இலங்கை அகதிகளை கடத்தியவருக்கு Haiti 32 மாத சிறை

இலங்கை அகதிகளை கடத்தியவருக்கு Haiti 32 மாத சிறை

இலங்கையில் இருந்து அமெரிக்கா செல்ல விரும்புவோரை Haiti என்ற நாட்டுக்கு எடுத்து, அங்கிருந்து Turks and Caicos Islands (TCI) க்கு நகர்த்தி, அங்கிருந்து Bahamas ஊடாக அமெரிக்காவுக்கு அழைத்து செல்ல முயன்ற மோகன் என்ற ஸ்ரீ கஜமுகன் செல்லையா என்பவரே TCI நீதிமன்றால் தண்டிக்கப்படுகிறார். Toronto வாசியான மோகன் அகதிகளை சிறு படகுகள் மூலம் கடத்தும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இவர் 2019ம் ஆண்டு ஜூலை 1ம் திகதி முதல் அக்டோபர் 10ம் திகதி வரை அகதிகளை […]

ஜெர்மனி நமீபியாவில் யுத்த குற்றம் செய்தது!

ஜெர்மனி நமீபியாவில் யுத்த குற்றம் செய்தது!

20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஜெர்மனி நமீபியாவில் யுத்த குற்றம் (genocide) செய்தது என்று ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் Heiko Maas இன்று வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டுள்ளார். அத்துடன் ஜெர்மனி $1.34 பில்லியன் பணத்தை இந்த மக்களுக்கு செலவிடவும் முன்வந்துள்ளது. ஆபிரிக்காவின் Herero மற்றும் Nama மக்கள் மீது, தற்போதைய நமீபியா (Namibia), அவர்களை ஆக்கிரமித்து இருந்த ஜெர்மனி 1904 முதல் 1908 வரையான காலத்தில் யுத்த குற்றங்களை செய்திருந்தது. 1884ம் ஆண்டு முதல் 1915ம் ஆண்டுவரை இப்பகுதி […]

மோதி அரசு, Twitter மோதல், கரோனா காரணம்

மோதி அரசு, Twitter மோதல், கரோனா காரணம்

கரோனா தொடர்பான மக்களின் பதிவுகள் காரணமாக மோதி அரசுக்கும், அமெரிக்காவின் Twitter நிறுவனத்துக்கும் இடையில் மோதல் நிலை உருவாகியுள்ளது. Twitter மீதான மோதி அரசின் அழுத்தத்தை இன்று வியாழன் Twitter ‘மிரட்டும் அணுகுமுறை’ (intimidation tactics) என்று கூறியுள்ளது. மோதி அரசு கரோனா பரவலின் இரண்டாம் அலையை தடுக்க உரியன செய்யவில்லை என்றும், போதிய வைத்திய வசதிகளை செய்யவில்லை என்றும் மக்கள் Twitter மூலம் கருத்து தெரிவிப்பதை மோதி அரசு விரும்பவில்லை. மோதி அரசு அண்மையில் இவ்வகை […]

அயர்லாந்து இஸ்ரேல் உறவை துண்டிக்கும்?

அயர்லாந்து இஸ்ரேல் உறவை துண்டிக்கும்?

பலஸ்தீனர்களின் நிலத்தை தொடர்ந்தும் இஸ்ரேல் அபகரிப்பதால், அயர்லாந்து இஸ்ரேல் உடன் கொண்டுள்ள உறவை விரைவில் துண்டிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. அந்நாட்டின் எதிர்க்கட்சியான Sinn Fein சமர்ப்பித்த பிரேரணை ஒன்றை அரசு வாக்கெடுப்புக்கு விடவுள்ளது. அத்துடன் அரசும் அந்த பிரேரணையை ஆதரிக்கிறது. நேற்று செவ்வாய் அரசு இந்த தீர்மானத்தை தெரிவித்துள்ளது. விதிமுறைகளுக்கு அப்பால் இஸ்ரேல் 1967ம் ஆண்டு ஆக்கிரமித்த West Bank பகுதிகளை நடைமுறையில் தனதாக்குகிறது என்பதே அயர்லாந்தின் கூற்று. இதை அயர்லாந்தின் வெளியுறவு அமைச்சர்  ‘de facto […]

கொழும்புக்கு அருகே X-Press Pearl கப்பல் தீயில், பணியாளர் நீங்கினர்

கொழும்புக்கு அருகே X-Press Pearl கப்பல் தீயில், பணியாளர் நீங்கினர்

கொழும்பு துறைமுகத்துக்கு அருகே தீ பற்றிக்கொண்ட X-Press Pearl என்ற கொள்கலன் கப்பலில் இருந்து 25 பணியாளர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். எரியும் கப்பல் கொழும்பில் இருந்து சுமார் 9.5 கடல்மைல் தூரத்தில் உள்ளது. இந்த கப்பலில் கடந்த வியாழன் (20ம் திகதி) தீ பரவ ஆரம்பித்து இருந்தாலும், அதை கட்டுப்படுத்தியதாக முன்னர் கூறப்பட்டது. ஆனால் அந்த தீ மீண்டும் பரவ ஆரம்பித்து, தற்போது கப்பலோடிகளின் கூடங்களையும் (bridge) தாக்கும் நிலையில் உள்ளது. இந்த கப்பலில் 1,486 கொள்கலன்கள் […]

கரோனா விதிகளை மீறி விமானத்தில் திருமணம்

கரோனா விதிகளை மீறி விமானத்தில் திருமணம்

இந்தியாவை கரோனா கடுமையாக தாக்கும் இக்காலத்தில் அங்கு மக்கள் கூடல்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. தமிழ்நாட்டில் திருமணங்களுக்கு 50 பேர் மட்டுமே தற்போது அனுமதிக்கப்படுவர். இதை விரும்பாத இருவர் தமது திருமணத்தை 160 பேருடன் ஆகாயத்தில் செய்துள்ளனர். இவர்கள் SpiceJet விமான சேவைக்கு சொந்தமான Boeing 737 வகை விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, தமிழ்நாட்டு மதுரை விமான நிலையத்தில் மேலேறி, வானத்தில் திருமணத்தை செய்துள்ளனர். அந்த விமானம் பெங்களுர் வரை செல்ல வாடகைக்கு அமர்த்தப்பட்டு இருந்தது. […]

Ryanair விமானியை ஏமாற்றி பயணியை Belarus கைது

Ryanair விமானியை ஏமாற்றி பயணியை Belarus கைது

கிரேக்கத்தின் Athens நகரில் இருந்து Lithuania நாட்டின் Vilnius நகர் நோக்கி சென்ற Ryanair விமானத்தை (Flight FR4978) Belarus படையினர், அதில் குண்டு இருப்பதாக பொய் கூறி, தரை இறக்கி, அதில் பயணித்த பத்திரிகையாளர் ஒருவரை கைது செய்துள்ளனர். Belarus நாட்டின் MiG-29 யுத்த விமானம் ஒன்று 171 பயணிகளுடன் Belarus வழியே சென்ற மேற்படி Ryanair விமானத்தை Belarus தலைநகரில் உள்ள Minsk விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளது. ஆனால் அந்த விமானத்தில் குண்டுகள் […]

உலக சனத்தொகை தொடர்ந்தும் வீழ்ச்சி அடையும்

உலக சனத்தொகை தொடர்ந்தும் வீழ்ச்சி அடையும்

சில ஆபிரிக்க நாடுகளை தவிர ஏனைய நாடுகளில் சனத்தொகை தொடர்ந்தும் வீழ்ச்சி அடையும் என்று தரவுகள் கூறுகின்றன. 1900ம் ஆண்டுகளில் 1.6 பில்லியன் ஆக இருந்த உலக சனத்தொகை தற்போது சுமார் 7.8 பில்லியன் ஆக உள்ளது. அனால் இந்த தொகை வீழ்ச்சி அடைவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து உள்ளன. ஒருநாட்டின் சனத்தொகை மாறாது இருக்க சராசரியாக தாய் ஒன்று 2.1 குழந்தைகளை பெற வேண்டும். அதற்கும் குறைவான குழந்தைகளை தாய்மார் பெற்றால், சனத்தொகை குறைய ஆரம்பிக்கும். […]

போலி ஆவணங்கள் மூலம் BBC டயானாவை ஏமாற்றியது

போலி ஆவணங்கள் மூலம் BBC டயானாவை ஏமாற்றியது

1995ம் ஆண்டு BBC செய்தி சேவையின் Martin Bashir என்பவருக்கு டயானா வழங்கிய நேர்முகம் உலகையும், இராணி குடும்பத்தையும் உலுக்கி இருந்தது. BBC சேவையின் Panorama என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பான நேர்முகத்தில் டயானா சார்ள்ஸ்-Camilla தொடர்பு, இராணி குடும்பம் தன்மீது கொண்டுள்ள வெறுப்பு ஆகியனவற்றை கூறியிருந்தார். அந்த நிகழ்ச்சியை பிரித்தானியாவில் 23 மில்லியன் மக்கள் பார்வையிட்டு இருந்தனர். ஆனாலும் தற்போதைய விசாரணைகளின்படி BBC சேவையின் Martin Bashir என்பவரே டயானாவுக்கு இவ்வகை பொய்யான தரவுகளை வழங்கி உள்ளார் […]

இஸ்ரேல், பலஸ்தானில் மீண்டும் யுத்த நிறுத்தம்

இஸ்ரேல், பலஸ்தானில் மீண்டும் யுத்த நிறுத்தம்

கடந்த 11 தினங்களாக இடம்பெற்ற இஸ்ரேலுக்கும், பலஸ்த்தானுக்கும் இடையிலான யுத்தம் மீண்டும் நிறுத்தப்பட உள்ளது. உலக நாடுகளின் அழுத்தங்களை தொடர்ந்து நேற்று அமெரிக்க சனாதிபதி பைடெனும் யுத்தத்தை நிறுத்தும்படி கேட்டிருந்தார். அதன்படி இன்று கூடிய இஸ்ரேலின் அமைச்சரவை தாக்குதல்களை நிறுத்த இணங்கி உள்ளது. பலஸ்தீனர் தரப்பில் போராடிய ஹமாஸ்சும் தாக்குதல் நிறுத்தப்படும் என்று கூறியுள்ளது. யுத்த நிறுத்தம் உள்ளூர் நேரப்படி வெள்ளி காலை 2:00 மணிக்கு நடைமுறைக்கு வரும் என்றுள்ளது ஹமாஸ். இந்த 11 தின யுத்தத்துக்கு […]