உலகின் மிகப்பெரிய இறைச்சி நிறுவனமான JBS மீதும் இணையம் மூலமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அதனால் இந்த நிறுவனத்தின் அஸ்ரேலிய, அமெரிக்க, கனடிய தொழிற்சாலை பணிகள் இடைநிறுத்தப்பட்டு உள்ளன. மொத்தம் 15 நாடுகளில் இயங்கும் இந்த நிறுவனத்திடம் உள்ள 150 தொழிற்சாலைகளில் சுமார் 150,000 பேர் பணியாற்றுகின்றனர். இந்த தாக்குதலையும் ரஷ்யாவை தளமாக கொண்ட குழு ஒன்றே செய்துள்ளதாக கூறப்படுகிறது. Ransomware software மூலம் தாக்கும் இந்த குழு JBS நிறுவனத்தின் கணணிகளின் தரவுகள், ஆவணங்கள் அனைத்தையும் encrypt […]
ரம்ப் ஆட்சி காலத்திலும் , அதன் பின்னரான காலத்திலும் அமெரிக்காவில் சீனர்கள் மீதும், சீனர்கள் போல் தோற்றமளிப்போர் மீதும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு சீன பெண் போலீசார் மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ (San Francisco) நகரில் ஒருவர் மக்களை வீதியில் மிரட்டுவதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அதை விசாரிக்க அண்மையில் இருந்த போலீசார் ஒருவர் விரைந்துள்ளார். அவர் ஒரு சீன பெண். மக்களை மிரட்டியவரை போலீசார் […]
சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் திடமான வெற்றி இன்றிய நிலையில் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற ஆரம்பித்தாலும், சில படைகள் பாகிஸ்தான் தளம் ஒன்றில் நிலைகொள்ளும் என்று கூறப்படுகிறது. அத்துடன் நிலத்தால் சூழப்பட்ட (landlocked) ஆப்கானிஸ்தானில் உள்ள தலபானை தாக்க பாகிஸ்தானின் வான் வழியை அமெரிக்கா தொடர்ந்தும் பயன்படுத்தும். இந்த உண்மையை பாகிஸ்தான் அரசு தன் மக்களுக்கு தெரிவிக்காத நிலையில், அமெரிக்காவின் செனட் குழு ஒன்றுக்கு வழங்கிய அமர்வு ஒன்றில் இந்த உண்மையை வெளியிடப்பட்டு உள்ளது. […]
அண்மையில் யெமென் மீனவர் ஒருவர் ஏய்டென் குடாவுள் (Gulf of Aden) மரணித்த திமிங்கிலம் ஒன்று மீதப்பதாக ஏனைய மீனவர்க்கு கூறியுள்ளார். உடனே மொத்தம் 35 மீனவர் மரணித்த திமிங்கிலத்தை ஆராய சென்றனர். Sperm whale வகையான அந்த திமிங்கிலத்துள் அம்பர்கிரீஸ் (ambergris) என்ற பதார்த்தம் இருக்கலாம் என்ற எண்ணத்தில் திமிங்கிலத்தை கரைக்கு இழுத்து வெட்டினர். அப்போது அதில் சுமார் $1.5 மில்லியன் பெறுமதியான அம்பர்கிரீஸ் இருந்தது அறியப்பட்டது. அந்த பணத்தை 35 மீனவரும் பகிர்ந்து, அவர்கள் […]
ஒவ்வொரு குடும்பமும் பெறக்கூடிய குழந்தைகளின் அதிக எண்ணிக்கையை சீனா 3 ஆக திங்கள்கிழமை அதிகரித்து உள்ளது. அதிகரித்து வந்திருந்த சனத்தொகையை குறைக்க 1979ம் ஆண்டு முதல் குடும்பம் ஒரு குழந்தை மட்டுமே பெறலாம் என்று சீனா சட்டம் இயற்றி இருந்தது. அத்துடன் மேலதிக குழந்தைகள் பெறுவோருக்கு தண்டனைகள் வழங்கி, அரச சலுகைகளையும் நீக்கி இருந்தது. ஆனால் செல்வந்தம் வளர்ந்த சீனாவில் சனத்தொகை வேகமாக குறைய ஆரம்பித்தது. அதனால் 2016ம் ஆண்டு இரு குழந்தைகள் பெறலாம் என்று சீனா […]
ஜேர்மனியின் அதிபர் அங்கேலா மெர்கலுடன் (Angela Merkel) முன்னாள் அமெரிக்க சனாதிபதி ஒபாமா நட்பான உறவை கொண்டிருந்தது போல் இருந்தாலும் ஒபாமா காலத்தில் அங்கேலா மீது அமெரிக்காவின் National Security Agency (NSA) உளவுபார்த்துள்ளது. இந்த உளவுக்கு அமெரிக்காவின் NSA டென்மார்க்கின் FE என்ற உளவு அமைப்பை பயன்படுத்தி உள்ளது. இந்த உண்மையை டென்மார்க்கின் செய்தி நிறுவனமான Danmarks Radio வெளியிட்டு உள்ளது. இந்த ஆய்வுக்கு சுவிஸின் SVT, நோர்வேயின் NRK, ஜெர்மனியின் NDR, WDR, Suddeutsche […]
இத்தாலியில் வாழ்ந்து வந்த பாகிஸ்தான் குடும்பம் ஒன்று Saman Abbas என்ற அவர்களின் 18 வயது மகளை கொலை செய்திருக்கலாம் என்று இத்தாலி போலீசார் நம்புகின்றனர். பெற்றார் மகளுக்கு பேச்சு திருமணம் ஒன்றை செய்வதை மகள் மறுத்ததாலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பேச்சு திருமணத்தை மறுத்த மகள் இத்தாலியின் சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவியுடன் பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு கடந்த நவம்பர் மாதம் சென்றிருந்தாள். ஆனால் ஏப்ரல் மாதம் 11ம் திகதி அவள் மீண்டும் பெற்றோரிடம் வாழ […]
ஆபிரிக்க நாடான கொங்கோவில் (Democratic Republic of the Congo) பெரும் அழிவுகளை தரக்கூடிய வாவி வெடிப்பு (limnic eruption) ஒன்று நிகழக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. கொங்கோ நாட்டில், Rwanda எல்லையோரம் உள்ள Lake Kivu என்ற வாவியே இந்த வெடிப்புக்கு இலக்கு ஆகாலம் என்று கூறப்படுகிறது. இந்த வாவிக்கு அருகே உள்ள Nyiragongo என்ற எரிமலை தற்போது தீ குழம்பை (lava) வெளியே தள்ளுகிறது. அந்த குழம்பு ஏற்கனவே அருகில் உள்ள Goma என்ற நகரில் […]
இன்று சனிக்கிழமை 56 வயதுடைய பிரித்தானிய பிரதமர் Boris Johnson 33 வயதுடைய Carrie Symonds என்பவரை இரகசியமாக திருமணம் செய்துள்ளார். கரோனா காரணமாக தற்போது லண்டன் நகர் திருமணங்களில் ஆகக்கூடியது 30 பேர் மட்டுமே பங்குகொள்ள முடியும். Roman Catholic Westminster Cathedral தேவாலயத்தில் சில குடும்பத்தினர் முன்னிலையில் இந்த திருமணம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. 2020ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இவர்கள், பிள்ளை ஒன்று பிறக்க இருந்த நிலையில், தமது தொடர்பை அறிவித்து இருந்தனர். இவர்களுக்கு […]
நகை வர்த்தகர்கள் போல் நடித்து Nirav Modi என்பவரும், Mehul Choksi என்ற அவரின் மாமனாரும் $2 பில்லியன் பணத்தை இந்தியாவின் Punjab National Bank என்ற வங்கியில் இருந்து திருட்டுத்தனமாக பெற்று தப்பி ஓடியிருந்தனர். அந்த இருவருள் மாமனார் Choksi புதன்கிழமை டொமினிக்காவில் (Dominica) வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார். 2018ம் ஆண்டு ஜனவரி மாதம், இவர்களின் திருட்டு அம்பலத்துக்கு வர சில தினங்கள் இருக்கையில், இருவரும் இந்தியாவை விட்டு தப்பியோடி இருந்தனர். Modi பிரித்தானியா […]