மின் உற்பத்திக்கு 3 தினங்களுக்கே Diesel உண்டு

மின் உற்பத்திக்கு 3 தினங்களுக்கே Diesel உண்டு

இலங்கையில் Diesel மூலமான மின் உற்பத்தி பயன்பாட்டுக்கு 3 தினங்களுக்கு போதுமான diesel எரிபொருளே உண்டு என்று கூறப்படுகிறது. அதனால் நாட்டில் மின்வெட்டு தொடரும் என்று நம்பப்படுகிறது. கொழும்புக்கு வடக்கே உள்ள Kelanitissa Power plant, Mathugama, Kolonnawa, Thulhiriya ஆகிய மின் உற்பத்தி நிலையங்கள் மின் உற்பத்தி செய்யாது உள்ளன. அதனால் மொத்தம் 363 மெகாவாட் மின் உற்பத்தி தடைப்பட்டு உள்ளது. சிறு தொகை மேலதிக diesel பெப்ரவரி 20ம் திகதி வரவுள்ளது என்றும் எரிபொருள் […]

3,965 ஆடம்பர கார்களுடன் எரியும் கப்பல்

3,965 ஆடம்பர கார்களுடன் எரியும் கப்பல்

மொத்தம் 3,965 விலை உயர்ந்த ஆடம்பர ஐரோப்பிய கார்களுடன் Felicity Ace என்ற 650 அடி நீள கார் காவும் கப்பல் அத்திலாந்திக் சமுத்திரத்தில் எரிகின்றது. மிகையான தீ காரணமாக அந்த கப்பலில் பணியாற்றிய 22 பணியாளர்களும் போர்த்துக்கல் கடற்படையினால் மீட்கப்பட்டு உள்ளனர். கப்பலோட்டிகள் எவரும் இல்லாத நிலையில் கப்பல் தொடர்ந்தும் Azores தீவுகளுக்கு அருகில் எரிகிறது. கடல் நீரோட்டத்துக்கு ஏற்ப கப்பல் இழுபட்டும் செல்கிறது. இந்த கப்பலில் 1,100 விலை Porsche கார்களும், 189 Bentley […]

சவுதியில் 30 பதவிகளுக்கு 28,000 பெண்கள் விண்ணப்பம்

சவுதியில் 30 பதவிகளுக்கு 28,000 பெண்கள் விண்ணப்பம்

சவுதி அரேபியா அண்மை காலங்களில் பெண்களை பொது பணிகளுக்கு அமர்த்த முன்வந்துள்ளது. அதன்படி 30 பெண் ரயில் சாரதிகளை பணிக்கு அமர்த்த முன்வந்தது. அந்த 30 இடங்களுக்கு மொத்தம் 28,000 சவுதி பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர். இந்த சாரதிகள் சவுதி நகரங்களான Mecca வுக்கும் Medina வுக்கும் இடையில் அதிவேக ரயில்களை செலுத்துவர். இவ்வகை பணிகளுக்கு பெண்கள் அமர்த்தப்படுவது இதுவே முதல் தடவை. மேற்படி ரயில் சேவையை சவுதியில் இயக்கவுள்ள ஸ்பெயின் நாட்டு நிறுவனமான Renfe இந்த […]

மூடி உடைய, கிணற்றுள் வீழ்ந்து 13 பேர் பலி

மூடி உடைய, கிணற்றுள் வீழ்ந்து 13 பேர் பலி

இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட 13 பெண்களும், சிறுமிகளும் கிணறு ஒன்றுள் வீழ்ந்து பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி இன்று புதன் மாலை 8:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. நிகழ்வில் கலந்துகொண்ட இவர்கள் கிணற்றை மூடி இருந்த இரும்பு தட்டு ஒன்றில் அமர்ந்து உள்ளனர். பாரம் அதிகமாக தட்டு உடைந்து கிணற்றுள் வீழ்ந்துள்ளது. கூடவே அதில் இருந்தோரும் வீழ்ந்து பலியாகினர். ஒவ்வொரு மணித்தோர் குடும்பங்களுக்கும் 4 லட்சம் உதவி […]

ரம்பை கைவிட்டது அவரின் கணக்கியல் நிறுவனம்

முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்புக்கும் அவரின் குடும்பத்துக்கும் கணக்கியல் சேவைகளை செய்து வந்த Mazars USA என்ற கணக்கியல் நிறுவனம் (accounting firm) தாம் ரம்புடனும், அவரின் குடும்பத்துடனுமான தொடர்புகளை துண்டிப்பதாக கூறியுள்ளது. இந்த அறிவிப்பு இந்த மாதம் 9ம் திகதி ரம்புக்கு விடுக்கப்பட்டு உள்ளது. 2011ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையான காலத்தில் ரம்ப் நிறுவனத்தின் கணக்கியல், மற்றும் வரி ஆவணங்களை Mazars USA நிறுவனமே தயாரித்து இருந்தது என்றாலும் அந்த ஆவணங்களின் நம்பகத்தன்மையை […]

$3 பில்லியனை திருடியது இந்திய ABG Shipyard?

$3 பில்லியனை திருடியது இந்திய ABG Shipyard?

இந்தியாவில் இன்னோர் தனியார் நிறுவனம் பல வங்கிகளின் பணத்தை திருடி உள்ளதாக கூறுகிறது இந்திய CBI. குஜராத்தில் இயங்கும் ABG Shipyard என்ற கப்பல் கட்டும் நிறுவனமே இந்திய வங்கிகளில் பெற்ற $3 பில்லியனை திருடி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் State Bank of India, ICICI Bank, IDBI Bank, Bank of Baroda, Punjab National Bank உட்பட மொத்தம் 28 வங்கிகளில் $3 பில்லியன் கடனை பெற்று இருந்தது. அந்த கடன்கள் […]

அமெரிக்க வெள்ளையர் சீன hockey அணியில்

அமெரிக்க வெள்ளையர் சீன hockey அணியில்

அமெரிக்கரான 32 வயது Jeremy Smith Beijing 2022 Winter ஒலிம்பிக் போட்டியில் சீனாவின் hockey அணியின் goalie ஆக விளையாடினார். வியாழக்கிழமை அமெரிக்க அணிக்கும் Jeremy Smith அங்கம் வகிக்கும் சீன அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் அமெரிக்கா 8 க்கு 0 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி கொண்டது. ஆனாலும் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஜெர்மனிக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டியில் ஜெர்மனி 3 புள்ளிகளை பெற, சீனா 2 புள்ளிகளை பெற்றது. சீன hockey […]

அத்திலாந்திக் சீன தளத்தை தடுக்க அமெரிக்கா விரைவு

அத்திலாந்திக் சீன தளத்தை தடுக்க அமெரிக்கா விரைவு

Equatorial Guinea என்ற மேற்கு ஆபிரிக்க நாட்டில் சீனா தனது விமான மற்றும் கடற்படை தளம் ஒன்றை அமைக்க முயற்சித்து வருகின்றது. அந்த முயற்சி கைகூட உள்ள நிலையில் அதை தடுக்க அமெரிக்க அதிகாரிகள் Equatorial Guinea க்கு அடுத்த கிழமை செல்லவுள்ளனர். சீனா இங்கு தனது படைத்தளத்தை அமைத்தால் அந்த தளம் அத்திலாந்திக் சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்த வழி வகுக்கும் என்பதே அமெரிக்காவின் கவலை. அடுத்த கிழமை அமெரிக்க அதிகாரிகளான Molly Phee மற்றும் மேஜர் […]

உத்தர பிரதேசம் உட்பட 5 இந்திய மாநிலங்களில் தேர்தல்

உத்தர பிரதேசம் உட்பட 5 இந்திய மாநிலங்களில் தேர்தல்

அடுத்து வரும் சில மாதங்களில் உத்தர பிரதேசம் உட்பட 5 இந்திய மாநிலங்களில் மாநில தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. ஆனாலும் அவற்றில் உத்தர பிரதேச தேர்தல் பிரதானமானது. பிரதமர் மோதி தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பாரா என்பதை உத்தர பிரதேச தேர்தல் முடிவுகள் கூறும். உத்தர பிரதேசத்தில் 240 மில்லியன் மக்கள் உள்ளனர். இது ஒரு நாடானால், சனத்தொகை அடைப்படையில், இது உலகத்தின் 5ஆவது பெரிய நாடாக இருக்கும். சீனா, இந்தியா, அமெரிக்கா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அடுத்து உத்தர […]

70 வயது பெண்ணின் உடல் கண்டெடுப்பு, மரணித்து 2 ஆண்டுகள்

70 வயது பெண்ணின் உடல் கண்டெடுப்பு, மரணித்து 2 ஆண்டுகள்

Marinella Beretta என்ற 70 வயது பெண்ணின் உடலை இத்தாலியின் வடக்கு பகுதியில் Lake Como என்ற இடத்து அதிகாரிகள் கண்டெடுத்து உள்ளனர். தனியே வாழ்ந்த இவர் மரணித்து 2 ஆண்டுகளுக்கு மேல். மேற்படி பெண்ணின் வீட்டு தோட்டத்து மரம் ஒன்று அளவுக்கு மிகையாக வளர்ந்து முறிந்து இருந்தது. இதை அவதானித்த அயலவர் அதிகாரிகளுக்கு அறிவித்து உள்ளனர். அந்த வீட்டை அடைந்த அதிகாரிகள் பெண்ணின் வீட்டில் மரணித்த உடலை கண்டுள்ளனர். இந்த செய்தியை Como City அதிகாரி […]