யெமென் விமான நிலையத்தில் புதன்கிழமை இடம்பெற்ற தாக்குதலுக்கு குறைந்தது 25 பேர் பலியாகியும், 110 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர். சவுதியில் இருந்து யெமெனை ஆழ வந்த சவுதி ஆதரவு கொண்ட யெமென் குழு மீதே இந்த தாக்குதல் செய்யப்பட்டு உள்ளது. இக்குழு பாதுகாப்பு கருதி சவுதியில் இருந்தே யெமெனை ஆட்சி செய்து வந்துள்ளது. யெமெனில் இருந்து வந்திருந்த பிரதமர் தானும், தனது அமைச்சர்களும் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளதாக கூறியுள்ளார். அத்துடன் ஈரான் ஆதரவு Houthi ஆயுத […]
தான் புதிதாக அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவது இல்லை என்று செவ்வாய்க்கிழமை ரஜனிகாந்த் கூறியுள்ளார். தனக்கு அண்மையில் ஏற்பட்ட இரத்த அழுத்த வேறுபாடுகளையே அவர் “கடவுளின் எச்சரிக்கை” என்று காரணம் கூறியுள்ளார். ஆனாலும் அவரின் நடிப்பு தொடர்கிறது. 1950ம் ஆண்டு டிசம்பர் 12ம் திகதி பெங்களூரில் பிறந்த ரஜனி 1975ம் ஆண்டில் நடிக்க ஆரம்பித்து விரைவில் அதிக ஊதியம் பெறும் நடிகர் ஆனார். வெற்றிகர நடிகர் ஆனா இவர் அவ்வப்போது அரசியலிலும் தலை காட்டினார். 1996ம் ஆண்டில் தி.மு.க. […]
Arya Rajenran என்ற 21 வயது பெண் கேரளாவின் திருவானந்தபுர நகரின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டு உள்ளார். இவர் ஒரு Communist Party of India (Marxist) உறுப்பினர். இவருக்கு முன் இந்தியாவில் Sabitha Beegum என்பவர் தனது 23ம் வயதில் முதல்வர் ஆக இருந்துள்ளார். இன்று திங்கள் திருவனந்தபுரத்தில் Arya முதல்வராக பதிவி ஏற்றுள்ளார். திருவானந்தபுரமே கேரளாவின் மிக பெரிய நகரம் ஆகும். அவையில் இருந்த மொத்தம் 99 வாக்குகளில் இவருக்கு 51 வாக்குகள் கிடைத்துள்ளன. […]
சீனாவின் பொருளாதாரம் அமெரிக்காவின் பொருளாதாரத்தை 2028ம் ஆண்டு பின்தள்ளும் என்று பிரித்தானியாவின் CEBR (Centre for Economics and Research) கணிப்பிட்டுள்ளத. சீனா கரோனா பரவலை திறமையாக கட்டுப்படுத்தியதே இதற்கு முதன்மை காரணம் என்கிறது CEBR. CEBR தனது உலக பொருளாதார ஆய்வை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 26ம் திகதி வெளியிடும். கரோனா காரணமாக உலகின் பெரிய பொருளாதாரங்கள் அனைத்தும் வீழ்ச்சி அடைய, சீனா மட்டும் இந்த ஆண்டு 2% வளர்ச்சியை அடைகிறது. அமெரிக்கா கரோனா காரணமாக வீடுகளுள் முடங்கி இருக்கும் தன் மக்களுக்கு பெரும் உதவி பணம் வழங்க, அவர்கள்அப்பணத்தை […]
இலங்கைக்கான பயணிகள் விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கில் முதல் Aeroflot விமான சேவையின் உல்லாச பயணிகள் விமானம் ஒன்று ரஷ்யாவில் இருந்து கொழும்பு வர இருந்தது. டிசம்பர் 27ம் திகதி கொழும்பில் தரையிறங்கவிருந்த இந்த சேவை திடீரெனெ இடைநிறுத்தப்பட்டு உள்ளது. அந்த சேவை குறைந்தது டிசம்பர் 31ம் திகதிவரை இடைநிறுத்தப்பட்டு உள்ளது. இரண்டாவது உல்லாச பயணிகள் விமானம் ஒன்று யுகிரைனில் (Ukraine) இருந்து டிசம்பர் 28ம் திகதி வரவுள்ளது. அதன் வரவு தற்போதும் திட்டப்படியே உள்ளது. […]
தனது மனைவி மாற்று கட்சிக்கு தாவ Saumitra Khan என்ற பா.ஜ. கட்சி உறுப்பினரான கணவன் விவாகரத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். Saumitra Khan (வயது 40) என்பவர் மேற்கு வங்காள மாநிலத்து பா.ஜ. கட்சி (BJP) பாராளுமன்ற உறுப்பினர். அவரின் மனைவி Sujata Mondal Khan அண்மையில் அங்கு Mamata Banerjiee தலைமையில் ஆளும் கட்சியாக உள்ள Trinamool Congress கட்சியிக்கு (TMC) தாவி உள்ளார். அதனால் விசனம் கொண்ட கணவனே விவாகரத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். பத்திரிகையாளர் […]
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து முறைப்படி வெளியேறுவதற்கான இணக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் இந்த இணக்கம் இருதரப்புக்கும் நியாயமானது என்றுள்ளன. ஆனாலும் இணைக்க விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த இணக்கப்படி பிரித்தானிய பொருட்கள் ஐரோப்பாவில் மேலதிக வரிகள், எண்ணிக்கை கட்டுப்பாடுகள் இன்றி விற்பனை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் பிரித்தானிய மீன்பிடி உரிமைகளில் தனது நிலைப்பாட்டை கைவிட்டு உள்ளது என்றும் கூறப்படுகிறது. அதனால் ஐரோப்பிய மீனவர் பிரித்தானிய கடலில் மீன்பிடிக்க உரிமை கொள்வர். வங்கி விசயத்திலும் பிரித்தானியா விட்டுக்கொடுத்துள்ளது. […]
அஸ்ரேலியாவின் Perth நகரை தளமாக கொண்ட Titanium Sands என்ற நிறுவனம் மன்னார் தீவில் இல்மனைட் (ilmenite) அகழ்வுக்கு வேகமாக முனைந்து வருகிறது. அந்த நிறுவனத்தின் இணையத்தில் இந்த விசயம் முன்பக்கத்தில் பதிக்கப்பட்டு உள்ளது. மன்னார் தீவு பகுதி வங்காலை பறவைகள் சரணாலயத்தை கொண்ட பாதுகாக்கப்பட்ட பகுதி. அகழ்வு பணிகள் மூலம் இப்பகுதியின் இயற்கையை குழப்புவதை இலங்கை சூழலியலாளர் எதிர்க்கின்றனர். சைபீரியாவில் இருந்து வரும் இடப்பெயர்வு பறவைகள் சுமார் 30 நாடுகளை தாண்டி ஆண்டுதோறும் இங்கு வருகின்றன. […]
இஸ்ரேல் மீண்டும் தேர்தலுக்கு தயாராகிறது. இன்று செவ்வாய்க்கிழமை இரவுடன் அந்நாட்டுக்கான தற்போதைய வரவுசெலவு திட்ட காலம் முடிவடைந்தாலும் புதிய வரவுசெலவு திட்டம் நடைமுறைக்கு வராத காரணத்தால் அங்கு மீண்டும் ஒரு தேர்தல் நிகழவுள்ளது. அங்கு கடந்த 2 ஆண்டுகளில் இடம்பெறவுள்ள 4 ஆவது தேர்தல் இதுவாகும். புதிய தேர்தல் வரும் மார்ச் மாதம் 23ம் திகதி இடம்பெறும். இஸ்ரேலில் வாக்குகள் பிரிந்து உள்ளன. அதனால் எந்தவொரு கட்சியின் திடமான பெரும்பான்மையை பெற முடியாது உள்ளது. அதனால் கூட்டு […]
உலகில் அதிகூடிய சனத்தொகையை கொண்டிருந்த சீனா தனது சனத்தொகையை குறைக்க 1979 ஆம் ஆண்டு ஒரு குழந்தை மட்டும் என்ற சட்டத்தை நடைமுறை செய்திருந்தது. அண்மையிலேயே அந்த சட்டம் அங்கு தளர்த்தப்பட்டது. தற்போது இந்தியா மாநில அரசுகள் இரு குழந்தைகள் மட்டும் என்ற சட்டத்தை மறைமுகமாக நடைமுறை செய்கிறன. அசாம் மாநிலத்தில் வரும் ஜனவரி 1ம் திகதி முதல் இரண்டுக்கு மேற்பட்ட குழந்தைகளை கொண்ட குடும்பம் சில மாநில அரச சலுகைகளை இழக்கும். உதாரணமாக அரசில் பணிசெய்த […]