நைஜீரியாவில் மேலும் 317 மாணவிகள் கடத்தல்

நைஜீரியாவில் மேலும் 317 மாணவிகள் கடத்தல்

நைஜீரியாவின் வடமேற்கு பகுதில் உள்ள Zamfara மாநிலத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆயுததாரர் 317 மாணவிகளை கடத்தி உள்ளனர் என்கிறது அந்நாட்டு போலீஸ். இது கடந்த ஒரு கிழமைக்குள் இடம்பெறும் இரண்டாவது கடத்தல். மேற்படி மாணவிகள் Jangebe என்ற நகரத்தில் உள்ள Government Girls Science Secondary School என்ற பாடசாலையில் இருந்தே கடத்தப்பட்டு உள்ளனர். அவர்களை தேடும் பணியில் இராணுவம் உள்ளதாக அரசு கூறுகிறது. கடந்த டிசம்பர் மாதம் 344 மாணவன்கள் வடமேற்கு பகுதியில் உள்ள Kankara […]

கசோகி கொலை அறிக்கையை அமெரிக்கா வெளியிடும்

கசோகி கொலை அறிக்கையை அமெரிக்கா வெளியிடும்

2018ம் ஆண்டு பத்திரிகையாளர் கசோகியை (Jamal Khashoggi) துருக்கியில் உள்ள சவுதி தூதுவரகத்துள் படுகொலை செய்ததை அமெரிக்காவின் உளவுப்படை ஆராய்ந்து, அறிக்கை ஒன்றை ரம்ப் காலத்து அமெரிக்க அதிகாரிகளுக்கு வழங்கி இருந்தது. ஆனால் சவுதி மீது விருப்பு கொண்டிருந்த முன்னாள் சனாதிபதி ரம்ப் அந்த அறிக்கை பகிரங்கத்துக்கு வருவதை தடுத்து இருந்தார். ஆனால் தற்போதைய அமெரிக்க சனாதிபதி பைடென் அந்த அறிக்கையை விரைவில் பகிரங்கம் செய்யவுள்ளார். அதில் குறிப்பாக சவுதியின் இளவரசர் Mohammed bin Salman படுகொலையில் […]

அம்பாந்தோட்டை குத்தகை 198 ஆண்டுகளுக்கு நீடிக்கலாம்

அம்பாந்தோட்டை குத்தகை 198 ஆண்டுகளுக்கு நீடிக்கலாம்

சீனாவுக்கான இலங்கையின் அம்பாந்தோட்டைதுறைமுக குத்தகை தேவைப்பட்டால் 198 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முதல் 99 ஆண்டு குத்தகையின் முடிவில் மேலும் ஒரு 99 ஆண்டுகளுக்கு குத்தகையை நீடிக்க குத்தகை இணக்கத்தில் இடம் உண்டு என்று கூறப்படுகிறது. இந்த ‘தவறை’ முன்னைய அரசு செய்துள்ளது என்று கூறுகிறார் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன. சீனாவிடம் இருந்து பெற்ற கடன் தொல்லையால் 2017ம் ஆண்டு செய்யப்பட்ட இந்த குத்தகை இணக்கத்தை மாற்ற முனைவதாக இலங்கை அரசின் உறுப்பினர்கள் கூறி […]

ஐரோப்பாவில் 23.2 தொன் cocaine கைப்பற்றல்

ஐரோப்பாவில் 23.2 தொன் cocaine கைப்பற்றல்

ஜெர்மனியிலும், பெல்ஜியத்திலும் மொத்தம் 23 metric தொன் cocaine போதை கைப்பற்றப்பட்டு உள்ளது. ஜெர்மன் போலீசார் 16 தொன் போதையை கைப்பற்றிய பின் பெல்ஜியம் போலீசாரை உசார்படுத்த அவர்கள் மேலும் 7.2 தொன் போதையை கைப்பற்றி உள்ளனர். இவற்றின் மொத்த சந்தை பெறுமதி சுமார் $1.8 பில்லியன் முதல் $4.2 பில்லியன் ஆக இருக்கும் என்று கணிப்பிடப்பட்டு உள்ளது. முதல் தொகுதி போதை தென் அமெரிக்க நாடான பராகுவேயில் (Paraguay) இருந்து ஜெர்மனியின் Humburg துறைமுகத்துக்கு வந்துள்ளது. […]

2011 முதல் கட்டாரில் 6,750 வெளிநாட்டு ஊழியர் மரணம்

2011 முதல் கட்டாரில் 6,750 வெளிநாட்டு ஊழியர் மரணம்

2011ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையான காலத்தில் குறைந்தது 6,750 வெளிநாட்டு ஊழியர்கள் கட்டாரில் மரணமாகி உள்ளதாக Guardian தொகுத்த தரவுகள் கூறுகின்றன. இவர்களில் பலர் FIFA World Cup 2022 கால்பந்தாட்ட போட்டிகளுக்கான திட்டங்களில் பணிபுரிந்த இலங்கை, இந்தியா, பங்களாதேசம், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாட்டவரே. பலியானோர் தொகையுள் 557 இலங்கையர், 2,711 இந்தியர், 1,641 நேபாளத்தினர், 1,018 பங்களாதேசத்தினர், 824 பாகிஸ்தானியர் ஆகியோரும் அடங்குவர். பிலிப்பீன், கென்யா போன்ற ஏனைய நாட்டவரின் மரணங்கள் […]

மீண்டும் சீன முதலீடுகளை இந்தியா ஏற்கும்

மீண்டும் சீன முதலீடுகளை இந்தியா ஏற்கும்

கடந்த செப்டம்பர் 15ம் திகதி சீன-இந்திய எல்லையோரம் நிகழ்ந்த கைச்சண்டைகளுக்கு 20 இந்திய படையினரும், 4 சீன படையினரும் பலியாகிய பின் இந்தியா சீன நிறுவனங்கள் மீது பலத்த தடைகளை விதித்து இருந்தது. ஆனால் அந்த தடைகளை இந்திய மெல்ல விலக்க ஆரம்பித்து உள்ளது என்று அங்கிருந்து கசியும் உண்மைகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சீனாவின் Great Wall Motors என்ற வாகன தயாரிப்பு நிறுவனமும், SAIC Motor என்ற வாகன தயாரிப்பு நிறுவனமும் இந்தியாவில் வாகனங்களை உற்பத்தி […]

கரோனா மருந்து ஏற்றுமதியை குறைகிறது இந்தியா

கரோனா மருந்து ஏற்றுமதியை குறைகிறது இந்தியா

இந்தியாவின் Serum Institute தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்தின் ஏற்றுமதியை குறைத்து, இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கும்படி Serum நிறுவனம் கூறப்பட்டுள்ளது. இந்த உண்மையை Serum CEO Adar Poonawalla இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்து உள்ளார். ஆனால் யார் இந்த கட்டளையை அவர்களுக்கு அனுப்பியது என்று Poonawalla கூறவில்லை. Dear countries & governments என்று தனது tweet பதிவில் விழித்த Poonawalla, தமது ஏற்றுமதியை குறைக்குமாறு directed என்றுள்ளார். அதனால் வெளிநாடுகளை பொறுத்திருக்கவும் கேட்டுள்ளார். உலகின் பல […]

இயந்திரம் வெடித்த விமானம் பத்திரமாக இறங்கியது 

இயந்திரம் வெடித்த விமானம் பத்திரமாக இறங்கியது 

அமெரிக்காவின் டென்வர் (Denver) நகரத்தில் உள்ள Denver International விமான நிலையத்தில் இருந்து இன்று சனிக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் ஹவாய் (Hawaii) சென்ற United Airlines விமானத்தின் வலது பக்க இயந்திரம் வெடித்து இருந்தாலும், விமானம் இடது பக்க இயந்திரத்தின் உதவியுடன் திரும்பி பத்திரமாக தரை இறங்கி உள்ளது. UA Flight 328 பயணத்தை மேற்கொண்ட விமானம் Boeing 777 வகையான பெரியதோர் விமானமாகும். இதில் 231 பயணிகளும், 10 பணியாளரும் இருந்துள்ளனர். இயந்திர வெடிப்பின் பின் விமானி “Mayday… Mayday…” என்ற உதவிக்குரலை எழுப்பி உள்ளார். […]

செவ்வாயில் நாசாவின் Perseverance கலம்

செவ்வாயில் நாசாவின் Perseverance கலம்

அமெரிக்காவின் நாசா (NASA) செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய Perseverance என்ற கலம் (robot) அங்கு பாதுகாப்பாக தரையிறங்கி தற்போது புதிய படங்களையும், தரவுகளையும் அனுப்புகிறது. நேற்று வியாழன் செவ்வாயில் இறங்கிய அந்த கலம் மூலம் செவ்வாயின் கல், மண் மாதிரிகளை (samples) பூமிக்கு எடுக்கவும் நாசா முனைகிறது. இந்த கலம் சுமார் 1.2 km நீளமும், 1.2 km அகலமும் கொண்ட பகுதியை வலம்வந்து ஆராயும். இதை தரை இறக்கிய பகுதியில் 3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் […]

அமெரிக்கா உலக யுத்தத்துக்கு தயார், குளிர் காலத்துக்கு தயாரில்லை

அமெரிக்கா உலக யுத்தத்துக்கு தயார், குளிர் காலத்துக்கு தயாரில்லை

பல்லாயிரம் அணுகுண்டுகள், ஏவுகணைகள் முதல் உலக யுத்தம் ஒன்றுக்கு தேவையான அனைத்தையும் கொண்டுள்ள அமெரிக்கா தற்போது கடும் குளிரில் இருந்து தனது மக்களை பாதுகாக்க முடியாமல் திணறுகிறது. மக்களின் ஆவேசத்தில் இருந்து தம்மை பாதுகாக்க அரசியல்வாதிகளும், அரசியல் முற்றிய பத்திரிகையாளரும் அடுத்தவர்களை குற்றம் சாட்டியும் வருகின்றனர். Texas மாநிலத்து Ted Cruz என்ற Republican கட்சி செனட்டர் இடரில் இருந்து தப்பிக்க Cancun (மெக்ஸிக்கோ) நகருக்கு புதன்கிழமை குடும்பத்துடன் தப்பி ஓடியும் உள்ளார். பலரும் Cruz செயலை […]