கிரேக்கத்தின் Athens நகரில் இருந்து Lithuania நாட்டின் Vilnius நகர் நோக்கி சென்ற Ryanair விமானத்தை (Flight FR4978) Belarus படையினர், அதில் குண்டு இருப்பதாக பொய் கூறி, தரை இறக்கி, அதில் பயணித்த பத்திரிகையாளர் ஒருவரை கைது செய்துள்ளனர். Belarus நாட்டின் MiG-29 யுத்த விமானம் ஒன்று 171 பயணிகளுடன் Belarus வழியே சென்ற மேற்படி Ryanair விமானத்தை Belarus தலைநகரில் உள்ள Minsk விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளது. ஆனால் அந்த விமானத்தில் குண்டுகள் […]
சில ஆபிரிக்க நாடுகளை தவிர ஏனைய நாடுகளில் சனத்தொகை தொடர்ந்தும் வீழ்ச்சி அடையும் என்று தரவுகள் கூறுகின்றன. 1900ம் ஆண்டுகளில் 1.6 பில்லியன் ஆக இருந்த உலக சனத்தொகை தற்போது சுமார் 7.8 பில்லியன் ஆக உள்ளது. அனால் இந்த தொகை வீழ்ச்சி அடைவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து உள்ளன. ஒருநாட்டின் சனத்தொகை மாறாது இருக்க சராசரியாக தாய் ஒன்று 2.1 குழந்தைகளை பெற வேண்டும். அதற்கும் குறைவான குழந்தைகளை தாய்மார் பெற்றால், சனத்தொகை குறைய ஆரம்பிக்கும். […]
1995ம் ஆண்டு BBC செய்தி சேவையின் Martin Bashir என்பவருக்கு டயானா வழங்கிய நேர்முகம் உலகையும், இராணி குடும்பத்தையும் உலுக்கி இருந்தது. BBC சேவையின் Panorama என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பான நேர்முகத்தில் டயானா சார்ள்ஸ்-Camilla தொடர்பு, இராணி குடும்பம் தன்மீது கொண்டுள்ள வெறுப்பு ஆகியனவற்றை கூறியிருந்தார். அந்த நிகழ்ச்சியை பிரித்தானியாவில் 23 மில்லியன் மக்கள் பார்வையிட்டு இருந்தனர். ஆனாலும் தற்போதைய விசாரணைகளின்படி BBC சேவையின் Martin Bashir என்பவரே டயானாவுக்கு இவ்வகை பொய்யான தரவுகளை வழங்கி உள்ளார் […]
கடந்த 11 தினங்களாக இடம்பெற்ற இஸ்ரேலுக்கும், பலஸ்த்தானுக்கும் இடையிலான யுத்தம் மீண்டும் நிறுத்தப்பட உள்ளது. உலக நாடுகளின் அழுத்தங்களை தொடர்ந்து நேற்று அமெரிக்க சனாதிபதி பைடெனும் யுத்தத்தை நிறுத்தும்படி கேட்டிருந்தார். அதன்படி இன்று கூடிய இஸ்ரேலின் அமைச்சரவை தாக்குதல்களை நிறுத்த இணங்கி உள்ளது. பலஸ்தீனர் தரப்பில் போராடிய ஹமாஸ்சும் தாக்குதல் நிறுத்தப்படும் என்று கூறியுள்ளது. யுத்த நிறுத்தம் உள்ளூர் நேரப்படி வெள்ளி காலை 2:00 மணிக்கு நடைமுறைக்கு வரும் என்றுள்ளது ஹமாஸ். இந்த 11 தின யுத்தத்துக்கு […]
ஹாங் காங் நகருக்கு அண்மையில் உள்ள சீன நகரமான சென்ஜென்னில் (Shenzhen) உள்ள 79 மாடி கட்டிடம் அறியப்படாத காரணம் ஒன்றால் செவ்வாய் பிற்பகல் ஆட, அங்கிருந்த ஊழியர்கள் இறங்கி தப்பி ஓடியுள்ளனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட SEG Plaza என்ற இந்த மாடி ஏன் ஆடியது என்பது இதுவரை அறியப்படவில்லை. அப்பகுதியில் நிலநடுக்கம் எதுவும் செவ்வாய்க்கிழமை இடம்பெற்று இருக்கவில்லை. வானிலை அவதானிப்பு அங்கு சுமார் 27 km காற்றே வீசியதாக கூறியுள்ளது. அவ்வகை […]
ஜப்பானில் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளின் தடுப்பில் இருக்கையில் மரணித்த Ratnayake Liyanage Wishma Sandamali என்ற 33 வயது இலங்கை பெண்ணின் மரணத்தில் அவரின் உறவினர் சந்தேகம் கொண்டுள்ளனர். மேற்படி பெண் மார்ச் மாதம் 6ம் திகதி மரணித்தார். இலங்கை பட்டதாரியான இப்பெண் இலங்கையில் இருந்து மாணவ விசா மூலம் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் ஜப்பான் சென்று அங்கு வருமானத்துக்காக ஆங்கிலம் படிப்பிக்கவும் முனைந்துள்ளார். ஆரம்பத்தில் விசா விதிமுறைப்படி Tokyo நகருக்கு அண்மையில் உள்ள Chiba […]
தற்போதைய அமெரிக்க சனாதிபதி பைடெனுக்கும், முன்னாள் சனாதிபதி ரம்புக்கும் இடையில் ஏது வித்தியாசம் என்று பைடெனின் Democratic கட்சி உறுப்பினர்கள் சிலர் தற்போது வினாவுகின்றனர். இஸ்ரேலுக்கும், பலஸ்தீனர்களுக்கும் இடையில் நிகழும் மோதல்களை கண்டும் காணாமல் இருக்கும் பைடேனின் போக்கே இங்கு கண்டிக்கப்படுகிறது. பல்லாண்டு காலமாக மேற்கு நாடுகளின் அரசியல்வாதிகள் இஸ்ரேல்-பலஸ்தீன் மோதல்கள் இடம்பெறும்போது இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாக்கும் உரிமை உண்டு என்று மட்டும் கூறுவார்கள். ஆனால் பலஸ்தீனர்களுக்கு தம்மை பாதுகாக்கும் உரிமை உண்டு என்று அமெரிக்கா, கனடா, […]
அரசுகள் தமது பெரும் திட்டங்களுக்கு bond கடன் மூலம் முதலீடு பெறும். அந்த bond கடனுக்கு ஆண்டுதோறும் அறிவிக்கப்பட்ட வட்டியும், bond முதிர்வடையும் காலத்தில் முதலையும் அரசு மீள செலுத்தும். கடந்த சில காலங்களாக இலங்கை முதிர்வடையும் bond முதலீடுகளையும், வட்டிகளையும் மீள செலுத்த பணம் இன்றி அவதிப்பட்டது. இந்நிலைக்கு அரசின் தவறான திட்டங்கள், கரோனா தோற்றுவித்த பாதிப்பு போன்ற பல காரணங்கள் ஆகிய. அதனால் இலங்கை அரசின் bond ஆசியாவிலேயே விரும்பத்தகாத bond ஆகியது. அந்நிலையிலேயே […]
இன்று சனிக்கிழமை செவ்வாய் கோளத்தில் சீனா தனது கலம் ஒன்றை வெற்றிகரமாக இறக்கி உள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து செவ்வாயில் கலம் ஒன்றை தரையிறக்கிய நாடாக சீனா அமைகிறது. கடந்த ஆண்டு ஜூலை 23ம் திகதி பூமியில் இருந்து சென்ற இந்த rover, 295 தினங்களின் பின் செவ்வாயை அடைந்து உள்ளது. செவ்வாய் கோளத்தில் மோதி விழுவதன் மூலம் கலங்களை அனுப்பாது, பத்திரமாக இறக்குவது மிகவும் சிரமமானது. வரும் காலங்களில் மனிதரை அங்கு அனுப்புவதற்கு இந்த அறிவு அவசியம். […]
உலக வங்கி (World Bank) மேலதிகமாக வழங்கும் $80.5 மில்லியன் பணத்தில் இலங்கை மேலும் கரோனா தடுப்பு ஊசிகளை கொள்வனவு செய்யவுள்ளது. உலக வங்கியின் COVID-19 Emergency Response and Health System Preparedness என்ற திட்டத்தின் கீழான இந்த பணத்தை பயன்படுத்தி உலக வங்கி அங்கீகரித்த தடுப்பு மருந்துகளை மருகே இலங்கை கொள்வனவு செய்ய முடியும். இந்த் திட்டத்தில் இதுவரை மொத்தம் $298.07 மில்லியன் வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 925,242 பேருக்கு இலங்கையில் முதலாவது AstraZeneca […]