கரோனா பிடியில் தவிக்கும் இந்தியாவை தற்போது நீபா (Nipah, NiV) வைரஸ் தாக்கிக்குறது. கேரளா மாநிலத்தில் பரவும் இந்த வைரசை கட்டுப்படுத்த அதிகாரிகள் முனைந்து வருகின்றனர். அங்கு இந்த வைரஸ் 12 வயது சிறுவன் ஒருவனை பலியாக்கி உள்ளது. ஒரு கிழமைக்கு முன் கடும் காச்சல் காரணமாக வைத்தியசாலைக்கு வந்திருந்த சிறுவனின் இரத்தம் இந்திய National Institute of Virology க்கு அனுப்பப்பட்டு அங்கு செய்த ஆய்வுகள் நீபா தொற்றியமையை உறுதி செய்துள்ளன. சிறுவன் ஞாயிறு காலை […]
இஸ்ரேலில் உள்ள Gilboa என்ற அதிகூடிய பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலையில் வைக்கப்பட்டு இருந்த 6 பாலஸ்தீன கைதிகள் நிலத்துக்கு கீழே சுரங்கம் கிண்டி தப்பி உள்ளனர். அவர்களை தேடும் பணியை இஸ்ரேல் தற்போது தீவிரப்படுத்தி உள்ளது. சிறைச்சாலைக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் பணியாற்றிய தோட்டக்காரர் சிலர் தோட்டங்கள் ஊடாக ஓடுவதை அதிகாரிகளுக்கு அறிவித்த பின்னரே கைதிகள் தப்பியது தெரியவந்துள்ளது. தப்பியவர்களில் ஒருவர் 46 வயதுடைய Al-Aqsa Martyrs Brigades என்ற ஆயுத குழுவின் முன்னாள் தலைவர் […]
மேற்கு ஆபிரிக்க நாடான கினியில் (Guinea) இராணுவம் கவிழ்ப்பு மூலம் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அந்நாட்டின் முன்னைய சனாதிபதி Alpha Conde, வயது 83, தற்போது எங்குள்ளார் என்பது அறியப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள தொலைக்காட்சி சேவை மூலம் தாம் ஆட்சியை கைப்பற்றி உள்ளதாக இராணுவம் கூறியுள்ளது. தம்மை National Committee for Reconciliation என்றும் இராணுவம் பெயரிட்டு உள்ளது. இந்த இராணுவ கவிழ்ப்பை Lt Col Mamady Doumbouya செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இயற்கை வளமும், கனியங்களும் […]
ஜேர்மனியில் உள்ள 34 பல்கலைக்கழக உணவகங்களில் அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் விற்பனை செய்யப்படும் உணவுகளில் 96% உணவுகள் சைவ அல்லது vegan உணவுகளாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இறைச்சி வகை உணவுகள் 2% அளவிலும் மீன் உணவுகள் 2% அளவிலும் மட்டுமே இருக்கும். இந்த செய்தியை பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவு வழங்கும் மாணவர் அமைப்பான Studierenden தெரிவித்து உள்ளது. வழங்கப்படவுள்ள மொத்தம் 510 உணவுகளில் (meals) 341 உணவுகள் பால் பொருட்களையும் தவிர்த்த vegan உணவாகவும், […]
நியூசிலாந்தின் Auckland நகரில் இலங்கையர் ஒருவர் செய்த கத்தி குத்துக்கு 6 பேர் காயம் அடைந்து உள்ளனர். கத்தி குத்தை செய்த இலங்கையர் போலீசால் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த வன்முறையை செய்தவர் ஒரு ISIS ஆதரவாளர் என்று நியூசிலாந்து அரசு கூறியுள்ளது. பெயர் குறிப்பிடப்படாத இலங்கையர் நியூசிலாந்துக்கு 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்று இருந்தார். இன்று வெள்ளி பிற்பகல் 2:40 மணியளவில் அப்பகுதியில் உள்ள Countdown என்ற கடைக்கு சென்ற இவர் அங்கு […]
சூறாவளி ஐடா (Hurricane Ida) ஏற்படுத்திய திடீர் வெள்ளத்துக்கு அமெரிக்காவின் நியூ யார்க் நகர் மற்றும் அதை அண்டிய Connecticut, New Jersey, Pennsylvania, Maryland, Virginia மாநில பகுதிகளில் குறைந்தது 45 பேர் பலியாகி உள்ளனர். நியூ யார்க் நகரில் பல நிலக்கீழ் ரயில் நிலையங்களுள் வெள்ளம் புகுந்ததால் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் பல பயணிகள் புதன் இரவு ரயில் நிலையங்களில் தங்க நேரிட்டது. Philadelphia நகரில் உள்ள Schuylkill ஆற்று நீர்மட்டம் […]
இன்று செப்டம்பர் 1ம் திகதி முதல் சீனாவில் இளைஞர்கள் கிழமைக்கு 3 மணித்தியாலங்கள் மட்டுமே இணையம் மூலம் video game விளையாட அனுமதிக்கப்படுவர். இளைஞர்கள் video game விளையாடலுக்கு அடிமையாவதை தவிர்ப்பதே சீன அரசின் நோக்கம். புதிய சட்டப்படி 18 வயதுக்கு உட்பட்டோர் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில், மாலை 8 மணி முதல் 9 மணி வரையே இணையத்தில் விளையாட அனுமதிக்கப்படுவர். விடுமுறை தினங்களிலும் 1 மணித்தியாலம் விளையாட அனுமதிக்கப்படுவர். Computer, smartphone, tablet, […]
புதிதாக கனடாவுக்கு குடிவரவு செய்யும் செல்வந்தர் வரி குற்றங்களை செய்கிறார்கள் என்று அறிந்திருந்தும் கனடா அவற்றை கண்டுகொள்ளாது இருந்துள்ளது என்று தற்போது அறியப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து கனடாவுக்கு பெருமளவு பணம் வருவதை விரும்பிய கனடா செல்வந்த குடிவரவாளர் செய்யும் வரி குற்றங்களை மூடி மறைத்து உள்ளது. 1996ம் ஆண்டு Canada Revenue Agency (CRA) என்ற கனடாவின் வரி திணைக்களம் செய்த இரகசிய ஆய்வில் அக்காலத்தில் வான்கூவர் (Vancouver) பகுதிக்கு வரும் செல்வந்தர் மில்லியன் டாலர் பெறுமதியான […]
நேற்று ஞாயிறு அமெரிக்க விமானப்படை ஏவிய ஆளில்லா விமானம் மூலமான ஏவுகணை தாக்குதலுக்கு குறைந்தது 10 பொதுமக்கள் பலியாகி உள்ளதாக செய்திகள் கூறுகின்றன. காபூலில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மீது தாக்கிய பொழுதே மேற்படி குடும்பம் பலியாகி உள்ளது. இந்த செய்தியை தாம் ஆராய்வதாக அமெரிக்கா கூறியுள்ளது. பலியானவர்களில் Malika என்ற 2 வயது சிறுமியும் ஒருவர். மரணித்தவருள் இன்னொருவர் முன்னர் அமெரிக்க படைகளுக்கு மொழிபெயர்ப்பு தொழில் செய்ததாகவும், அவர் வெளிநாட்டுக்கு […]
அஸ்ரேலியா சென்று அங்குள்ள தோட்டங்களில் (farm) நீண்ட காலம் தொழில் செய்ய இணங்கும் பிற நாட்டவருக்கு தோட்ட தொழில் விசா வழங்கி, பின்னர் அவர்களுக்கு நிறைந்த வதிவுரிமையும் வழங்க அஸ்ரேலியா தீர்மானித்து உள்ளது. பிலிப்பீன், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாட்டவரே முதலில் இந்த திட்டத்துக்கு உட்படுவர். அஸ்ரேலியாவில் தோட்ட வேலைகள் செய்யும் தொழிலாருக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டதே காரணம். இவர்கள் Northern Territory பகுதியில் மாம்பழம், வெள்ளரி, பூசணி போன்றவற்றையும், Queensland பகுதியில் தக்காளி, raspberries போன்றவற்றையும், […]