1970 களிலும் 1980 களிலும் தத்தெடுப்பு என்ற பெயரில் திருடப்பட்ட பல்லாயிரம் தென் கொரிய சிறுவர்கள் அடிமைகள் போல் மேற்கு நாடுகளின் தத்தெடுப்போருக்கு வழங்கப்படுள்ளன என The Associated Press மற்றும் PBS Frontline செய்தி நிறுவனங்களின் ஆய்வுகள் அறிந்துள்ளன. 1975ம் ஆண்டு ஜூலை மாதம் Choi Young-ja என்ற சிறுவனும் வேறு சில சிறுவர்களும் கிருமி அழிப்பு வாகனம் ஒன்றின் பின்னே, வாகனத்தில் இருந்து வரும் புகையை பார்க்க ஓடினர். ஆனால் அந்த சிறுவன் வீடு திரும்பவில்லை. […]
ரஷ்யாவும் யூகிறேனும் சண்டையிடும் காலத்தில், ரஷ்யாவின் எதிர்ப்பையும் மீறி, இந்திய ஆயுதங்கள் யூகிறேனுக்கு வழங்கப்பட்டுள்ளன என்கிறது Reuters செய்தி நிறுவன செய்தி ஒன்று. இந்தியா தயாரித்த எறிகணைகள் (artillery shells) இத்தாலி, Czech Republic, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனைசெய்யப்பட, அவற்றை அந்த ஐரோப்பிய நாடுகள் யூகிறேனுக்கு வழங்கி உள்ளன. உதாரணமாக Yantra தயாரித்த 155mm L15A1 வகை எறிகணை இந்தியாவில் இருந்து இத்தாலி சென்று பின் அங்கிருந்து யூகிறேன் சென்றுள்ளது. இவ்வாறு ஐரோப்பிய நாடுகள் […]
லெபனானில் பெருமளவு pager எனப்படும் தொலைத்தொடர்பு சாதனங்கள் செவ்வாய் ஒரே நேரத்தில் வெடித்து 8 வயது சிறுமி உட்பட 9 பேர் பலியாகியும், 2,800 பேர் காயமடைந்தும் உள்ளனர். இது இஸ்ரேலின் சதி என்றே கூறப்படுகிறது. Gold Apollo என்ற நிறுவனத்தின் பெயரில் ஐரோப்பிய நிறுவனம் ஒன்று தைவானில் தயாரித்த Gold Apollo AR924 வகை pager களே இவ்வாறு வெடித்து உள்ளன. இந்த pager ஒவ்வொன்றிலும் வெடிமருந்து மின் கலத்துக்கு அருகில் வைக்கப்பட்டு, உள்வரும் குறுந்தகவல் […]
ஞாயிறு மீண்டும் ரம்ப் மீது படுகொலை முயற்சி ஒன்று இடம்பெற்று உள்ளது. Ryan Wesley என்ற 58 வயது சந்தேக நபர் தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளார். Trump International Gulf Club என்ற இடத்தில் பரப்புரை ஒன்றிலேயே இந்த கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் highway ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ரம்ப் நின்ற இடத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தூரத்தில் AK-47 வகை துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் யூக்கிறேன் மீது கடுமையான அனுதாபம் […]
வெனிசுவேலாவில் (Venezuela) ஒரு அமெரிக்க கடல் படையின் விசேட பிரிவான Navy SEAL (Navy Sea, Air and Land team) அணி உறுப்பினர் உட்பட 6 வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நிக்கோலஸ் மடுரோ (Nicolas Maduro) என்ற வெனிசுவேலா சனாதிபதியை படுகொலை செய்ய அமெரிக்க சி.ஐ.ஏ ஆல் அனுப்பப்பட்டவர்கள் என்கிறது வெனிசுவேலா அரசு. மேற்படி குற்றச்சாட்டை மறுக்கிறது அமெரிக்கா. ஆனால் ஏன் அமெரிக்கர்கள் வெனிசுவேலா சென்றார்கள் என்று கூறவில்லை. அமெரிக்க SEAL உறுப்பினரான Wilbert Castaneda, […]
மொத்தம் 6 மில்லியன் மக்களை மட்டும் கொண்ட மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோர் (El Salvador) சில ஆண்டுகளுக்கு முன் வரை உலகின் கொலை தலைநகரம் (murder capital of the world) என்றே அழைக்கப்பட்டது. 2019ம் ஆண்டு அங்கு மணித்தியாலத்துக்கு ஒரு கொலை இடம்பெற்றது. அப்போது அங்கு கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் எல்லாம் சாதாரணமாக இடம்பெற்றன. ஆனால் 2019ம் ஆண்டு வந்த 37 வயது சனாதிபதி Nayib Bukele நிலைமையை தலைகீழ் ஆக்கினார். […]
பங்களாதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற உள்நாட்டு அரசியல் குழப்பத்தில் இந்தியா கால்விட்டு தற்போது நெருக்கடியான நிலையில் உள்ளது. சுமார் 15 ஆண்டுகள் ஆட்சி செய்த பங்களாதேஷ் பிரதமர் ஹசினா (Hasina) ஆர்ப்பாட்டம் செய்த மாணவரால் விரட்டி அடிக்கப்பட்டபோது இந்தியா அவரை டெல்லி சென்று தங்க அனுமதித்தது. ஹசினா இந்திய அரசியல் தலைவர்கள் பலருடன் நெருக்கமான உறவை கொண்டிருந்தவர். அதனால் ஹசினா ஆட்சி காலத்தில் பங்களாதேஷ் இந்தியாவுடன் நலமான உறவை கொண்டிருந்தது. ஆனால் இந்தியா BNP (Bangladesh Nationalist Party) […]
அமெரிக்காவின் Apple நிறுவனம் தனது iPhone 16 ஐ அறிமுகம் செய்து சில மணித்தியாலங்களில் சீனாவின் Huawei நிறுவனம் தனது மூன்று மடிப்பு கொண்ட Mate XT தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது. Huawei Mate XT ஒரு 5G தொலைபேசி. உலகின் முதல் மூன்று மடிப்பு கொண்ட Mate XT தொலைபேசியின் ஆரம்ப விலை $2,800 (சுமார் 841,000 இலங்கை ரூபாய்கள்). அமெரிக்க அரசு Huawei மீது நடைமுறை செய்துள்ள கடுமையான தடைகளின் மத்தியிலும் Huawei சுதந்திரமாக […]
2028ம் ஆண்டளவில் தாம் செவ்வாய் கிரகத்தில் இருந்து மண் (soil) எடுக்கும் பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இதை 2030ம் ஆண்டவிலேயே செய்ய முன்னர் சீனா அறிவித்து இருந்தாலும் பயணம் 2 ஆண்டுகள் முன்னதாக இடம்பெறவுள்ளது. மேற்படி மாதிரி 2031ம் ஆண்டே பூமியை அடையும். 1971ம் ஆண்டு சோவியத் செவ்வாயில் தரையிறங்கி இருந்தாலும் ஆய்வுகள் எதையும் பெரிதளவில் செய்யவில்லை. அது ஒருவழி பயணம் மட்டுமே. 1976ம் ஆண்டு அமெரிக்கா செவ்வாய் சென்றது. ஆனால் அதுவும் ஒருவழி பயணம் […]