தென்னாபிரிக்காவின் முன்னாள் சனாதிபதி சூமா (Jacob Zuma, வயது 79) இன்று புதன் மாலை சிறை அதிகாரிகளிடம் சரணடைந்து உள்ளார். சரணடைந்த இவர் தனது 15 மாத கால சிறை தண்டனையை ஆரம்பிப்பார். இவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் வழக்குக்கு ஒன்று கடந்த கிழமை இடம்பெற்றது. ஆனால் சூமா அந்த வழக்கு விசாரணைக்கு செல்லவில்லை. அதனால் அவர் நீதிமன்றத்தை உதாசீனம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. தண்டனைப்படி சூமா ஞாயிறு […]
இன்று புதன்கிழமை இந்திய பிரதமர் மோதி தனது அமைச்சரவையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். அமைச்சரவையின் அளவும் ஊதி பெருத்துள்ளது. இதுவரை 52 அமைச்சர்களை மட்டுமே கொண்டிருந்த அமைச்சரவை தற்போது 77 அமைச்சர்களை கொண்டதாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதாவது புதிதாக 25 அமைச்சுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அது சுமார் 48% அதிகரிப்பு. அத்துடன் சுமார் 12 பழைய அமைச்சர்கள் விரட்டப்பட்டு, புதியவர்கள் அமைச்சர்கள் ஆக்கப்பட்டும் உள்ளனர். அதனால் புதிய அமைச்சரவையில் சுமார் 37 பேர் புதியவர்கள் ஆக […]
அண்மையில் அமெரிக்காவின் கிழக்கே உள்ள Florida மாநிலத்தில் Surfside என்ற குடியிருப்பு மாடி உடைந்து வீழ்ந்ததால் 28 பேர் மரணமாகியும், 117 பேர் தற்போதும் இருப்பிடம் அறியப்படாதும் உள்ளனர். அதேவேளை அமெரிக்காவின் மேற்கே உள்ள California மாநிலத்து San Francisco நகரிலும் உயர்ந்த மாடி ஒன்று குடியிருப்போரை பயமுறுத்துகிறது. 2009ம் ஆண்டு கட்டப்பட்ட Millennium Tower என்ற 58 அடுக்குகளையும், 605 அடி உயரத்தையும் கொண்ட குடியிருப்பு மாடி இதுவரை 18 அங்குலத்தால் நிலத்துள் புதைந்து உள்ளது. […]
அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பின் தமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்று கருதும் சுமார் 1,600 ஆப்கானிஸ்தான் படையினர் ரெஜிகிஸ்தான் (Tajikistan) என்ற வடகிழக்கு எல்லையோர நாட்டுக்கு தப்பி ஓடியுள்ளனர். உள்ளூர் நேரப்படி திங்கள் காலையும் சிலர் தமது நாட்டுக்கு வந்துள்ளதாக Tajikistan National Security Committee கூறியுள்ளது. வேறு சிலர் பாகிஸ்தான், உஸ்பேக்கிஸ்தான் (Uzbekistan) ஆகிய எல்லையோர நாடுகளுக்கு ஓடி உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக தலபானுடன் போராடி, முழுமையான வெற்றி பெற […]
பிலிப்பீன் விமான படைக்கு சொந்தமான Lockheed C-130 வகை விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் குறைந்தது 50 பேர் பலியாகியும், சிலர் காயமடைந்தும் உள்ளனர். நிலத்தில் இருந்த 3 பொதுமக்களும் பலியானோருள் அடங்குவர். Hercules என்றழைக்கப்படும் மேற்படி விமானம் தரை இறங்குவதற்கு பிந்தியதால், மிகுதி ஓடுபாதை போதுமானதாக இல்லாமலிருக்கும் என்ற காரணத்தால் விமானி மீண்டும் அந்த விமானத்தை மேலே ஏற்ற முயன்றுள்ளார். ஆனால் போதிய உந்தம் இல்லாத காரணத்தால் விமானம் ஊடுபாதைக்கு அப்பால் சென்று மரங்களுடன் மோதி […]
இந்திய பாடசாலைகளில் ஆங்கிலம் மூலம் கல்வி கற்போர் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது என்று அறிய வைக்கிறது 2019/2020 கல்வி ஆண்டுக்கான UDISE (Unified District Information System for Education) என்ற அமைப்பின் தரவுகள். தேசிய அளவில் ஹிந்தி மூலம் கற்போர் அளவு 42% ஆக இருந்தாலும், ஆங்கிலம் மூலம் கற்போர் அளவு 25% க்கும் அதிகமாக அதிகரித்து உள்ளது. பெரும்பாலான தெற்கு மாநிலங்களிலும், புஞ்சாப், ஹரியானா, டெல்லி போன்ற மாநிலங்களிலும் ஆங்கிலம் மூலம் […]
இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் ஓரு பாரிய இணைய தாக்குதல் (ransomware attack) இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை தளமாக கொண்ட Kaseya என்ற நிறுவனத்தின் VSA என்ற software ஒன்றில் உள்ள குறைபாட்டை அறிந்த தாக்குதல் குழு அந்த software ஐ பயன்படுத்தும் நிறுவனங்களை தாக்கி உள்ளது. உலக அளவில் Kaseya நிறுவனத்தின் software களை சுமார் 40,000 சிறிய, பெரிய நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இந்த குழுவே அண்மையில் JBS Foods என்ற இறைச்சி விற்பனை நிறுவனத்தை […]
கனடாவின் Manitoba மாகாணத்து தலைநகரான வின்னிபெக்கில் (Winnipeg) இருந்த Queen Victoria சிலை உடைக்கப்பட்டு, அதன் தலையும் துண்டாடி Assiniboine என்ற ஆற்றுள் வீசப்பட்டு உள்ளது. அண்மை காலங்களில் கனடாவில் கண்டெடுக்கப்படும் பூர்வீக குடி சிறுவர்களின் புதைகுழிகளே மேற்படி சிலை உடைப்புக்கும், பல கிறிஸ்தவ தேவாலய தீயிடல்களுக்கும் காரணம் என்று நம்பப்படுகிறது. மேற்படி சிலை Manitoba மாகாணத்து சட்டசபைக்கு முன்னே அமைந்திருந்தது. சிலை உடைக்கப்பட்ட வேளையில் போலீசார் அதை தடுக்க முனைந்திருக்கவில்லை. சிலையின் தலையை வெட்டி ஆற்றில் […]
மக்கள் கரோனா தடுப்பு மருந்துக்கு அவதிப்படும் வேளையில் சில சமூக விரோதிகள் பொய்யான தடுப்பு மருந்துகளை ஏற்றி மக்களை ஆபத்தில் தள்ளி, பெரும் பணமும் உழைக்கின்றனர். சில பொய் ஊசி ஏற்றுவோர் கைதும் செய்யப்பட்டு உள்ளனர். Debanjan Deb என்ற 28 வயது கொண்ட ஒருவர் தன்னை ஒரு அரச ஊழியர் என்று கூறி சுமார் 2,000 பேருக்கு பொய்யான தடுப்பு மருந்துகளை ஏற்றி உள்ளார். அதில் ஒருவர் பா. ஜ. அரசியல்வாதி. மும்பாயில் மேலும் 2,053 […]
கனடாவின் British Columbia மாநிலத்தில் மேலும் 182 அடையாளம் இல்லாத புதைகுழிகள் காணப்பட்டுள்ளன. இன்றைய அறிவிப்புக்கு உட்பட்ட புதைகுழிகள் Ktunaxa Nation என்று அழைக்கப்படும் பூர்வீக குடியினருக்கு சொந்தமானவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த மயானம் Cranbrook என்ற இடத்தில் உள்ளது. 1912ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை இவ்விடத்தில் இயங்கிய St. Eugene’s Mission School என்ற பூர்வீக குடியினருக்கான பாடசாலையையும் (residential school) Catholic Church இயக்கி இருந்தது. அடையாளம் இன்றி இங்கு […]