பூட்டினின் யுகிரைன் மீதான யுத்தத்தை கட்டுப்படுத்த சீனாவின் உதவியை நாடுகிறது அமெரிக்கா. இன்று வியாழன் வெள்ளைமாளிகை தெரிவித்த கூற்றுப்படி பைடென் நாளை வெள்ளிக்கிழமை சீனாவின் சனாதிபதி சீயுடன் இது தொடர்பாக உரையாடவுள்ளார். யுகிரைன் மீதான யுத்தம் காரணமாக ரஷ்யாவை பொருளாதார வழிகளில் தண்டிக்கின்றன அமெரிக்காவும் மேற்கும். அந்த தண்டனைகளில் இருந்து தப்ப பொருளாதாரத்தில் பலமான சீனாவின் உதவியை நாடுகிறது ரஷ்யா. அதையே தடுக்க முனைகிறார் பைடென். அத்துடன் சீனா ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்குவதையும் தடுக்க முனைகிறது அமெரிக்கா. […]
ஜப்பானில் புதன்கிழமை இரவு 7.3 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இப்பகுதியிலேயே 2011ம் ஆண்டு 9.0 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இரவு 11:36 மணிக்கு இடம்பெற்ற இந்த நடுக்கத்தின் மையம் Fukushima கரையோரம், 60 km ஆழத்தில் இருந்துள்ளது. இந்த நடுக்கத்துக்கு டோக்கியோ நகரும் உள்ளாகி இருந்தது. நடுக்கத்தின் விளைவாக 1 மீட்டர் (3.3 அடி) சுனாமி ஏற்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுவரை பெரும் பாதிப்புகள் எதுவும் பதியப்படவில்லை என்றாலும், […]
ரஷ்ய சனாதிபதி பூட்டினின் நண்பரான Roman Abramovich சட்டவிரோத முறையில் பல பில்லியன் ரஷ்ய மக்கள் பணத்தை சூறையாடி உள்ளார் என்கிறது Panorama அமைப்பு. 1995ம் ஆண்டு ரஷ்ய அரசுக்கு சொந்தமான Sibneft என்ற எண்ணெய் நிறுவனத்தை Roman, பொய் ஏலம் மூலம், $250 மில்லியனுக்கு ($0.250 பில்லியன்) கொள்வனவு செய்திருந்தார். பின்னர் இதை 2005ம் $13 பில்லியனுக்கு மீண்டும் ரஷ்ய அரசுக்கு விற்பனை செய்திருந்தார். தற்போது யுக்கிரைனில் இடம்பெறும் யுத்தம் காரணமாக Roman மீதும் மேற்கு […]
அமெரிக்காவோ அல்லது நேட்டோவோ யுக்கிரைன-ரஷ்யா யுத்தத்தில் பங்கெடுப்பது மூன்றாம் உலக யுத்தமாகும் என்று கூறியுள்ளார் அமெரிக்க சனாதிபதி பைடென். அதனால் அமெரிக்க அல்லது நேட்டோ படைகள் யுக்கிரைன் யுத்தத்தில் பங்கெடுக்க என்று பைடென் திடமாக கூறியுள்ளார். அது மட்டுமன்றி அமெரிக்கா யுக்கிரைன் மீது no-fly zone உருவாக்கி ரஷ்ய யுத்த விமானங்களையும் தடுக்காது என்றும் பைடென் கூறியுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை Philadelphia நகரில் தனது கட்சி ஆதரவாளர் மத்தியில் பேசுகையிலேயே பைடென் இவ்வாறு கூறியுள்ளார். இந்நிலையில் ரஷ்ய […]
அமெரிக்க டாலர் ஒன்றுக்கு தற்போது சுமார் 260 இலங்கை ரூபாய்கள் கிடைக்கின்றன. மார்ச் 8ம் திகதி இலங்கை மத்திய வங்கி டாலர் ஒன்றுக்கான நாணய மாற்று வீதத்தை 15% ஆல் குறைத்த பின்னரே உண்டியல் சந்தையில் 260 ரூபாய் வரை கிடைக்கிறது. மேற்படி 15% பெறுமதி இழப்பின் பின் அரச வங்கிகள் சுமார் 230 ரூபாய்களை மட்டுமே வழங்குகின்றன. திங்கள் வரை அரச வங்கிகள் அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 203 ரூபாய்களை மட்டுமே வழங்கி இருந்தன. கூடிய […]
அண்மையில் இடம்பெற்ற 5 மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணல் தவுகளின்படி மோதி தலைமையிலான இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சி 4 மாநிலங்களில் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது. உத்தர பிரதேசம், உத்ரகாண்ட், புஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் புஞ்சாப்பை தவிர ஏனைய 4 மாநிலங்களிலேயே பா.ஜ. வெல்லும் என்று வாக்கு எண்ணல் கூறுகிறது. உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் பா. ஜ. ஆட்சியில் இருப்பது 2014ம் ஆண்டு இடம்பெறவுள்ள மத்திய அரசுக்கான தேர்தலில் பா. ஜ. […]
கடந்த 12 தினங்களாக இடம்பெறும் யுத்தத்தின் பின் மேற்கினதும், நேட்டோவினதும் கபட நாடகத்தை அறிந்த யுக்கிரைனின் சனாதிபதி செலென்ஸ்கி (Zelensky) தனது நாடு NATO அணியில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளது என்று மறைமுகமாக கூறியுள்ளார். யுக்கிரைன் நேட்டோ அணியில் இணைவதை கடுமையாக எதிர்க்கும் ரஷ்யா கடந்த 12 தினங்களுக்கு முன் யுக்கிரைன் மீது இராணு தாக்குதலை ஆரம்பித்து இருந்தது. ABC என்ற செய்தி நிறுவனத்தின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த செலென்ஸ்கி நேட்டோவுடன் இணையும் எண்ணத்தை […]
யுக்கிரைன-ரஷ்யா மோதலில் யுக்கிரைனை முழுமையாக ஆதரிப்பதாக கூறும் நேட்டோ நாடுகள் யுக்கிரைனுக்கு தமது யுத்த விமானங்களை வழங்காது என்று கூறி உள்ளன. தமக்கு யுத்த விமானங்கள் தேவை என்று யுக்கிரைன் சனாதிபதி பல தடவைகள் கூறி இருந்தார். அவரின் வேண்டுகோளுக்கு ஏற்ப முதலில் போலந்து தமது MiG-29 விமானங்களை யுக்கிரைனுக்கு வழங்க செவ்வாய்க்கிழமை முன்வந்தது. யுக்கிரைன் விமானப்படை MiG-29 விமானங்களை பறக்க தெரிந்தவர்கள் என்றபடியால் அவர்கள் போலந்தின் விமானங்களையும் இலகுவில் பயன்படுத்த முடியும். ஆனால் போலந்தின் விமானங்களை […]
அமெரிக்க டாலர் ஒன்றுக்கு 230 இலங்கை ரூபாய்களை வழங்க இலங்கை அரசு தீர்மானித்து உள்ளது. இந்த செய்தி இன்று திங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. சந்தையில் அமெரிக்க டாலர் ஒன்றுக்கு சுமார் 240 ரூபாய்கள் கிடைக்கும் நிலையிலும் இலங்கை வங்கிகள் 200 ரூபாய் முதல் 203 ரூபாய் வரையே வழங்கி வந்திருந்தது (peg). அதனால் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோர் வங்கிகளுக்கு அப்பால் இயங்கும் சிறு முகவர் மூலமே தமது டாலர்களை ரூபாய்கள் ஆக்கினர். அதனால் இலங்கை அரசுக்கு […]
யுக்கிரைனுக்கு ஆயுதங்கள் வழங்கி, நேட்டோவில் (NATO) இணைய ஆசை காட்டி ரஷ்யாவுடன் மோத வைத்த நேட்டோ யுக்கிரைனின் வானத்தை no-fly zone மூலம் ரஷ்ய விமானங்களில் இருந்து பாதுகாக்க மாறுகிறது. யுக்கிரைன் சனாதிபதி தனது நாட்டு வான் பரப்பு மீது விமானங்கள் பறப்பதை தடை செய்யுமாறு நேட்டோவை கேட்டிருந்தார். அவ்வாறு செய்வதன் மூலம் ரஷ்யாவின் யுத்த விமானங்களை தடை செய்யலாம் என்பதே யுக்கிரைன் சனாதிபதியின் நோக்கம். ஆனால் அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்துள்ளது நேட்டோ. தற்போது இடம்பெறும் […]