இலங்கையில் பிறந்து கனடாவிலும், அமெரிக்காவிலும் குடியுரிமை கொண்ட Chamath Palihapitiya சீனாவின் Uyghur இனம் தொடர்பாக தெரிவித்த கருத்து சர்ச்சையாகி உள்ளது. இவர் தானும், தன்னைப்போல் பல அமெரிக்கர்களும் Uyghur இனத்தவர்களின் விசயத்தில் அக்கறை கொண்டிருக்கவில்லை (don’t care) என்று கூறியுள்ளார். ஆனால் இவர் பின்னர் தனது கூற்றை மாற்றி உள்ளார். இவரின் தந்தையார் Ottawa நகரில் பணியாற்றியவர். 1986ம் ஆண்டு தந்தையாரின் பணி முடிந்து இருந்தாலும், இலங்கை இனக்கலவரத்தை காரணம் காட்டி குடும்பத்துடன் அகதி நிலை […]
இப்பகுதில் பெரியதோர் கடலடி எரிமலை வெடித்ததால் அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. Tongaவில் கடல் நீர் வீடுகளுள் புகுந்து உள்ளது கூறப்படுகிறது. எட்டு நிமிடங்கள் இடம்பெற்ற இந்த வெடிப்பு சுமார் 800 km தொலைவில் உள்ள Fiji வரை இடிமுழக்கம் போல் கேட்டுள்ளது. இதன் புகை, சாம்பல் 20 km உயரத்துக்கு சென்றுள்ளது. சுமார் 2,300 km தொலைவில் உள்ள நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது தாழ்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் உயர்வான பகுதிகளுக்கு […]
தற்போது இந்தியாவில் பெண்கள் திருமணம் செய்ய குறைந்தது 18 வயதை கொண்டிருத்தல் அவசியம். ஆனால் தற்போது பாராளுமனறத்தில் உள்ள Prohibition of Child Marriage (Amendment) Bill 2021 அந்த வயதெல்லையை 21 ஆக உயர்த்தவுள்ளது. இந்த வயது அதிகரிப்பில் இருந்து தப்பிக்கொள்ள பெருமளவு பெற்றார் தமது மகள்களுக்கு விரைந்து திருமணம் செய்ய முனைகின்றனர். அதனால் திருமண சேவைகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில திருமண சேவைகளுக்கான செலவு 3 மடங்கு வரை அதிகரித்து உள்ளது. நகர் […]
அமெரிக்க நோயாளி ஒருவருக்கு உலகின் முதலாவது பன்றி இருதய மாற்றீடு செய்யப்பட்டுள்ளது. மனித உடலுக்கு ஏற்ப அமையும்படி genetically மாற்றம் செய்யப்பட்ட பன்றி ஒன்றில் இருந்தே இந்த இதயம் பெறப்பட்டு உள்ளது. David Bennett என்ற 57 வயது இருதய நோயாளிக்கு சாத்தியமான வைத்தியம் எதுவும் இன்றிய நிலையில் மரணம் உறுதியாக இருந்தது. இந்த நிலையிலேயே அரசின் விசேட அனுமதியுடன் இந்த பரிசோதனை முயற்சி இடம்பெற்று உள்ளது. University of Maryland Medical Center என்ற வைத்தியசாலையில் […]
இன்று ஞாயிறு அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் Bronx பகுதியில் இடம்பெற்ற அடுக்குமாடி குடியிருப்பு தீக்கு குறைந்தது 19 பலியாகி உள்ளனர். பலியானோரில் 9 சிறுவர்களும் அடங்குவர். காலை சுமார் 11:00 மணிக்கு ஆரம்பித்த இந்த தீயால் மேலும் 32 பேர் பாரிய தீ காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். குளிர்காலத்தில் வீட்டை சூடாக்க பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் இயங்கும் space heater ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தீ உருவானதாக கூறப்படுகிறது. தீ ஆரம்பித்த வீட்டின் கதவுகளை […]
கடந்த தினங்களில் இத்தாலியில் இருந்து இந்தியாவின் Amritsar நகருக்கு வந்திருந்த இரண்டு விமானங்களில் மிகையான பயணிகள் கரோனா தெற்றி இருந்ததாக இந்திய பரிசோதனை அறிந்து இருந்தது. ஆனால் அந்த பரிசோதனை மீது தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. இத்தாலியில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகள் பயணத்தின் முன், ஆனால் 72 மணித்தியாலத்துள், கரோனா தொற்று இல்லை என்பதை அறியும் PCR வகை பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்ற விதிக்கு அமைய இத்தாலியின் மிலான் (Milan) நகரில் இருந்து […]
இந்திய வர்த்தகர் அம்பானியின் தலைமையில் இயங்கும் Reliance Industries என்ற நிறுவனம் bond மூலம் $4 பில்லியன் வெளிநாட்டு முதலீடுகளை திரட்டி உள்ளது. இந்திய நிறுவனம் ஒன்று bond மூலம் பெற்ற மிகக்கூடிய தொகை இதுவே. இந்த bond சிங்கப்பூர் stock exchange மூலமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த bond களின் 53% த்தை ஆசியரும், 33% த்தை அமெரிக்கரும், 14% த்தை ஐரோப்பியரும் கொள்வனவு செய்து உள்ளனர். மேற்படி bond கொள்வனவை செய்த நிறுவனங்களின் பெயர்கள் […]
கசகஸ்தான் என்ற மத்திய ஆசிய நாட்டில் அரசுக்கு எதிரான வன்முறைக்கு பலர் பலியாகி உள்ளனர். எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான போராட்டம் இறுதியில் வன்முறையை அடைந்துள்ளது. பலியானோரில் 12 போலீசாரும் அடங்குவர். அரசுக்கு உதவும் நோக்கில் ரஷ்ய படைகள் கசகஸ்தான் நகரான Almaty யை அடைந்துள்ளன. ரஷ்ய படை நகர்வை ஐரோப்பிய ஒன்றியம் கண்டித்து உள்ளது. சோவியத்தில் அங்கம் கொண்டிருந்த கசகஸ்தான் தற்போது ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நட்பு நாடு. சோவியத் கால அதிகாரியான Nursultan Nazarbayev, […]
இந்த மாதம் 17ம் திகதி இடம்பெறவுள்ள Australian Open என்ற டென்னிஸ் போட்டியில் பங்கு கொள்ள சென்ற Serbia நாட்டு வீரரான Novak Djokovic அஸ்ரேலியாவுள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. இவர் திருப்பி அனுப்படுவதற்காக காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இவரிடம் உரிய விசா இருந்தாலும், விசா விதிக்கு இணங்க கரோனா தடுப்பு ஊசி பெற்றமைக்கான ஆதாரங்களோ அல்லது சட்டப்படி விதிவிலக்கு பெற்ற ஆவணங்களோ இருந்திருக்கவில்லை. கடந்த ஆண்டு இவர் கரோனா தடுப்பு ஊசிக்கு எதிராக கருத்து தெரிவித்து […]
அமெரிக்காவின் iPhone தயாரிப்பு நிறுவனமான Apple முதல் தடவையாக பங்கு சந்தையில் $3 டிரில்லியன் ($3,000 பில்லியன்) பெறுமதியை அடைந்து உள்ளது. இந்த ஆண்டின் முதல் பங்கு சந்தை வர்த்தக தினத்திலேயே Apple இந்த உயர்வை அடைந்து உள்ளது. Apple நிறுவனம் தயாரிக்கும் iPhone விற்பனையே இந்த நிறுவனத்தின் வருமானம் தொடர்ந்தும் உச்சத்தில் இருக்க காரணம். ஆண்டுதோறும் பல மில்லியன் iPhone கள் விற்பனை செய்யப்படுகின்றன. 2018ம் ஆண்டு Apple நிறுவனத்தின் பங்குசந்தை பெறுமதி $1 டிரில்லியன் […]