விசனம் கொண்ட மோதி உழவர் மீது பாச்சல்

விசனம் கொண்ட மோதி உழவர் மீது பாச்சல்

டெல்லியில் தங்கியிருந்து சுமார் இரண்டு மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் செய்துவரும் உழவர் மீது விசனம் கொண்ட இந்திய பிரதமர் இன்று ஞாயிற்றுக்கிழமை வசைபாடி உள்ளார். ஜனவரி 26ம் திகதி ஆர்பாட்டகாரர் Red Ford என்ற கட்டடத்துள் நுழைந்தது இந்திய தேசிய கொடிக்கு அவமானம் என்றும், நாடு கவலை அடைந்துள்ளது என்றும் மோதி தனது வானொலி உரையில் கூறியுள்ளார். அண்மையில் மோதி அரசு நடைமுறை செய்யவிருந்த அறுவடைகளை கொள்வனவு செய்யும் முறையை மாற்றும் சட்டங்களை உழவர்கள் எதிர்த்து வருகின்றனர். முன்னைய முறைப்படி அறுவடை காலத்தில் அரசின் கட்டுப்பாடில் உள்ள அமைப்பு மிதமான அறுவடைகளை […]

ஊழல் செய்த சீன முதலீட்டு அதிகாரிக்கு மரணதண்டனை

ஊழல் செய்த சீன முதலீட்டு அதிகாரிக்கு மரணதண்டனை

China Huarong Asset Management Company என்ற சீன முதலீட்டு நிறுவனத்தின் chairman ஆக பதவி வகித்த Lai Xiaomin என்ற அதிகாரிக்கு நேற்று வெள்ளிக்கிழமை சீனா மரண தண்டனை வழங்கி உள்ளது. ஊழல் காரணமாக சீனாவில் மரண தண்டனை பெறும் அதி உயர் அதிகாரி இவரே. இவர் 2008ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையான தனது பதவி காலத்தில் சுமார் $278 மில்லியன் இலஞ்சம் பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இவருக்கான மரணதண்டனை தீர்ப்பு கடந்த 5ம் […]

சர்வாதிகாரி கொள்ளையிட்ட பணத்தை தேடும் நையீரியா

சர்வாதிகாரி கொள்ளையிட்ட பணத்தை தேடும் நையீரியா

இராணுவ கவிழ்ப்பு மூலம் பதவிக்கு வந்திருந்த நையீரியாவின் முன்னாள் சர்வாதிகாரி கொள்ளையடித்த பணத்தை தேடிவருகிறது தற்போதைய நைஜீரிய அரசு. இந்த முயற்சி கடந்த 20 ஆண்டுகளாக இடம்பெற்று வருகிறது. ஓரளவு கொள்ளையடித்த பணம் முடக்கப்பட்டு நையீரியா திரும்பி உள்ளன. Sani Abacha என்ற முன்னாள் இராணுவ அதிகாரி 1993ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாதுகாப்பு அதிகாரியாக பதவியை அடைந்து இருந்தார். அதே ஆண்டு நவம்பர் மாதம் இராணுவ கவிழ்ப்பு மூலம் அந்நாட்டின் தலைமை பதவியை கைப்பற்றி இருந்தார். […]

ஊழல் சுட்டியில் இலங்கை 94ம் இடத்தில்

ஊழல் சுட்டியில் இலங்கை 94ம் இடத்தில்

ஜெர்மனியை தளமாக கொண்ட Transparency International இன்று வியாழன் வெளியிட்ட 2020ம் ஆண்டுக்கான உலக ஊழல் சுட்டியில் இலங்கை நூற்றுக்கு 38 புள்ளிகளை (38/100) பெற்று 94ம் இடத்தில் உள்ளது. மொத்தம் 180 நாடுகள் இந்த கணிப்பிற்கு உட்பட்டு இருந்தன. நியூசிலாந்தும், டென்மார்க்கும் 88/100 புள்ளிகளை பெற்று 1ம் இடத்தில் உள்ளன. சிங்கப்பூர் 85/100 புள்ளிகளை பெற்று 3ம் இடத்தில் உள்ளது. பின்லாந்து, சுவிஸ், சுவீடன் ஆகிய நாடுகளும் கூடவே 3ம் இடத்தில் உள்ளன. ஹாங் காங் […]

இலங்கை இராணுவத்தினர் மீது தடைக்கு ஐ.நா. அத்திவாரம்?

முன்னாள் மற்றும் தற்கால இலங்கை இராணுவத்தினர் சிலர் மீது பயண தடைகள், வங்கி கணக்கு முடக்கம், சொத்து முடக்கம் போன்ற தடைகளை விதிக்க ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தலைவர் Michelle Bachelet இன்று புதன்கிழமை பரிந்துரை செய்துள்ளார். இந்த அறிக்கை அடுத்த மாதம் அமர்வில் ஆராயப்படும். ஐ.நா. அதிகாரி தனது பரிந்துரையில் தற்போதை சனாதிபதி கோத்தபாயா குறைந்தது 28 முன்னாள் அல்லது தற்கால இராணுவ அதிகாரிகளுக்கு பிரதான பதவிகளை வழங்கி உள்ளதாகவும் குற்றம் கூறியுள்ளார். குறிப்பாக […]

அமெரிக்காவில் அர்த்தமற்ற பங்குச்சந்தை சூதாட்டம்?

அமெரிக்காவில் அர்த்தமற்ற பங்குச்சந்தை சூதாட்டம்?

அமெரிக்காவில் சில நிறுவனங்களின் பங்குச்சந்தை பங்குகளை அர்த்தமற்ற வகையில், சூதாட்டத்துக்கு நிகரான முறையில், பெருமளவு  முதலீட்டாளர் கொள்வனவு செய்கின்றனர். இதனால் நட்டத்தில் இயங்கும் சில நிறுவங்களின் பங்கு விலைகள் ஒரு கிழமைக்குள் மட்டும் 300% மடங்கால் அதிகரித்து உள்ளன. GameStop என்ற வீடியோ game விற்பனை செய்யும் நிலையங்களை கொண்ட நிறுவனம் 2019ம் ஆண்டு $470 மில்லியன் நட்டத்தை அடைந்திருந்தது. இது அதற்கு முன் 2017ம் ஆண்டு தனது கடைகளில் 150 கடைகளை இலாபம் இன்மையால் மூடியும் […]

மேலும் உரமாகும் சீன-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக வலயம்

மேலும் உரமாகும் சீன-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக வலயம்

சீனாவுக்கும் நியூசிலாந்துக்கு இடையே நடைமுறையில் இருந்து வந்த சுதந்திர வர்த்தக வலயம் செவ்வாய்க்கிழமை முதல் மேலும் உரமாகியுள்ளது. உரமாக்கப்பட்ட வர்த்தக வலயம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பல பொருட்கள் வரிகள் இன்றி நகர உதவுகிறது. 2008ம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திர வர்த்தக வலயம் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் மீளாய்வு செய்யப்பட்டிருந்தது. அதன் பின் தற்போது மீண்டும் மீளாய்வு செய்யப்பட்டு, மேலும் உரமாக்கப்படும் உள்ளது. உதாரணமாக நியூசிலாந்தின் பால் உணவுகள் 2024ம் ஆண்டு […]

பிரான்ஸ் நீதிமன்றில் வியட்நாம் Agent Orange வழக்கு

பிரான்ஸ் நீதிமன்றில் வியட்நாம் Agent Orange வழக்கு

Tran To Nga என்ற 78 வயது பெண்ணின் Agent Orange தொடர்பான வழக்கு ஒன்றை விசாரிக்க பிரான்ஸ் நீதிமன்றம் இணங்கி உள்ளது. வியட்நாம் யுத்த காலத்தில் வியட்நாமில் வாழ்ந்திருந்த இவர் மட்டுமன்றி, இவரின் மகள் ஒருவரும் Agent Orange பாதிப்பால் மரணமாகி இருந்தார். Agent Orange நஞ்சை வீசிய அமெரிக்காவுக்கு எதிராக வழக்கை தொடர்வதை தவிர்த்து, அமெரிக்க படைகளுக்கு இரசாயனங்களை வழங்கிய 14 நிறுவனங்கள் மீதே வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் மிக பெரிய […]

தாய்வானை சீண்டும் சீனா, அமெரிக்கா விசனம் 

தாய்வானை சீண்டும் சீனா, அமெரிக்கா விசனம் 

சீனாவின் விமானப்படை விமானங்கள் அடிக்கடி தாய்வானின் வான்பரப்புள் சென்று வருகின்றன. இதை அமெரிக்கா கண்டிக்கிறது. தாய்வானுக்கு அதிநவீன ஆயுதங்களை அமெரிக்கா விற்பனை செய்வதை சீனா பதிலுக்கு கண்டிக்கிறது. இன்று ஞாயிறு (2021/01/24) மட்டும் 12 சீன யுத்த விமானங்கள், 2 குண்டுவீச்சு விமானங்கள், 1 வேவு விமானம் ஆகியன தாய்வானின் தென்பகுதியை ஊடறுத்து சென்றுள்ளன. நேற்று சனிக்கிழமை 8 யுத்த விமானங்கள் தாய்வான் வான்பரப்பு ஊடே சென்று வந்திருந்தன. ஒவ்வொரு தடவையும் சீனா விமானங்கள் தாய்வானை அணுகும்போது, தாய்வானின் யுத்த விமானங்கள் சில அவற்றை இடைமறிக்க செல்லும். அவ்வாறு செய்வது சிறிய நாடான தாய்வானுக்கு பெரிய செலவை […]

ஆசியாவின் மிகப்பெரிய போதை கடத்தல்காரர் கைது

ஆசியாவின் மிகப்பெரிய போதை கடத்தல்காரர் கைது

Tse Chi Lop (வயது 56) என்ற ஆசியாவின் மிகப்பெரிய போதை கடத்தல்காரரை நெதர்லாந்து போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவில் பிறந்து தற்போது கனடாவில் குடியுரிமை கொண்டு வாழும் இவர் கனடா செல்ல விமானம் ஒன்றில் ஏற முற்படுகையிலேயே கைது செய்யப்பட்டு உள்ளார். இவரை கைது செய்ய அஸ்ரேலியா கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக முனைந்து வந்துள்ளது. அஸ்ரேலியாவுக்கு செல்லும் போதைகளின் 70% பங்கு இவர் மூலமே செல்கிறது என்று Australian Federal Police கூறியுள்ளது.இவரை கைது […]