பிரித்தானியாவின் நாணயமான பவுண்ட் ஒன்றின் பெறுமதி அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் 37 ஆண்டுகளுக்கு முன் இருந்த பெறுமதிக்கு வீழ்ந்து உள்ளது. தற்போது பவுண்ட் ஒன்றுக்கு $1.14 மட்டுமே கிடைக்கிறது. அமெரிக்க டாலருக்கான இந்த அளவு குறைந்த நாணய மாற்று வீதத்தை பிரித்தானியா இதற்கு முன் மக்கிரட் தட்சர் காலத்தில் கொண்டிருந்தது. 1972ம் ஆண்டில் பவுண்ட் ஒன்றுக்கு $2.65 கிடைத்து இருந்தது. 1970ம் ஆண்டுக்கு முன் பவுண்ட்-டாலர் நாணய மாற்று பெறுமதி பிணைக்கப்பட்டு இருந்தது. பிரித்தானிய பவுண்ட் வீழ்ச்சி […]
வேற்று மொழி சொல் ஒன்றுக்கு தமிழில் ஏற்கனவே மாற்று சொல் ஒன்று இல்லை என்றால் அதற்கு புதியதொரு தமிழ் சொல்லை கொள்ள விரும்புவது நலம், அவசியம். ஆனால் அவ்வாறு தமிழில் ஒரு புதிய சொல்லை உருவாக்க மேற்கொள்ளும் முயற்சி தமிழை, தமிழின் மகிமையை அழிக்கும் என்றால் தமிழுக்கான மாற்று சொல்லை அமையாது நேரடியாக வேற்று மொழி சொல்லையே பயன்படுத்துவது தமிழுக்கு செய்யும் பெரும் தொண்டாகும். அவ்வாறு செய்வது இன்றைய முட்டுக்காய் தமிழன் அழகிய பண்டை தமிழை அழிப்பதை, […]
அமெரிக்காவின் நாசா (NASA) மீண்டும் தனது விஞ்ஞானிகளை சந்திரனுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபடுகிறது. அதற்கு முதல் படியாக ஆகஸ்ட் 29ம் திகதி Space Launch System (SLS) என்ற மிக பெரியதோர் ஏவுகணை மூலம் விண்வெளி வீரர்களை கொண்டிராத Artemis 1 என்ற கலத்தை சந்திரனை சுற்றி வலம் வர வைக்க ஏவ இருந்தது. ஆனால் இயந்திர கோளாறு காரணமாக அன்றைய முயற்சி இடைநிறுத்தப்பட்டு இருந்தது. இன்று இரண்டாம் தடவை இடம்பெறவிருந்த ஏவலும் கணையில் ஏற்பட்ட எரிபொருள் […]
தன்னை ஒரு சாமி என்று கூறி குற்ற செயல்களில் ஈடுபட்டவர் என்று கூறப்படும் நித்தியானந்தா இலங்கை அரசிடம் அகதி நிலைக்கு விண்ணப்பித்து உள்ளதாக கூறப்படுகிறது. இவர் மீது பாலியல் குற்றங்களுக்காக வழக்கு ஒன்று கர்நாடகா மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் திகதி கர்நாடகா மாநிலத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு பிணையில் செல்ல முடியாத (non-bailable) கைதுக்கு உரிமை வழங்கியுள்ளது. அதனால் நித்தியானந்தா இந்தியா செல்வது சாத்தியம் அல்ல. இலங்கையில் அகதி நிலை […]
Ariel Koren என்ற Google ஊழியர் அவர் மீது Google செலுத்திய துரோகத்தனம் காரணமாக பதவி விலகி உள்ளார். அமெரிக்காவின் Google, Amazon ஆகிய இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்களும் இஸ்ரேலின் இராணுவத்துடன் இணைந்து $1.2 பில்லியன் செலவில் Project Nimbus என்ற திட்டத்தில் இயங்கி வருகின்றன. Artificial intelligence நிறைந்த இந்த தொழில்நுட்ப வேலைப்பாடு பலஸ்தீனர்களுக்கு மிகவும் பாதகமானது. இவ்வாறு ஒரு இனத்துக்கு பாதகமான திட்டத்தில் Google இணைவது துரோகத்தனம் என்று கூறும் Google ஊழியரான Ariel […]
முதல் முறையாக இந்தியா உள்ளூரில் வடிவமைத்து கட்டிய விமானம் தாங்கி கப்பல் INS (Indian Naval Ship) Vikrant வெள்ளிக்கிழமை கையளிப்பு (commission) செய்யப்படுகிறது. சுமார் 262 மீட்டர் நீளம் கொண்ட இது 45,000 தொன் மொத்த எடையை கொண்டிருக்கும். இதில் 30 யுத்த விமானங்கள் அல்லது ஹெலிகள் நிலைகொள்ளும். இந்தியாவின் முதல் விமானம் தாங்கியும் Vikrant என்றே அழைக்கப்பட்டது. பிரித்தானியாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட அந்த விமானம் தாங்கி 1961 முதல் 1997 வரை சேவையில் […]
Shamima Begum என்ற பிரித்தானிய பெண்ணை, அவளின் 15 வயதில், CSIS (Canadian Security and Intelligence Service) என்ற கனடிய உளவுப்படை உறுப்பினன் ஒருவன் சிரியாவுக்கு அழைத்து சென்று ISIS குழுவுக்கு வழங்கி உள்ளான் என்கிறது நாளை வியாழன் வெளிவரவுள்ள புத்தகம் ஒன்று. இந்த செய்தியை மூடி மறைக்க முனைகிறார் கனடிய பிரதமர் Justin Trudeau. பிரித்தானிய எழுத்தாளரான Richard Kerbaj எழுதும் The Secret History of the Five Eyes என்ற புத்தகமே […]
சோவியத் யூனியனின் கடைசி தலைவர் கொர்பசோவ் (Mikhail Gorbachev) இன்று தனது 91 ஆவது வயதில் மரணமானார் என்று ரஷ்ய செய்திகள் கூறுகின்றன. தனது 54 ஆவது வயதில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஆக வளர்ந்த இவர் சோவியத்தை இறுதியாக ஆட்சி செய்தார். சோவியத் உள்ளே வீழ்ச்சி அடைந்ததை கண்ட இவர் சோவியத் உடைய காரணமானார். மேற்கில் இவருக்கு மரியாதை அதிகம் என்றாலும் ரஷ்யாவில் இவருக்கு மரியாதை அதிகம் அல்ல. சோவியத் பிரிவை மேற்கின் விருப்பப்படி […]
Bloomberg Billionaires Index கணிப்புப்படி இந்திய வர்த்தகரான அடானி (Gautam Adani) தற்போது உலகின் 3வது பெரிய செல்வந்தர் ஆகியுள்ளார். மிக குறுகிய காலத்தில் அடானி பெருமளவு செல்வத்தை சேகரிக்க அவர் கொண்டிருந்த இந்திய பிரதமர் மோதியின் நெருக்கம் பிரதான காரணம். 2022ம் ஆண்டின் முதல் அரை ஆண்டு காலத்தில் மட்டும் அடானி $60 பில்லியன் மேலதிக சொத்தை பெற்றுள்ளார். அடானியிடம் தற்போது சுமார் $137 பில்லியன் சொத்து உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வகை செல்வந்தரின் பெருமளவு சொத்துக்கள் […]
செப்டம்பர் 1ம் நாள் முதல் 7ம் நாள் வரை ரஷ்யாவின் Vostok 2022 (East 2022) என்ற மிக பெரிய இராணுவ பயிற்சி இடம்பெறவுள்ளது. ரஷ்யாவின் கிழக்கேயும், ஜப்பான் கடலிலும் இந்த பயிற்சி இடம்பெறும். சீனா, இந்தியா, சிரியா, நிக்கராகுவா, லாவோஸ், மொங்கோலியா உட்பட பல முன்னாள் சோவியத் நாடுகளும் இந்த பயிற்சியில் பங்கு கொள்ளும். சீனா முழுமையாக பங்கு கொண்டாலும் இந்தியா அரை மனத்துடனேயே பங்கு கொள்கிறது. ஜப்பான் கடலில் (Sea of Japan) இடம்பெறும் […]