நவம்பர் மாதம் 8ம் திகதி முதல் முழுமையாக COVID தடுப்பூசி பெற்ற 33 நாட்டவர் அமெரிக்காவுக்கு செல்லலாம் என்று அமெரிக்கா அறிவித்து உள்ளது. ஐரோப்பிய நாடுகள் 26 (Schengen நாடுகள்), பிரித்தானியா, பிரேசில், சீனா, இந்தியா, ஈரான், அயர்லாந்து, தென் ஆபிரிக்கா ஆகியனவே மேற்படி 33 நாடுகள். முழுமையாக COVID தடுப்பூசி பெற்று இருப்பதுடன், இவர்கள் பயணம் ஆரம்பிக்க 72 மணித்தியாலத்துள் COVID தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த negative test ஆவணம் கொண்டிருப்பதும் அவசியம். பயணிப்போர் […]
கத்தி குத்துக்கு 69 வயதுடைய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் David Amess இன்று பலியாகி உள்ளார். சம்பவத்தின் பின் 25 வயது சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். பலியான உறுப்பினருக்கு 5 பிள்ளைகள் உண்டு. இவர் லண்டன் நகருக்கு கிழக்கே அமைந்துள்ள தனது தொகுதி மக்களுடன் Eastwood Road North என்ற வீதியில் உள்ள Belfairs Methodist Church ஆலயத்தில் கூடுகையிலேயே மதியம் அளவில் கத்தி குத்துக்கு இறையாகினார். 1983ம் ஆண்டு முதல் இன்று வரை […]
ஆப்கானித்தானின் Kandahar நகரில் உள்ள Bibi Fatima என்ற சியா இஸ்லாமியரின் பள்ளிவாசல் ஒன்றில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்புகளுக்கு குறைந்தது 37 பலியாகி உள்ளனர். மேலும் சுமார் 70 பேர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். தொழுகை நேரத்தில் முதலில் ஒரு குண்டு வாசலில் வெடித்ததாகவும், பின்னர் மேலும் இரண்டு குண்டுகள் உள்ளே வெடித்ததாகவும் கூறப்படுகிறது. வழமையாக இந்த பள்ளிவாசலில் சுமார் 500 பேர் தொழுகையில் ஈடுபடுவது வழமை என்று கூறப்படுகிறது. தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் […]
Kaohsiung என்ற தெற்கு தாய்வான் நகரில் இன்று வியாழன் ஏற்பட்ட அடுக்குமாடி தீக்கு குறைந்தது 46 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் 41 பேர் காயமடைந்தும் உள்ளனர். மொத்தம் 13 அடுக்குகளை கொண்ட இந்த மாடியின் தீ தற்போது கட்டுப்பாட்டுள் உள்ளது. ஏழாம் மாடி முதல் 11ம் மாடி வரையில் உள்ள வீடுகளில் தொடர்ந்தும் தேடுதல் செய்யப்படுகிறது என்று தீயணைப்பு கூறியுள்ளது. இந்த மாடி சுமார் 40 ஆண்டுகள் பழமையானது. தெருவோரம் உள்ள இந்த மாடியின் நிலமட்டம் […]
வில் மூலம் ஏவப்பட்ட அம்பு தாக்குதலுக்கு நோர்வேயின் Kongsberg பகுதில் பலர் பலியாகியும், காயமடைந்தும் உள்ளனர் என்று அப்பகுதி போலீசார் கூறியுள்ளனர். இந்த தாக்குதல் இன்று புதன் மாலை 6:30 மணியளவில் நிகழ்ந்துள்ளது. முதலில் தாக்குதல் Coop Extra என்ற பண்டகசாலையில் நிகழ்ந்துள்ளது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டு உள்ளார் என்றும் போலீசார் கூறியுள்ளனர். சுமார் 28,000 மக்களை கொண்ட Kongsberg நகரம் தலைநகர் ஒஸ்லோவில் இருந்து 85 km தூரம் தென் மேற்கே உள்ளது.
எல்லையில் இந்தியாவும், சீனாவும் முரண்டு செய்தாலும் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மிக வேகமாக வளர்ந்து உள்ளது என்பதை வர்த்தக தரவுகள் காட்டுகின்றன. இரு நாடுகளுக்கும் இடையில் இந்த ஆண்டுக்கான மொத்த வர்த்தகம் $100 பில்லியனை மீறும் என்று கணிப்பிடப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் மூன்று காலாண்டிலும் (முதல் 9 மாதங்களில்) இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகம் $90.37 பில்லியன் ஆக இருந்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் 9 மாத கால தொகையுடன் ஒப்பிடுகையில் இந்த […]
கரோனா காரணமாக வீழ்ச்சி அடைந்திருந்த உலக பொருளாதாரத்தின் மீட்சி மேலும் மந்தமாகவே இருக்கும் என்று IMF இன்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது. புதிய கணிப்பின்படி உலக பொருளாதாரம் 5.9% ஆல் மட்டுமே வளரும். ஜூலை மாதம் கொண்டிருந்த கணிப்பிலும் இது 0.1% குறைவு. அமெரிக்கா, ஜேர்மனி ஆகிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததிலும் குறைவாக இருப்பதே பிரதான காரணங்கள் என்று கூறப்பட்டுள்ளது. வறிய நாடுகளில் கரோனா தடுப்பு மருந்து வேகமாக வழங்கப்படாமையும் காரணமாக உள்ளது. Chip தட்டுப்பாடு காரணமாக […]
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் ஞாயிறுக்கிழமை இடம்பெற்ற 13வது எல்லை பேச்சும் இணக்கம் எதுவும் இன்றி முடிந்துள்ளது. அதனால் கடந்த 17 மாதங்களாக அங்கு குவிக்கப்பட்டு உள்ள இரத்தரப்பு படைகளும் தொடர்ந்தும் எல்லையில் நிலைகொள்ளும். 13வது பேச்சு சீன-இந்திய எல்லையோரம், சீனாவுள் உள்ள Moldo என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்த பேச்சு 8.5 மணித்திலாலங்கள் இடம்பெற்றன. பேச்சின் முடிவில் இந்திய தரப்பு தமக்கு “constructive suggestions” கிடைத்ததாக கூறினாலும், சீனா இந்திய தரப்பு இந்தியாவின் நிபந்தனைகள் “not agreeable” […]
சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஐ.நா.வின் Human Rights Council அமைப்பில் இருந்து வெளியேறி இருந்தார். ஆனால் தற்போதைய பைடென் அரசு மீண்டும் அமெரிக்காவை இந்த அமைப்பில் இணைக்கிறது. மொத்தம் 47 உறுப்பினர்களை கொண்ட இந்த அவையின் 18 ஆசனங்களுக்கு வரும் புதன்கிழமை தேர்தல் இடம்பெறும். இது தேர்தல் என்று கூறப்பட்டாலும் ஐ.நா. வில் வழமைபோல் இடம்பெறும் மூடிய அறைகளுள் ஏற்படும் தீர்மானங்களே இவை. அமெரிக்கா போட்டிக்கு பிந்தியதால், இம்முறை போட்டியிட […]
பிரதமர் மோதியின் ஆட்சியில் உள்ள அமைச்சரின் (junior Home Minister) மகனை போலீசார் இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர். மோதி அரசு நடைமுறை செய்யும் புதிய சட்டம் ஒன்றை எதிர்த்து போராடும் உழவர் ஊடே வாகனம் ஒன்றை செலுத்தி 4 உழவர் பலியாக காரணமாக இருந்ததே கைதுக்கு காரணம். கடந்த ஞாயிற்றுக்கிழமை Ajay Mishra மேற்படி அமைச்சருக்கு உரிய காரை உத்தர பிரதேசத்தில் உள்ள Lakhimpur Kheri என்ற இடத்தில் போராடும் உழவர் மீது செலுத்தியதில் 4 […]