்லியன் சீன ரயர் நிறுவனம்

அம்பாந்தோட்டையில் $300 மில்லியன் பெறுமதியான ரயர் தயாரிப்பு நிறுவனம் ஒன்று அமைக்கப்பவுள்ளது. இந்த செய்தியை இலங்கை அரசு இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்து உள்ளது. இந்த ரயர் தொழிற்சாலை சீனாவின் கட்டுப்பாட்டுள் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு (Hambantota port) அருகில் அமையும். மேற்படி ரயர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கிய இலங்கை அரசு கூடவே பெருமளவு வரி விலக்குகளையும் வழங்கி உள்ளது. சீனாவின் Shandong Haohua Tire Co. என்ற நிறுவனமே மேற்படி ரயர் தொழிற்சாலையை அமைக்கும். இங்கு தயாரிக்கப்படும் […]

தாய்லாந்திலும் வீடு கொள்வனவுக்கு வதிவிட விசா

தாய்லாந்திலும் வீடு கொள்வனவுக்கு வதிவிட விசா

தாய்லாந்தும் அங்கு மாடி வீடுகளை கொள்வனவு செய்வோருக்கு விசேட 5-ஆண்டு வதிவிட விசா வழங்க முன்வந்துள்ளது. புதிய பணத்துக்கு விசா வழங்கும் முறை தை மாதம் 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும். இந்த விசா பெற விரும்புவோர் தாய்லாந்தில் குறைந்தது 10 மில்லியன் baht ($331,560) பெறுமதியான அடுக்குமாடி (condo) வீடு ஒன்றை கொள்வனவு செய்தல் வேண்டும். இந்த வீட்டுக்கொள்வனவு மூலம் வதிவிட விசா பெறுவோர் 5 ஆண்டுகளுக்கு அந்த வீட்டை விற்பனை செய்ய முடியாது. தாய்லாந்தின் உல்லாசப்பயண திணைக்களத்தின் […]

$350 மில்லியன் திருட்டு பணத்தை விடுவிக்கிறது சுவிஸ் நீதிமன்றம்

$350 மில்லியன் திருட்டு பணத்தை விடுவிக்கிறது சுவிஸ் நீதிமன்றம்

Gulnara Karimova என்பவர் முன்னாள் உஸ்பேக்கிஸ்தான் (Uzbekistan) தலைவரின் மூத்த மக்கள். 1989 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையான தந்தையின் ஆட்சி காலத்தில் Gulnara பெருமளவு பணத்தை இலஞ்சமாக பெற்று இருந்தார். குறிப்பாக அந்நாட்டில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உரிமை வழங்கி பெரும் பணத்தை இலஞ்சமாக பெற்று இருந்தார். ஆனாலும் தந்தையுடன் கொண்ட முரண்பாடுகள் காரணமாக இவர் 2014 ஆம் ஆண்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இவர் மீது உஸ்பேக்கிஸ்தானில் சுமார் $1 பில்லியன் ஊழல் […]