இத்தாலியில் வாழ்ந்து வந்த பாகிஸ்தான் குடும்பம் ஒன்று Saman Abbas என்ற அவர்களின் 18 வயது மகளை கொலை செய்திருக்கலாம் என்று இத்தாலி போலீசார் நம்புகின்றனர். பெற்றார் மகளுக்கு பேச்சு திருமணம் ஒன்றை செய்வதை மகள் மறுத்ததாலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பேச்சு திருமணத்தை மறுத்த மகள் இத்தாலியின் சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவியுடன் பாதுகாப்பான இடம் ஒன்றுக்கு கடந்த நவம்பர் மாதம் சென்றிருந்தாள். ஆனால் ஏப்ரல் மாதம் 11ம் திகதி அவள் மீண்டும் பெற்றோரிடம் வாழ […]
ஆபிரிக்க நாடான கொங்கோவில் (Democratic Republic of the Congo) பெரும் அழிவுகளை தரக்கூடிய வாவி வெடிப்பு (limnic eruption) ஒன்று நிகழக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. கொங்கோ நாட்டில், Rwanda எல்லையோரம் உள்ள Lake Kivu என்ற வாவியே இந்த வெடிப்புக்கு இலக்கு ஆகாலம் என்று கூறப்படுகிறது. இந்த வாவிக்கு அருகே உள்ள Nyiragongo என்ற எரிமலை தற்போது தீ குழம்பை (lava) வெளியே தள்ளுகிறது. அந்த குழம்பு ஏற்கனவே அருகில் உள்ள Goma என்ற நகரில் […]
இன்று சனிக்கிழமை 56 வயதுடைய பிரித்தானிய பிரதமர் Boris Johnson 33 வயதுடைய Carrie Symonds என்பவரை இரகசியமாக திருமணம் செய்துள்ளார். கரோனா காரணமாக தற்போது லண்டன் நகர் திருமணங்களில் ஆகக்கூடியது 30 பேர் மட்டுமே பங்குகொள்ள முடியும். Roman Catholic Westminster Cathedral தேவாலயத்தில் சில குடும்பத்தினர் முன்னிலையில் இந்த திருமணம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. 2020ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இவர்கள், பிள்ளை ஒன்று பிறக்க இருந்த நிலையில், தமது தொடர்பை அறிவித்து இருந்தனர். இவர்களுக்கு […]
நகை வர்த்தகர்கள் போல் நடித்து Nirav Modi என்பவரும், Mehul Choksi என்ற அவரின் மாமனாரும் $2 பில்லியன் பணத்தை இந்தியாவின் Punjab National Bank என்ற வங்கியில் இருந்து திருட்டுத்தனமாக பெற்று தப்பி ஓடியிருந்தனர். அந்த இருவருள் மாமனார் Choksi புதன்கிழமை டொமினிக்காவில் (Dominica) வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார். 2018ம் ஆண்டு ஜனவரி மாதம், இவர்களின் திருட்டு அம்பலத்துக்கு வர சில தினங்கள் இருக்கையில், இருவரும் இந்தியாவை விட்டு தப்பியோடி இருந்தனர். Modi பிரித்தானியா […]
இலங்கையில் இருந்து அமெரிக்கா செல்ல விரும்புவோரை Haiti என்ற நாட்டுக்கு எடுத்து, அங்கிருந்து Turks and Caicos Islands (TCI) க்கு நகர்த்தி, அங்கிருந்து Bahamas ஊடாக அமெரிக்காவுக்கு அழைத்து செல்ல முயன்ற மோகன் என்ற ஸ்ரீ கஜமுகன் செல்லையா என்பவரே TCI நீதிமன்றால் தண்டிக்கப்படுகிறார். Toronto வாசியான மோகன் அகதிகளை சிறு படகுகள் மூலம் கடத்தும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இவர் 2019ம் ஆண்டு ஜூலை 1ம் திகதி முதல் அக்டோபர் 10ம் திகதி வரை அகதிகளை […]
20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஜெர்மனி நமீபியாவில் யுத்த குற்றம் (genocide) செய்தது என்று ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் Heiko Maas இன்று வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொண்டுள்ளார். அத்துடன் ஜெர்மனி $1.34 பில்லியன் பணத்தை இந்த மக்களுக்கு செலவிடவும் முன்வந்துள்ளது. ஆபிரிக்காவின் Herero மற்றும் Nama மக்கள் மீது, தற்போதைய நமீபியா (Namibia), அவர்களை ஆக்கிரமித்து இருந்த ஜெர்மனி 1904 முதல் 1908 வரையான காலத்தில் யுத்த குற்றங்களை செய்திருந்தது. 1884ம் ஆண்டு முதல் 1915ம் ஆண்டுவரை இப்பகுதி […]
கரோனா தொடர்பான மக்களின் பதிவுகள் காரணமாக மோதி அரசுக்கும், அமெரிக்காவின் Twitter நிறுவனத்துக்கும் இடையில் மோதல் நிலை உருவாகியுள்ளது. Twitter மீதான மோதி அரசின் அழுத்தத்தை இன்று வியாழன் Twitter ‘மிரட்டும் அணுகுமுறை’ (intimidation tactics) என்று கூறியுள்ளது. மோதி அரசு கரோனா பரவலின் இரண்டாம் அலையை தடுக்க உரியன செய்யவில்லை என்றும், போதிய வைத்திய வசதிகளை செய்யவில்லை என்றும் மக்கள் Twitter மூலம் கருத்து தெரிவிப்பதை மோதி அரசு விரும்பவில்லை. மோதி அரசு அண்மையில் இவ்வகை […]
பலஸ்தீனர்களின் நிலத்தை தொடர்ந்தும் இஸ்ரேல் அபகரிப்பதால், அயர்லாந்து இஸ்ரேல் உடன் கொண்டுள்ள உறவை விரைவில் துண்டிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. அந்நாட்டின் எதிர்க்கட்சியான Sinn Fein சமர்ப்பித்த பிரேரணை ஒன்றை அரசு வாக்கெடுப்புக்கு விடவுள்ளது. அத்துடன் அரசும் அந்த பிரேரணையை ஆதரிக்கிறது. நேற்று செவ்வாய் அரசு இந்த தீர்மானத்தை தெரிவித்துள்ளது. விதிமுறைகளுக்கு அப்பால் இஸ்ரேல் 1967ம் ஆண்டு ஆக்கிரமித்த West Bank பகுதிகளை நடைமுறையில் தனதாக்குகிறது என்பதே அயர்லாந்தின் கூற்று. இதை அயர்லாந்தின் வெளியுறவு அமைச்சர் ‘de facto […]
கொழும்பு துறைமுகத்துக்கு அருகே தீ பற்றிக்கொண்ட X-Press Pearl என்ற கொள்கலன் கப்பலில் இருந்து 25 பணியாளர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். எரியும் கப்பல் கொழும்பில் இருந்து சுமார் 9.5 கடல்மைல் தூரத்தில் உள்ளது. இந்த கப்பலில் கடந்த வியாழன் (20ம் திகதி) தீ பரவ ஆரம்பித்து இருந்தாலும், அதை கட்டுப்படுத்தியதாக முன்னர் கூறப்பட்டது. ஆனால் அந்த தீ மீண்டும் பரவ ஆரம்பித்து, தற்போது கப்பலோடிகளின் கூடங்களையும் (bridge) தாக்கும் நிலையில் உள்ளது. இந்த கப்பலில் 1,486 கொள்கலன்கள் […]
இந்தியாவை கரோனா கடுமையாக தாக்கும் இக்காலத்தில் அங்கு மக்கள் கூடல்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. தமிழ்நாட்டில் திருமணங்களுக்கு 50 பேர் மட்டுமே தற்போது அனுமதிக்கப்படுவர். இதை விரும்பாத இருவர் தமது திருமணத்தை 160 பேருடன் ஆகாயத்தில் செய்துள்ளனர். இவர்கள் SpiceJet விமான சேவைக்கு சொந்தமான Boeing 737 வகை விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி, தமிழ்நாட்டு மதுரை விமான நிலையத்தில் மேலேறி, வானத்தில் திருமணத்தை செய்துள்ளனர். அந்த விமானம் பெங்களுர் வரை செல்ல வாடகைக்கு அமர்த்தப்பட்டு இருந்தது. […]