Nanjing பல்கலைக்கழகத்தில் வெடிப்பு விபத்து

Nanjing பல்கலைக்கழகத்தில் வெடிப்பு விபத்து

சீனாவின் பிரபல பல்கலைக்கழகமான நான்ஜிங் (Nanjing) பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூடம் ஒன்றில் இன்று ஞாயிறு இடம்பெற்ற வெடிப்பு விபத்துக்கு குறைந்தது 2 பேர் பலியாகியும் 9 பேர் காயமடைந்து உள்ளனர். அமெரிக்காவின் Stanford பல்கலைக்கழகத்தின் Hoover Institution என்ற ஆய்வு அமைப்பு நான்ஜிங் பல்கலைக்கழகத்தை 7 சீன தேசிய பாதுகாப்பு மகன்களில் ஒன்று (one of the seven sons of national defense) என்று விபரித்து இருந்தது. அதாவது இந்த ஆய்வுகூடம் சீன பாதுகாப்பு ஆயுத ஆய்வுகளில் […]

7 NATO தூதர்களை வெளியேற்றுகிறது துருக்கி

துருக்கியின் சனாதிபதி Recep Tayyip Erdogan அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பின்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, நியூ சிலாந்து, நோர்வே, சுவீடன் ஆகிய 10 நாடுகளின் தூதுவர்களை உடனடியாக துருக்கியை விட்டு வெளியேற்றுமாறு இன்று சனிக்கிழமை வெளியுறவு அமைச்சுக்கு கட்டளை இட்டுள்ளார். மேற்படி 10 நாடுகளில் 7 நாடுகள் NATO நாடுகள். ஒரு NATO நாடான துருக்கி 7 நேட்டோ நாடுகளின் தூதுவர்களை வெளியேற்றுவது சாதாரண விசயம் அல்ல. ஒரு NATO நாடு மீதான தாக்குதல், எல்லா […]

படப்பிடிப்பு சூட்டுக்கு ஒருவர் பலி, ஒருவர் காயம்

படப்பிடிப்பு சூட்டுக்கு ஒருவர் பலி, ஒருவர் காயம்

அமெரிக்காவின் New Mexico மாநிலத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற Rust என்ற ஆங்கில படப்பிடிப்பு ஒன்றின் போது இடம்பெற்ற துப்பாக்கி சூடு ஒன்றுக்கு 42 வயதுடைய Halyna Hutchins என்ற திரைப்பட படப்பிடிப்பாளர் (cinema photographer) பலியாகியதுடன், 48 வயதுடைய Joel Souza என்ற director காயமடைந்தும் உள்ளார். திரைப்பட படப்பிடிப்பு செய்யும் வேளைகளில் துப்பாக்கி சூடுகளின் உண்மைத்தன்மையை காண்பிக்க உண்மை துப்பாக்கிகளை (prop gun) பயன்படுத்துவது உண்டு. உண்மை துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டாலும் குண்டுகள் (bullet) மாற்றத்துக்கு உட்படும். […]

1965 இந்தோனேசிய படுகொலை, பிரித்தானியாவுக்கு அழுத்தம்

1965 இந்தோனேசிய படுகொலை, பிரித்தானியாவுக்கு அழுத்தம்

1965 முதல் 1966 வரை இந்தோனேசியாவில் இடதுசாரிகளையும், கம்யூனிஸ்ட்களையும் அந்த நாட்டு இராணுவம் கலவரம் என்ற போர்வையில் படுகொலை செய்து இருந்தது. இந்த படுகொலைகளுக்கு சுமார் 2 முதல் 3 மில்லியன் பேர் பலியாகியதாக கணிப்புகள் கூறுகின்றன. Cold War காலத்தில் இடம்பெற்ற இந்த படுகொலைகளுக்கு அமெரிக்கா, பிரித்தானியா, அஸ்ரேலியா ஆகிய நாடுகள் உதவியும் ஊக்கமும் வழங்கி இருந்தன. இவர்களே சர்வாதிகாரி Suharto வை ஆட்சியில் அமர்த்தினர். தற்போது International People’s Tribunal (IPT) for 1965 […]

இலங்கை முருங்கை மருத்துவத்துக்கு கியூபா உதவும்

இலங்கை முருங்கை மருத்துவத்துக்கு கியூபா உதவும்

இலங்கையில் முருங்கை மரத்தை அடிப்படியாக கொண்ட மருத்துவ தயாரிப்புகளுக்கு கியூபா உதவ முன்வந்துள்ளது என்று இன்று புதன்கிழமை கூறப்பட்டு உள்ளது. கியூபாவின் இலங்கைக்கான தூதுவர் Andres Gonzalez இந்த இந்த அறிவிப்பை செய்துள்ளார். கியூபா முருங்கை குளிசைகள் மற்றும் முருங்கை இலை தூள் போன்றவற்றை ஏற்கனவே தயாரிக்கிறது. ஆனாலும் முருங்கை இந்தியாவில் இருந்தே உலகம் எங்கும் பரவி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆங்கிலத்தில் முருங்கை காயை drumstick என்று சிலர் அழைத்தாலும், பொதுவாக Moringa என்ற தமிழ் […]

Hubble தொலை நோக்கிக்கு பதிலாக James Webb Space Telescope

Hubble தொலை நோக்கிக்கு பதிலாக James Webb Space Telescope

1990ம் ஆண்டு ஏவப்பட்ட Lockheed Martin நிறுவன தயாரிப்பான Hubble Telescope பல பில்லியன் light year தொலைவில் உள்ள galaxy களை படம் பிடித்து காட்டியது. தற்போதும் Hubble தனது சேவையை செய்து வருகிறது. ஆனாலும் Hubble சுமார் 31 ஆண்டு பழைய தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. பதிலுக்கு வரும் டிசம்பர் மாதம் 18ம் திகதி ஏவப்படவுள்ள James Webb Space Telescope (JWST) தற்கால நுட்பங்களை கொண்ட தொலைநோக்கியாக செயற்படவுள்ளது. JWST தொலைநோக்கி அமெரிக்கா, கனடா, […]

சாதாரண குடிமகளாகும் ஜப்பானிய இளவரசி Mako

சாதாரண குடிமகளாகும் ஜப்பானிய இளவரசி Mako

சாதாரண குடிமகன் ஒருவரை காதலித்து திருமணம் செய்வதால் இந்த மாதம் 26ம் திகதி முதல் சாதாரண குடிமகள் (commoner) ஆகிறார் ஜப்பானிய இளவரசி Mako. சுமார் 4 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இவரின் திருமணம் 26ம் திகதி ஆடம்பரம் இன்றி நிகழவுள்ளது. திருமண பதிவின் பின் தம்பதிகள் அமெரிக்கா சென்று வாழ்வர். Mako திருமணம் செய்யவுள்ள 30 வயதுடைய நண்பன் Kei Komuro அமெரிக்காவில் சட்ட படிப்பை பூர்த்தி செய்கிறார். 2017ம் ஆண்டே திருமண பேச்சுக்கள் இடம்பெற்றாலும், […]

உலகை சுற்றிய சீன ஏவுகணை, அமெரிக்கா அதிர்ச்சியில்

உலகை சுற்றிய சீன ஏவுகணை, அமெரிக்கா அதிர்ச்சியில்

ஆகஸ்ட் மாதம் சீனா ஏவிய, அணு குண்டை காவக்கூடிய, Hypersonic ஏவுகணை ஒன்று உலகை சுற்றி வந்துள்ளது. இதை பின்னர் அறிந்த அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது. சீனா இவ்வாறு கணையை ஏவியதை மட்டுமன்றி, இவ்வகை கணை ஒன்றை தயாரித்து உள்ளதையும் அமெரிக்க உளவு அறிந்து இருக்கவில்லை. மேற்படி கணையை ஏவிய காலத்தில் சீனா பெருமளவு தென்சீன கடலை போக்குவரத்துக்கு தடை செய்து இருந்தாலும், ஏவுகணை ஏவப்பட்டதை எவரும் அறிந்து இருக்கவில்லை. அந்த ஏவுகணை சீன தரையில் இருந்தும் […]

James Bond படத்தை பின்தள்ளும் சீன திரைப்படம்

James Bond படத்தை பின்தள்ளும் சீன திரைப்படம்

சீன அரசின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்ட The Battle at Lake Changjin (长津湖, Zhǎng jīn hú) என்ற திரைப்படம் அண்மையில் வெளிவந்த James Bond திரைப்படமான No Time To Die திரைப்படத்தையே பின்தள்ளி அதிக பணத்தை உழைத்துள்ளது. அக்டோபர் 1ம் திகதி முதல் இரண்டு கிழமைகளில் The Battle at Lake Changjin $633 மில்லியன் பணத்தை உழைத்து உள்ளது. தற்போது அதன் உழைப்பு $740 மில்லினுக்கும் அதிகம். இந்த திரைப்படத்துக்கான மொத்த செலவு […]

Global Hunger Index கணிப்பில் இந்தியா 101ம் இடத்தில்

Global Hunger Index கணிப்பில் இந்தியா 101ம் இடத்தில்

Global Hunger Index என்ற அமைப்பின் இந்த ஆண்டுக்கான கணிப்புக்கு மொத்தம் 116 நாடுகள் உள்ளடக்கப்பட்டு இருந்தன. இந்த கணிப்பில் இந்தியா 101ம் இடத்தில் உள்ளது. இதனால் விசனம் கொண்ட இந்தியா இந்த கணிப்பு விஞ்ஞான முறைக்கு முரணானது என்று சாடியுள்ளது. கடந்த முறை இந்தியா 94ம் இடத்தில் இருந்தது. இந்த கணிப்பின்படி 0 சுட்டி பெறும் நாட்டில் பட்டினியே இல்லை, 100 சுட்டி பெறும் நாடு முற்றாக பட்டினியில் உள்ளது. இந்த ஆண்டு இந்தியா 27.5 […]