சுமார் 64,000 மக்கள் வாழும் இலச்சத்தீவில் (Lakshadweep) கடந்த டிசம்பர் மாதம்வரை கரோனா தோற்றாளர் எவரும் இருந்திருக்கவில்லை. ஆனால் தற்போது அங்கு சுமார் 10% மக்களுக்கு கரோனா தொற்றி உள்ளது. அதற்கு பிரதமர் மோதியால் அந்த யூனியன் பிரதேசத்துக்கு அனுப்பப்பட்ட Praful Khoda Patel என்ற உயர் அதிகாரியே காரணம் என்று கூறப்படுகிறது. டிசம்பர் வரை அங்குள்ள 36 தீவுக்குகளுக்கு செல்லும் அனைவருக்கும் கரோனா தனிமைப்படுத்தல் முறைமை இருந்து வந்தது. ஆனால் டிசம்பர் மாதம் 2ம் திகதி […]
உலகத்தின் இரண்டாவது பெரிய நீர்மின் அணைக்கட்டான சீனாவில் உள்ள Baihetan நீர்மின் அணைக்கட்டு ஜூலை 1ம் திகதி முதல் மின்னை உற்பத்தி செய்யவுள்ளது. இதில் உள்ள 16 மின் பிறப்பாக்கிகள் மொத்தம் 16,000 மெகாவாட் (MW) மின்னை உற்பத்தி செய்யும். உலகத்தில் முதலாவது பெரிய நீர்மின் அணைக்கட்டான சீனாவின் Three Gorges Dam மொத்தம் 22,500 MW மின்னை உற்பத்தி செய்கிறது. சுமார் $6.3 பில்லியன் செலவில் அமைக்கப்பட்ட Baihetan அணை 289 மீட்டர் உயரம் கொண்டது. […]
கடந்த 12 ஆண்டுகளாக இஸ்ரேலில் ஆட்சி செய்த நெட்டன்யாகு (Benjamin Netanyahu) தனது பிரதமர் பதவியை இழக்கும் நிலையில் உள்ளார். இவரை பதவியில் இருந்து நீக்கும் ஓரே கொள்கையில் இடதுசாரி, வலதுசாரி, நடுநிலை மற்றும் அரபு கட்சிகள் இணைந்தே நெட்டன்யாகுவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் இஸ்ரேலில் 4 தேர்தல்கள் இடம்பெற்றன. ஆனால் ஒரு கட்சியும் ஆட்சி அமைக்க தேவையான ஆசனங்களை பெற்று இருக்கவில்லை. அதனால் நெட்டன்யாகுவே தொடர்ந்தும் இடைக்கால பிரதமர் […]
கடந்த 10 தினங்களாக தீக்கு இரையாகி வந்திருந்த X-Press Pearl என்ற 186 மீட்டர் நீள கப்பல் கடலுள் தாழ ஆரம்பித்து உள்ளது. தாழும் இந்த கப்பலில் இருந்து வெறியேறும் நச்சு எண்ணெய்கள் இப்பகுதி கடல் வாழ் உயிரினத்தையும், கரையோரத்தையும் கடுமையாக பாதிக்கும். இந்த கப்பல் கொழும்புக்கும், நீர்கொழும்புக்கும் இடைப்பட்ட கடலில் தாழ்கிறது. இதை நாடுகடலுக்கு இழுக்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. இந்த கப்பலில் உள்ள 25 தொன் nitric அமிலமும், மற்றைய இரசாயனங்களும் இப்பகுதி கடலுக்கு நீண்டகால […]
உலகின் மிகப்பெரிய இறைச்சி நிறுவனமான JBS மீதும் இணையம் மூலமான தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அதனால் இந்த நிறுவனத்தின் அஸ்ரேலிய, அமெரிக்க, கனடிய தொழிற்சாலை பணிகள் இடைநிறுத்தப்பட்டு உள்ளன. மொத்தம் 15 நாடுகளில் இயங்கும் இந்த நிறுவனத்திடம் உள்ள 150 தொழிற்சாலைகளில் சுமார் 150,000 பேர் பணியாற்றுகின்றனர். இந்த தாக்குதலையும் ரஷ்யாவை தளமாக கொண்ட குழு ஒன்றே செய்துள்ளதாக கூறப்படுகிறது. Ransomware software மூலம் தாக்கும் இந்த குழு JBS நிறுவனத்தின் கணணிகளின் தரவுகள், ஆவணங்கள் அனைத்தையும் encrypt […]
ரம்ப் ஆட்சி காலத்திலும் , அதன் பின்னரான காலத்திலும் அமெரிக்காவில் சீனர்கள் மீதும், சீனர்கள் போல் தோற்றமளிப்போர் மீதும் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. ஆனால் இன்று செவ்வாய்க்கிழமை ஒரு சீன பெண் போலீசார் மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ (San Francisco) நகரில் ஒருவர் மக்களை வீதியில் மிரட்டுவதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அதை விசாரிக்க அண்மையில் இருந்த போலீசார் ஒருவர் விரைந்துள்ளார். அவர் ஒரு சீன பெண். மக்களை மிரட்டியவரை போலீசார் […]
சுமார் 20 ஆண்டுகளுக்கு பின் திடமான வெற்றி இன்றிய நிலையில் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற ஆரம்பித்தாலும், சில படைகள் பாகிஸ்தான் தளம் ஒன்றில் நிலைகொள்ளும் என்று கூறப்படுகிறது. அத்துடன் நிலத்தால் சூழப்பட்ட (landlocked) ஆப்கானிஸ்தானில் உள்ள தலபானை தாக்க பாகிஸ்தானின் வான் வழியை அமெரிக்கா தொடர்ந்தும் பயன்படுத்தும். இந்த உண்மையை பாகிஸ்தான் அரசு தன் மக்களுக்கு தெரிவிக்காத நிலையில், அமெரிக்காவின் செனட் குழு ஒன்றுக்கு வழங்கிய அமர்வு ஒன்றில் இந்த உண்மையை வெளியிடப்பட்டு உள்ளது. […]
அண்மையில் யெமென் மீனவர் ஒருவர் ஏய்டென் குடாவுள் (Gulf of Aden) மரணித்த திமிங்கிலம் ஒன்று மீதப்பதாக ஏனைய மீனவர்க்கு கூறியுள்ளார். உடனே மொத்தம் 35 மீனவர் மரணித்த திமிங்கிலத்தை ஆராய சென்றனர். Sperm whale வகையான அந்த திமிங்கிலத்துள் அம்பர்கிரீஸ் (ambergris) என்ற பதார்த்தம் இருக்கலாம் என்ற எண்ணத்தில் திமிங்கிலத்தை கரைக்கு இழுத்து வெட்டினர். அப்போது அதில் சுமார் $1.5 மில்லியன் பெறுமதியான அம்பர்கிரீஸ் இருந்தது அறியப்பட்டது. அந்த பணத்தை 35 மீனவரும் பகிர்ந்து, அவர்கள் […]
ஒவ்வொரு குடும்பமும் பெறக்கூடிய குழந்தைகளின் அதிக எண்ணிக்கையை சீனா 3 ஆக திங்கள்கிழமை அதிகரித்து உள்ளது. அதிகரித்து வந்திருந்த சனத்தொகையை குறைக்க 1979ம் ஆண்டு முதல் குடும்பம் ஒரு குழந்தை மட்டுமே பெறலாம் என்று சீனா சட்டம் இயற்றி இருந்தது. அத்துடன் மேலதிக குழந்தைகள் பெறுவோருக்கு தண்டனைகள் வழங்கி, அரச சலுகைகளையும் நீக்கி இருந்தது. ஆனால் செல்வந்தம் வளர்ந்த சீனாவில் சனத்தொகை வேகமாக குறைய ஆரம்பித்தது. அதனால் 2016ம் ஆண்டு இரு குழந்தைகள் பெறலாம் என்று சீனா […]
ஜேர்மனியின் அதிபர் அங்கேலா மெர்கலுடன் (Angela Merkel) முன்னாள் அமெரிக்க சனாதிபதி ஒபாமா நட்பான உறவை கொண்டிருந்தது போல் இருந்தாலும் ஒபாமா காலத்தில் அங்கேலா மீது அமெரிக்காவின் National Security Agency (NSA) உளவுபார்த்துள்ளது. இந்த உளவுக்கு அமெரிக்காவின் NSA டென்மார்க்கின் FE என்ற உளவு அமைப்பை பயன்படுத்தி உள்ளது. இந்த உண்மையை டென்மார்க்கின் செய்தி நிறுவனமான Danmarks Radio வெளியிட்டு உள்ளது. இந்த ஆய்வுக்கு சுவிஸின் SVT, நோர்வேயின் NRK, ஜெர்மனியின் NDR, WDR, Suddeutsche […]