கடுமையான 996 கலாச்சாரத்தை கைவிட சீனா அழைப்பு

கடுமையான 996 கலாச்சாரத்தை கைவிட சீனா அழைப்பு

சீனாவின் தொழில்நுட்பம் வேகமாக வளர ஒரு காரணம் அங்குள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழிர்களை காலை 9:00 மணி முதல் மாலை 9:00 மணி வரை, திங்கள் முதல் சனி வரையிலான 6 தினங்களும் கடமையாற்ற எதிர்பார்ப்பதே. இதை அங்கே 996 என்று அழைப்பர். இவ்வாறு ஊழியரை பிழிவதை நிறுத்த அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த 996 கொள்கை சட்டப்படியானது அல்ல என்றாலும் ஊழியர்கள் மத்தியில் இது படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது. சிலவேளைகளில் ஊழியர்கள் தமது வேலைவாய்ப்பை பாதுகாக்கவும், […]

சூமா சிறையின் பின் தென் ஆபிரிக்காவில் வன்முறைகள்

சூமா சிறையின் பின் தென் ஆபிரிக்காவில் வன்முறைகள்

முன்னாள் சனாதிபதி சூமா (Jacob Zuma) சிறைக்கு சென்றபின் அங்கு வன்முறைகள் இடம்பெறுகின்றன. வன்முறைகளுக்கு குறைந்தது 72 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் பல வர்த்தகங்களும், வீடுகளும் கொள்ளைக்கு இரையாகின்றன. இதுவரை சுமார் 1,235 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். சுமார் 200 shopping mall களில் உள்ள வர்த்தகங்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளன. தற்போதைய சனாதிபதி Cyril Ramaphosa மீதும் பலர் வெறுப்பு கொண்டுள்ளனர். Zuma, Ramaphosa இருவரும் மண்டேலாவின் ANC கட்சியினரே. மண்டேலா சிறையில் […]

கனடாவில் மேலும் 160 அடையாளமற்ற புதைகுழிகள்

கனடாவில் மேலும் 160 அடையாளமற்ற புதைகுழிகள்

கடனாவின் வான்கூவர் நகருக்கும், British Columbia மாநில தலைநகர் விக்ரோரியாவுக்கும் இடையில் அமைந்துள்ள சிறிய தீவுகளில் ஒன்றான Penelakut என்ற தீவிலும் குறைந்தது 160 அடையாளம் இல்லாத புதைகுழிகள் காணப்படுள்ளன. இந்த புதைகுழிகள் தொடர்பான ஆவணங்களும் இல்லை. மேலதிக விபரங்கள் ஓரிரு தினங்களுள் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த தீவு முன்னர் Kuper தீவு என்று அழைக்கப்பட்டது. இங்கிருந்த residential பாடசாலை Kuper Island Residential School என்று அழைக்கப்பட்டது. இந்த பாடசாலை 1890ம் ஆண்டு முதல் […]

கியூபாவில் கிளர்ச்சி, உணவு தட்டுப்பாடு காரணம்

கியூபாவில் கிளர்ச்சி, உணவு தட்டுப்பாடு காரணம்

கியூபாவில் பல்லாயிரம் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு உள்ளனர். கிளர்ச்சிகள் பல நகரங்களில் இடம்பெற்றுள்ளன. கரோனா காலத்தில் உணவு பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டமையும், உணவு பொருட்களின் விலை மிகையாக அதிகரித்தமையும் காரணம் என்று கூறப்படுகிறது. கியூபாவில் இவ்வாறு அரச எதிர்ப்பு கிளர்ச்சிகள் இடம்பெறுவது மிக அருமை. தற்போதைய கிளர்ச்சிகள் நேற்று ஞாயிறு பிற்பகல் ஆரம்பித்து இருந்தன. சில கிளர்ச்சியாளர் பொலிஸ் மீது கல்லெறியும் செய்தனர். பெருமளவு கிளர்ச்சியாளர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். அதேவேளை அரச ஆதரவு மக்களும் […]

Euro 2020 கேடயத்தை இத்தாலி வென்றது

Euro 2020 கேடயத்தை இத்தாலி வென்றது

இன்று இடம்பெற்ற Euro 2020 உதைபந்தாட்ட இறுதி போட்டியில் இத்தாலி முதலாம் இடத்தை வென்றுள்ளது. அதனுடன் மோதிய இங்கிலாந்து இரண்டாம் இடத்தை அடைந்து உள்ளது. கரோனா காரணமாக Euro 2020 இந்த ஆண்டே இடம்பெற்றது. ஆட்டம் ஆரம்பித்து 2 நிமிடங்களில் இங்கிலாந்து தனது 1வது புள்ளியை (goal) பெற்றது. இத்தாலி 67 நிமிடங்களின் பின் தனது 1ம் புள்ளியை பெற்றது. ஆனால் 90 நிமிடங்களின் வழங்கப்பட்ட மேலதிக நேரத்தின் பின்னரும் 1:1 என்ற நிலையிலேயே புள்ளிகள் இருந்தன. […]

இன்று முதலாவது விண்வெளி உல்லாச பயணம்

இன்று முதலாவது விண்வெளி உல்லாச பயணம்

செல்வந்தரான (billionaire) Richard Branson, வயது 71, முதலீடு செய்து தயாரித்த Virgin Galactic என்ற தனியார் விண்வெளி கலம் இன்று அமெரிக்காவின் New Mexico மாநிலத்தில் இருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அவரும், அவருடன் சென்ற ஏனைய 5 பேரும் பத்திரமாக மீண்டும் தரையை அடைந்தனர். சுமார் 17 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்ட இந்த ஏவல் முறை இரண்டு பிரதான பாகங்களை கொண்டது. தாய் கலம் ஒரு பாரிய விமானம் போன்றது. அது விமானம் போலவே தரையில் இருந்து […]

கொழும்பில் New Fortress அமைக்கும் LNG எரிவாயு துறை

கொழும்பில் New Fortress அமைக்கும் LNG எரிவாயு துறை

கொழும்பை அண்டிய கடலில் அமெரிக்காவின் New Fortress Energy என்ற எரிவாயு நிறுவனம் liquefied natural gas (LNG) இறக்கும், சேமிக்கும் மற்றும் அடைக்கும் துறையை அமைக்கவுள்ளது. இதற்கான உடன்படிக்கையை New Fortress Energy இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ளது. இந்த புதிய ஆழ்கடல் எரிவாயு துறைமுகம் அமைக்கப்பட்டபின் எரிவாயு கப்பல்கள் கரைக்கு வராது, கடலில் நிலைகொண்டபடியே எரிவாயுவை இறக்க முடியும். குறிப்பாக கெரவலபிட்டிய (Kerawalapitiya) மின் உற்பத்தி நிலையத்துக்கு இந்த புதிய எரிவாயு துறை நேரடியாக […]

பங்களாதேச தொழிற்சாலை தீக்கு 52 பேர் பலி

பங்களாதேச தொழிற்சாலை தீக்கு 52 பேர் பலி

பங்களாதேசத்து தொழிற்சாலை தீவிபத்து ஒன்றுக்கு குறைந்தது 52 பேர் பலியாகி உள்ளனர். Hashem Food and Beverage என்ற தொழிற்சாலையில் இடம்பெற்ற இந்த தீக்கு மேலும் 30 பேர் காயமடைந்தும் உள்ளனர். மேலும் சிலர் தற்போதும் இருப்பிடம் அறியப்படாது உள்ளனர். தலைநகர் டாக்காவில் இருந்து 25 km கிழக்கே உள்ள Rupgani என்ற இடத்தில் உள்ள இந்த 6 மாடி தொழிற்சாலை நூடில்ஸ், அடைக்கப்பட்ட குளிர்பானம் ஆகியன தயாரிக்கும் தொழிற்சாலையாகும். இந்த தீ உள்ளூர் நேரப்படி வியாழன் […]

ஹெயிற்ரி சனாதிபதியை சுட்டு கொன்றது கைக்கூலிகள்?

ஹெயிற்ரி சனாதிபதியை சுட்டு கொன்றது கைக்கூலிகள்?

ஹெயிற்ரி (Haiti) என்ற மத்திய அமெரிக்காவின் கிழக்கே உள்ள நாட்டின் சனாதிபதி Jovenel Moise, வயது 53, அவரது வீட்டில் வைத்து புதன் அதிகாலை 1:00 மணிக்கு துப்பாக்கி குழு ஒன்றால் சுட்டு கொலை செய்யப்பட்டு இருந்தார். அவரின் உடலில் 12 துப்பாக்கி சூட்டு காயங்கள் இருந்தன. அவரின் மனைவியும் காயமடைந்து இருந்தார். ஹெயிற்ரி போலீசாரின் அறிக்கைபடி 26 கொலம்பியா நாட்டவரும், 2 அமெரிக்கரும் இந்த தாக்குதலை செய்து உள்ளனர். அமெரிக்கர் இருவரும் ஹெயிற்ரியில் பிறந்து, அமெரிக்கா […]

இந்தியாவில் 39% மக்களே சைவம் உண்போர்

இந்தியாவில் 39% மக்களே சைவம் உண்போர்

பெரும்பான்மையாக இந்துக்களை கொண்ட இந்தியாவில் தற்போது சுமார் 39% மக்கள் மட்டுமே சைவ உணவுகளை மட்டும் உண்போராக (vegetarians) உள்ளனர் என்கிறது அமெரிக்காவை தளமாக கொண்ட PEW research center என்ற ஆய்வு அமைப்பு. இந்திய அரசியலில் இந்துவாதம் பெருகினாலும், இந்திய அடுக்களையுள் மாமிசம் வேகமாக பரவி வருகிறது. இந்திய இந்துக்களை மட்டும் கருத்தில் கொண்டால், 44% இந்துக்கள் மட்டுமே சைவம் மட்டும் உண்போராக உள்ளனர். மத அடிப்படியில் நோக்கிகினால் சுமார் 92% ஜெயின் மதத்தவரும், சுமார் […]