சீன BBC தடைக்கு அமெரிக்கா, ஐரோப்பா கண்டனம்

சீன BBC தடைக்கு அமெரிக்கா, ஐரோப்பா கண்டனம்

பிரித்தானியா அங்கு சீனாவின் CGTN (China Global Television Network) செய்தி சேவையை தடை செய்த பின் பிரித்தானியாவின் BBC சேவையை சீனா வெள்ளிமுதல் தடை செய்து இருந்தது. அத்துடன் BBC எதிர்பார்க்காத நிலையில் ஹாங் காங்கிலும் BBC தடை செய்யப்பட்டு உள்ளது. அதை மேற்கு எதிர்பார்த்து இருக்கவில்லை. அதனால் அமெரிக்காவும், ஐரோப்பாவும் விசனம் கொண்டுள்ளன. நீண்ட காலமாக ஹாங் காங் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்ததால் அங்கு BBC ஒரு முன்னணி செய்தி சேவையாக இருந்து […]

இந்திய ஆற்று பெருக்குக்கு CIA அணு உபகரணம் காரணம்?

இந்திய ஆற்று பெருக்குக்கு CIA அணு உபகரணம் காரணம்?

கடந்த கிழமை ​இந்தியாவின் எல்லையோர மாநிலமான உத்தரகாண்ட் (Uttarakhand) ஊடே செல்லும் Dhauliganga ஆறு திடீரென பெருக்கெடுத்ததால் நூற்றுக்கும் மேலானோர் பலியாகியும், தொலைந்தும் ​இருந்தனர்​.​ ஆற்றின் ஆரம்ப மலை பகுதியில் ​g​lacier (​கிளேசியர், ​இறுகிய snow) உடைந்து வீழ்ந்ததாலேயே மேற்படி திடீர் வெள்ளம் உருவாகியது​ என்று கூறப்பட்டது. ஆனால் சூழல் வெப்பம் ஆகலால் glacier உடைந்த கருத்துக்கு இதுவரை ஆதரங்கள் எதுவும் இந்திய அரசால் வெளியிடப்படவில்லை. பொதுவாக செய்மதி படங்கள் போன்ற ஆதாரங்கள் மேற்கூற்றுக்கு ஆதரவாக வெளியிடப்படும். […]

மண்டேலா மரண சடங்கிலும் ஊழல்

மண்டேலா மரண சடங்கிலும் ஊழல்

2013ம் ஆண்டு இடம்பெற்ற நெல்சன் மண்டேலாவின் (Nelson Mandela) மரணச்சடங்கு நிகழ்வுகளில் இருந்து $700,000 பணத்தை ஊழல் மூலம் கைக்கொண்ட குற்றச்சாட்டில் 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த ஊழல் தொடர்பாக செய்திகள் 2014ம் ஆண்டே வெளிவந்து இருந்தாலும் இன்று வெள்ளிக்கிழமையே கைதுகள் இடம்பெற்று உள்ளன. கைது செய்யப்படோருள் மண்டேலாவின் ANC (African National Congress) கட்சியை சார்ந்த Eastern Cape மாநில சுகாதார அமைச்சர் Sindiswa Gomba, கட்சி அதிகாரி Pumlani Mkolo, முன்னாள் […]

$5 மில்லியன் சொத்து பெற்ற 8 வயது நாய்

$5 மில்லியன் சொத்து பெற்ற 8 வயது நாய்

அமெரிக்காவின் Tennessee மாநிலத்து 8 வயது border collie வகை நாய் ஒன்று தனது உரிமையாளரிடம் இருந்து, அவரின் மரணத்தின் பின், $5 மில்லியன் சொத்தை பெற்றுள்ளது. இந்த பணம் அந்த நாய்க்குரிய நிதியத்தில் உள்ளது. Lulu என்ற இந்த நாயின் உரிமையாளர், 84 வயது கொண்ட Bill Dorris என்பவர், அண்மையில் மரணித்து இருந்தார். அவரை பராமரித்த Martha Burton என்பவரே மேற்படி நாயையும் Bill பயணங்களை மேற்கொள்ளும்  காலங்களில் பராமரித்து உள்ளார். அதனால் Lulu […]

சீனாவில் BBC மீது தடை, CGTN மீதான தடை காரணம்

சீனாவில் BBC மீது தடை, CGTN மீதான தடை காரணம்

பிரித்தானியாவின் BBC சேவை சீனாவில் இன்று வெள்ளிமுதல் தடை செய்யப்பட்டு உள்ளது. ஒரு கிழமைக்கு முன் பிரித்தானியா சீனாவின் CGTN (China Global Television Network) செய்தி சேவையை தடை செய்திருந்தது. பிரித்தானியாவின் அச்செயலும், BBC சேவையின் சீனா மீதான காழ்ப்பு தயாரிப்புகளுமே சீனா BBC சேவையை தடை செய்ய காரணம் என்று கருதப்படுகிறது. CGTN செய்தி சேவை சீன கம்யூனிச கட்சியின் (Chinese Communist Party) கட்டுப்பாடில் உள்ள பரப்புரை நிறுவனம் என்பதாலேயே தாம் தடை […]

கியூபாவும் கம்யூனிசத்தை கைவிடுகிறது

கியூபாவும் கம்யூனிசத்தை கைவிடுகிறது

சோவியத் உட்பட பல சோஷலிச/கம்யூனிச நாடுகள் நீண்ட காலமாக முதலாளித்துவத்தை கடைபிடிக்க ஆரம்பித்து இருந்தும் கியூபா தொடர்ந்து கம்யூனிச வழியிலேயே இதுவரை இயங்கி வந்துள்ளது. ஆனால் தற்போது கியூபாவும் முதலாளித்துவத்தை மேலும் ஊக்குவிக்க ஆரம்பித்து உள்ளது. கடந்த சனிக்கிழமை இதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை காலமும் கியூபாவில் 127 துறைகளில் மட்டுமே சொந்த உரிமையுடன் பொதுமக்கள் வர்த்தகங்களை இயக்கலாம். அந்த துறைகள் முடி வெட்டுதல், வாகன சக்கரங்களை திருத்துதல், மரம் வெட்டல் போன்ற சிறு கைத்தொழில் […]

மியன்மார் இராணுவம் மீது அமெரிக்கா தடைகள்

மியன்மார் இராணுவம் மீது அமெரிக்கா தடைகள்

சனநாயக முறைப்படி பதிவியில் இருந்த ஆட்சியை இராணுவ ஆட்சி கவிழ்ப்பு மூலம் விலக்கி அதிகாரத்துக்கு வந்திருந்த மியன்மார் இராணுவம் மீது அமெரிக்கா பல தடைகளை விதித்து உள்ளது. அத்துடன் அமெரிக்காவில் இருந்த $1 பில்லியன் வைப்புக்களையும் அமெரிக்கா முடக்கி உள்ளது. இந்த அறிவிப்பை அமெரிக்க சனாதிபதி பைடென் இன்று புதன் தெரிவித்து உள்ளார். அமெரிக்காவில் இருந்து மியன்மாருக்கான ஏற்றுமதியிலும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் மியன்மார் மக்களுக்கான நேரடி சுகாதார மற்றும் பொதுமக்களுக்கான உதவிகள் தொடரும் என்றும் பைடென் […]

75 ஆண்டுகளின் பின் அமெரிக்க குண்டுவீச்சு விமானம் இந்தியாவில்

75 ஆண்டுகளின் பின் அமெரிக்க குண்டுவீச்சு விமானம் இந்தியாவில்

Aero India என்ற இந்தியாவின் விமான கண்காட்சி இந்த மாதம் 3ம் திகதி முதல் 5ம் திகதி வரை கர்நாடகா மாநிலத்து பங்களூர் நகரில் இடம்பெற்றது. அதில் அமெரிக்காவின் பிரதான குண்டுவீச்சு விமானமானங்களில் ஒன்றான B-1B விமானம் கலந்து கொண்டுள்ளது. இந்த விமானமும் அதை பராமரிக்க 40 அமெரிக்க விமானப்படையினரும் North Carolina மாநிலத்து Ellsworth Air Force தளத்தில் இருந்து இந்தியா சென்று இருந்தனர். இதற்கு முன் 1945ம் ஆண்டே அமெரிக்க குண்டுவீச்சு விமானம் ஒன்று […]

தீவுப்பகுதியில் சீன மின் உற்பத்தி, இந்தியா விசனம்

தீவுப்பகுதியில் சீன மின் உற்பத்தி, இந்தியா விசனம்

இலங்கையின் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய தீவுகளில் சீனா சூரிய மற்றும் காற்றாடி மூலமான மின்னை உற்பத்தி செய்யவுள்ளது. இதனால் விசனம் கொண்டுள்ளது இந்தியா. ஏற்கனவே இந்திய-ஜப்பானிய கூட்டுக்கு வழங்கி இருந்த கொழும்பில் கட்டப்படவிருந்த கிழக்கு கொள்கலன் துறை (ECT, East Container Terminal) உரிமையை இலங்கை பறித்து இருந்தமையும் இந்தியாவுக்கு விசனத்தை உருவாக்கி இருந்தது. இந்நிலையில் சீனா இந்தியாவை அண்டிய தீவுப்பகுதியில் செயற்படுவது விசனத்தை மேலும் உக்கிரம் செய்துள்ளது. சீனாவின் Sinosar-Etechwin என்ற கூட்டு நிறுவனமே […]

Glacier உடைவால் ஆறு பெருக்கெடுத்து பல இந்தியர் பலி

Glacier உடைவால் ஆறு பெருக்கெடுத்து பல இந்தியர் பலி

இந்தியாவின் எல்லையோர மாநிலமான உத்தரகாண்ட் (Uttarakhand) ஊடே செல்லும் Dhauliganga ஆறு திடீரென பெருக்கெடுத்ததால் நூற்றுக்கும் மேலானோர் பலியாகியும், தொலைந்தும் உள்ளனர். ஆற்றின் ஆரம்ப மலை பகுதியில் Glacier (இறுகிய snow) உடைந்து வீழ்ந்ததாலேயே மேற்படி திடீர் வெள்ளம் உருவாகியது. பெருக்கெடுத்த ஆறு சிறிய அணை ஒன்றையும் உடைத்துள்ளது. அதனால் பல இடங்களில் ஆறு பல அடிகள் உயரத்தில் வேகமாக பாய்ந்து ஆற்றோரம் இருந்த வீடுகளையும் உடைத்துள்ளது. Rishiganga Hydroelectric என்ற மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றிய […]