நைஜீரியாவில் 21 மாடி கட்டிடம் உடைந்து வீழ்ந்தது

நைஜீரியாவில் 21 மாடி கட்டிடம் உடைந்து வீழ்ந்தது

நைஜீரியாவின் Lagos என்ற நகரில் 21 மாடிகளை கொண்ட கட்டிடம் ஒன்று இன்று திங்கள் பிற்பகல் 2:45 மணிக்கு இடிந்து விழுந்துள்ளது. இந்த கட்டிடம் இருந்த பகுதி பல ஆடம்பர மாடிகளை கொண்ட இடம். இதுவரை 4 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. மேலும் பலர் இருப்பிடம் அறியப்படாது உள்ளனர். Apata என்ற இந்த கட்டிடம் கடந்த 2 ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகிறது. இது இடிந்து விழுந்தபோது பல பணியாளர்கள் இதனுள் அகப்பட்டு உள்ளனர். கட்டிடம் உடைந்த நேரத்தில் […]

நீதிமன்றம் செல்லும் கனடிய Rogers குடும்ப சண்டை

நீதிமன்றம் செல்லும் கனடிய Rogers குடும்ப சண்டை

Rogers Communication கனடாவின் மிகப்பெரிய நிறுவனம். Rogers Wireless, Fido Wireless, Chatr Wireless, Rogers Cable, Rogers Sports, Blue Jays team, Maple Leafs team, Raptors team அனைத்தும் இதன் அங்கம். சுமார் $24 பில்லியன் (C$30 பில்லியன்) பெறுமதியான இந்த நிறுவனத்தை ஆளும் Rogers குடும்ப சண்டை தற்போது நிறுவனத்தை நீதிமன்றம் இழுத்துள்ளது. 1960ம் ஆண்டுகளில் Ted Rogers என்பவர் இந்த நிறுவனத்தை ஆரம்பித்திருந்தார். அவர் 2008ம் ஆண்டு மரணமாகியபின் குடும்ப […]

நெதர்லாந்து துறையில் 4 தொன் cocaine அகப்பட்டது

நெதர்லாந்து துறையில் 4 தொன் cocaine அகப்பட்டது

Rotterdam என நெதர்லாந்து துறைமுகத்தில் 4 தொன் cocaine போதை அகப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர். ஐரோப்பாவில் நெதர்லாந்தும், பெல்ஜியமும் தற்போது போதை கடத்தலின் மையங்களாக மாறியுள்ளன. மேற்படி போதை இரண்டு கொள்கலன்களில் இருந்துள்ளன. இவை சோயா பைகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்துள்ளன. இவற்றின் சந்தை பெறுமதி சுமார் $362 மில்லியன் என்று கூறப்படுகிறது. தென் அமெரிக்கவின் Paraguay நாட்டில் இருந்து பயணித்த இந்த போதை, Uruguay என்ற நாடு மூலம் நெதர்லாந்து வந்து […]

குறைந்தது-15% நிறுவன வரி அறவிட G20 இணக்கம்

குறைந்தது-15% நிறுவன வரி அறவிட G20 இணக்கம்

இன்று இத்தாலியின் ரோம் நகரில் இடம்பெற்ற G20 அமர்வில் பல நாடுகளில் இயங்கும் multinational நிறுவனங்கள் மீது குறைந்தது-15% (minimum corporate tax) வரியை நடைமுறை செய்ய அங்கத்துவ நாடுகள் இணங்கி உள்ளது. உண்மையில் இந்த இணக்கம் கடந்த ஜூலை மாதமே அறியப்பட்டு இருந்தாலும், இன்றே தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பல நாடுகளில் இயங்கும் Apple, Google போன்ற மேற்கு நாடுகளின் பெரு நிறுவனங்கள் தமது இலாபத்தை வரி குறைந்த நாடுகளுக்கு நகர்த்தி, உரிய வரி செலுத்துவதில் இருந்து […]

சனி, ஞாயிறு பெரிய அளவில் Aurora என்ற துருவ ஒளி

சனி, ஞாயிறு பெரிய அளவில் Aurora என்ற துருவ ஒளி

நாளை சனிக்கிழமையும், மறுநாள் ஞாயிற்றுக்கிழமையும் பெரிய அளவில் Aurora borealis அல்லது Northern Light என அழைக்கப்படும் துருவ ஒளி தெரியும் என்று அமெரிக்காவின் NOAA (National Oceanic and Atmospheric Administration) கூறியுள்ளது. காலநிலை சாதகமாக இருந்தால் துருவங்களை அண்டிய நாட்டவர் பலரும் இதை காணக்கூடியதாக இருக்கும். நேற்று வியாழக்கிழமை பெருமளவு சூரிய கதிர்கள் (solar flare) சூரியனை நீங்கி இருந்தன. அவையே பூமியில் இந்த துருவ ஒளி வீச்சை உருவாக்கும். இந்த துருவ ஒளி […]

ஜெனரல் Hyten: சீனா அமெரிக்காவையும், ரஷ்யாவையும் பின்தள்ளும்

ஜெனரல் Hyten: சீனா அமெரிக்காவையும், ரஷ்யாவையும் பின்தள்ளும்

இன்று வியாழன் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய இராணுவ அதிகாரியான, Vice Chairman of the Joint Chiefs of Staff பதவி வகிக்கும் ஜெனரல் John Hyten தனது கூற்று ஒன்றில் சீன இராணுவ பலம் விரைவில் அமெரிக்காவையும், ரஷ்யாவையும் பின்தள்ளும் என்று கூறியுள்ளார். இவரின் கருத்து நேற்று அமெரிக்க ஜெனரல் Milley கூறிய கணிப்புடன் இசைந்து உள்ளது. அமெரிக்கா தனித்து சீனாவுடன் போட்டியிட்டால் சுமார் 5 ஆண்டுகளில் அமெரிக்கா பின் தள்ளப்படும் என்றும், ஐரோப்பா போன்ற […]

ஜெனரல் Milley: சீனாவின் Hypersonic ஏவுகணை ஒரு Sputnik வளர்ச்சி

ஜெனரல் Milley: சீனாவின் Hypersonic ஏவுகணை ஒரு Sputnik வளர்ச்சி

Mark Milley என்ற அமெரிக்காவின் Chairman of the Joint Chiefs of Staff சீனா அண்மையில் ஏவிய hypersonic ஏவுகணை தொடர்பாக கருத்து கூறுகையில் சீனாவுக்கு இது சோவியத் Sputnik செய்மதி ஏவியதை போன்றது என்று கூறியுள்ளார். 1957ம் ஆண்டு சோவியத் முதலில் Sputnik என்ற செய்மதியை ஏவியபோது அமெரிக்கா கலங்கி இருந்தது. குறிப்பாக Sputnik அமெரிக்கா மேல் சென்றது அமெரிக்காவின் பாதுகாப்புக்கும், பெருமைக்கும் பாதகமாக அமைந்து இருந்தது. சீனாவின் hypersonic ஏவல் மிகவும் கவலைக்கு […]

பைடெனை தவிர்க்கும் சீ ஜின் பிங், பைடென் தரப்பு விசனம்

பைடெனை தவிர்க்கும் சீ ஜின் பிங், பைடென் தரப்பு விசனம்

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் நிலவும் முறுகல் நிலையை தணிக்கும் நோக்கில் அமெரிக்க சனாதிபதி பைடென் சீன ஜனாதிபதியை நேரடியாக சந்திக்க முயன்று வருகிறார். ஆனால் சீன சனாதிபதி அதற்கான சந்தர்ப்பத்தை தவிர்த்து உள்ளார். அதனால் பைடென் தரப்பு விசனம் கொண்டுள்ளது. வரும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் இத்தாலியின் ரோம் (Rome) நகரில் இடம்பெறவுள்ள G20 மாநாட்டில் சீன சனாதிபதியை சந்திக்க பைடென் திட்டம் கொண்டிருந்தார். ஆனால் சீன சனாதிபதி சி ஜின் பிங் G20 […]

ஆக்கிரமித்த நிலத்தில் இஸ்ரேல் மேலும் 1,300 யூத வீடுகள்

ஆக்கிரமித்த நிலத்தில் இஸ்ரேல் மேலும் 1,300 யூத வீடுகள்

1967ம் ஆண்டு இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு உரிய West Bank பகுதியை ஆக்கிரமித்து இருந்தது. அன்றில் இருந்து இன்று வரை ஆக்கிரமித்த பகுதிகளில் யூதர்களுக்கு வீடுகளை கட்டி வழங்கி வருகிறது இஸ்ரேல். அமெரிக்கா இதற்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது. West Bank பகுதியில் மேலும் 1,300 வீடுகளை யூதர்களுக்கு கட்ட இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை அறிவித்து இருந்தது. இந்த வீடுகளுக்கான கட்டு வேலைகள் நாளை புதன்கிழமை முதல் ஆரம்பமாகும். அமெரிக்காவின் பைடென் அரசு வழமைபோல் ஒரு கவலையை மட்டும் தெரிவித்து […]

சூடான் பிரதமர் தடுப்பில், இராணுவம் ஆட்சியில்

சூடான் பிரதமர் தடுப்பில், இராணுவம் ஆட்சியில்

ஆபிரிக்க நாடான சூடானில் (Sudan) மீண்டும் அரசியல் குழப்பம் உருவாகியுள்ளது. இராணுவம் அந்நாட்டின் பிரதமரையும், பல அமைச்சர்களையும் இரகசிய இடத்தில் தடுத்து வைத்துள்ளது. வீதிக்கு வந்த ஆர்பாட்டக்காரர்களிலும் குறைந்தது 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 80 பேர் காயமடைந்தும் உள்ளனர். பிரதமர் Abdalla Hamdok இராணுவ சதிக்கு ஆதரவு வழங்க மறுத்ததனாலேயே தடுப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.இராணுவ அதிகாரி ஜெனரல் Abdel Fattah al-Burhan தற்போது நாடு முழுவதும் அவசரகால நிலையை அறிவித்து உள்ளார். அந்நாட்டு பாராளுமன்றமும் […]